Saturday, December 31, 2011

குலக்கல்வித் திட்டத்தை ஆதரித்த தமிழர் தந்தை ம.பொ.சி


ராசாசியின் வஞ்சக மூளையில் வடிவெடுத்த கொடிய திட்டந்தான் குலக்கல்வித் திட்டம் என்பது. பாதி நேரம் படிப்பு; மீதிநேரம் அப்பன் குலத்தொழில் என்னும் பச்சையான மனுதர்ம நெறிக்கு பாதையைப் போட்ட ஆச்சாரியாரின் இந்த கொடிய கல்வித் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடே கொந்தளித்து எழுந்தது. வஞ்சகப் பார்ப்பன ஆட்சியை ஒழிக்காமல் தமிழருக்கு வாழ்வில்லை என்ற முடிவோடு வரிப்புலியாய் சீறிப்பாய்ந்தார் பெரியார்.

குலக்கல்வித் திட்டத்திற்கு தமிழ்நாடே கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தபோது, அந்தக் கல்வித்திட்டத்தை ஆதரித்து ம.பொ.சியின் தமிழரசுக் கழகம் தீர்மானம் நிறைவேற்றியது. நாடெங்கும் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் நடத்த முடிவுசெய்து திக, திமுக மட்டுமல்ல காங்கிரசு கட்சியைச் சேர்ந்த காமராசரும் குலக்கல்வித் திட்டத்தைக் கண்டித்தார். ம.பொ.சி அந்த காமரசைரைக்கூட விட்டுவைக்கவில்லை.

"புதிய கல்வித்திட்டத்தை எதிர்த்து பேசினார் காமராசர். கல்வித்திட்டம் சரியா? தவறா? என்பதில் அவருக்குக் கவலை இல்லை. ராசாசி ஆட்சியை வெளியேற்றித் தான் அதிகாரத்திற்கு வர அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார்." (ம.பொ.சி எனது போராட்டம் பகுதி 2, பக்கம் 392)

நன்றி: புரட்சிப் ​பெரியார் முழக்கம், 19 ​மே 2011, பக்கம் 3.

Friday, December 30, 2011

தமிழ் உயர்மொழி எனில் தமிழன் கீழ்மகனானதெப்படி?

தமிழ் உயர்மொழியானால், தமிழன் கலப்படமற்ற சுத்தப் பிறவியானால், தமிழ் பேசுகிறவன் தமிழன் என்கிற காரணத்திற்காக உன்னை சூத்திரன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்று கடவுள் சொன்னதாக சாஸ்திரம் எழுதி வைத்து, 'கீதை' வெங்காயம் சொல்லுகிறது என்று சொல்லி உன்னை தீண்டத்தகாத ஜாதியாக பார்ப்பானும், அவன் பொண்டாட்டி, பிள்ளை, ஆத்தாள், அக்காளும் நடத்துகிறார்களே; நீ நாக்கைப் பிடிங்கிக்கொண்டாயா? நீ யாருக்குப் பிறந்தாய் என்பது பற்றி சிறிதளவாவது சிந்தித்து இருந்தால், என்னை நீ யாருக்குப் பிறந்தாய் என்று கேட்டு இருக்கமாட்டாய்.

எனக்கு நான் யாருக்குப் பிறந்தேன் என்பது பற்றிக் கவலை இல்லை. அது என் அம்மா சிந்திக்கவேண்டிய காரியம். நான் யாருக்குப் பிறந்தேன் என்று என்னாலும் சொல்லமுடியாது; தம்பீ உன்னாலும், அதாவது நீ யாருக்குப் பிறந்தாய் என்று (உன்னாலும்) சொல்லமுடியாது; அந்தப் பிரச்சனையே முட்டாளுக்கும், அயோக்கியனுக்கும்தான் தேவை.

யாருக்குப் பிறந்தாலும் மனிதனுக்கு மானம் தேவை; அது உன்னிடம் இருக்கிறதா, என்னிடம் இருக்கிறதா என்பதுதான் இப்போது சிந்திக்கவேண்டிய தேவை.

அதையும் விட தமிழ்மொழியிலும், தமிழ்ச் சமுதாயத்திலும் இருக்கிறதா? இருப்பதற்கு தமிழ் உதவியதா? உதவுகிறதா? என்பதுதான் முக்கிமான, முதலாவதான கேள்வி.

 - தமிழும் தமிழரும் நூலில் பெரியார்

Wednesday, December 28, 2011

அவர்கள் நல்ல தமிழர்களைத் தேடிக் கிளம்பியிருக்கிறார்கள்

தமிழர்கள், திராவிடர்கள் பற்றிய விரிவான ஆராய்ச்சிகளை ‘நாம் தமிழர் இயக்கம்’ மேற்கொண்டிருக்கிறது. ‘நல்ல தமிழர்களை’ அவர்கள் தேடிக் கிளம்பியிருக்கிறார்கள்.

ஆனால், அவர்களின் தமிழர் அடையாள ஆராய்ச்சியின்படி ஈழ விடுதலைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் பேருதவி செய்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரனைக்கூட ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அவர் பிறப்பால் மலையாளி என்பதால் ‘திராவிடராகி’ விடுகிறார். நான்காவது ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில், ஈடில்லாத போராட்டங்களை நடத்திய கோவை இராமகிருட்டிணன், பேராசிரியர் சரசுவதி ஆகியோர்கூட, அவர்கள் கண்களுக்கு ‘நல்ல தமிழர்களாக’ புலப்படவில்லை.

ஆங்கிலேயர் கால்டுவெல் கண்டுபிடித்த சொல்லான திராவிடத்தை எப்படி ஏற்க முடியும் என்ற வாதங்களையெல்லாம் முன் வைக்கிறார்கள். ‘கால்டுவெல்’ என்ற ஆங்கிலேயரின் கண்டுபிடிப்புகளையெல்லாம் ஏற்கக் கூடாது என்று அவர்கள் ‘ஆராய்ச்சி’கள் கூறினாலும், சீமான் என்ற வடமொழிப்பெயரை சூட்டிக் கொண்டுள்ளதற்காக அவரை, நாம் தமிழன் இல்லை என்று சொல்லப் போவதில்லை. அவர்களின் ஆராய்ச்சியை சீமானுக்கு நாம் பொருத்திப் பார்க்கத் தயாராக இல்லை.

ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். ‘திராவிட’ என்ற சொல்லை தங்களுடன் இணைத்துக் கொண்டதற்காகவே கலைஞர் கருணாநிதியையோ, விஜய்காந்தையோ, ஜெயலலிதாவையோ நாம் தூக்கி சுமப்பவர்கள் அல்ல.

கலைஞர்கூட ஒரு காலத்தில் அவர் சார்ந்த சமூகப் பார்வையோடு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக திராவிடர் இயக்கத்துக்கு வந்தவர்தான். இன்று அவரிடம் அந்த சமூகப் பார்வை எல்லாம் காணாமல் போய் பெரு முதலாளிகளின் வர்க்கப் பார்வைக்கு வந்துவிட்டார்.

ஜெயலலிதா எப்போதுமே தமிழினத்துக்கு எதிரிதான். இந்த சக்திகள் அரசியல் களத்திலிருந்து ஒதுக்கப்பட்டு, தமிழர்களுக்கான புதிய அரசியல் சக்தி ஏதேனும் தோன்றாதா என்று உண்மையாக ஏங்கும் தமிழர்கள் ஏராளம் உண்டு. விஜய்காந்த் போன்ற குழப்பவாதிகளைவிட சீமான் போன்றவர்கள் அரசியல் களத்துக்கு வரட்டுமே என்ற எண்ண ஓட்டமும் நமக்கு உண்டு.

