Saturday, December 29, 2012

கீழ்வெண்மணி படுகொலையில் பெரியாரின் நிலை என்ன? - கொளத்தூர் மணி அதிரடி தகவல்“புதிய தலைமுறை” தொலைக்காட்சியில் டிசம்பர் 22 அன்று ‘அக்னிப் பரீட்சை’ நிகழ்ச்சியில்பேட்டியாளர் ஜென். ராம் எழுப்பிய பல்வேறு வினாக்களுக்கு விடையளித்து கழகத் தலைவர்கொளத்தூர் மணி வழங்கிய பேட்டியின் முழு வடிவம்.

ஜென்ராம் - திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் என்றபெயர்களில் இருந்தாலும் - கொள்கை ஒன்றுதான். ஆனால், மூன்று அமைப்புகளில் நீங்கசெயல்பட வேண்டிய நிலை வந்திருக்கிறது. என்ன காரணம்?

கொளத்துர் மணி - மூன்று அமைப்புகளுக்கும் கொள்கை ஒன்றுதான். ஆனால்அணுகுமுறைகளிலும், எதற்கு முன்னுரிமைக் கொடுப்பது என்பதிலும் எங்களுக்குள் எழுந்தகருத்து வேறுபாடுகள்தான் புதிய புதிய அமைப்புகளை காண்பதற்கும் தோன்றுவதற்கும்காரணமாக இருக்கிறது.

ஜென்ராம் - அணுகுமுறைதான் என்று நீங்க ஒரே சொல்லில் சொல்லி முடிச்சுடறீங்க. ஆனால்அதற்கு பின்னால் தலைமைகள் குறித்து நீங்க வைத்திருக்கக் கூடிய விமர்சனம், கடுமையாகஇருக்கு. கொள்கைகளை விட இயக்கமும் கட்டுப்பாடும் முக்கியம் என்ற நிலை தோழர் வீரமணிகாலத்தில் உருவானது என்று நீங்க அங்கிருந்து வெளியே வரும்போது கூறியிருக்கிறீர்கள். அதுஇயல்பானதுதானே? கொள்கையை விட கட்டுப்பாடு முக்கியம் என்று சொல்ல முடியாவிட்டாலும் இயக்கத்தின் கட்டுப்பாடு என்பது முக்கியமானதுதானே?

கொளத்துர் மணி - நிச்சயமாக! கட்டுப்பாடு அவசிய மானதுதான். ஆனால் எங்களைநீக்குவதற்கெல்லாம் கொள்கை சார்ந்த கட்டுப்பாடுகள் காரணமாக இருக்கவில்லை. அரசியல்சார்ந்த காரணங்களுக்காக நாங்கள் விலக்கப்பட்டோம்.

ஜென்ராம் - கட்சி அதிகாரம் தந்த மாயைதான் கொள்கை வழியில் செயல்பட்டத் தோழர்களைநீக்குவதற்கான தைரியத்தை வீரமணிக்குக் கொடுத்தது என்று சொல்றீங்க. இதுபோன்றஅமைப்பில் இருக்கக் கூடிய கட்சி அதிகாரம் என்பது எத்தகைய அதிகாரம்?

கொளத்துர் மணி - பெரியார் இயக்கத்தைப் பொருத்த வரை தலைவருக்குதான் முழு அதிகாரம்என்று ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இருக்கிற பதவிகள் எதுவும் தேர்ந்தெடுக்கப்படும் பதவிகள்அல்ல. தேர்தலில் நின்று நாங்கள் வெற்றி பெற்று பதவிகளுக்கு வருவதில்லை. இயக்கத்தின்தலைமை ஆலோசித்து நியமிப்பதுதான் எல்லா பதவிகளும். எனவே அவர்களுக்கு கூடுதல்அதிகாரம் உண்டு என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் நான் விலக்கப்பட்டதற்கு காரணம்கொள்கை சார்ந்தது அல்ல. அந்த நேரத்தில் நடிகர் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்ட போதுராஜ்குமாரை மீட்பதற்கு நான் போயிருந்தேன். திரு. வீரமணியோ போகக் கூடாது என்றுகருதினார். அப்போது அவர் எடுத்த அரசியல் நிலையின் காரணமாக, இந்த முடிவை எடுத்தார்.அப்போது ஆட்சியிலிருந்த தி.மு.க. சிக்கலில் இருந்து தப்பித்துக் கொள்ள கூடாது என்று அவர்கருதினார். அப்போது அவர் தி.மு.க.வை கடுமையாக எதிர்த்து வந்தார். என்னைப் பொருத்த வரை,கர்நாடக தமிழர்களுக்கு எந்தவித பாதிப்பும் நேர்ந்துவிடக் கூடாது என்ற கருத்து என்னிடம்மேலோங்கி இருந்தது. இன்னும் சொல்லப் போனால் அதில் என்னுடைய பார்வைதான்கொள்கைப் பார்வையாகவும் அவருடைய பார்வை வெறும் கட்டுப்பாடு அரசியல்பார்வையாகவும் இருந்தது. நான் விலகுவதற்கான காரணம் அதுதான்.

