செவ்வாய், 19 ஜனவரி, 2010

இருத்தல் பற்றிய குறிப்புகள்

துயருறும் மனிதனைத் தீண்டுவாரில்லை.

வலிந்தும் கோமாளியானால்தான்
நாலுபேர் கூடுவார்கள் என்றாகிவிட்டது.

கருத்தியலுக்கு ஏற்ற இடத்தில் வேலைவேண்டி
பலரது விண்ணப்பக் கடிதங்கள்
சேருமிடம் அறியாது கிடக்கின்றன.

முரண்படுகிறவன்
நாள்தோறும் சாகிறான்.

சூழலை வெம்மையாக்கி
குளிர்காய்வதே வாழ்க்கையாயிற்று.

தூக்கிப்போட
நாலுபேரை சம்பாதிக்கவேண்டுமென்கிறார்கள்.
செத்தபின் என் பிணத்தை தூக்கிப்போடுவது
உன் பாடா?
என் பாடா?

            

4 கருத்துகள்:

Bogy.in சொன்னது…

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

க.பாலாசி சொன்னது…

//முரண்படுகிறவன்
நாள்தோறும் சாகிறான்.//

எவ்வளவு உண்மை.... நடைமுறையுடன் முரண்படுவது சிலசமயங்களில் நம்மை தோற்றுப்போகவும் செய்யும்...

எவனோ ஒருவன் சொன்னது…

நண்பா
உனது வலைப்பூவில் உன்னைக் கண்டேன் அபூர்வபிராணியாகிவிட்ட சொரணைத் தமிழனாய் தலைநிமிர்ந்து நிற்கிறாய். பாரதியின் அக்கினிக்குஞ்சுபோல் இந்த உத்வேகம் உனது கவிதை, அரசியல் விமர்சனம், கட்டுரைகளில் வெளிப்பட்டிருக்கிறது.
தூரத்தில் குகைக்கு அந்தப் பக்கம் சிறிது வெளிச்சம் தெரிகிறது.
மனப்பூர்வமான வாழ்த்துகள்!

செல்லப்பா, தர்மராஜன்.

செல்லையா முத்துசாமி சொன்னது…

அன்புச் சகோதரர் தர்மராஜன்,
அடையாளத்துக்காகவோ, சாகும்முன் ஏதேனும் சாதிப்பது என்பதிலோ சற்றும் எனக்கு அக்கறையில்லை என்றே நம்புகிறேன். ஆனாலும் உங்கள் பாரட்டுதலில் வெகுவாக மகிழ்ச்சிகொள்ளும் என்னை நான் சந்தேகிக்கத்தான் வேண்டும்.