Friday, April 30, 2010

நரைக்க காரணம் என்ன?

முன்னெப்போதையும்விட எனக்கு இப்போது வேகமாக நரைக்கத் தொடங்கிவிட்டது.

"ம்ம்ம் கவலை தொடங்கிடிச்சு"
என்று மனைவி சொல்லும்போதுதான் ஓ... இதற்கு கவலைப்பட வேண்டுமோ எனத்தோன்றுகிறது.

ஒருவேளை புதிதாகக் குடியேறிய பகுதியின் தண்ணீர் கூட நரைக்கு காரணமாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அதைவிடவும் சரியான காரணம் ஒன்றை இப்போது கண்டுகொண்டேன்.

புறநானூற்றில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல்தான் எனது நரைக்கான காரணத்தை தெளிவுபடுத்துகிறது.

"யாண்டு பலவாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்? என வினவுதிர் ஆயின்
மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான் கண்டனையர் என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான், காக்கும்; அதன் தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே"
(புறம் 191)

உறையூரைத் தலைநகராகக்கொண்டு சோழநாட்டை ஆண்டு வந்த கோப்பெருஞ்சோழனுக்கும் பாண்டிநாட்டுப் புலவரான பிசிராந்தையாருக்கும் இருந்த நட்பைப் பற்றி படித்திருக்கிறோம்.

பிசிராந்தையாருக்கு ஒரு சிறப்பு உண்டு. அதாவது வாழ்ந்த ஆண்டுகள் அடிப்படையில் வயோதிகர் என்றாலும் நரைகூடாத, கிழப்பருவமெய்தாத மனிதராக அவர் வாழ்ந்ததாக பாடல்கள்வழி அறிகிறோம். அவரது இளமைத் தோற்றத்துக்கு அவர்கூறும் காரணங்கள்தாம் மேற்கண்ட புறநானூற்றுப் பாடலில் உள்ளது. அப்பாடலில்,

"என் மனைவி மாட்சிமைப்பட்ட பண்புகளை உடையவள்; அவளோடு என் மக்களும் அறிவு நிரம்பியவர்கள். எனக்கு ஏவலர்களாக அமைந்தவர்கள் நான் கருதியதையே செய்பவர்கள். என் நாட்டு அரசனும் நீதி அல்லாதவற்றைச் செய்யாமல் காவல் காப்பவன். இவற்றுக்கும் மேலாக, நற்குணங்கள் நிரம்பிய, அடக்கம் உடையவராய், ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி வாழும் நல்ல நெறியுடைய சான்றோர் பலர் என் ஊரில் உள்ளனர்”,  என்கிறார் பிசிராந்தையார்.

அவர் சொல்கிறபடியேதான் எனக்கும் வாழ்க்கையில் எல்லாம் வாய்த்திருக்கிறது. ஆனால் வேந்தனும் அல்லவை செய்யான் என்பதுதான் பிசகிவிட்டது. வேந்தனை அடியொற்றி,  ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலரும் அறநெறி பிறழ்ந்தோர் ஆனார்கள்.

எனவேதான்....
 (முதல்வரியைப் படித்துக்கொள்ளுங்கள்).

Tuesday, April 6, 2010

நளினி விடுதலை: அரசியல் சிக்கலும் சட்ட சிக்கலும்


நளினி விடுதலை: அரசியல் சிக்கலும் சட்ட சிக்கலும் என்ற தலைப்பிலான கருத்தரங்கை கீற்று இணையதளம் 04-04-2010, ஞாயிறு மாலை 6 மணிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
அதில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு ஆகியோர் கலந்து கொண்டு ஆற்றிய உரை


செறிவானதும் எழுச்சிமிக்கதுமான தியாகுவின் பேச்சை நீங்களும் கேளுங்கள் தோழர்களே. கேட்பதில் சிக்கல் இருந்தால் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மார்க்சிய கண்ணோட்டத்துடன் வேதத்தை அணுகுகிறவர்கள், திராவிட கருத்தியலை அணுகுவதில்லை

(இக்காணொளி குலுக்கையில் வெளியிடுவதற்காக ஒளிப்பதிவு செய்த தோழர் Saravanaperumal Perumal மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றி) ...