வெள்ளி, 16 செப்டம்பர், 2011

​பெரியார் சிந்த​​னைகள்

கல்வி என்பது ஒரு மனிதனுக்கு கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம், ஒருவன் தனது வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்கு தகுதிப்படுத்துவது என்பதேயாகும்; அல்லது உலகில் நல்வாழ்க்கை வாழ தகுதியுடையவனாக்குவது என்பதேயாகும்




கையாலாகாதவனுக்கு கடவுள் து​ணை;
அறிவில்லாதவனுக்கு ஆண்டவன்;
​செயல்தவற்​றை உணர முடியாதவனுக்கு த​லைவிதி.



எந்த மு​றையிலாவது புராணப் பண்டிதர்க​ளை ​பொதுமக்கள் ஆதரிப்பது, ​கொள்ளி​​யை எடுத்து த​லை​யைச் ​சொறிந்து​கொள்வது​போலாகும்.



ஒரு மனிதன், தனக்கு ​மோட்சத்தில் இடம் பிடிப்பதற்காக ​வெகு​பேர்க​ளை நரகத்தில் ஆழ்த்துகிறான்.



நம் மக்களின் மரியாதை காட்டும் தன்மைகள் எல்லாம்
அநேகமாய் செத்துப்போனவர்களிடமேயொழிய
இருப்பவர்களிடமில்லை.



தொழிலாளி, முதலாளி தன்மை முறை இருக்கவே கூடாது.
ஒரு தொழிற்சாலைக்கு அங்கு வேலை செய்பவர்கள் பங்காளிகள் அல்லாமல் கூலிக்காரர்களாக இருப்பது என்பது முட்டாள்தனம்; மானமற்றதாகும்.



என்ன கஷ்டப்பட்டாவது, மறுஉலகத்தை தயவுசெய்து மறந்துவிட்டு
இந்த உலக நடவடிக்கைகளுக்கு உங்கள் வாழ்க்கையைப் பொருத்துங்கள்.



தமிழ்நாடும் தமிழ்மொழியும்
தமிழர் தன்மானமும் விடுதலையும் பெற்று வளர்ச்சியடைய வேண்டுமானால், தமிழன் காரியத்தில் தமிழனல்லாதவன்; அவன் எப்படிப்பட்டவன் ஆனாலும் தலையிடுவது முதலில் ஒழித்தாகவேண்டும்.



சுயநலத்துக்கு அறிவே தேவையில்லை.
உணவுக்கு அலைவதும் உயிரைக் காப்பதும்
எந்த ஜீவனுக்கும் இயற்கை.



அறிவியக்க நூல்கள், சீர்திருத்த நூல்கள் என்றால் ஒவ்வொன்றையும் வாங்கி வீட்டில் நிரப்பிக்கொள்ளவேண்டுமென்று அர்த்தமன்று. வாங்கிப் படித்துவிட்டு படித்துமுடித்தவுடன் முக்கால் விலைக்கு அரை விலைக்கு விற்றுவிடவேண்டும்; மறுபடி வேறு வாங்கவேண்டும்.





2 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

kalvi manithanukku suthanthiraththai aliththaalle anaiththu kettathum olinthuvidum..vaalththukkal

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! சொன்னது…

தெளிந்த சிந்தனைகளை மீண்டும் பகிர்ந்த உங்களுக்கு . நன்றிகள்