எல்லைப் போராட்டத்தில் பெரியார்
எல்லைப் போராட்டத்தில் பெரியார் அக்கறை காட்டவில்லை என்று இப்போது ஒரு பிரச்சாரம் செய்துவருகிறார்கள்.
1953 ல் ஆந்திரா பிரிந்தபோதுதான் இந்தச் சிக்கல் வந்தது. அப்போது நடந்த இரு நிகழ்ச்சிகளில் ஒன்று திருத்தணியில் நடந்த எல்லைப் போராட்டம், மற்றொன்று சென்னை நகரை ஆந்திராவுக்கு கேட்டார்கள் என்பது.
இதில், பெரியார் என்ன நிலைப்பாடு எடுத்தார் என்றால், 1956 ஆம் ஆண்டு, வேலூரில் ஒரு கூட்டத்தில் பெரியார் பேசுகிறார். எல்லைப் போராட்டத்தில் பெரியார் கலந்துகொள்ளவில்லையே என்ற கேள்வி வருகிறது. அதற்கு அவர் விளக்கம் அளிக்கிறார்.
"முதல் கூட்டத்தில் ம.பொ.சி உட்பட நாங்கள் எல்லோரும் கலந்துகொண்டோம். எல்லைப் போராட்டம் பற்றி பேசினோம். அப்போது நான் ஐந்து திட்டங்களை முன்வைத்தேன்.
இந்தப் போராட்டத்தோடு இந்தி எதிர்ப்பையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
படை, போக்குவரத்து, வெளியுறவுத்துறை தவிர அனைத்து அதிகாரங்களும் மாநிலத்திற்குள்தான் இருக்கவேண்டும்.
சென்னை ராஜ்யம் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றவேண்டும்.
காங்கிரசு கட்சி, தட்சிண பிரதேசம் என்ற அமைப்பை உருவாக்க நினைக்கிறது. அதை எதிர்க்கவேண்டும்.
என்று இந்த ஐந்து கோரிக்கைகளில் தமிழ்தேசியத்திற்கு எதிராக எதுவும் இல்லை. ஆனால், தமிழ்தேசியத்தின் தந்தையாகக் கருதப்படுகிற ம.பொ.சி,
"நான் இந்தியன் என்பதால் இந்தி மொழியை ஏற்றுக்கொள்கிறேன். நான் இந்து என்பதால் என் சமய சடங்குகளில் சமஸ்கிருதத்தை ஏற்றுக்கொள்கிறேன்." என்றார்,
இதை இரண்டையும் எதிர்த்த பெரியார் வைத்த அந்த கோரிக்கைகளுக்கு, "கம்யூனிஸ்ட்டுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே வேண்டாம்" என ம.பொ.சி சொன்னார்.
ம.பொ.சி உயிரோடு இருந்த காலத்தில் பெரியார் இதைப் பதிவு செய்துள்ளார். "தாராளமாக நீங்கள் போராடுங்கள். நாங்கள் உங்களோடு இணைந்து நிற்கமுடியாது" என்று பெரியார் தெரிவித்துவிட்டார்.
24-12-2010 பெரியார் நினைவுநாளில் பெரம்பூரில் கொளத்தூர் மணி பேசியது.
குழப்பவாதிகளுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி பதில் என்ற தலைப்பில் சனவரி 20-2011 பெரியார் முழக்க பதிவிலிருந்து

0 கருத்துரைகள்:
Post a Comment