புதன், 14 மார்ச், 2018

பெரியார்தான் நவீன இளைஞன் - வே.மதிமாறன்

இராமாயண காலம் முதல் இன்று வரை தொடரும் நீட் தேர்வும் வரலாற்றில் அதற்கு எதிரான சமூகநீதிக் குரல்களும் குறித்து தோழர் வே. மதிமாறன் ஆற்றிய அனல் பறக்கும் உரை.

புதன், 17 ஜனவரி, 2018

சுயசிந்தனையுடைய மனிதர்களா நாம்?

மனிதர்களை இழிவுசெய்யும், ஏற்றத்தாழ்வை அங்கீகரிக்கும் மனுசாஸ்திரத்தின் சில பக்கங்களை நகலெடுத்து நாம் எரிக்கும்போராட்டம் நடத்தும்போது இடைநிலைச் சாதி ஆதிக்கத்தைக் கண்டு நாம் பொங்குவதில்லை என்றார்கள் சில பார்ப்பன சித்தாந்தத்துக்கு பல்லக்கு தூக்குபவர்களான இடைநிலைகள்.

நாம் இடைநிலைச்சாதிகளின் ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டங்களையும் நடத்துகிறோம். கூடுதலாக இந்த ஏற்றத்தாழ்வுக்கு உரம்சேர்க்கிற பார்ப்பனிய கருத்தியலுக்கு எதிராக களமாடுவதே நோய்க்கான தீர்வென கருதுகிறோம். இதை எல்லாவற்றையும் பார்ப்பனர்கள் மீதான காரணமற்ற வெருப்பென்று பரப்பினார்கள். தலித்துகள் இப்படி யாரையும் ஒதுக்குவதில்லை என்றும் காரணம், அவர்கள் ஒடுக்கப்படுதலின் வலியறிவார்கள் என்றும் ஜெயமோகன் வழக்கமான பாணியில் நஞ்சைப் பரப்ப, அதில் புளகாங்கிதமடைந்து சிலர் பரப்பினார்கள்.

ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்தும் அதையொட்டிய பார்ப்பனர்களின் திமிர்ப்பேச்சும் இந்துக்களைத் தூண்டிவிடுவதும் இது வைரமுத்துவை முன்னிட்டு மட்டுமே அல்ல என்பதை வெளிப்படுத்திவிட்டது. நாமும் வைரமுத்துவின் பக்கம் நிற்பது அவருக்காக மட்டுமே அல்ல என்பதை அறிந்தே செய்கிறோம்.

தலைமேல் அமர பார்ப்பனர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை உணர நீங்கள் வேதங்களையோ பக்தி இலக்கியங்களையோ கூட படிக்கவேண்டியதில்லை. அம்பி எஸ்.வீ. சேகர் பேசியிருக்கும் இந்த காணொயைப் பார்த்தாலே புரியும்.வைரமுத்துவுக்கு ஆதரவாக பாரதிராஜா வந்ததும் பயந்துபோன பார்ப்பனர்கள் முத்துராமலிங்கதை முன்வைத்து வைரமுத்து-பாரதிராஜாவை தனிமைப்படுத்த நினைக்கிறார்கள். கூடுதலாக பெரும்பான்மை மதவெறியற்ற இந்துக்களின் தலையில் ஜாதி, மதவெறியைத் திணிக்க பொய்ப்பரப்புரைகளில் ஈடுபடுகிறார்கள். சமத்துவத்துக்குக் கேடான இந்த நபர்களுக்கு எங்கிருந்து வீரம் வருகிறது. எங்கிருந்து வலிமை சேர்கிறது. இவர்களின் சித்தாந்தத்தை ஒழிப்பதில் என்ன தயக்கம் நமக்கு. பார்ப்பனரல்லாதார் சிந்திக்கவேண்டும்.

யோகம் என்பது பக்தி மார்க்கத்தைப் போலல்ல என்று பசப்பித்திரிவார்கள். ஆனால், நித்யானந்தாவின் இந்த சீடர்களான சிறுமிகளின் பேச்சைக்கேளுங்கள்.மதவாதம், ஆன்மீகம், யோகம், எளிய மக்களின் நம்பிக்கை என்று என்ன பெயர் சொன்னாலும் எல்லாம் மதவெறியின் ஒரு புள்ளியில் இணையத்தான் செய்கின்றன. மதத்துடன் கலந்துவிட்ட கலை-இலக்கியம் உட்பட.

முதலில் நித்யானந்தாவைப் பின்பற்றும் இந்தச் சிறுமிகள் பேச்சைக் கேட்டு கோபம் வந்தது. பிறகு முழுவதுமாக கேட்டு முடிக்கையில் அவர்கள் மீதான கவலையாக மாறியது.