ஜென்ராம் - அதற்கு பிறகு, இன்று பெ.தி.க.விலும் கிட்டத்தட்ட அன்று வீரமணி இருந்த நிலையில்நீங்க இருந்தீங்க என்று சொல்லலாமா?

கொளத்துர் மணி; - ஆமாம். நான் தலைவராகத்தான் இருந்தேன்.

ஜென்ராம் - நீங்க தலைவராக இருந்தீங்க. பெரியார் கொள்கைகளை முன்னெடுப்பதில் கழகத்தில்கோவை இராமகிருஷ்ணன் அணியினர் முட்டுக்கட்டை, எதிர்ப்புகள் காட்டியதாக சொல்றீங்க.

கொளத்துர் மணி - ஆமாம்!

ஜென்ராம் - அவர்கள் கட்டுப்பாட்டை மீறினார்கள். அதனால் நீங்கள் நடவடிக்கை எடுக்கறீங்கஅல்லது நீங்கள் நடவடிக்கை எடுக்காம ஒரு உடன்பாட்டின் அடிப்படையில் இன்னொருஅமைப்புக்கு வர்றீங்க... ஏதோ ஒன்று... ஆனா கட்சியினுடைய முக்கியத்துவத்தை நீங்கதலைவராக இருக்கும் போது வலியுறுத்துறீங்க இல்லையா?

கொளத்துர் மணி - கட்சியின் முக்கியத்துவம் என்றல்ல. கொள்கையை முன்னெடுத்துச்செல்வதில் உள்ள கட்டுப்பாடுகளைதான் நான் சொல்கிறேன். அதிகாரம் என்பதெல்லாம் இதில்இல்லை. கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில் சில தடங்கல்கள் இருந்தன. அவர்கள் புரிதல்வேறாகவும் எங்கள் புரிதல் வேறாகவும் இருந்தது. அதுதான் பிரச்னை.

ஜென்ராம் - ஒரு அமைப்பில் அல்லது ஒரு நிறுவனத்தில் ஒரு புள்ளியில சேர்ந்து வேலைசெய்வதற்கான சாத்தியப் புள்ளிகளை பார்த்துட்டு கூடிய வரை இணைந்து செயல்படுவதற்கானமுயற்சிகளை எடுக்கணும் அதுதானே சரியான நிலைப்பாடாக இருக்க முடியும்?

கொளத்துர் மணி - ஆம். உண்மைதான். நாங்கள் எல்லோரும் இணைந்தபோதுகூட எங்களின்சில கருத்து வேறுபாடுகளை நாங்கள் பேசி தீர்த்துக் கொண்டோம். பொதுவாக மேடைகளில் மற்றபெரியார் அமைப்புகளை பற்றி விமர்சனம் செய்வது கூடாது என்பது போன்ற குறைந்த பட்சமுடிவுகளை எடுத்துக் கொண்டுதான் நாங்கள் இணைந்து செயல்பட்டோம். இப்போது நாங்கள்உடனடியாக திடீரென்று விலகிவிடவில்லை. இப்போது பிரிந்த இந்த இரண்டு அமைப்புகளும்ஏறத்தாழ 2005-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே இருவரும் இணைந்து வேலை செய்வதுசிக்கலாக இருக்கும் என்று கருதி அப்போதே நான் முன் வைத்ததுதான் இரண்டு இயக்கங்களாகஇயங்கலாம். தேவைப்பட்ட போது கூட்டு நடவடிக்கையில் ஈடுபடலாம் என்பது 2005டிசம்பரிலேயே முன் மொழிந்தேன். ஆனாலும் எங்களுக்குள்ள, இயக்கத் திற்குள்ள தேவையை,அதன் வேலையை கருதிதான் 7 ஆண்டுகள் மெல்ல மெல்ல நாங்கள் பிரிந்து போய் விடாமல்அப்படியே அதை நீட்டித்துக் கொண்டு வந்தோம். நீங்கள் சுட்டிக்காட்டிய கருத்துதான் அதற்குக்காரணம்.

