Saturday, December 31, 2011

குலக்கல்வித் திட்டத்தை ஆதரித்த தமிழர் தந்தை ம.பொ.சி


ராசாசியின் வஞ்சக மூளையில் வடிவெடுத்த கொடிய திட்டந்தான் குலக்கல்வித் திட்டம் என்பது. பாதி நேரம் படிப்பு; மீதிநேரம் அப்பன் குலத்தொழில் என்னும் பச்சையான மனுதர்ம நெறிக்கு பாதையைப் போட்ட ஆச்சாரியாரின் இந்த கொடிய கல்வித் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடே கொந்தளித்து எழுந்தது. வஞ்சகப் பார்ப்பன ஆட்சியை ஒழிக்காமல் தமிழருக்கு வாழ்வில்லை என்ற முடிவோடு வரிப்புலியாய் சீறிப்பாய்ந்தார் பெரியார்.

குலக்கல்வித் திட்டத்திற்கு தமிழ்நாடே கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தபோது, அந்தக் கல்வித்திட்டத்தை ஆதரித்து ம.பொ.சியின் தமிழரசுக் கழகம் தீர்மானம் நிறைவேற்றியது. நாடெங்கும் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் நடத்த முடிவுசெய்து திக, திமுக மட்டுமல்ல காங்கிரசு கட்சியைச் சேர்ந்த காமராசரும் குலக்கல்வித் திட்டத்தைக் கண்டித்தார். ம.பொ.சி அந்த காமரசைரைக்கூட விட்டுவைக்கவில்லை.

"புதிய கல்வித்திட்டத்தை எதிர்த்து பேசினார் காமராசர். கல்வித்திட்டம் சரியா? தவறா? என்பதில் அவருக்குக் கவலை இல்லை. ராசாசி ஆட்சியை வெளியேற்றித் தான் அதிகாரத்திற்கு வர அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார்." (ம.பொ.சி எனது போராட்டம் பகுதி 2, பக்கம் 392)

நன்றி: புரட்சிப் ​பெரியார் முழக்கம், 19 ​மே 2011, பக்கம் 3.

Friday, December 30, 2011

தமிழ் உயர்மொழி எனில் தமிழன் கீழ்மகனானதெப்படி?

தமிழ் உயர்மொழியானால், தமிழன் கலப்படமற்ற சுத்தப் பிறவியானால், தமிழ் பேசுகிறவன் தமிழன் என்கிற காரணத்திற்காக உன்னை சூத்திரன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்று கடவுள் சொன்னதாக சாஸ்திரம் எழுதி வைத்து, 'கீதை' வெங்காயம் சொல்லுகிறது என்று சொல்லி உன்னை தீண்டத்தகாத ஜாதியாக பார்ப்பானும், அவன் பொண்டாட்டி, பிள்ளை, ஆத்தாள், அக்காளும் நடத்துகிறார்களே; நீ நாக்கைப் பிடிங்கிக்கொண்டாயா? நீ யாருக்குப் பிறந்தாய் என்பது பற்றி சிறிதளவாவது சிந்தித்து இருந்தால், என்னை நீ யாருக்குப் பிறந்தாய் என்று கேட்டு இருக்கமாட்டாய்.

எனக்கு நான் யாருக்குப் பிறந்தேன் என்பது பற்றிக் கவலை இல்லை. அது என் அம்மா சிந்திக்கவேண்டிய காரியம். நான் யாருக்குப் பிறந்தேன் என்று என்னாலும் சொல்லமுடியாது; தம்பீ உன்னாலும், அதாவது நீ யாருக்குப் பிறந்தாய் என்று (உன்னாலும்) சொல்லமுடியாது; அந்தப் பிரச்சனையே முட்டாளுக்கும், அயோக்கியனுக்கும்தான் தேவை.

யாருக்குப் பிறந்தாலும் மனிதனுக்கு மானம் தேவை; அது உன்னிடம் இருக்கிறதா, என்னிடம் இருக்கிறதா என்பதுதான் இப்போது சிந்திக்கவேண்டிய தேவை.

அதையும் விட தமிழ்மொழியிலும், தமிழ்ச் சமுதாயத்திலும் இருக்கிறதா? இருப்பதற்கு தமிழ் உதவியதா? உதவுகிறதா? என்பதுதான் முக்கிமான, முதலாவதான கேள்வி.