Child abuse பாலியல் ரீதியாக நடந்தால் மட்டும்தானா? இந்தச் சிறுமிகள் தங்கள் கல்வியை முறையாக கற்று அறிவார்ந்தவர்களாக உயர்ந்து, தங்கள் வாழ்வை முன்நகர்த்திச் செல்வதற்குப் பதில் எவ்வாறு பணிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை அனுமதிக்கும் நாம் நாம் எத்தகையவர்கள். நமது சட்டம், நீதி, அறஉணர்வு எத்தகையது.The World Before Her இல் வரும் பிராச்சியின் கதையை நினைவுக்கு கொண்டுவரக்கூடிய இந்த துயரத்தை எவ்வாறு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

சுயசிந்தனையுடைய மனிதர்களா நாம்?

திங்கள், 24 ஜூலை, 2017

பாரதியின் சமஸ்கிருத காதலும் பாரதமாதாவும்

பெரியாரின் சீடர் காமராசர் - கொளத்தூர் மணி உரை

காமராசர் திராவிட இயக்கத்தின் பிள்ளை - பழ.கருப்பையா உரை

காமராசரைக் கொல்ல இந்துத்துவக் கும்பல் முயற்சித்த வரலாறு தெரியுமா?- விடுத...

செவ்வாய், 6 ஜூன், 2017

இந்தித்திணிப்பு, மாட்டிறைச்சி தடை: நாம் செய்யவேண்டியது என்ன? - அரிபரந்தா...

04-06-2017 அன்று சென்னை திருவான்மியூரில், தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாட்டில் நீதிநாயகம் அரிபரந்தாமன் அவர்கள் ஆற்றிய உரை. 
நிகழ்ச்சி ஏற்பாடு திராவிடர் விடுதலைக் கழகம்.

ஞாயிறு, 21 மே, 2017

சினிமா, கம்யூனிசம், ரசனை, அடையாளச் சிக்கல்

தமிழ்த் திரைப்படங்களைப் பார்ப்பதென்றாலே ஒருவித அச்ச உணர்வோடு செல்லும் மனநிலையைத்தான் பெரும்பாலான படங்கள் ஏற்படுத்தி வைத்திருக்கின்றன. இதற்கு நேர்மாறானது மலையாளப்படங்கள்.

மிகமிக மெல்லிய கதைச்சரடில் கட்டப்பட்ட Maheshinte Prathikaaram போகிற போக்கில் புகைப்படக்கலையை முன்னிட்டு கலை குறித்தான பார்வையையும் தேசிய கீதத்துக்கு நிற்கும் வறட்டுத்தனத்தையும் பதிவு செய்துவிடுகிறது.

மாபெரும் ரவுடிகளோடு அரசியல்வாதிகளோடு மோதும் உள்ளீடற்ற போலீஸ் பாத்திரங்கள் பெரும்பாண்மையான தமிழ்ப்படங்களில் காணக்கிடைக்கும். ஆனால், சிறுசிறு குற்றவழக்குகளை நாள்தோறும் சந்திக்கும் ஒரு காவலரைப் பின்தொடர்வதன் வழியாக உறவுகள், வேலை, கார்ப்பரேட், நடுத்தர வர்க்க திமிர்த்தனம் இவற்றைப் பதிவு செய்யும் வணிக நோக்குடன் இயக்கப்பட்ட Action Hero Biju, நமது ஜாதிய மனப்பான்மையை, இந்திய நீதிபரிபாலனத்தை மிகத்துல்லியமாக விமர்சிக்கும் Ozhivudivasathe Kali போன்ற படங்கள் ரசிப்பதற்கும் அதன் கதாபாத்திரங்களோடு, இயக்குனரோடு உரையாடுவதற்குமான மனநிலையைத் தருகின்றன.

Anuraga Karikkin Vellam, James & Alice, Kammatti Paadam, Kali மாதிரியான படங்கள் தன்னளவில் பொருட்படுத்தத்தக்க சில அம்சங்களைக்கொண்டிருக்கின்றன.

இத்தகைய  படங்களுக்கிடையேதான் விரும்பி உண்ணும் கறிகளுக்கிடையே சுவையுமற்ற மெல்லவும் முடியாத ஜவ்வாக சில படங்களும் வந்திருக்கின்றன. அப்படியான பல படங்களை பார்ப்பதையே தவிர்க்கமுடிந்த வகையில் அவை பற்றிய பெரியதொரு குற்றச்சாட்டு இல்லை.

