திராவிடர் என்ற சொல்லுக்கு, ஆராய்ச்சிகள் செய்துகொண்டிருப்போருக்கு பதிலளித்து, மயிலாடுதுறையில் 11.03.2011 அன்று நடந்த கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையிலிருந்து...
திராவிடர் என்பதன் உள்ளடக்கம் என்னவாக இருக்கிறது என்றுதான் பார்க்கவேண்டுமே தவிர, அகராதியில் பொருள் தேடக்கூடாது. அகராதியில் பார்க்கும்போது பலவற்றை தவறாகப் புரிந்துகொள்ள நேரிடும்.
எனது சிறுவயதில் நாங்கள் ஒரு நாடகம் நடத்தினோம். ஒருவர் ஆங்கிலத்தில் சொல்வார். அதை நான் தமிழில் மொழிபெயர்ப்பேன். "ladies and gentlemen" என்பார். அதற்கு நான் "பெண்களே. சாதுவான ஆண்களே" என்று மொழிபெயர்ப்பேன். "I am coming from greenland" என்பார். "நான் பச்சை நிலத்திலிருந்து வருகிறேன் என்று மொழிபெயர்ப்பேன்." "Do you understand" என்பார். அதற்கு நான், "அடியில் நிற்கிறாயா" என்பேன். "வெண்டைக்காயும் முருங்கைக்காயும் சாப்பிடு என்ற பொருளில், "Eat ladies finger and drumstick" என்பார். "பெண்கள் விரல்களையும் தப்பட்டைக் குச்சிகளையும் சாப்பிடுங்கள்" என்று மொழிபெயர்ப்பேன். அகராதியில் பார்த்தால் தவறாக இப்படித்தான் மொழிபெயர்க்கமுடியும்.
"ஆட்டம் (Atom) என்ற சொல்லுக்கு லத்தீனில் பிளக்கமுடியாதது என்று பொருள். Dalton's atomic theory சொல்கிறது...Atom is indivisible(அணு பிளக்கமுடியாதது) என்பதுதான். அப்போது நிலவிய விஞ்ஞான கொள்கை. ஆனால், இப்போது அதை புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் என பிரிக்கமுடியும் என்பதும், பிளக்கும்போது வெளிப்படும் அணுஆற்றலில் இருந்து பல்வேறு ஆக்க வேலைகளையும் அழிவு வேலைகளையும் செய்யமுடியும் என்று கண்டுபிடித்துவிட்டார்கள். அணுவைப் பிளக்கமுடியாது என்று கருதிக்கொண்டிருந்த காலத்தில், பிளக்கமுடியாதது என்ற பொருள்ள Atom என்ற சொல்லை, பிளக்கமுடியும் என்று தெரிந்த பின்னலும் Atom என்பதை மாற்றவில்லை. ஒரு சொல்லில் ஏற்றப்பட்டிருக்கும் உள்ளடக்கம் என்பதுதான் முக்கியம். அப்படித்தான் பெரியார், திராவிடர் என்ற சொல்லிற்கு ஓர் உள்ளடக்கத்தைக் கொடுத்துள்ளார்.
1 கருத்துரைகள்:
உண்மை , வெறும் கூற்றல்ல.. ஓங்கி ஒலிப்போம்...
Post a Comment