ஜென்ராம் - உங்களுடைய கொள்கையின்படி ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் உள்ளமுரண்பாட்டை பகை முரண்பாடாக பார்க்கலாம். திராவிடர்களுக்கு இடையில் உள்ள முரண்பாடுநட்பு முரண்பாடாகத்தான் இருக்க முடியும். நட்பு முரண்பாடு இருக்கும் போது ஒரு கையால்அணைத்துக் கொண்டே ஒரு கையால் திருத்துவதற்கான முயற்சி தான் சரிங்கிறது சிலருடையநம்பிக்கை. அந்த அணுகுமுறை தோற்று போச்சுன்னு நீங்க நினைக்கிறீங்களா?

கொளத்துர் மணி - இல்லை. அப்படி இல்லை. முன்னுரிமை என்று இன்னொரு சொல்லைஏற்கெனவே சொன்னேன். எதற்கு முன்னுரிமை தருவது? பெரியார் இயக்கம் என்பது பகுத்தறிவுஇயக்கமா ஜாதி ஒழிப்பு இயக்கமா? இதில் இரண்டு கருத்துக்களையும் பெரியார் பேசினார்.பகுத்தறிவும் பேசினார். ஜாதி ஒழிப்பும் பேசினார். நாங்கள் ஜாதி எதிர்ப்புக்கும் ஜாதி ஒழிப்புக்கும்முன்னுரிமை கொடுக்கிறோம். அதில் கொஞ்சம் தயக்கம் இருக்கிறபோது, அதில் அவர்கள் பின்தங்கி நிற்கிற போது எங்கள் வேகம் குறைகிறது என்று நினைக்கிறோம் எனவே, வேகமாகமுன்னெடுத்துச் செல்வதற்கு தனி அமைப்பு கண்டிருக்கிறோம்.

ஜென்ராம் - பார்வை இல்லாத 5 பேர் யானையை தடவிப்பார்த்து ஆளுக்கொன்றைசொல்வதுபோல பெரியாரை எங்களைப் போன்ற சாதாரண நிலையி லிருப்பவர்கள் புரிந்துகொள்வதிலேயே அந்த சிக்கல் இருக்கிறது. ஆனால் பெரியாருடைய தொண்டர்களாகஅவருடைய இயக்கத்தின் வழி வந்தவர்களாக இருப்பவர் களிடையேகூட முன்னுரிமையில்பெரியாருடைய பார்வையில முன்னுரிமையில் சிக்கல் வருது என்றால் அதை எப்படிபுரிஞ்சுக்கிறது

கொளத்துர் மணி - இருக்கத்தான் செய்யும். இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1938-இல் வந்தது.அப்போது பெரியாரோடு சேர்ந்து தமிழறிஞர்கள் எல்லாம் போராடினார்கள். அப்போதுபெரியாரோடு இணைந்தவர் களுக்கு பெரியாருடைய மற்ற கொள்கைகளை விடவும் கூட தமிழ்ப்பாதுகாப்பு, தமிழ் ஆதரவு என்ற சிந்தனை அதிகமாக இருந்தது. அடுத்து 57-இல் ஜாதியை காக்கிறசட்ட எரிப்புப் போராட்டம்.. அந்த நேரத்தில் பெரியார் இயக்கத்திற்கு வந்தவர்களுக்கு ஜாதிஎதிர்ப்புக் கொள்கை கூடுதலாக இருக்கும். 80-களுக்கு பின்னால் வந்தவர்களுக்கு ஈழ ஆதரவுகொள்கை கூடுதலாக இருக்கும். கூடுதலாக இருக்கும் என்பதுதானே தவிர எல்லோருக்கும் அந்தகொள்கை உண்டு. எது கூடுதல், குறைதல் என்பதில்தான் சிக்கல்.

ஜென்ராம் - நீங்க இருந்த அமைப்புகள் எல்லாம், அதாவது பெரியாருடைய வழி வந்தஅமைப்புகள் எல்லாமே திராவிடர் கழகம் என்ற அந்த சொற்களையே பயன்படுத்தறீங்க. தி.மு.க,அ.தி.மு.க, மறுமலர்ச்சி தி.மு.க எல்லாமே திராவிட முன்னேற்றக் கழகம் அப்படின்னுதான்சொல்றாங்க. திராவிடர் என்ற சொல்லை பயன்படுத்தறது இல்லை. இந்த இரண்டுக்கும் உண்டானஅடிப்படை வேறுபாடு என்ன?