 - தமிழும் தமிழரும் நூலில் பெரியார்

Wednesday, December 28, 2011

அவர்கள் நல்ல தமிழர்களைத் தேடிக் கிளம்பியிருக்கிறார்கள்

தமிழர்கள், திராவிடர்கள் பற்றிய விரிவான ஆராய்ச்சிகளை ‘நாம் தமிழர் இயக்கம்’ மேற்கொண்டிருக்கிறது. ‘நல்ல தமிழர்களை’ அவர்கள் தேடிக் கிளம்பியிருக்கிறார்கள்.

ஆனால், அவர்களின் தமிழர் அடையாள ஆராய்ச்சியின்படி ஈழ விடுதலைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் பேருதவி செய்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரனைக்கூட ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அவர் பிறப்பால் மலையாளி என்பதால் ‘திராவிடராகி’ விடுகிறார். நான்காவது ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில், ஈடில்லாத போராட்டங்களை நடத்திய கோவை இராமகிருட்டிணன், பேராசிரியர் சரசுவதி ஆகியோர்கூட, அவர்கள் கண்களுக்கு ‘நல்ல தமிழர்களாக’ புலப்படவில்லை.

ஆங்கிலேயர் கால்டுவெல் கண்டுபிடித்த சொல்லான திராவிடத்தை எப்படி ஏற்க முடியும் என்ற வாதங்களையெல்லாம் முன் வைக்கிறார்கள். ‘கால்டுவெல்’ என்ற ஆங்கிலேயரின் கண்டுபிடிப்புகளையெல்லாம் ஏற்கக் கூடாது என்று அவர்கள் ‘ஆராய்ச்சி’கள் கூறினாலும், சீமான் என்ற வடமொழிப்பெயரை சூட்டிக் கொண்டுள்ளதற்காக அவரை, நாம் தமிழன் இல்லை என்று சொல்லப் போவதில்லை. அவர்களின் ஆராய்ச்சியை சீமானுக்கு நாம் பொருத்திப் பார்க்கத் தயாராக இல்லை.

ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். ‘திராவிட’ என்ற சொல்லை தங்களுடன் இணைத்துக் கொண்டதற்காகவே கலைஞர் கருணாநிதியையோ, விஜய்காந்தையோ, ஜெயலலிதாவையோ நாம் தூக்கி சுமப்பவர்கள் அல்ல.

கலைஞர்கூட ஒரு காலத்தில் அவர் சார்ந்த சமூகப் பார்வையோடு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக திராவிடர் இயக்கத்துக்கு வந்தவர்தான். இன்று அவரிடம் அந்த சமூகப் பார்வை எல்லாம் காணாமல் போய் பெரு முதலாளிகளின் வர்க்கப் பார்வைக்கு வந்துவிட்டார்.

ஜெயலலிதா எப்போதுமே தமிழினத்துக்கு எதிரிதான். இந்த சக்திகள் அரசியல் களத்திலிருந்து ஒதுக்கப்பட்டு, தமிழர்களுக்கான புதிய அரசியல் சக்தி ஏதேனும் தோன்றாதா என்று உண்மையாக ஏங்கும் தமிழர்கள் ஏராளம் உண்டு. விஜய்காந்த் போன்ற குழப்பவாதிகளைவிட சீமான் போன்றவர்கள் அரசியல் களத்துக்கு வரட்டுமே என்ற எண்ண ஓட்டமும் நமக்கு உண்டு.

ஆனால், புதிதாக புறப்பட இருக்கிற ‘நாம் தமிழர்’ தமிழர்களை ஆரிய எதிர்ப்பாளர்களாக அடையாளப்படுத்திய பெரியாரின் பார்வையைத் தூக்கி எறிந்துவிட்டு, திராவிடர் எதிர்ப்பாளராக அடையாளப் படுத்துவதில் முனைப்புக் காட்டத் தொடங்கிவிட்டது.

பெரியார் முன்னிறுத்திய ‘திராவிடர்’ என்பது தமிழர்களுக்கான - தமிழர்களை பார்ப்பனிய அடிமைப் பண்பாட்டிலிருந்து மீட்டெடுக்கும் குறிச்சொல் என்ற அடிப்படை உண்மையையே திசை திருப்பி, அது ஏதோ கேரளா, கர்நாடக, ஆந்திர மாநிலத்தில் வாழும் இனங்களிடம் தமிழர்களை அடிமைப்படுத்துவதாக ஒரு சித்திரத்தை தீட்டிக் காட்ட படாதபாடுபடுகிறார்கள். இதில் அளவில்லாத மகிழ்ச்சி ஆரியத்துக்குத் தான்.

