Tuesday, December 27, 2011

ஆதிக்கசாதி திமிரையும் மதத்தையும் கைவிடமுடியாதவர்கள் திராவிடத்தை எதிர்க்கிறார்கள்


முல்லைப்பெரியாறு அணை காக்க மே 17 இயக்கம் மெரினாவில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பாரதிராசாவும் தங்கர் பச்சானும் திராவிட எதிர்ப்பரசியலைக் கிளப்பினார்கள். 

திராவிட இயக்கத்தின் கருத்தியல் அல்லது கொள்கை எந்த அளவில் தமிழனின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்ததென்றுபேச எவனும் முன்வருவானா? முடியாது. ஏனெனில் பெரியார் கேட்டதும் தனித்தமிழ்நாடுதான். 

கேரளா, கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்கள்தான் திராவிட நிலப்பரப்பு என்று அந்த இயக்கங்களே சொல்லாதபோது இந்த தேவர்சாதி திமிர்பிடித்த பாரதிராசாவும் படையாச்சி தங்கரும் எந்த கனவுலகத்திலிருந்துகொண்டு திராவிட எதிர்ப்பைக் கையிலெடுக்கிறார்கள்? 

சாதி, மத எதிர்ப்பை கையிலெடுத்து போராடும் பெரியார் திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளுக்கான எதிர்வினையா இது. அல்லது பரமக்குடியில் தேவர்சாதி ஆதிக்க அரசு நடத்திய படுகொலை ஆய்வறிக்கை நூல்வெளியீட்டு விழாவில் வைகோ பங்கேற்றதால் பாரதிராசாவுக்கு வந்த வெறுப்பா? 

தமிழ்தேசியத்தின் கூறுகள் திராவிட அரசியலிலும் உண்டு. கூடுதலாக சாதி, மத எதிர்ப்பையும் கொண்டுள்ளது. கருணாநிதியும், ஜெயலலிதாவும் பெரியார் வழி வந்தவர்களா? பெரியாரின் கொள்கையை விட்டுவிட்டு பிழைப்புக்காக அரசியல் நடத்தும் இவர்களை முன்வைத்து திராவிட எதிர்ப்பை கையிலெடுப்பவர்கள், பெதிகவையும் மதிமுகவையும என்னவாகப் பார்க்கிறாரகள்? 

அறிவுப்பூர்வமாக அல்லாமல் இப்படியான திராவிட எதிப்பை போகிறபோக்கில் உளறுபவர்களை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் மே 17 இயக்கத்தின் நிலைப்பாடு என்ன? ஏனெனில் பாரதிராசாவின் கருத்தை அப்படியேதான் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். ஆதிக்கசாதி திமிரையும் மதத்தையும் கைவிடமுடியாதவர்கள் திராவிடத்தை எதிர்க்கிறார்கள். மே 17 நேரடியாக அல்லாமல் இதுபோன்ற அரசியல் அரைவேக்காடுகளை வைத்து தந்தை பெரியார் வழி நின்று போராடும் தோழர்களை இழிவு செய்ய நினைக்கிறதா?

4 comments:

கறுத்தான் said...

கட்டுரையாளரின் கோபம் புரிகிறது! ......ஆனால் திராவிட எதிர்ப்பு அரசியல் ஏன்று அவர்கள் கருதுவது யாரை என்பதை உறுதி செய்து கொண்டு தவறான புரிதலுடன் இருந்தால் அவர்களுடன் பேசி தெளிவு படுத்த வேண்டியது நம் கடமை. ஏன் ஏன்றால் அவர்கள் கலிங்கர்கள் அவர்கள் உணர்வு நிலையில் தான் சிந்திப்பார்கள்....... மேலும் நட்பு முரணை பகை முரண் ஆக்காதீர்கள் .

​செல்​லையா முத்துசாமி said...
This comment has been removed by the author.
​செல்​லையா முத்துசாமி said...

@karutha, உங்களின் நியாயமான கவ​லை எனக்கும் உண்டு. அரசியல் ​தெளிவின்றி திராவிட எதிர்ப்​பை ​கையி​லெடுப்பவர்க​ளோடு முகநூலில் பலமு​றை விவாதித்தாயிற்று. மிக நீண்ட கருத்து​ரைகளுக்குப் பின்னாலும் நாம் உணர்ந்தது, ஆதிக்கசாதி ம​னோபாவமும் மதவாதம் ​பேசு​வோரும் இ​தை ​செய்கிறார்கள். ​தொடர்பு​டைய இயக்கம் தனது கருத்தாக இதுவ​​ரை எ​தையும் ​வெளியிடாமல் அடிப்​பொடிகளின் வாயிலாக எதிர்வி​னையாற்றுகிறது. திராவிட கருத்தியல் பற்றி விவாதிக்க விரும்பு​வோர் கீழ்க்காணும் சுட்டியிலுள்ள பதி​வை படித்துவிட்டு வரலாம் என்​றோம். http://www.chelliahmuthusamy.com/2011/10/blog-post_14.html

எ​தையும் படிக்காமல் விவாதிக்கவருகிறார்கள். நமக்குள்ள வருத்த​மெல்லாம் சாதி, மத ஒழிப்​பை ​கொள்​கையாகக் ​கொண்டுள்ள ​பெரியாரின் இயக்கம் இவர்களுக்கு எந்த வ​கையில் பிரச்ச​னையாக இருக்கிறது என்பதுதான். ​​தெளிவற்ற திராவிட எதிர்ப்பு என்பது ​பெரியா​ரை மக்களிடம ​கொண்டு​சேர்க்க த​டையாக இருக்கும் என்பதால் நாம் இ​தைக் கண்டிக்க​வேண்டிவருகிறது.

Thambi said...

IVANKELLAM VANATHULA IRUNDHU KUTHICHA VANDHANKE.