கொளத்துர் மணி - தி.மு.க பிரிந்தபோது, முதல் கூட்டம் ராபின்சன் பூங்காவில் நடந்தது. அந்தகூட்டத்தில்தான் அண்ணா அப்போதே பேசினார். ~எங்கள் கட்சியின் பெயரில் ~ர்| இல்லைஎன்பதை கவனியுங்கள்| என்பதை குறிப்பிட்டே பேசினார். திராவிடர் என்பது மக்களை குறிக்கும்சொல். திராவிடம் என்பது மண்ணை குறிக்கும் சொல் என்று பேசினார். ஆரியர், திராவிடர் என்றுமக்களை பிரித்து அந்த பண்பாட்டுப் புரட்சிக்கு அடிகோலியவர் பெரியார்;. அண்ணாவைப்பொருத்தவரை திராவிடத்தை தெற்கு, வடக்கு என்பதாக பிரித்துதான் வடக்கு வாழ்கிறது, தெற்குதேய்கிறது என்ற முழக்கத்தை வைத்தார். அவர்கள் வடவர் ஆதிக்கத்தில் இருந்து திராவிடத்தை,தமிழகத்தை முன்னேற்று வதற்கான செயல் திட்டங்கள் தங்களிடம் இருப்பதாக தான்வெளிப்படுத்திக் கொண்டார்கள். பெரியார் கூறிய ~திராவிடர்| மக்களுடைய பண்பாட்டுப்புரட்சியைப் பொருத்தது. அண்ணா கூறிய ~திராவிட| அரசியல் வழிகளை பொருத்தது.

ஜென்ராம் - மக்களை பிரித்துப் பார்ப்பது என்று சொல்றீங்களே... எந்த அடிப்படையில் பிரித்துப்பார்ப்பது? பிறப்பின் அடிப்படையிலா?

கொளத்துர் மணி - பிறப்பின் அடிப்படையில் என்பதை பெரியார் எப்போதும் ஏற்றுக்கொண்டதில்லை. ஆரியர் திராவிடர் என்பது குறித்து பெரியார் சொல்வார், ரத்த பரிசோதனைசெய்து நாங்கள் மக்களை பிரிக்கவில்லை. எனக்கு தெரியும். மத்திய ஆசியாவிலிருந்துவந்தவர்களுடைய நேரடி வாரிசுகள் இல்லை இப்போது இங்கு இருக்கிற ஆரியர்கள் என்பதுநன்றாக தெரியும். ஆனால் அவர்கள் பண்பாட்டு தளத்தில், ஆச்சார அனுஷ்டானங்களில் பிரிந்துஇருக்கிறார்கள் என்றுதான் பெரியார் சொல்வார்.. ஆச்சார அனுஷ்டானங்களில் உள்ளபிரிவினைதான் என்னை பிரித்துப் பேசச் சொல் கிறதே தவிர, ரத்தத்தைப் பார்த்து ரத்த சுத்தத்தைப்பார்த்தெல்லாம் நான் இனத்தைப் பிரிக்கவில்லை. அது கூடாது என்று சொல்பவன் நான்என்றுதான் பெரியார் சொல்லியிருக்கிறார். ஆரியர்களுடைய பண்பாடு என்பது மக்களைபிரிப்பதும், படிவாரியாக வைப்பதும், இழிவுப்படுத்துவதுமாக இருக்கிறது. அந்த பண்பாட்டுக்குஎதிரானதே பெரியார் போராட்டம்.

ஜென்ராம்-திராவிடர்களை இனம் என்று சொல்வதற்கு இல்லை. இனம் என்று சொன்னாலே,உலகத்தில் மூன்றே மூன்று இனங்கள்தான். வெள்ளை இனம், கறுப்பர் இனம், மங்கோலியமஞ்சள் இனம் அப்படின்னு மூன்றுதான் இருக்கு. அதனால் அதை தாண்டிய எல்லா இனங்களும்கலப்பினங்களே அப்படிங்கிற வாதம் இப்ப தமிழ்நாட்டில்... அதிகமாக ஒலிக்கஆரம்பித்திருக்கிறது. அதை நீங்கள் எப்படி எதிர்கொள்றீங்க அரசியல் தளத்தில?

