வெள்ளி, 30 டிசம்பர், 2011

தமிழ் உயர்மொழி எனில் தமிழன் கீழ்மகனானதெப்படி?

தமிழ் உயர்மொழியானால், தமிழன் கலப்படமற்ற சுத்தப் பிறவியானால், தமிழ் பேசுகிறவன் தமிழன் என்கிற காரணத்திற்காக உன்னை சூத்திரன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்று கடவுள் சொன்னதாக சாஸ்திரம் எழுதி வைத்து, 'கீதை' வெங்காயம் சொல்லுகிறது என்று சொல்லி உன்னை தீண்டத்தகாத ஜாதியாக பார்ப்பானும், அவன் பொண்டாட்டி, பிள்ளை, ஆத்தாள், அக்காளும் நடத்துகிறார்களே; நீ நாக்கைப் பிடிங்கிக்கொண்டாயா? நீ யாருக்குப் பிறந்தாய் என்பது பற்றி சிறிதளவாவது சிந்தித்து இருந்தால், என்னை நீ யாருக்குப் பிறந்தாய் என்று கேட்டு இருக்கமாட்டாய்.

எனக்கு நான் யாருக்குப் பிறந்தேன் என்பது பற்றிக் கவலை இல்லை. அது என் அம்மா சிந்திக்கவேண்டிய காரியம். நான் யாருக்குப் பிறந்தேன் என்று என்னாலும் சொல்லமுடியாது; தம்பீ உன்னாலும், அதாவது நீ யாருக்குப் பிறந்தாய் என்று (உன்னாலும்) சொல்லமுடியாது; அந்தப் பிரச்சனையே முட்டாளுக்கும், அயோக்கியனுக்கும்தான் தேவை.

யாருக்குப் பிறந்தாலும் மனிதனுக்கு மானம் தேவை; அது உன்னிடம் இருக்கிறதா, என்னிடம் இருக்கிறதா என்பதுதான் இப்போது சிந்திக்கவேண்டிய தேவை.

அதையும் விட தமிழ்மொழியிலும், தமிழ்ச் சமுதாயத்திலும் இருக்கிறதா? இருப்பதற்கு தமிழ் உதவியதா? உதவுகிறதா? என்பதுதான் முக்கிமான, முதலாவதான கேள்வி.

 - தமிழும் தமிழரும் நூலில் பெரியார்

3 கருத்துகள்:

Sethuraman Anandakrishnan சொன்னது…

suthanthiram adainthu 67 aandu aakiyum dravidakkatchikal 37 aandukalaakiyum paarppaan ena sinthithithuppaarkkaamal thaakkuvathe thamilanin munnetraththadai.thamil mattum padiththaal patru irunthaal kolaiveri tamlinglish rasikkappaduma.thamilarin nerippaduththum thalavarkal tamil kaatumiraandi moli enravarkal thaane.

Hotlinksin.com சொன்னது…

வித்தியாசமான பதிவுகளை எழுதி கலக்கும் நண்பரே, உங்கள் பதிவுகளை தினமும் http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைத்திடுங்கள்.

​செல்​லையா முத்துசாமி சொன்னது…

//thamilarin nerippaduththum thalavarkal tamil kaatumiraandi moli enravarkal thaane.// சாம்பல் பட்​டையணிந்த ​​சேதுராமன் அவர்களுக்கு, உங்கள் விமர்சனத்திற்கு அன்​றே ​பெரியார் பதிலளித்துவிட்டார்.

இந்தத் தமிழ் ​மொழியானது காட்டுமிராண்டி ​மொழி என்று நான் ஏன் ​சொல்கி​றேன்? எதனால் ​சொல்கி​றேன்? என்று இன்று ​கோபித்துக்​கொள்ளும் ​யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் ​பேசுவதில்​லை. "வாய் இருக்கிறது; எ​தையாவது ​பேசி வம்பு வளர்ப்​போம்" என்ப​தைத் தவிர அறி​வை​யோ, மானத்​தை​யோ, ஒழுக்கத்​தை​யோ பற்றி சிறிதுகூட சிந்திக்காம​லே ​பேசிவருகிறார்கள்.

இப்படிப்பட்ட இவர்கள் ​போக்குப்படி​​யே சிந்தித்தாலும் "தமிழ்​மொழி 3000-4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட ​மொழி" என்ப​தைத் தமிழின் ​பெரு​மைக்கு ஒரு சாதனமாய்க் ​கொண்டு ​பேசுகிறார்கள்.

நானும் தமிழ் காட்டுமிராண்டி ​மொழி என்பதற்கு அ​தைத்தா​னே முக்கிய காரணமாய்ச் ​சொல்லுகி​றேன். அன்று இருந்த மக்களின் நி​லை என்ன? அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாணினியாகட்டும் மற்றும் எவன்தானாகட்டும் இவன்க​ளைப் பற்றி ​தெரிந்து​கொள்ள உனக்குப் புத்தியில்லாவிட்டால் நீ தமி​ழைப் பற்றி ​பேசும் தகுதியு​டையவனாவாயா?

தமிழ் காட்டுமிராண்டி ​மொழி என்பதால் உனக்கு ​பொத்துக்​கொண்டது. ஆனால், தமிழன் ஈன ஜாதிப்பயல் என்று கூறி உன்​னை ஈன ஜாதியாக நடத்துவது பற்றி உனக்கு எங்கும் ​பொத்துக்​கொள்ளவில்​லை! அதுமாத்திரமல்ல; முட்டாள் பசங்கள் உன்​னை ஈனஜாதியாய் நடத்துகின்றவர்கள் காலில் விழுகிறீர்கள்; அவ​னை சாமி என்று கூறுகிறீர்கள்; பிராமணர்கள் என்று கூறுகிறீர்கள்!

சிந்தித்துப்பார், நீ, நீங்கள் யா​ரென்று!

- தமிழும் தமிழரும் நூலில் ​பெரியார்.

பின்குறிப்பு: சாம்பல் பட்​டையணிந்தவ​ரே, உங்கள் ஆங்கிலத்தமிழ் கருத்​தை படிக்க ​ரெம்ப ​போராட ​வேண்டியிருக்கு. முதலில் தமிழில் கருத்திட கற்றுக்​கொள்ளுங்கள்.