Jacobinte Swargarajyam, Jomonte Suvisheshangal ஆகிய படங்கள் கொண்டாடப்படவில்லை என்பது சரிதான். எனவே அவை குறித்துப் பேசுவதற்கில்லை. ஆனால், Sakhavu, CIA (Comrade in America) படங்களில் என்ன இருக்கிறதென்று கொண்டாடுகிறார்கள். (பெரும்பாலும் மலையாளிகள் கொண்டாடுவதில்லை.) இட்லியை முன்வைத்து கம்யூனிச விளக்கம் கொடுத்த விஜயைக் கொண்டாடிய அடையாளச் சிக்கல் கொண்ட தமிழக கம்யூனிஸ்ட்டுகள்தான் கொண்டாடுகிறார்கள்.

நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் விமர்சிக்கப்பட்ட Kammatti Paadam படத்தில் பேசப்பட்ட அளவுக்கான அரசியல் Angamaly Diaries படத்தில் இல்லை. என்றாலும், இப்படம் கொண்டாடப்படுவது அதன் செய்நேர்த்திக்காக என்று எடுத்துக்கொள்ளலாம். (Angamaly Diaries பார்த்துவிட்டு அங்கே வரிசையாக பன்றி இறைச்சிக் கடைகள் இருக்கும் என்று தேடியலைந்தால் ஆட்டோ ஓட்டுனர் உட்பட ஏற இறங்க பார்த்த கதை தனி)

19 செவிலியரை வளைகுடா பகுதியிலிருந்து மீட்பது என்ற மெல்லிய கோட்டில் மட்டும் பயணிப்பதில் கரணம் தப்பக்கூடிய வாய்ப்பிருப்பதை அறியும் புதுமுக இயக்குனர் மகேஷ் நாராயணன், புத்திசாலிதனமாகவும் அதேநேரம் அர்த்தமுள்ளதாகவும் மாற்ற, நாயகின் இஸ்லாமிய குடும்பப்பின்னணி அவளது தனிப்பட்ட மணவாழ்க்கை இவற்றோடு பிணைத்து Take Off செய்திருக்கிறார்.

எவ்விதமான நேர்த்தியையும் அரசியல் ஆழத்தையும் உளச்சிக்கல்களையும் பதிவு செய்யாதவைதான் சகாவும் சிஐஏவும். கம்யூனிச ஆதரவு படங்கள் என்ற ஒரு காரணம் மட்டும் இவற்றைக் கொண்டாடுவதற்குப் போதுமானதா?

அப்படிக் கொண்டாடுவதெனில், கம்யூனிச கொள்கைவாதியின் இயக்கம் சார்ந்த நடவடிக்கையையும் அதற்கு எதிரான மனநிலையில் அதிகாரத்தையும் பணத்தையும் தேடியலையும் தேர்தல் அரசியல் கம்யூனிஸ்ட்டுகளையும் எதிரெதிரே நிறுத்திப் பேசும் Arabikkatha மிகச்சரியான படம். கம்யூனிச சித்தாந்தத்தை வழிமொழியும் படமாக இருந்தாலும், சீனா பற்றிய கற்பிதங்களையும் எள்ளல் செய்கிறது.

தொழிலாளி-முதலாளி என்கிற இருதுருவ அரசியல் மட்டும்தான் கம்யூனிசமா? அதற்கு வேறு பரிமாணங்களே கிடையாதா என்பதைத்தான் இட்லி, பட்சன கம்யூனிச விளக்கங்களும் சகாவு படத்தில் பேசப்படும் தட்டையான கருத்தியலும் நமக்குள் கேள்விகளாக எழுப்புகின்றன. இக்கேள்விகள் மார்க்சியத்தை முன்னிட்டல்ல, அதை உள்வாங்கத்தவறிய படங்களை முன்னிட்டு மட்டுமே.

விஜய் படத்தைப்போல, அஜித் படத்தைப்போல காவல்துறையை நோக்கி பெட்ரோல் குண்டு வீசும் ஹீரோயிசத்துடன் தொடங்கும் Comrade in America படத்தில், அரசியல் உரையாடல் என்று தொக்கிற்கு நடுவில் எறாவைத் தேடுவதைப்போல தேடினாலும் எதுவும் கிடைப்பதாக இல்லை.