கொளத்துர் மணி - திராவிடர் என்பதை இதற்கான அடையாளச் சொல்லாக, குறிச் சொல்லாகபெரியார் குறிப்பிட்டார். பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தபோது, அதில் வெறும் பார்ப்பன எதிர்ப்பு என்பது பதவிகளில், கல்வி நிலையங்களில், அரசியலில்,பார்ப்பனர்கள் இருப்பதை பிடிக்காதவர்கள் மட்டும் செய்ததாகத்தான் அந்த பார்ப்பனர் அல்லாதார்என்ற குறிச்சொல் சொன்னது. பெரியார் சொன்ன திராவிடர் என்ற குறிச் சொல்லில் பண்பாட்டுத்தளங்களிலும் திருமணங்களில், புதிய முறைகளை கொண்டு வர வேண்டும் வாழ்வியலின்எல்லா நிலைகளிலும் நாம் புதிய பண்பாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றநோக்கத்தோடு பெண்ணடிமை ஒழிப்பு ஜாதி ஒழிப்பு எல்லாவற்றையும் உள்ளடக்கிய சொல்லாகதிராவிடர் என்பதை வைத்தார். பார்ப்பனர் அல்லாதார் என்பது வெறும் ஒரு பிரிவை ஒதுக்கிவிட்டுமற்றவர்கள் ஆட்சியில் உட்கார வேண்டும், பதவியில் உட்கார வேண்டும் என்பது போலதொனித்ததால் அதற்கு பதிலாக திராவிடர் என்ற இந்த குறிச்சொல்லை பெரியார் வைத்தார்.

ஜென்ராம் - பிற மொழி பேசறவங்களையும் நீங்க திராவிடர் என்ற பட்டியலுக்குள்ள சேர்த்துட்டுவந்துட்டீங்க.. அவர்கள் தமிழர்கள் என்று அறியப் படுபவர்களை அடிமைப் படுத்துவதற்காகஅல்லது அவர் களையும் மீறி எல்லாப் பதவிகளையும் பிடிப்பதற்கான முயற்சியில் அவங்கஇருக்கிறாங்க.. எனவே இப்ப திராவிடம் என்ற சொல்லையே பயன்படுத்தக் கூடாது என்றமுழக்கத்தை முன் வைத்து அரசியல் இயக்கங்கள் இங்க வந்துட்டு இருக்கிறாங்களே...

கொளத்துர் மணி - அப்படி பேசுவோரில் இரண்டு தரப்பினரைச் சொல்லலாம். ஒரு தரப்பு,நேரடியாக தி.மு.க. அண்ணா தி.மு.க என்று விமர்சிக்க தயங்குபவர்கள் அல்லது அஞ்சுபவர்கள்திராவிட எதிர்ப்பு என்று பேசுகிறார்கள். குறைந்த அளவு திராவிட அரசியல் கட்சிகள், தேர்தல்கட்சிகள் என்றாவது சொல்ல வேண்டும். அதையும் சொல்வதில்லை. பெரியாரை பொருத்த வரைஅரசியல் விடுதலை என்று வந்தபோது தமிழ்நாடு தமிழருக்கே என்றுதான் பேசினார். சமூகவிடுதலை என்று வருகிற போதுதான், ஆரியப் பண்பாடு திராவிடப் பண்பாடு என்று பிரித்துப்பேசினார். இன்னும் சொல்லப் போனால், ஆரிய புராணங்கள் சாஸ்திரங்கள் சொல்வதைப் போலசூத்திரர்களுக்கான மறு பெயராக திராவிடரை எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் எல்லாஇனங்களிலும் இருக்கிறார்கள். கன்னடத்திலும் சூத்திரர்கள் உண்டு. இன்னும் சொல்லப்போனால், ஜெகஜீவன்ராம் ஒரு முறை அமைச்சராக இருந்த போது இங்கு வந்த போதுசொன்னார்,“I am a Dravidian from Bihar” என்றுச் சொன்னார். பார்ப்பனப் பண்பாட்டால்அடிமைப்படுத்தப்பட்ட இழிவுபடுத்தப்பட்ட சமுதாயங் களை எல்லாம் குறிக்கிற சொல்லாகதிராவிடர் என்ற சொல்லை பயன்படுத்தி பெரியார் ஒரு புதிய உள்ளடக்கத்தைக் கொடுத்தார் என்றுசொல்ல வேண்டும்.