‘அப்பாடா, நாம் தமிழர் வந்துவிட்டது; இனி நமக்கு ஆபத்தில்லை’ என்று அவாள் கூட்டம், மகிழ்ச்சியில் கூத்தாடக் கூடும். தமிழருக்கு அன்றும் இன்றும் என்றும் கேடானது ஆரியம். அதற்கு அரண் அமைத்துக் கொண்டிருப்பது இந்தியம்; உண்மையில் தமிழர்கள் மீதுசுமத்தப் பட்டுள்ள ஒட்டு மொத்த அடிமைத்தனங்களுக்கும் எதிரான பண்பாட்டுப் புரட்சியை முன்னெடுக்கும் வலிமையான போர்வாள் திராவிடர் - திராவிடம் என்ற லட்சியச் சொல்; ஆனால், ‘நாம் தமிழருக்கு’ அவைகள் கசக்கின்றன.

தமிழ்நாட்டைத் தவிர, பிற மொழிக்காரர்கள் வேறு எந்த மாநிலத்திலாவது முதல்வரானது உண்டா என்றெல்லாம் கேட்கிறார்கள். அடக்கத்துடன் நாம் நினைவூட்டுகிறோம். பக்கத்து நாடான கன்னட நாட்டில் தரம்சிங் என்ற மராட்டியர் முதலமைச்சராக இருந்திருக்கிறார்.

‘நாம் தமிழர்’ அமைப்புத் தோழர்கள் பலரின் சட்டைகளை அலங்கரித்துக் கொண்டிருக்கும் சேகுவேரா கூட அர்ஜென்டினாவில் பிறந்தவர் தான் . அவர் கியுபா விடுதலைக்குப் போராடினார். அத்துடன் நிற்கவில்லை.பொலிவியா விடுதலைக்கும் போராடச் சென்றார். ‘நாம் தமிழர்’ அமைப்பின் திராவிடர் எதிர்ப்புக் கோட்பாட்டைப் பொருத்திப் பார்க்கும்போது, சேகுவேராவும் கூட கியூபாவின் அன்னியர் தானே?

இனி அவர்கள் பார்வையில் ப. சிதம்பரம், சோழவந்தான் சுப்ரமணியசாமி, புதுவை நாராயணசாமி எல்லாம் திராவிடர் அல்லாத “நல்ல தமிழர்”களாகி விடக் கூடும்.

இன்னும் விரிவாக எழுதலாம்; திராவிடர் எதிர்ப்பை அவர்கள் தொடரும்போது அதற்கான விளக்கங்களும் பதில்களும் வரத்தானே செய்யும்? அவைகளுக்கெல்லாம் இந்த விளக்கம் ஒரு சிறிய முன்னோட்டம் மட்டுமே!


கொளத்தூர் தா.செ. மணி
தலைவர், பெரியார் திராவிடர் கழகம்

நன்றி: http://thozharperiyar.blogspot.com/2010/04/blog-post_23.html

Tuesday, December 27, 2011

ஆதிக்கசாதி திமிரையும் மதத்தையும் கைவிடமுடியாதவர்கள் திராவிடத்தை எதிர்க்கிறார்கள்


முல்லைப்பெரியாறு அணை காக்க மே 17 இயக்கம் மெரினாவில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பாரதிராசாவும் தங்கர் பச்சானும் திராவிட எதிர்ப்பரசியலைக் கிளப்பினார்கள். 

திராவிட இயக்கத்தின் கருத்தியல் அல்லது கொள்கை எந்த அளவில் தமிழனின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்ததென்றுபேச எவனும் முன்வருவானா? முடியாது. ஏனெனில் பெரியார் கேட்டதும் தனித்தமிழ்நாடுதான். 

கேரளா, கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்கள்தான் திராவிட நிலப்பரப்பு என்று அந்த இயக்கங்களே சொல்லாதபோது இந்த தேவர்சாதி திமிர்பிடித்த பாரதிராசாவும் படையாச்சி தங்கரும் எந்த கனவுலகத்திலிருந்துகொண்டு திராவிட எதிர்ப்பைக் கையிலெடுக்கிறார்கள்? 

சாதி, மத எதிர்ப்பை கையிலெடுத்து போராடும் பெரியார் திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளுக்கான எதிர்வினையா இது. அல்லது பரமக்குடியில் தேவர்சாதி ஆதிக்க அரசு நடத்திய படுகொலை ஆய்வறிக்கை நூல்வெளியீட்டு விழாவில் வைகோ பங்கேற்றதால் பாரதிராசாவுக்கு வந்த வெறுப்பா? 