ஆனால், புதிதாக புறப்பட இருக்கிற ‘நாம் தமிழர்’ தமிழர்களை ஆரிய எதிர்ப்பாளர்களாக அடையாளப்படுத்திய பெரியாரின் பார்வையைத் தூக்கி எறிந்துவிட்டு, திராவிடர் எதிர்ப்பாளராக அடையாளப் படுத்துவதில் முனைப்புக் காட்டத் தொடங்கிவிட்டது.

பெரியார் முன்னிறுத்திய ‘திராவிடர்’ என்பது தமிழர்களுக்கான - தமிழர்களை பார்ப்பனிய அடிமைப் பண்பாட்டிலிருந்து மீட்டெடுக்கும் குறிச்சொல் என்ற அடிப்படை உண்மையையே திசை திருப்பி, அது ஏதோ கேரளா, கர்நாடக, ஆந்திர மாநிலத்தில் வாழும் இனங்களிடம் தமிழர்களை அடிமைப்படுத்துவதாக ஒரு சித்திரத்தை தீட்டிக் காட்ட படாதபாடுபடுகிறார்கள். இதில் அளவில்லாத மகிழ்ச்சி ஆரியத்துக்குத் தான்.

‘அப்பாடா, நாம் தமிழர் வந்துவிட்டது; இனி நமக்கு ஆபத்தில்லை’ என்று அவாள் கூட்டம், மகிழ்ச்சியில் கூத்தாடக் கூடும். தமிழருக்கு அன்றும் இன்றும் என்றும் கேடானது ஆரியம். அதற்கு அரண் அமைத்துக் கொண்டிருப்பது இந்தியம்; உண்மையில் தமிழர்கள் மீதுசுமத்தப் பட்டுள்ள ஒட்டு மொத்த அடிமைத்தனங்களுக்கும் எதிரான பண்பாட்டுப் புரட்சியை முன்னெடுக்கும் வலிமையான போர்வாள் திராவிடர் - திராவிடம் என்ற லட்சியச் சொல்; ஆனால், ‘நாம் தமிழருக்கு’ அவைகள் கசக்கின்றன.

தமிழ்நாட்டைத் தவிர, பிற மொழிக்காரர்கள் வேறு எந்த மாநிலத்திலாவது முதல்வரானது உண்டா என்றெல்லாம் கேட்கிறார்கள். அடக்கத்துடன் நாம் நினைவூட்டுகிறோம். பக்கத்து நாடான கன்னட நாட்டில் தரம்சிங் என்ற மராட்டியர் முதலமைச்சராக இருந்திருக்கிறார்.

‘நாம் தமிழர்’ அமைப்புத் தோழர்கள் பலரின் சட்டைகளை அலங்கரித்துக் கொண்டிருக்கும் சேகுவேரா கூட அர்ஜென்டினாவில் பிறந்தவர் தான் . அவர் கியுபா விடுதலைக்குப் போராடினார். அத்துடன் நிற்கவில்லை.பொலிவியா விடுதலைக்கும் போராடச் சென்றார். ‘நாம் தமிழர்’ அமைப்பின் திராவிடர் எதிர்ப்புக் கோட்பாட்டைப் பொருத்திப் பார்க்கும்போது, சேகுவேராவும் கூட கியூபாவின் அன்னியர் தானே?

இனி அவர்கள் பார்வையில் ப. சிதம்பரம், சோழவந்தான் சுப்ரமணியசாமி, புதுவை நாராயணசாமி எல்லாம் திராவிடர் அல்லாத “நல்ல தமிழர்”களாகி விடக் கூடும்.

இன்னும் விரிவாக எழுதலாம்; திராவிடர் எதிர்ப்பை அவர்கள் தொடரும்போது அதற்கான விளக்கங்களும் பதில்களும் வரத்தானே செய்யும்? அவைகளுக்கெல்லாம் இந்த விளக்கம் ஒரு சிறிய முன்னோட்டம் மட்டுமே!


கொளத்தூர் தா.செ. மணி
தலைவர், பெரியார் திராவிடர் கழகம்

நன்றி: http://thozharperiyar.blogspot.com/2010/04/blog-post_23.html

Tuesday, December 27, 2011

ஆதிக்கசாதி திமிரையும் மதத்தையும் கைவிடமுடியாதவர்கள் திராவிடத்தை எதிர்க்கிறார்கள்


முல்லைப்பெரியாறு அணை காக்க மே 17 இயக்கம் மெரினாவில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பாரதிராசாவும் தங்கர் பச்சானும் திராவிட எதிர்ப்பரசியலைக் கிளப்பினார்கள். 

திராவிட இயக்கத்தின் கருத்தியல் அல்லது கொள்கை எந்த அளவில் தமிழனின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்ததென்றுபேச எவனும் முன்வருவானா? முடியாது. ஏனெனில் பெரியார் கேட்டதும் தனித்தமிழ்நாடுதான். 

கேரளா, கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்கள்தான் திராவிட நிலப்பரப்பு என்று அந்த இயக்கங்களே சொல்லாதபோது இந்த தேவர்சாதி திமிர்பிடித்த பாரதிராசாவும் படையாச்சி தங்கரும் எந்த கனவுலகத்திலிருந்துகொண்டு திராவிட எதிர்ப்பைக் கையிலெடுக்கிறார்கள்? 

சாதி, மத எதிர்ப்பை கையிலெடுத்து போராடும் பெரியார் திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளுக்கான எதிர்வினையா இது. அல்லது பரமக்குடியில் தேவர்சாதி ஆதிக்க அரசு நடத்திய படுகொலை ஆய்வறிக்கை நூல்வெளியீட்டு விழாவில் வைகோ பங்கேற்றதால் பாரதிராசாவுக்கு வந்த வெறுப்பா? 

தமிழ்தேசியத்தின் கூறுகள் திராவிட அரசியலிலும் உண்டு. கூடுதலாக சாதி, மத எதிர்ப்பையும் கொண்டுள்ளது. கருணாநிதியும், ஜெயலலிதாவும் பெரியார் வழி வந்தவர்களா? பெரியாரின் கொள்கையை விட்டுவிட்டு பிழைப்புக்காக அரசியல் நடத்தும் இவர்களை முன்வைத்து திராவிட எதிர்ப்பை கையிலெடுப்பவர்கள், பெதிகவையும் மதிமுகவையும என்னவாகப் பார்க்கிறாரகள்? 

அறிவுப்பூர்வமாக அல்லாமல் இப்படியான திராவிட எதிப்பை போகிறபோக்கில் உளறுபவர்களை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் மே 17 இயக்கத்தின் நிலைப்பாடு என்ன? ஏனெனில் பாரதிராசாவின் கருத்தை அப்படியேதான் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். ஆதிக்கசாதி திமிரையும் மதத்தையும் கைவிடமுடியாதவர்கள் திராவிடத்தை எதிர்க்கிறார்கள். மே 17 நேரடியாக அல்லாமல் இதுபோன்ற அரசியல் அரைவேக்காடுகளை வைத்து தந்தை பெரியார் வழி நின்று போராடும் தோழர்களை இழிவு செய்ய நினைக்கிறதா?

திராவிடர் என்பதன் உள்ளடக்கத்​தைப் பாருங்கள். அகராதியில் ​பொருள் ​தேடாதீர்.

திராவிடர் என்ற ​சொல்லுக்கு, ஆராய்ச்சிகள் ​செய்து​கொண்டிருப்​போருக்கு பதிலளித்து, மயிலாடுது​றையில் 11.03.2011 அன்று நடந்த கூட்டத்தில் ​பெரியார் திராவிடர் கழகத் த​லைவர் ​கொளத்தூர் மணி ஆற்றிய உ​ரையிலிருந்து...