ஜென்ராம் - தலித் விடுதலையை தனித்த இயக்கமாக வளராமல் செய்தது திராவிடர் இயக்கம்.தலித் விடுதலை இயக்கத்தில் இருக்கக் கூடிய போர்க் குணத்தை நீர்த்துப் போகச் செய்ததுதிராவிடர் இயக்கம் என்கின்ற விமர்சனத்தை நீங்க எப்படி பார்க்கறீங்க?

கொளத்துர் மணி - எப்படி என்று அவர்கள் தான் விளக்க வேண்டும். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் பெரியாருடைய இயக்கம் 27-இல் தொடங்கியது என்றாலும் கூட... 1950-களில்ஆதிதிராவிடர்கள் என்று சொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுடைய இழி தொழில்களைகைவிட்டு விட வேண்டும் பறையடிக்கச் செல்லக் கூடாது, சாவுச் செய்தி சொல்லக் கூடாது என்றுதிராவிடர் கழகம்தான் அந்தப் பகுதிகளில் எல்லாம் பரப்புரை செய்தது. இன்னும் சொல்லப்போனால் அப்படி ஒரு பரப்புரையின் காரணமாக மாதிரிமங்கலம் என்றப் பகுதியில் திராவிடர்கழகத் தோழர் .. அவர் தாழ்த்தப் பட்டவர் அல்ல.. அந்த போராட்டத்தை முன்னெடுத்ததால் ஆதிக்கசாதியினரால் கொல்லப்பட்டார். அப்படி இழிவான செயல்களை எல்லாம் செய்யக் கூடாது என்றுபேசி வந்த இயக்கம். போராடி வந்த இயக்கம். அதை ஒழித்த இயக்கம்... பெரியார் இயக்கம்.இன்னும் சொல்லப் போனால். தலித் இயக்கங்கள்கூட அப்படிப்பட்ட முயற்சிகளில் எதுவும்ஈடுபடுவதாக நான் அறியவில்லை.

ஜென்ராம் - 1920-இல் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக்கு வந்த போதிலிருந்துதான் தலித்உரிமைகளுக்கானப் போராட்டமும் தொடங்கியது என்று சொல்வதே அதற்கு முன்னர் தலித்விடுதலைக்காகப் போராடிய தலைவர் களை அவமதிப்பதாகும் என்று சொல்லப்படுகிறதே.

கொளத்துர் மணி - அப்படி இல்லை. இந்தப் போராட்டம் தொடர்ச்சியாக.. நீண்ட காலமாகஇருக்கிறது. அதை யாரும் மறுக்க முடியாது. போராட்டம் என்பது திடீரென்று ஒரு புள்ளியில்தொடங்க முடியாது. முன்னோர்கள் எடுத்துச் சென்றதின் தொடர்ச்சியாகத்தான் பார்க்க வேண்டும்.வீச்சாக எடுத்துச் சென்ற காலம் என்று சொல்லலாமே தவிர அப்போதுதான் தொடங்கியது என்றுசொல்வது சரியான செய்தி அல்ல.

ஜென்ராம் - அயோத்திதாசப் பண்டிதர், .இரட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராஜா ஆகிய தலித்தலைவர் களுடைய அயராத உழைப்பை திராவிடர் இயக்கத் தவர்கள் மறைக்கமுயற்சிக்கிறார்கள் அப்படின்னு அவங்க எழுதறாங்க.

