சனி, 27 மார்ச், 2010

அவன்-இவன் கவிதைகள்_01

இடைத்தேர்தல்


பட்டணத்திலிருந்து
ஓட்டுப்போட வந்த புள்ள
தகப்பனைவந்து
பார்க்கலையே
என்றான் அவன்.


அது கிடக்கட்டும் 
செத்துப்போன அப்பன்
ஒட்டுப்போட்டுட்டு போறானே
வீட்டுக்கும் ஒரு எட்டு வரலாமில்ல
என்றான் இவன்.

5 கருத்துகள்:

பா.ராஜாராம் சொன்னது…

ரொம்ப பிடிச்சிருக்கு.

செல்லையா முத்துசாமி சொன்னது…

திரு.பா.ராஜாராம் அவர்களுக்கு,
இந்த கவிதைக்கு கருத்து தெரிவித்ததோடு உங்களது வலைப்பூவில் இடம்பெற செய்திருக்கிறீர்கள்.
http://karuvelanizhal.blogspot.com/
தன்னை அடையாளப் படுத்திக்கொள்வதர்காகவே பலரும் முனையும் இக்காலத்தில், தனது ரசனைக்கும் கருத்தியலுக்கும் உகந்த படைப்பு முயற்சிகளை மற்றவர்களுக்கு தெரிவிக்கும் உங்கள் நல்லெண்ணத்தைப் பாராட்டவேண்டும்.
மிக்க நன்றி.
தொடர்வோம்.

SELVARAJ JEGADHEESAN சொன்னது…

Good one. Keep going.

க.பாலாசி சொன்னது…

மிக அருமையான கவிதைங்க... ரசிப்பதைத் தவிர வேறுவழியில்லை....

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

அருமையான கவிதை எனக்குபிடித்த கவிதைகள் லிஸ்ட் ல இந்த கவிதை டாப் டென் ல கண்டிப்பா இருக்கு.