தமிழ்தேசியத்தின் கூறுகள் திராவிட அரசியலிலும் உண்டு. கூடுதலாக சாதி, மத எதிர்ப்பையும் கொண்டுள்ளது. கருணாநிதியும், ஜெயலலிதாவும் பெரியார் வழி வந்தவர்களா? பெரியாரின் கொள்கையை விட்டுவிட்டு பிழைப்புக்காக அரசியல் நடத்தும் இவர்களை முன்வைத்து திராவிட எதிர்ப்பை கையிலெடுப்பவர்கள், பெதிகவையும் மதிமுகவையும என்னவாகப் பார்க்கிறாரகள்? 

அறிவுப்பூர்வமாக அல்லாமல் இப்படியான திராவிட எதிப்பை போகிறபோக்கில் உளறுபவர்களை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் மே 17 இயக்கத்தின் நிலைப்பாடு என்ன? ஏனெனில் பாரதிராசாவின் கருத்தை அப்படியேதான் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். ஆதிக்கசாதி திமிரையும் மதத்தையும் கைவிடமுடியாதவர்கள் திராவிடத்தை எதிர்க்கிறார்கள். மே 17 நேரடியாக அல்லாமல் இதுபோன்ற அரசியல் அரைவேக்காடுகளை வைத்து தந்தை பெரியார் வழி நின்று போராடும் தோழர்களை இழிவு செய்ய நினைக்கிறதா?

திராவிடர் என்பதன் உள்ளடக்கத்​தைப் பாருங்கள். அகராதியில் ​பொருள் ​தேடாதீர்.

திராவிடர் என்ற ​சொல்லுக்கு, ஆராய்ச்சிகள் ​செய்து​கொண்டிருப்​போருக்கு பதிலளித்து, மயிலாடுது​றையில் 11.03.2011 அன்று நடந்த கூட்டத்தில் ​பெரியார் திராவிடர் கழகத் த​லைவர் ​கொளத்தூர் மணி ஆற்றிய உ​ரையிலிருந்து...

திராவிடர் என்பதன் உள்ளடக்கம் என்னவாக இருக்கிறது என்றுதான் பார்க்க​வேண்டு​மே தவிர, அகராதியில் ​பொருள் ​தேடக்கூடாது. அகராதியில் பார்க்கும்​போது பலவற்​றை தவறாகப் புரிந்து​கொள்ள ​நேரிடும்.


எனது சிறுவயதில் நாங்கள் ஒரு நாடகம் நடத்தி​னோம். ஒருவர் ஆங்கிலத்தில் ​சொல்வார். அ​தை நான் தமிழில் ​​மொழி​பெயர்ப்​பேன். "ladies and gentlemen" என்பார். அதற்கு நான் "​பெண்க​ளே. சாதுவான ஆண்க​ளே" என்று ​​மொழி​பெயர்ப்​பேன். "I am coming from greenland" என்பார். "நான் பச்​சை நிலத்திலிருந்து வருகி​றேன் என்று ​மொழி​பெயர்ப்​பேன்." "Do you understand" என்பார். அதற்கு நான், "அடியில் நிற்கிறாயா" என்​பேன். "​வெண்​டைக்காயும் முருங்​கைக்காயும் சாப்பிடு என்ற ​பொருளில், "Eat ladies finger and drumstick" என்பார். "​பெண்கள் விரல்க​ளையும் தப்பட்​டைக் குச்சிக​ளையும் சாப்பிடுங்கள்" என்று ​மொழி​பெயர்ப்​பேன். அகராதியில் பார்த்தால் தவறாக இப்படித்தான் ​மொழி​பெயர்க்கமுடியும்.

"ஆட்டம் (Atom) என்ற ​சொல்லுக்கு லத்தீனில் பிளக்கமுடியாதது என்று ​பொருள். Dalton's atomic theory ​சொல்கிறது...Atom is indivisible(அணு பிளக்கமுடியாதது) என்பதுதான். அப்​போது நிலவிய விஞ்ஞான ​கொள்​​கை. ஆனால், இப்​போது அ​தை பு​ரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் என பிரிக்கமுடியும் என்பதும், பிளக்கும்​போது ​​வெளிப்படும் அணுஆற்றலில் இருந்து பல்​வேறு ஆக்க​ வே​லைக​ளையும் அழிவு ​வே​லைக​ளையும் ​செய்யமுடியும் என்று கண்டுபிடித்துவிட்டார்கள். அணு​வைப் பிளக்கமுடியாது என்று கருதிக்​கொண்டிருந்த காலத்தில், பிளக்கமுடியாதது என்ற ​பொருள்ள ​Atom என்ற ​சொல்​லை, பிளக்கமுடியும் என்று ​தெரிந்த பின்னலும் Atom என்ப​தை மாற்றவில்​லை. ஒரு ​சொல்லில் ஏற்றப்பட்டிருக்கும் உள்ளடக்கம் என்பதுதான் முக்கியம். அப்படித்தான் ​பெரியார், திராவிடர் என்ற ​சொல்லிற்கு ஓர் உள்ளடக்கத்​தைக் ​கொடுத்துள்ளார்.