கொளத்துர் மணி - அதை நான் தவறு என்று சொல் வேன். இன்னும் சொல்லப் போனால்அயோத்திதாசரைப் பற்றி, இரட்டை மலை சீனிவாசனே, இத்தனைக்கும் இவர் அயோத்திதாசரின்மைத்துனர்தான். அவர் வாழ்க்கைக் குறிப்பில் எங்கும் அயோத்திதாசரைப் பற்றிக் குறிப்பிடவேயில்லை. திரு.வி.க. எழுதியிருக்கிறார் அயோத்திதாசரைப் பற்றி.. பலக் கட்டுரைகளைஎழுதியிருக்கிறார். அவரை ஒரு மருத்துவர் என்பதாகத்தான் எழுதியிருக்கிறாரே தவிரஅவருடைய இயக்க செய்திகளை அவர் பதிவு செய்யவில்லை. திட்டமிட்டு மறைத்ததாக அல்ல.அவர்கள் எந்த பார்வையில் பார்த்தார்களோ அதை மட்டும் பதிவு செய்திருக்கிறார்கள். பெரியார்,அதற்கு பின்னால் அயோத்திதாசருடைய தமிழன் பத்திரிகை மீண்டும் வந்த போது~அயோத்திதாசர் எழுதி வந்த தமிழன் பத்திரிகை மீண்டும் வருகிறது| என்றுவிளம்பரப்படுத்தியிருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் அயோத்திதாசரின் மாணாக்கராகஇருந்த அப்பாதுரையார், பெரியாருடன் நெருக்கமான நட்பு வைத்திருந்து, அவர்கள் இருவரும்இணைந்து பல வேலைகள் செய்திருக்கிறார்கள. அப்படிப்பட்டப் பார்வையோ மறைக்கவேண்டுமென்றோ இல்லை. இன்னும் சொல்லப் போனால் அண்மைக் காலங் களில்தான்அயோத்திதாசரைப் பற்றி தாழ்த்தப்பட்டோர் இயக்கங்களே கூட பேசத் தொடங்கியிருக்கின்றன.அதற்கு முன்பு அவர்கள் கூட பேசவில்லை. காரணம் அயோத்திதாசர் நடத்திய ஏடுகள் வெளியேவரவில்லை. அவருடைய எழுத்துக்கள் மக்களுக்குத் தெரியவில்லை. பெயர் தெரிந்தது.அவருடைய சிந்தனையும் எழுத்தும் மக்களுக்குத் தெரியாமல் இருந்தது. தெரிந்த பின்னால்எல்லோரும் பேசுகிறார்கள், அவ்வளவுதான்.

ஜென்ராம் - கீழ்வெண்மணியில் 42 பேர் உயிரோடு எரிக்கப்பட்ட காலத்திலும் கூட திராவிடர்கழகம் தலித் மக்களுடைய பக்கம் நிற்கவில்லை. ~கம்ய+னிஸ்டுகள் அங்கு கலகம் செய்யமுயற்சிக்கிறார்கள். அவர்கள் தூண்டிய கலகத்தில் தலித் மக்கள் கொல்லப்பட்டார்கள்|அப்படின்னு திராவிடர் கழகம் சொன்னதாக ஒரு பதிவு இருக்கிறது

கொளத்துர் மணி - ஆனால் உண்மை நிலை என்னவென்றால், அதற்கு பின்னால் அந்தகொடுமைக்குக் காரணமாக இருந்த கோபால கிருஷ்ணன்... கோபால கிருஷ்ண நாயுடு வெட்டிக்கொல்லப்பட்டார். அதில் 13 தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஆறு மாதத்தில் கைது செய்யப்பட்டார்கள். அதில் 12 பேர் திராவிடர் கழகத்துக்காரர்கள். ஒருவர் மட்டும்தான் கம்ய+னிஸ்ட். 12பேருக்கும் ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் போய் தண்டனைதள்ளுபடியாகி, வழக்கே தள்ளுபடியாகி விடுதலை ஆனார்கள். அந்த இயக்கத்திற்கு, அந்தகொலைக்கு முன்னின்று செய்தவர் என்பதற்காக கைது செய்யப்பட்ட காலாக்குடி மதி என்கிறதிராவிடர் கழக இளைஞர் அணித் தலைவர், அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்அல்ல. கைது செய்யப் பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தலித் சமுதாயத்தைச்சேராதவர்களாக இருந்தார்கள். திராவிடர் கழகம் வேலை செய்தது. ஆனால் வரலாற்றில் பதிவுசெய்யத் தவறிவிட்டது. இப்போது நாங்கள் அந்த வேலையை களப்பணி செய்து செய்திகள்சேகரித்து விரைவில் அந்த வரலாறுகளை நூலாக வெளிக் கொண்டுவர இருக்கிறோம். கைதுசெய்யப்பட்டவர்கள் பற்றிய விவரங்கள், அவர்களுக்கு என்னவெல்லாம் நடந்தது என்பதைபற்றிய முழு விவரங்களோடு நூலைக் கொண்டு வர இருக்கிறோம்.

ஜென்ராம் - கூலியை உயர்த்துறோம் வாழ்வை வளமாக்குறோம் என்று சொல்லி உங்க உயிரைபலி வாங்கிக்கிட்டு இருக்காங்க. கலகம் செய்ய தூண்டுது கம்ய+னிஸ்டுக் கட்சி. அது போக..இரண்டணா கூலி அதிகமா கொடுத்துட்டா நாலணா பொருளில் விலையை கூட்டிருவான்முதலாளி. அதனால் கூலி உயர்வுப் போராட்டங்கள் ஏற்க கூடியதல்ல. அதை நீங்க புரிஞ்சுநடந்துக்கணும் அப்படின்னு பெரியார் பேசியதாகவும் அவர்கள் பதிவு செய்யறாங்க.