பிரபாகரன் படத்தைக் காட்டியதற்காகவும் ஈழத்தமிழராக ஒருவரைக் காட்டிய காரணத்தாலும் இந்தப் படத்தைச் சிலாகிப்பவர்களைக் கண்டால் பரிதாபம் மேலோங்குகிறது. ஈழத்தமிழராக வரும் பாத்திரத்தின் மொழி, எந்த வட்டாரத்தினுடையது. தமிழகத்தின் பல்வேறு வட்டாரக் கலப்பாக இருப்பதோடு எங்கேனும் ஒரிடத்தில் ஈழவாடையடிக்கிறது. இந்த உச்சரிப்பில் காட்டப்படும் அலட்சியம் எரிச்சலூட்டுகிறது. அந்தப் பாத்திரத்தின் வழியாக எந்தவிதமான ஈழ அரசியலும் மருந்துக்கும் வாடையடிக்கவில்லை. இது மலையாளப் படங்களுக்கு தமிழர்களிடையே வரவேற்பு பெருகிவரும் சூழலில், தமிழக மற்றும் புலம்பெயர் தமிழ் ரசிகர்களுக்காக வைக்கப்பட்ட வியாபார தந்திரமன்றி வேறில்லை.

கம்யூனிச நாடுகள் வழியாக பயணிக்கும்போது ஏற்படும் நெருக்கடிகளை விடவும் அமெரிக்கா பாதுகாப்பான நாடாக இருப்பதைத்தான் படம் சொல்கிறது என்று என்னுடன் படம் பார்த்த துணைவி கூறினாள்.  ஒருவேளை இது நேர்மையாக செய்யப்பட்டதாகக்கூட இருக்கலாம் ஆனால் சிஐஏ வழியாக சொல்ல விரும்பியது இதைத்தானா?

உள்ளடக்கத்தில் உருப்படியாக வேலை செய்திருக்கிற படத்துக்கே அரபிக்கதா என்று எளிமையாக பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால், காம்ரேட் இன் அமெரிக்கா என்று ஊதிப்பெருக்கப்பட்ட தலைப்பைக்கேட்டு இருவேறு அரசியல் சித்தாந்தங்களின் உரையாடலாக, மோதலாக எதிர்பார்த்துப்போனதெல்லாம் பார்வையாளனின் தவறு மட்டும்தானா?

#Sakhavu
#CIA

திங்கள், 8 மே, 2017

அம்பேத்கரை, பெரியாரை கம்யூனிஸ்ட்டுகள் கொண்டாடவில்லை - அரிபரந்தாமன் உரை

மார்க்ஸ் சாதியைப் பற்றி ஆய்வு செய்யவில்லை. எந்த கம்யூனிஸ்ட் இயக்கம் சாதியைப் பற்றி ஆய்வு செய்தது; அல்லது சாதியைப் பற்றி ஆய்வு செய்த பெரியாரையும் அம்பேத்கரையும் கொண்டாடுகிறது?

எந்த கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்குள் வேண்டுமானாலும் சென்று பாருங்கள் அங்கு அம்பேத்கருடைய படமும் பெரியாரின் படமும் இருக்காது.

சோவியத் புரட்சி நூற்றாண்டைக் கொண்டாடுபவர்கள் அம்பேத்கர் பிறந்தநாளைக் கொண்டாடுவதில்லை.

(இளந்தமிழகம் ஏற்பாடு செய்த அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் சிறப்பு கருத்தரங்கில் நீதிநாயகம் அரிபரந்தாமன் உரை.)

திங்கள், 6 பிப்ரவரி, 2017

யார் தேசவிரோதிகள்: மாணவர்களா? இந்துத்துவக் கும்பலா?

Sculpting Memories, Time and Stories: A Lecture on C. Dhakshnamoorthy by...

{Must Watch} Demonetization: Government_Bank_People_Future - Thomas Fran...

{Must Watch} Demonetization: Government_Bank_People_Future - Prof. M. Na...

வெள்ளி, 1 ஏப்ரல், 2016

இந்தியக் கூட்டாட்சியியல்: அதிகாரப் பகிர்வா? குவிப்பா? - பேராசிரியர் மு.ந...

இந்துமதத்தை எதிர்க்கவேண்டிய தேவை என்ன?- வே.மதிமாறன் உரை

திராவிட இயக்க வரலாறு - புலவர் செந்தலை கவுதமன்

Hatred in the belly - Kuffir Speech

Hatred in the belly நூலறிமுகக் கூட்டத்தில் பெரியார் நேசன் உரை

Hatred in the belly நூலறிமுகக் கூட்டத்தில் பேரா.அ.கருணானந்தன் உரை

Hatred in the belly நூலறிமுகக் கூட்டத்தில் பேரா.நாகநாதன் உரை

சிவில் சர்வீஸ் தேர்வில் இடஒதுக்கீடு முறைகேடு - சங்கர், IAS Academy

உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு மோசடி - டாக்டர் முரளிதரன்

இடஒதுக்கீட்டில் அநீதி - கொளத்தூர் மணி உரை

அணுசக்தி குறித்து கோபாலகிருஷ்ணன்

அணுசக்தி குறித்து தேவசகாயம் உரை