Saturday, December 31, 2011

குலக்கல்வித் திட்டத்தை ஆதரித்த தமிழர் தந்தை ம.பொ.சி


ராசாசியின் வஞ்சக மூளையில் வடிவெடுத்த கொடிய திட்டந்தான் குலக்கல்வித் திட்டம் என்பது. பாதி நேரம் படிப்பு; மீதிநேரம் அப்பன் குலத்தொழில் என்னும் பச்சையான மனுதர்ம நெறிக்கு பாதையைப் போட்ட ஆச்சாரியாரின் இந்த கொடிய கல்வித் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடே கொந்தளித்து எழுந்தது. வஞ்சகப் பார்ப்பன ஆட்சியை ஒழிக்காமல் தமிழருக்கு வாழ்வில்லை என்ற முடிவோடு வரிப்புலியாய் சீறிப்பாய்ந்தார் பெரியார்.

குலக்கல்வித் திட்டத்திற்கு தமிழ்நாடே கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தபோது, அந்தக் கல்வித்திட்டத்தை ஆதரித்து ம.பொ.சியின் தமிழரசுக் கழகம் தீர்மானம் நிறைவேற்றியது. நாடெங்கும் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் நடத்த முடிவுசெய்து திக, திமுக மட்டுமல்ல காங்கிரசு கட்சியைச் சேர்ந்த காமராசரும் குலக்கல்வித் திட்டத்தைக் கண்டித்தார். ம.பொ.சி அந்த காமரசைரைக்கூட விட்டுவைக்கவில்லை.

"புதிய கல்வித்திட்டத்தை எதிர்த்து பேசினார் காமராசர். கல்வித்திட்டம் சரியா? தவறா? என்பதில் அவருக்குக் கவலை இல்லை. ராசாசி ஆட்சியை வெளியேற்றித் தான் அதிகாரத்திற்கு வர அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார்." (ம.பொ.சி எனது போராட்டம் பகுதி 2, பக்கம் 392)

நன்றி: புரட்சிப் ​பெரியார் முழக்கம், 19 ​மே 2011, பக்கம் 3.

7 comments:

Anonymous said...

அய்யா பல காலமாக குலக் கல்வி குலக் கல்வி என்று கூக்குரலிடுவதில் பயன் இல்லை... கால தேச வர்த்தமானங்களில் இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் உலகில் எந்த கொம்பனாலும் அந்த பகவான் கிருஸ்ணன் வந்தாலும் காலச் சக்கரத்தை மாற்ற முடியாது... அப்போதைய சூழலில் பெரியார் பார்ப்பனரை எதிர்க்க வேண்டியிருந்தது.. காமராசு ஆட்சியைப் பிடிக்க ஒரு வாய்ப்பாக பயன் படுத்திக் கொண்டார்கள்.. மேலும் திராவிட அரசியலை முன்னெடுக்க காங்கிரசை ஓரங்கட்ட திராவிட அரசியல் வாதிகள் பயன் படுத்திக் கொண்டார்கள்..அந்தக் காலத்தில் (இந்தக் காலத்திலும்) பள்ளிக்கு அனுப்பும் சூழல் குறைவு.. கேட்டால் புள்ள வேலை செய்ய வேண்டுமே என்றார்கள் அதற்காக ஆரம்பிக்கப் பட்டதே அந்தத் திட்டம் அதற்கு குலகல்வி என பெயரிட்டது திராவிட அரசியல் வாதிகளே..மேலதிகமாக தெரிந்து கொள்ள ஜெயமோகன் வலைத்தளத்தில் காணவும்...வீணாக குறைசொல்லி பயன் இல்லை....
R Nagaraj

SURYAJEEVA said...

வரலாற்று உண்மையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தோழர்
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்

ஜோதிஜி said...

வளமும் நலமும் பெற 2012 வருட புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

​செல்​லையா முத்துசாமி said...

எனது பதி​வுக​ளைப் பார்த்ததும் நன்றி ​தெரிவிக்கும் suryajeeva அவர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்து ​தெரிவித்திருக்கும் ஜோதிஜி அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றிகள்

​செல்​லையா முத்துசாமி said...

//மேலதிகமாக தெரிந்து கொள்ள ​​ஜெயமோகன் வலைத்தளத்தில் காணவும்...//

​நாகராஜ், ​ஜெய​மேகனின் தளத்​தைப் பார்​வையிடச் ​சொல்வ​தைவிட ராஜாஜி​யை​யே நீவீர் தூக்கிப்பிடிக்கலாம்.

​ஜெய​மோகன் ஒரு இந்து​வெறிய​னென்றும் பார்ப்பா​னைவிட நஞ்​சைக் கக்குபவ​னென்றும் எழுத்தாளர்கள், வாசகர்கள் உட்பட ​பொது​வெளியில் அ​​னைவரும் அறிவார்கள்.

வரலாற்று ஆதாரம் ஏதும் கி​டைக்கலன்னா இருவா​யையும் ​பொத்திக்​கொண்டு இருங்கள்.

குரங்குபெடல் said...

" வரலாற்று ஆதாரம் ஏதும் கி​டைக்கலன்னா இருவா​யையும் ​பொத்திக்​கொண்டு இருங்கள். "

தவிர்த்திருக்கலாம் . .

நன்றி

Nehru said...

"புதிய கல்வித்திட்டத்தை எதிர்த்து பேசினார் காமராசர். கல்வித்திட்டம் சரியா? தவறா? என்பதில் அவருக்குக் கவலை இல்லை. ராசாசி ஆட்சியை வெளியேற்றித் தான் அதிகாரத்திற்கு வர அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார்."

காமராஜர் பற்றிய விமர்சனத்தை நான் எதிர்கிறேன்..