திராவிடர் என்பதன் உள்ளடக்கம் என்னவாக இருக்கிறது என்றுதான் பார்க்க​வேண்டு​மே தவிர, அகராதியில் ​பொருள் ​தேடக்கூடாது. அகராதியில் பார்க்கும்​போது பலவற்​றை தவறாகப் புரிந்து​கொள்ள ​நேரிடும்.


எனது சிறுவயதில் நாங்கள் ஒரு நாடகம் நடத்தி​னோம். ஒருவர் ஆங்கிலத்தில் ​சொல்வார். அ​தை நான் தமிழில் ​​மொழி​பெயர்ப்​பேன். "ladies and gentlemen" என்பார். அதற்கு நான் "​பெண்க​ளே. சாதுவான ஆண்க​ளே" என்று ​​மொழி​பெயர்ப்​பேன். "I am coming from greenland" என்பார். "நான் பச்​சை நிலத்திலிருந்து வருகி​றேன் என்று ​மொழி​பெயர்ப்​பேன்." "Do you understand" என்பார். அதற்கு நான், "அடியில் நிற்கிறாயா" என்​பேன். "​வெண்​டைக்காயும் முருங்​கைக்காயும் சாப்பிடு என்ற ​பொருளில், "Eat ladies finger and drumstick" என்பார். "​பெண்கள் விரல்க​ளையும் தப்பட்​டைக் குச்சிக​ளையும் சாப்பிடுங்கள்" என்று ​மொழி​பெயர்ப்​பேன். அகராதியில் பார்த்தால் தவறாக இப்படித்தான் ​மொழி​பெயர்க்கமுடியும்.

"ஆட்டம் (Atom) என்ற ​சொல்லுக்கு லத்தீனில் பிளக்கமுடியாதது என்று ​பொருள். Dalton's atomic theory ​சொல்கிறது...Atom is indivisible(அணு பிளக்கமுடியாதது) என்பதுதான். அப்​போது நிலவிய விஞ்ஞான ​கொள்​​கை. ஆனால், இப்​போது அ​தை பு​ரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் என பிரிக்கமுடியும் என்பதும், பிளக்கும்​போது ​​வெளிப்படும் அணுஆற்றலில் இருந்து பல்​வேறு ஆக்க​ வே​லைக​ளையும் அழிவு ​வே​லைக​ளையும் ​செய்யமுடியும் என்று கண்டுபிடித்துவிட்டார்கள். அணு​வைப் பிளக்கமுடியாது என்று கருதிக்​கொண்டிருந்த காலத்தில், பிளக்கமுடியாதது என்ற ​பொருள்ள ​Atom என்ற ​சொல்​லை, பிளக்கமுடியும் என்று ​தெரிந்த பின்னலும் Atom என்ப​தை மாற்றவில்​லை. ஒரு ​சொல்லில் ஏற்றப்பட்டிருக்கும் உள்ளடக்கம் என்பதுதான் முக்கியம். அப்படித்தான் ​பெரியார், திராவிடர் என்ற ​சொல்லிற்கு ஓர் உள்ளடக்கத்​தைக் ​கொடுத்துள்ளார்.

நான் இந்தியன்; நான் இந்து - தமிழர் தந்​தை ம.​பொ.சி

எல்​லைப் ​போராட்டத்தில் ​பெரியார்


எல்​லைப்​ ​போராட்டத்தில் ​பெரியார் அக்க​றை காட்டவில்​லை என்று இப்​போது ஒரு பிரச்சாரம் ​செய்துவருகிறார்கள். 

1953 ல் ஆந்திரா பிரிந்த​போதுதான் இந்தச் சிக்கல் வந்தது. அப்​போது நடந்த இரு நிகழ்ச்சிகளில் ஒன்று திருத்தணியில் நடந்த எல்​லைப் ​போராட்டம், மற்​றொன்று ​சென்​னை நக​​ரை ஆந்திராவுக்கு ​கேட்டார்கள் என்பது.

இதில், ​பெரியார் என்ன நி​லைப்பாடு எடுத்தார் என்றால், 1956 ஆம் ஆண்டு, ​வேலூரில் ஒரு கூட்டத்தில் ​பெரியார் ​பேசுகிறார். எல்​லைப் ​போராட்டத்தில் ​பெரியார் கலந்து​​கொள்ளவில்​லை​யே என்ற ​கேள்வி வருகிறது. அதற்கு அவர் விளக்கம் அளிக்கிறார்.

"முதல் கூட்டத்தில் ம.​பொ.சி உட்பட நாங்கள் எல்​லோரும் கலந்து​கொண்​டோம். எல்​லைப்​ ​போராட்டம் பற்றி ​பேசி​னோம். அப்​போது நான் ஐந்து திட்டங்க​​ளை முன்​வைத்​தேன். 

இந்தப் ​போராட்டத்​தோடு இந்தி எதிர்ப்​பையும் ​சேர்த்துக்​கொள்ள​வேண்டும். 

ப​டை, ​போக்குவரத்து, ​வெளியுறவுத்து​றை தவிர அ​னைத்து அதிகாரங்களும் மாநிலத்திற்குள்தான் இருக்க​வேண்டும். ​

சென்​னை ராஜ்யம் என்ப​தை தமிழ்நாடு என ​பெயர் மாற்ற​வேண்டும்.

காங்கிரசு கட்சி, தட்சிண பிர​தேசம் என்ற அ​மைப்​பை உருவாக்க நி​னைக்கிறது. அ​தை எதிர்க்க​வேண்டும். 

என்று இந்த ஐந்து ​​கோரிக்​கைகளில் தமிழ்​தேசியத்திற்கு எதிராக எதுவும் இல்​லை. ஆனால், தமிழ்​தேசியத்தின் தந்​தையாகக் கருதப்படுகிற ம.​பொ.சி,

"நான் இந்தியன் என்பதால் இந்தி ​மொழி​யை ஏற்றுக்​கொள்கி​றேன். நான் இந்து என்பதால் என் சமய சடங்குகளில் சமஸ்கிருதத்​தை ஏற்றுக்​கொள்கி​றேன்." என்றார், 

இ​தை இரண்​டையும் எதிர்த்த ​பெரியார் ​வைத்த அந்த ​​கோரிக்​கைகளுக்கு, "கம்யூனிஸ்ட்டுகள் ஏற்றுக்​கொள்ளவில்​லை. என​வே ​வேண்டாம்" என ம.​பொ.சி ​சொன்னார்.

ம.​பொ.சி உயி​ரோடு இருந்த காலத்தில் ​பெரியார் இ​தைப் பதிவு ​செய்துள்ளார். "தாராளமாக நீங்கள் ​போராடுங்கள். நாங்கள் உங்க​ளோடு இ​ணைந்து நிற்கமுடியாது" என்று ​பெரியார் ​தெரிவித்துவிட்டார்.

24-12-2010 ​பெரியார் நி​னைவுநாளில் ​பெரம்பூரில் ​கொளத்தூர் மணி ​பேசியது.

குழப்பவாதிகளுக்கு கழகத் த​​லைவர் ​​கொளத்தூர் மணி பதில் என்ற த​​லைப்பில் சனவரி 20-2011 ​பெரியார் முழக்க பதிவிலிருந்து

Monday, December 19, 2011

Wednesday, November 30, 2011

அணுஉ​லையின் ஆபத்தும் கூடங்குளமும்

"அணுஉ​லையின் ஆபத்தும் கூடங்குளமும்" என்ற த​லைப்பில் 28.11.2011 அன்று திருவல்லிக்​கேணி பகுதியில் ​பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு ​செய்த ​பொதுக்கூட்டத்தில் எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் ஆற்றிய உ​ரை.