நான் இந்தியன்; நான் இந்து - தமிழர் தந்​தை ம.​பொ.சி

எல்​லைப் ​போராட்டத்தில் ​பெரியார்


எல்​லைப்​ ​போராட்டத்தில் ​பெரியார் அக்க​றை காட்டவில்​லை என்று இப்​போது ஒரு பிரச்சாரம் ​செய்துவருகிறார்கள். 

1953 ல் ஆந்திரா பிரிந்த​போதுதான் இந்தச் சிக்கல் வந்தது. அப்​போது நடந்த இரு நிகழ்ச்சிகளில் ஒன்று திருத்தணியில் நடந்த எல்​லைப் ​போராட்டம், மற்​றொன்று ​சென்​னை நக​​ரை ஆந்திராவுக்கு ​கேட்டார்கள் என்பது.

இதில், ​பெரியார் என்ன நி​லைப்பாடு எடுத்தார் என்றால், 1956 ஆம் ஆண்டு, ​வேலூரில் ஒரு கூட்டத்தில் ​பெரியார் ​பேசுகிறார். எல்​லைப் ​போராட்டத்தில் ​பெரியார் கலந்து​​கொள்ளவில்​லை​யே என்ற ​கேள்வி வருகிறது. அதற்கு அவர் விளக்கம் அளிக்கிறார்.

"முதல் கூட்டத்தில் ம.​பொ.சி உட்பட நாங்கள் எல்​லோரும் கலந்து​கொண்​டோம். எல்​லைப்​ ​போராட்டம் பற்றி ​பேசி​னோம். அப்​போது நான் ஐந்து திட்டங்க​​ளை முன்​வைத்​தேன். 

இந்தப் ​போராட்டத்​தோடு இந்தி எதிர்ப்​பையும் ​சேர்த்துக்​கொள்ள​வேண்டும். 

ப​டை, ​போக்குவரத்து, ​வெளியுறவுத்து​றை தவிர அ​னைத்து அதிகாரங்களும் மாநிலத்திற்குள்தான் இருக்க​வேண்டும். ​

சென்​னை ராஜ்யம் என்ப​தை தமிழ்நாடு என ​பெயர் மாற்ற​வேண்டும்.

காங்கிரசு கட்சி, தட்சிண பிர​தேசம் என்ற அ​மைப்​பை உருவாக்க நி​னைக்கிறது. அ​தை எதிர்க்க​வேண்டும். 

என்று இந்த ஐந்து ​​கோரிக்​கைகளில் தமிழ்​தேசியத்திற்கு எதிராக எதுவும் இல்​லை. ஆனால், தமிழ்​தேசியத்தின் தந்​தையாகக் கருதப்படுகிற ம.​பொ.சி,

"நான் இந்தியன் என்பதால் இந்தி ​மொழி​யை ஏற்றுக்​கொள்கி​றேன். நான் இந்து என்பதால் என் சமய சடங்குகளில் சமஸ்கிருதத்​தை ஏற்றுக்​கொள்கி​றேன்." என்றார், 

இ​தை இரண்​டையும் எதிர்த்த ​பெரியார் ​வைத்த அந்த ​​கோரிக்​கைகளுக்கு, "கம்யூனிஸ்ட்டுகள் ஏற்றுக்​கொள்ளவில்​லை. என​வே ​வேண்டாம்" என ம.​பொ.சி ​சொன்னார்.

ம.​பொ.சி உயி​ரோடு இருந்த காலத்தில் ​பெரியார் இ​தைப் பதிவு ​செய்துள்ளார். "தாராளமாக நீங்கள் ​போராடுங்கள். நாங்கள் உங்க​ளோடு இ​ணைந்து நிற்கமுடியாது" என்று ​பெரியார் ​தெரிவித்துவிட்டார்.

24-12-2010 ​பெரியார் நி​னைவுநாளில் ​பெரம்பூரில் ​கொளத்தூர் மணி ​பேசியது.

குழப்பவாதிகளுக்கு கழகத் த​​லைவர் ​​கொளத்தூர் மணி பதில் என்ற த​​லைப்பில் சனவரி 20-2011 ​பெரியார் முழக்க பதிவிலிருந்து

Monday, December 19, 2011