Tuesday, November 29, 2011

​ஜெயாவுக்கு ஓட்டுப்​போட்டது ​செத்து மடியவா?... தலித் சுப்​பையா பாடல்

28.11.2011 அன்று திருவல்லிக்​கேணியில் ​பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ​பரமக்குடி துப்பாக்கிச் சூடு கண்டனப் பொதுக்கூட்டத்தில் தலித் சுப்​பையா அவர்கள் பாடிய பாடல். அ​னைவரது வர​வேற்​பையும் ​பெற்றது.

சட்ட எரிப்பு நாள்

நவம்பர் 26 சட்ட எரிப்பு நாள் விளக்கம், கூடங்குளம் அணுஉலை குறித்த அறிவியல் மற்றும் அரசியல் போக்கு அடிப்படையிலான விழிப்புணர்வு உரை, பரமக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு எதிராக கண்டனம் இப்படி முன்று முக்கிய தலைப்புகளில் திருவல்லிக்கேணி பெரியார் திராவிடர் கழகத்தால் 28.11.2011 அன்று பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் மார்க்சிய பெரியாரிய பேரறிஞர். வே.ஆனைமுத்து, எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.


Monday, November 28, 2011

மாவீரர் நாள் 2011

​தேசியத் த​லைவர் பிரபாகரன் பிறந்தநாள், ​செங்​கொடி நி​னைவு இல்லத்திறப்பு மற்றும் மாவீரர்நாள் நி​னை​வேந்தல் ஆகிய முப்​பெரும் நிகழ்வுக​ளை உள்ளடக்கி காஞ்சி மக்கள் மன்றம் சார்பில் ​செங்​கொடியூரில் (மங்கல்பாடி, காஞ்சிபுரம்) ​27.11.2011 அன்று விழா ஏற்பாடு ​செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில், ​நெடுமாறன், ​வை​கோ, ​கொளத்தூர் மணி, தியாகு, அற்புதம் அம்மாள், திருச்சி ​செளந்தராசன், சி.ம​கேந்திரன், ​வேல்முருகன், ​பேராசிரியர் சரசுவதி, பார்​வேந்தன், கிராமியக் க​லைஞர் ஓம் முத்துமாரி, மல்​லை சத்யா, டி.எஸ்.எஸ்.மணி உள்ளிட்ட திரளான மக்கள் பங்​கேற்றனர்.

Thursday, November 24, 2011

மாவீரர்நாள் நிகழ்ச்சிநிரல்

மக்கள் மன்றத் தோழர் மகேசு அவர்களிடம் தொலைபேசியில் உறுதிப்படுத்திக்கொண்ட நிகழ்ச்சிநிரல் இது.


Wednesday, November 23, 2011

காவல்து​றையின் அத்துமீறல் குறித்து ​கொளத்தூர் மணி (கா​ணொளி)

அரூரில் ​பெரியார் திராவிடர் கழகத்​தைச் ​சேர்ந்த ​​வேடியப்பன் உள்ளிட்ட ​தோழர்கள் மீது ​பொய் வழக்குப்​போட்டு சாதித் திமிருடன் நடந்துவரும் காவல்து​றை​யைக் கண்டித்து கடந்த 19.11.2011 அன்று ​பொதுக்கூட்டம் ந​டை​பெற்றது. அக்கூட்டத்தில் ​பெ.தி.க த​லைவர் ​​கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உ​ரை.

Saturday, November 5, 2011

கொட்டும் மழையில் பேரணி

மூவர் தூக்கு தண்டனை, பரமக்குடி துப்பாக்கிசூடு, கூடங்குளம் அணுஉலை ஆகிய எதேச்சதிகார அரசுகளின் நடவடிக்கைகளைக் கண்டித்து சென்னை திருவெற்றியூரில் பேரணி நடைபெற்றது. 

பெரியார் திராவிடர் கழகம், மதிமுக, நாம் தமிழர், மக்கள் மன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் பங்கேற்றனர்.


Thursday, November 3, 2011

மும்பையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு

ராஜிவ் ​கொ​லை வழக்கில் ம​றைக்கப்பட்ட உண்​மைகள் குறித்து மும்​பையில் பத்திரி​கையாளர் சந்திப்பில் விளக்கப்பட்டது. 
இச்சந்திப்பில் ​பெரியார் திராவிடர் கழக ​பொதுச்​செயலாளர் ​தோழர் விடுத​லை ரா​சேந்திரன், ​மே 17 இயக்கத்தின் திருமுருகன், திருச்சி​வேலுச்சாமி ஆகி​யோர் பங்​கேற்றனர்.

Sunday, October 30, 2011

மரண தண்ட​னைக்​கெதிராக ப​றைமுழக்கம்

மரண தண்டனைக்கெதிரான தோழர் செங்கொடி பெண்கள் அமைப்பின் சார்பில், மூவர் விடுதலைக்காக நடந்த தொடர்முழக்கப்போராட்டத்தில், மக்கள் மன்றத் தோழர்களின் பறைமுழக்கம்Saturday, October 29, 2011

மரண தண்ட​னைக்​கெதிராக ​பெண்கள் ​போராட்டக்குழு

மரண தண்டனைக்கெதிரான தோழர் செங்கொடி பெண்கள் அமைப்பின் சார்பில், மூவர் விடுதலைக்காக தொடர்முழக்கப்போராட்டம் சென்னையில் இன்று (29.10.2011) நடந்தது.

கூடங்குளத்தில் அணுஉ​லை; தமிழகத்தின் காலில் கட்டும் அணுகுண்டு

"கூடங்குளத்தில் அணுஉ​லை; தமிழகத்தின் காலில் கட்டும் அணுகுண்டு" என்ற எச்சரிக்​கை உணர்வுடன் அணுஉ​லைக்​கெதிரான ​தொடர்முழக்கக் கூட்டத்​தை 23.10.2011 அன்று ஏற்பாடு ​செய்திருந்தது தமிழக இ​ளைஞர் எழுச்சிப் ​பாச​றை.


செ​ன்னை பனகல் மாளி​கைமுன் நடந்த இப்​போராட்டத்தில் ​பெரியார் திராவிடர் கழகத்தின் ​பொதுச்​செயலாளர் விடுத​லை ரா​சேந்திரன் அவர்கள் ஆற்றிய உ​​ரை.பூவுலகின் நண்பர்கள் அ​மைப்பின் சார்பில் பங்​கேற்ற வழக்கறிஞர் சுந்தரராஜன் அவர்கள் ஆற்றிய உ​​ரை.

Friday, October 28, 2011

புதியதலைமுறை அதிகாரவர்க்கத்தின் ஊதுகுழலா?அத்வானி பயணிக்க இருந்த வழியில் வெடிகுண்டு என்பதையே நம்மால் நம்ப இயலவில்லை. இதில் என்னவெல்லாம் உளவுச்சதி இருக்கிறதென்று தெரியவில்லை. 

இந்நிலையில், 'புதியதலைமுறை'யின் செய்தியாளர் தியாகச்செம்மல், தேவர்விழாவுக்கு போகும் வழியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததாக சரடு விட்டார். 'பரமக்குடி துப்பாக்கிசூடு படுகொலை புகழ்' தமிழக காவல்துறைகூட இப்படி கருத்துக்கூறாத நிலையில், செய்தியாளர் எந்த ஊகத்தின் அடிப்படையில் இவ்வாறு பொறுப்பற்று செய்தியளித்தார் என்று தெரியவில்லை.

ஏன், கொல்லைக்குப்(மலம் கழிக்க) போகிறவன் கூடத்தான் அந்த சாலையைப் பயன்படுத்துவான். அவனுக்கு வச்ச குண்டுன்னு சொல்லேன் பார்க்கலாம். செய்தியாளர்னா கொஞ்சமாவது கூறுபாடு வேணுமப்பா. 

ரெம்ப கேவலமான தலைமுறையா இருக்கே!

கல்பாக்கம், கூடங்குளம் அணுஉ​லைக​ளைக் கண்டு நாம் ஏன் அச்சப்பட​வேண்டும்?

சென்னை லயோலா கல்லூரி அருகில்அய்க்கஃப் வளாகத்தில் 22.10.2011 அன்று பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் அணு உலைகளின் அச்சங்களைப் பற்றிய அறிவியல் பூர்வமான விளக்கக்கூட்டம் நடந்தது. 

​கேள்வி​நேரம்


மருத்துவர் புக​ழேந்தி


மருத்துவர் ர​மேஷ்அணுஉ​லை பாதுகாப்பானதா? - ஞாநி

Tuesday, October 25, 2011

"முதுகுளத்தூர் கலவரம் (1957) முதல் பரமக்குடி படுகொலை (2011) வரை"

"முதுகுளத்தூர் கலவரம் (1957) முதல் பரமக்குடி படுகொலை (2011) வரை" என்ற தலைப்பில் சென்னை லயோலா கல்லூரியில் 22.10.2011 அன்று SAVE TAMILS இயக்கம் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

தோழர் விடுதலை ராசேந்திரன்தோழர் வ.கீதா

Sunday, October 23, 2011

மின்துறை அமைச்சருக்கு முதுகெலும்பு உண்டா?

இன்று(23.10.2011) கூடன்குளம் அணுஉலைக்கெதிராக தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை ஏற்பாடு செய்த தொடர்முழக்கக் கூட்டத்திற்கு சென்று திரும்பும்போது தி.நகர் உஸ்மான் சாலை வழியாக வந்தேன்.

அலங்கார விளக்குகளை போட்டிபோட்டு எரியவிட்டிருக்கிறார்கள் பெருவணிகர்கள்.

பல இடங்களில் தெருவிளக்கு எரியவில்லை. பல சிற்றூர்களில் ஒரு குழல்விளக்கெரிய மின்சாரம் இல்லை. ஒரு மின்விசிறி இயங்கவும் மின்சாரமின்றி, பச்சிளம் குழந்தையோடு கொசுக்கடிக்கு நடுவேயும் வீதியில் நிற்கிறார்கள் தாய்மார்கள்.

இன்றியமையாத தேவைக்கு மட்டும் மின்சாரம் செலவிடப்பட்டால் நிச்சயம் நமக்கு மின்தட்டுப்பாடு வர வாய்ப்பே இல்லை. மின்துறை அமைச்சருக்கு முதுகெலும்பு உண்டா?

சொற்ப மின்சாரத்திற்காக கூடன்குளத்தை ஆதரிக்கும் இந்தியாவின் கைக்கூலிகள் இதற்கெதிராக குரல் எழுப்புவார்களா?

Monday, October 17, 2011

மரண தண்ட​னைக்​கெதிராக

மரண தண்ட​​னைக்​கெதிராக ​25ஆவது நாளாக நடந்த ​தொடர் பட்டினிப்​போராட்டத்தில் 16.10.2011 அன்று டிராட்ஸ்கி மருது அவர்களின் த​லை​மையில் கவிதாபாரதி அவர்கள் முன்னி​​லையில் ஊடகவியலாளர்களும் க​லைஞர்களும் பங்​கேற்றனர்.படங்கள்

Friday, October 14, 2011

மண்ணுக்கான விடுத​லை​யை மட்டுமல்ல; மக்களுக்கான விடுதலையை முன்வைக்கிறோம் - கொளத்தூர் மணி


இன வெறி, சாதி வெறி இரண்டுக்கும் எதிரான போராட்டங்களின் குறியீட்டுப் பெயர்தான் கொளத்தூர் மணி. உள்ளூர்ச் சேரிகளில் தீண்டாமை திணிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட தமிழர்களுக்கும் ஈழத்து முள்வேலிகளில் அடைக்கப்பட்ட தமிழர்களுக்கும் சற்றும் சமரசம் இன்றிக் குரல் கொடுப்பவர். மூன்று தமிழர்களின் உயிர் காக்க மரண தண்டனை எதிர்ப்புப் பிரசாரப் பயணத்தில் இருந்தவரைச் சந்தித்தேன்.


''நீங்கள் பெரியார் கொள்கைகள்பால் எப்படி ஈர்க்கப்பட்டீர்கள்?''

''கொளத்தூர் நிர்மலா உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது, புலவர் வ.வேணுகோபால் என்ற தமிழ் ஆசிரியர்தான் எனக்கு முதன்முதலில் பகுத்தறிவுச் சிந்தனைகளை அறிமுகப்படுத்தினார். வகுப்பறையில் புராணக் கதைகள் குறித்து அவ்வப்போது விமர்சனங்களை முன் வைப்பார். 'புராணம் என்றால் பழமை, நவீனம் என்றால் புதுமை. புராணக் கதை என்றால் பழைய பொய்’ என்று சொன்ன அவர், 'விடுதலையில் தீபாவளிபற்றி ஒரு கதை வந்திருக்கிறது. படியுங்கள்’ என்றார். அப்போதுதான் முதல்முதலாக விடுதலை இதழைப் படித்தேன். கொஞ்சம் கொஞ்ச மாகப் பெரியாரின் கருத்துகள் என்னை ஈர்த்தன. 1962-ல் அப்போதைய மக்கள வைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துப் பேசுவதற்காக பெரியார் எங்கள் ஊருக்கு வந்தார். அப்போது பெரியாரின் பேச்சை முழுமையாக உள் வாங்கிக்கொண்டேன் என்று சொல்ல முடியாது. 1971-ல் கொளத்தூரில் பெரியாரை வைத்து பொதுக் கூட்டம் நடத்தியதில் இருந்து என் இயக்கச் செயல்பாடுகள் தொடங்கின.''

''ஒரு பெரியாரிஸ்ட் என்ற முறையில் இன்றைய சூழலில் பெரியாரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை, விட்டுவிட வேண்டியவை என்று எவற்றைக் கருதுகிறீர்கள்?''

''சாதி ஒழிப்பும் பெண் விடுதலையும்தான் பெரியார் கொள்கைகளின் அடித்தளம். அவரது கடவுள் மறுப்பும் தனித் தமிழ்நாடு கோரிக்கையும்கூட, சாதி ஒழிப்புக் கொள்கை யின் நீட்சிதான். நான் மட்டும் அல்ல, இந்த மானிட சமுதாயமே பெரியாரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது சுய மரியாதையையும் சமத்துவத்தையும்தான். பெரியாரிடம் இருந்து விட்டுவிட வேண்டியது என்று எதுவும் இல்லை. ஆனால், பெரியார் இறந்து 38 ஆண்டுகள் ஆகிவிட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அணு உலை எதிர்ப்பு போன்ற விஷயங்கள் பெரியார் காலத்தில் இல்லை. இப்போது அதை எல்லாம் சேர்த்துப் பேச வேண்டும். மேலும், உலகின் தலைசிறந்த பெண் விடுதலைக் கருத்துகளைச் சொன்னவர் பெரியார். இப்போது பெண் விடுதலை என்பதைத் தாண்டி திருநங்கைகளின் உரிமைபற்றிப் பேசப்படுகிறது. அதேபோல், ஒருகாலத்தில் 'எதை முதன்மைப்படுத்துவது சாதியையா... வர்க்கத்தையா?’ என்கிற கருத்துப் போராட் டம் பெரியார் இயக்கத்துக்கும் கம்யூனிஸ்ட் டுகளுக்கும் இடையே இருந்துவந்தது. ஆனால், சில பத்தாண்டுகளாக கம்யூ னிஸ்ட்டுகள் இந்துத்துவ எதிர்ப்பை முன் வைக்கிறார்கள்; தீண்டாமைப் பிரச்னை களைக் கையில் எடுத்துப் போராடுகிறார் கள். இது பெரியாரியலுக்குக் கிடைத்த வெற்றி. ஆனால், கம்யூனிஸ்ட்டுகள் எப்படி சாதிப் பிரச்னைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறினார்களோ, அதேபோல பெரியாருக்குப் பின் பெரியார் இயக்கங்கள் பொதுவுடைமையை அழுத்தமாகப் பேசவில்லை. இன்றைய உலகமயமாக்கச் சூழலில் 'பார்ப்பன - இந்திய தேசிய - பன்னாட்டு கூட்டுக் கொள்ளை எதிர்ப்பு’ என்ற முழக்கத்தை நாங்கள் முன்வைக்கிறோம்.''

''திராவிட அரசியல்தான் இன்றைய பல வீழ்ச்சிகளுக்குக் காரணம். திராவிடம் என்பதே மாயை’ என்று தொடர்ச்சியாக தமிழ் தேசியவாதிகள் பேசிவருகிறார்களே... இன்னும் திராவிட அடையாளத்தைச் சுமக்கத்தான் வேண்டுமா?''

''போதிய புரிதல் இல்லாதவர்கள்தான் அப்படிப் பேசிவருகிறார்கள். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, பெரியார் சாகும் வரை 'தமிழ்நாடு தமிழருக்கே’ என்று தனித் தமிழ்நாடு கோரிக்கையைத்தான் முன்வைத்தாரே தவிர, மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்களைச் சேர்த்து திராவிட நாடு விடுதலையை முன்வைக்கவில்லை. திராவிடம் என்பது ஏதோ நிலப்பரப்புக்கான அடையாளம் இல்லை. அது இந்துத்துவ எதிர்ப்பின் குறியீட்டுச் சொல். நாங்களும் தனித் தமிழ்நாடு கேட்கிறோம், தமிழ் தேசியவாதிகளும் தனித் தமிழ்நாடு கேட்கிறார்கள். ஆனால், அவர்கள் வெறுமனே மண்ணுக்கான விடுதலையை முன்வைக்கிறார்கள். நாங்கள் மக்களுக்கான விடுதலையை முன்வைக்கிறோம். 'திராவிடர்’ என்ற சொல், பார்ப்பனர் அல்லாத மக்கள் என்ற பொருளில்தான் பெரியாரால் பயன்படுத்தப்பட்டது. திராவிட அரசியல் கட்சிகளின் மீது உள்ள வெறுப்பால் பலர் 'திராவிடம் என்பதே மாயை’ என்று பேசிவருகிறார்கள். உண்மையில் திராவிட அரசியல் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க.கூட தமிழர்களிடத்தில்தான் அரசியல் செய்கின்றனவே தவிர, மலையாளி கள், தெலுங்கர்கள், கன்னடர்களிடத்தில் அல்ல. மேலும், சாதி ஒழிப்பு, தாழ்த்தப் பட்டோர் விடுதலை, பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு, இந்திய தேசிய எதிர்ப்பு, பெண் விடுதலை... இவை எல்லாம் சேர்ந்ததுதான் பெரியார் முன்வைத்த திராவிட அரசியல். இன்றைய திராவிட அரசியல் கட்சிகள், இவை எதையும் முன்வைப்பது இல்லை. எனவே, திராவிட அரசியல் கட்சிகளை முன்வைத்து திராவிடம் என்கிற கருத்தாக்கத்தையே மறுப்பது அறியாமை.''

''தொடர்ச்சியாக தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கிறீர்கள். ஆனால், 'பெரியார் கேரளாவில் நடத்திய வைக்கம் போராட்டம் தவிர, தமிழகத்தில் தீண்டாமைப் பிரச்னைகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தது இல்லை’ என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றதே?''

''தீண்டாமை ஒழிய வேண்டும் என்றால், சாதி ஒழிய வேண்டும்; சாதி ஒழிய வேண்டும் என்றால், இந்து மதம் ஒழிய வேண்டும். இதுதான் பெரியாரின் அடிப்படைக் கொள்கை. இதற்காகத்தான் அவர் வாழ்நாள் முழுக்கப் பாடுபட்டார். சுய மரியாதை இயக்கத்தின் சார்பாக ஏராளமான ஆதி திராவிடர் சுய மரியாதை மாநாடுகளையும் ஆதிதிராவிடர் கிறிஸ்தவர் சுய மரியாதை மாநாடுகளையும் நடத்தினார். முதுகுளத் தூர் கலவரத்தின்போது, தாழ்த்தப்பட்ட மக்களின் பக்கம் நின்று, 'கலவரத்துக்குக் காரணமான பசும்பொன் முத்துராமலிங் கரைக் கைதுசெய்ய வேண்டும்’ என்று உறுதியாக வலியுறுத்தியதும் பெரியார் தான்.

மயிலாடுதுறை அருகே உள்ள காளி மற்றும் மாதிரிமங்கலம் ஆகிய ஊர்களில் 'சாதித் தொழிலைச் செய்ய மாட்டோம்’ என்று தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்திய பறை தப்பட்டையை எரிக்கும் போராட்டம், காங்கிரஸ் மாநாட்டில் தாழ்த்தப்பட்டவர் களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம் என்று ஏராளமான போராட்டங்களைப் பெரியார் இயக்கம் நடத்தி உள்ளது. ஆனால், அவை எல்லாம் பெரிதாக ஆவணப்படுத்தப்படாததுதான் வரலாற்றுத் துயரம். 1926-ல் சிராவயல் என்ற ஊரில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனிக் கிணறு அமைக்கப்பட்டு, அதைத் திறப்பதற்காகப் பெரியார் அழைக்கப்பட்டார். ஆனால், 'பொதுக் கிணறுக்காகப் போராடுங்கள். தாகத்தால் செத்துப்போகலாமே தவிர, தனிக் கிணறு அமைப்பது தீர்வு அல்ல’ என்று பெரியார் மறுத்துவிட்டார். 'பறையன் பட்டம் போகாமல் சூத்திரன் பட்டம் போகாது’ என்று யார் தீண்டாமையை மேற்கொள்கிறார்களோ, அந்த பிற்படுத்தப்பட்டவர் களிடம் பெரியார் பேசினார். அதுதான் புரட்சி.''

''பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்துசெய்ய வேண்டும். ராஜபக்ஷேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றிய பிறகு, ஈழ ஆதர வாளர்கள் சமச்சீர்க் கல்வி, பரமக்குடி துப்பாக்கிச்சூடு, நரேந்திர மோடி உண்ணாவிரதத்துக்கு ஆதரவு போன்ற விஷயங்களில் ஜெயலலிதாவைக் கடுமை யாக விமர்சிப்பது இல்லையே?''

''ஈழ ஆதரவாளர்களில் பலர் சாதி ஒழிப்பு, சிறுபான்மையினர் உரிமைகள், சுற்றுச்சூழல் பிரச்னை, மனித உரிமைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தாத போக்கு இருக்கிறது. அதே நேரத்தில், காஷ்மீர், தண்டகாரண்யம், சல்வாஜூடும்பற்றிப் பேசும் பலர் ஈழப் பிரச்னைபற்றிக் கவலைப் படுவது இல்லை. இரண்டு தரப்பிலும் போதாமைகள் இருக்கின்றன. இவை சரி செய்யப்பட வேண்டும்.''

''பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? ஈழத் தமிழர்களின் பிரச்னைகளைத் தீர்க்க என்ன மாதிரியான தீர்வுகளை முன்வைக்கிறீர்கள்?''

''பிரபாகரன் உயிரோடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், உயிரோடு இருக்கிறாரா என்பது தெரியாது. இன்றைய சூழலில், ராஜபக்ஷேயின் போர்க் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக முன்வைக்கப்படு கிறது. ஆனால், ராஜபக்ஷே மட்டுமே இனப் படுகொலையில் ஈடுபடவில்லை. எல்லா இலங்கை அதிபர்களுமே தமிழர்களுக்கு எதிராக இனப் படுகொலையில் ஈடுபட்டவர்கள்தான். உயிரோடு உள்ள எல்லா இலங்கை அதிபர்களுமே போர்க் குற்றங்களின் அடிப்படையில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். ஈழப் பிரச்னைக்கான தீர்வு தமிழீழம்தான் என்று கருதுகிறோம். அந்த மக்களின் விருப்பமும் அதுதான் என்று உறுதியாக நம்புகிறோம்!''

ரீ.சிவக்குமார்
படங்கள் : க.தனசேகரன்
நன்றி: ஆனந்தவிகடன்

Sunday, October 2, 2011

செங்கொடியின் தீயாட்டம்

செங்கொடி குறித்து வெளி ரங்கராஜன் உயிர்மையில் எழுதிய கட்டுரை.


Tuesday, September 27, 2011

செங்​கொடி நி​னை​வேந்தல் - ​கா​ணொளி

24.09.2011அன்று சென்னை - ராயப்பேட்டையில் நடந்த செங்கொடி நினைவேந்தல் கூட்டத்தில் பழ.​நெடுமாறன், மதிமுக ​பொதுச்​செயலாளர் ​வை​கோ, ​பெரியார் திராவிடர் கழகத் த​லைவர் ​கொளத்தூர் மணி, ​தோழர் ​பேரறிவாளன் அவர்களின் தாய் அற்புதம் அம்மாள், தமிழ் ​தேச விடுத​லை இயக்கத்தின் ​பொதுச்​செயலாளர் ​தோழர் தியாகு, புதிய தமிழகம் கட்சித் த​லைவர் கிருஷ்ணசாமி, மக்கள் மன்றத் த​லைவி ​தோழர் ம​கேஷ், ஊடகவியலாளர் டி,எஸ்எஸ் மணி ஆகி​யோர் ​பேசியதன் கா​ணொளி வடிவம்.

மக்கள் மன்ற ​தோழர் ​கெளதம் (பாடல்)

​தோழர் ம​கேஷ்

​வை​கோ

​கொளத்தூர் மணி

தோழர் தியாகு

பழ.​நெடுமாறன்

கிருஷ்ணசாமி

ஊடகவியலாளர் டி,எஸ்எஸ் மணி
அற்புதம் அம்மாள்

Sunday, September 25, 2011

மக்கள் எல்லாம் eezham song

சென்​னை ராயப்​பேட்​டையில் ​24.09.2011 அன்று ​செங்​கொடி நி​னை​வேந்தல் நிகழ்ச்சி ந​டை​பெற்றது. அதில் மக்கள் மன்றத்​தைச் ​சேர்ந்த ​கெளதம் என்ற ​தோழர் பாடிய "மக்கள் எல்லாம் மக்கள் எல்லாம் பிரபாகரனின் பக்கம்" என்ற பாடல்.

பாடல் ​கேட்டு ​வை​கோவும் ​கொளத்தூர் மணியும் அ​டையும் மகிழ்ச்சி​யையும் ​பெருமிதத்​தையும் பாருங்கள். நமக்குள் இழப்பின் வலியும் ​போராட்ட குணமும் இருக்குமானால் இவர்க​ள் ர​சிப்பதை ரசிக்கமுடியும். ஏ​னெனில், இவர்கள் வழியாக ​வெளிப்படும் மகிழ்ச்சியும் ​பெருமிதமும் இவர்களு​டையது மட்டு​​மே அல்ல.

செங்கொடி நினைவேந்தல் படங்கள்

​நேற்று (24.09.2011) சென்னை - ராயப்பேட்டையில் நடந்த செங்கொடி நினைவேந்தல் நிகழ்வின் படங்கள்

Saturday, September 24, 2011

பெரியார் திராவிடர் கழகத்தைச் சேந்த தோழர்கள் விடுதலை

 Federation of Brahmin Associations Southern region என்ற பெயரில் பார்ப்பனர் சங்கம் நடத்திவரும் எஸ்.வி.சேகரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் பெரியார் திராவிடர் கழகத்தைச் சேந்த தோழர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இன்று (24.09.11) விடுதலையாகி வந்த அவர்களுக்கு ராயப்பேட்டையில் ப​றை முழக்கத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Friday, September 23, 2011

பரமக்குடி துப்பாக்கிச் சூடு

தோழர் தியாகு:
ஈழ விதலைப்போராட்டம், ராசபக்ச - மன்மோகன் கும்பலை இனப்படுகொலையாளர்கள் என கூண்டிலேற்றச்சொல்லி நடத்தும் போராட்டம், மூவர் உயிர்காப்பு போராட்டம், பரமக்குடி துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட அரச பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் இவையெல்லாம் வெவ்வேறானவையல்ல; ஒரே போரின் வெவ்வேறு சமர்க்களங்கள்.


பரமக்குடி துப்பாக்கிச் சூடு நடந்தபோது அங்கிருந்த சங்கர்,
நடந்தது என்ன என்பதை விவரிக்கிறார்Wednesday, September 21, 2011

போர்க்குற்ற வரலாற்றில் ராசீவ்காந்தியும் ராசபக்சவும்

விடுத​லை ரா​சேந்திரன்:
சாட்சிகளற்ற ​போ​​ரை நடத்தி ​போர்க்குற்றம் புரிவதற்கு ராசபக்சவுக்கு முன்மாதிரியாக இருந்தது ராசீவ்காந்தியின் அ​மைதிப்ப​டை இ​ழைத்த ​போர்க்குற்றங்கள்தான்.


தோழர் தியாகு:
ராசீவ் காந்தி உடலளவில் கொல்லப்பட்டார்;
நாம் அவரை அரசியல் படுகொலை செய்வோம்.

Friday, September 16, 2011

​பெரியார் சிந்த​​னைகள்

கல்வி என்பது ஒரு மனிதனுக்கு கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம், ஒருவன் தனது வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்கு தகுதிப்படுத்துவது என்பதேயாகும்; அல்லது உலகில் நல்வாழ்க்கை வாழ தகுதியுடையவனாக்குவது என்பதேயாகும்
கையாலாகாதவனுக்கு கடவுள் து​ணை;
அறிவில்லாதவனுக்கு ஆண்டவன்;
​செயல்தவற்​றை உணர முடியாதவனுக்கு த​லைவிதி.எந்த மு​றையிலாவது புராணப் பண்டிதர்க​ளை ​பொதுமக்கள் ஆதரிப்பது, ​கொள்ளி​​யை எடுத்து த​லை​யைச் ​சொறிந்து​கொள்வது​போலாகும்.ஒரு மனிதன், தனக்கு ​மோட்சத்தில் இடம் பிடிப்பதற்காக ​வெகு​பேர்க​ளை நரகத்தில் ஆழ்த்துகிறான்.நம் மக்களின் மரியாதை காட்டும் தன்மைகள் எல்லாம்
அநேகமாய் செத்துப்போனவர்களிடமேயொழிய
இருப்பவர்களிடமில்லை.தொழிலாளி, முதலாளி தன்மை முறை இருக்கவே கூடாது.
ஒரு தொழிற்சாலைக்கு அங்கு வேலை செய்பவர்கள் பங்காளிகள் அல்லாமல் கூலிக்காரர்களாக இருப்பது என்பது முட்டாள்தனம்; மானமற்றதாகும்.என்ன கஷ்டப்பட்டாவது, மறுஉலகத்தை தயவுசெய்து மறந்துவிட்டு
இந்த உலக நடவடிக்கைகளுக்கு உங்கள் வாழ்க்கையைப் பொருத்துங்கள்.தமிழ்நாடும் தமிழ்மொழியும்
தமிழர் தன்மானமும் விடுதலையும் பெற்று வளர்ச்சியடைய வேண்டுமானால், தமிழன் காரியத்தில் தமிழனல்லாதவன்; அவன் எப்படிப்பட்டவன் ஆனாலும் தலையிடுவது முதலில் ஒழித்தாகவேண்டும்.சுயநலத்துக்கு அறிவே தேவையில்லை.
உணவுக்கு அலைவதும் உயிரைக் காப்பதும்
எந்த ஜீவனுக்கும் இயற்கை.அறிவியக்க நூல்கள், சீர்திருத்த நூல்கள் என்றால் ஒவ்வொன்றையும் வாங்கி வீட்டில் நிரப்பிக்கொள்ளவேண்டுமென்று அர்த்தமன்று. வாங்கிப் படித்துவிட்டு படித்துமுடித்தவுடன் முக்கால் விலைக்கு அரை விலைக்கு விற்றுவிடவேண்டும்; மறுபடி வேறு வாங்கவேண்டும்.

Sunday, August 28, 2011

செங்கொடியின் மரணத்தில் தமிழக அரசு காக்கும் மெளனத்திற்கு பங்கு உண்டு.

லட்சக்கணக்காணோரை இழந்தோம். எவருடைய மனதையும் உலுக்குவதாய் இல்லை. இனியும் தற்கொலை எண்ணம் வேண்டாம். செங்கொடியின் மரணத்தில் தமிழக அரசு காக்கும் மெளனத்திற்கு பங்கு உண்டு.Thursday, August 25, 2011

மூவர் உயிர் காக்க

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய குற்றமற்ற மூன்று தமிழர்க​ளை மரண தண்ட​னையிலிருந்து காக்க ​சென்​னை எம்.ஜி.ஆர் நகரில் ​கட்சி ​வேறுபாடுக​ளைக் கடந்து த​லைவர்கள் பங்​கேற்ற பொதுக்கூட்டம் 22.08.2011 அன்று ந​டை​பெற்றது. அந்நிகழ்வின் கா​ணொளி வடிவம்

கூட்டத்தில் தோழர் தியாகு அவர்களின் பேச்சு மிகமிக முக்கியமானது. அவர் பேசப் பேச பொதுக்கூட்ட மேடை நீதிமன்றமானது. வழக்கை உடைத்தெறிந்துவிட்டார். மிகுந்த நம்பிக்கையளிக்கக் கூடிய இக்காணொளியை நீங்கள் அவசியம் பார்க்கவேண்டும்.

தோழர் தியாகு

தமிழருவி மணியன்


இரா​சேந்திர ​சோழன்


​வை​கோ

மரண தண்ட​னை​யை ஒழிப்​போம்

சென்னை தியாகராய நகரில் பெரியார் திராவிடர் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மரணதண்டனைக்கு எதிரான பொதுக்கூட்டம் 16.08.2011அன்று நடைபெற்றது. 


​பெரியார் திராவிடர் கழகத் த​லைவர் கொளத்தூர் மணி


பால் நியூமென்


பெரியார் திராவிடர் கழகத்தின் ​பொதுச்​செயலாளர் விடுத​லை ரா​சேந்திரன்

Sunday, August 21, 2011

வேலூரை நோக்கி ...

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய குற்றமற்ற மூன்று தமிழர்களை தடா என்னும் அடக்குமுறை சட்டத்தின்கீழ் கைதுசெய்து, புனைவுகூட்டிய வாக்குமூலத்தில் மனித உரிமைகளைப் புறந்தள்ளி, துன்புறுத்தி கையொப்பம் பெற்று அவர்களுக்கு மரணதண்டனையும் விதித்திருக்கிறது இந்திய அரசு. 

எதேச்சதிகார இந்திய அரசின் வக்கிர ஆசையை தகர்த்தெறிந்து மூவரையும் காக்க தமிழகம் பேரெழுச்சி கொள்ளத் தொடங்கிவிட்டது. அத்தகைய போராட்டத்தின் ஒரு பகுதியாக வேலூரை நோக்கி இருசக்கர வாகனங்களில் பரப்புரை பயணம் மேற்கொள்ளப்பட்டது.

Friday, July 29, 2011

இந்திய ஒருமைப்பாடு உடையும்

கடந்த 25.07.2011 அன்று ​சென்​னை ​தேவ​நேயப்பாவாணர் அரங்கில் நடந்த முல்​லைப் ​பெரியாறு அ​ணை குறித்த கருத்தரங்கில் ​வை​கோ அவர்கள் ஆற்றிய உ​ரை.


வைகோ: முல்லைப் பெரியாறு அணையை உடைக்க திட்டமிடுகிறது கேரளா. அணை உடைந்தால் இந்திய ஒருமைப்பாடு உடையும்.​வை​கோ: காட்டுக்குள் விமான தளம் அமைத்து, ஓடுதளத்தை பாய் போல சுருட்டிச் சென்றவர்கள் விடுதலைப் புலிகள்.​வை​கோ: நம்ம த​லையில கல்​லைப் ​போடற மாதிரி ஏன் அணுஉ​லை வச்சான். எதுக்கு ​டேங்க் ​தொழிற்சா​லை வச்சான். எதுக்காக துப்பாக்கித் ​தொழிற்சா​லைய வச்சான்; கப்பற்ப​டை தளத்​தைக் ​கொண்டுவந்து விஜயநாராயணத்தில் வச்சான். 

நான் நி​னைக்கிறது... இப்படித்தான ரஷ்யாவில வச்சான். க​டைசில அந்தந்த ஸ்​டேட்காரன் இது ​ரெம்ப நல்லதா ​போச்சு; எங்களுக்கு ​சொந்தம்ன மாதிரி...இது நல்லதுதான். அ​மைச்சிருக்கறான். நா​ளைக்கு வருங்கால தமிழகம்  எங்களுக்குச் ​சொந்தம்னு அறிவிச்சுட்டா என்ன பன்னப்​போறிய!

Friday, July 22, 2011

எம்.ஜி.ஆரின் ஆதரவில் வளர்ந்த புலிகள்

'ஈழத்தமிழரும் எம்.ஜி.ஆரும்' என்ற த​லைப்பில் 20.07.2011 அன்று சென்​னை ​​சைதாப்​பேட்​டை பகுதி பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் ​பொதுக்கூட்டம் ந​டை​பெற்றது.

அக்கூட்டத்தில் ​தோழர் விடுத​லை ரா​சேந்திரன் அவர்கள் ஆற்றிய உ​ரை.Sunday, July 17, 2011

விடுத​லை ​பெற்ற தெற்கு சூடானும் தமிழீழ விடுதலையும்

விடுத​லை ​பெற்ற தெற்கு சூடானும் தமிழீழ விடுதலையும் என்ற கருத்தரங்​கை நாடு கடந்த தமீழீழ அரசாங்கத்தின் தோழ​மை ​மையம் ​சென்​னையில் 16.07.2011 அன்று நடத்தியது.

தமிழ்​தேசிய விடுத​லை ​இயக்க தோழர் தியாகு உ​ரை 


​மே 17 திருமுருகன் உ​ரை 
​பத்திரி​கையாளர் டி.எஸ். எஸ். மணி உ​ரை 


​கொங்கு இ​ளைஞர் ​பேர​வை தனியரசு உ​ரை


 புதிய தமிழகம் கிருஷ்ணசாமி உ​ரை


பாரம்பரிய மீனவர் சங்க ம​கேஷ் உ​ரை