கொளத்துர் மணி - அப்போது அல்ல. அதற்குப் பின்னால்தான் பெரியார் பேசியிருக்கிறார். அந்தநேரத்தில் சொல்ல வில்லை. கலகத்தை உண்டாக்குவதற்காக சில பேர் செய்கிறார்கள் என்றுஎழுதுகிறார். கடைசி வரைக்கும் பெரியார் அதைத்தான் சொன்னார். கூலி உயர்வு என்பது எந்தவிதத்திலும் தொழிலாளர்களுக்கு பயன்படாது என்ற கருத்து பெரியாருக்கு இறுதி வரைஇருந்தது. காரணம்.. அந்த கூலி உயர்வின் போது முதலாளிகள் விலையை உயர்த்திவிடுகிறார்கள். அந்த கூலி உயர்வே பயனற்றுப் போகிறது. நீங்கள் பங்காளிகளாக முயற்சிசெய்யுங்கள் என்று பெரியார் வலியுறுத்தினார். தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துக் கழகங்கள்;தொடங்கிய போதுகூட கலைஞரிடம் வேண்டுகோள் வைத்தார். நீங்கள் தொழிலாளர்களையும்பங்குதாரர்களாக மாற்றுங்கள். அவர்களுக்கு பொறுப்பும் இருக்கும். அவர்களுக்கு உரிமையும்இருக்கும் என்று பேசியவர் பெரியார். கலைஞர், சேரன் போக்குவரத்துக் கழகத்தில் அப்படிசெய்தார்;. அப்படிப்பட்ட பார்வையே பெரியாருக்கு இருந ;தது. அதையேதான் அப்போதும்சொல்லியிருக்கிறார்.

ஜென்ராம் - உழைப்பின் உபரி மதிப்புதான் இலாபம் அப்படிங்கிற கோட்பாட்டை முன்வைத்தவர்களை நீங்க ஏற்கலை?

கொளத்துர் மணி - நிச்சயமாக ஏற்றுக் கொள்கிறோம். அதில் கருத்து மாற்றமில்லை. ஆனால்,அப்படிப்பட்டப் பொருளாதாரச் சட்டங்களில் கட்டுப்பட்டு இருக்கவில்லை. நம்ம இந்தியபொருளாதாரம் இந்திய சமூகம் என்பது அந்த தத்துவத்துக்குள் கட்டுப்பட்ட சமூகமாக இருக்கவில்லை. மற்ற நாடுகளில் தொழிலாளி முதலாளி மட்டும் இருந்தார்கள். பெரியார் கூடமார்க்சினுடைய கம்ய+னிஸ்டுக் கட்சி அறிக்கையை மொழிப் பெயர்த்து வெளியிட்டார்... தனது~குடிஅரசில|;. இந்திய மொழிகளில் தமிழில்தான் முதலில் அது மொழிப் பெயர்க்கப்பட்டது.மொழிப் பெயர்த்தவர் பெரியார். வெளியிட்ட ஏடு குடிஅரசு. அதில் ஒன்றை எழுதுகிறார்.கூடுதலாக இங்கு ஜாதி என்ற ஒன்றும் இருக்கிறது.. என்ற முன்னுரையை எழுதிவிட்டுதான்அதை வெளியிட்டார். எனவே அந்த கூடுதலாக இருக்கிற ஜாதியத்தை அவர்கள் கருத்தில்எடுத்துக் கொள்ளவில்லை என்ற குறை உண்டே தவிர.. நாங்கள் பொதுவுடைமை கருத்துக்களைமுழுமையாக ஏற்றுக் கொண்டவர்கள்தான்.

ஜென்ராம் - பொதுவுடைமை கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கிறீர்கள். பெரியார் முன்வைத்த மாதிரி சாதி இருக்கு என்பதையும் சாதிய முரண்களை தீர்ப்பதற்கான கருத்துக்களைகம்ய+னிஸ்டுகள் முன் வைக்கவில்லை. இணைத்து செயல்படவில்லை என்பது ஒரு புறம்இருப்பது மாதிரி, சமூக சீர்;திருத்த இயக்கங்கள் பொருளாதார பார்வையை தங்களுடன்இணைத்துக் கொள்ளவில்லை என்ற பார்வை சரியானதா?

கொளத்துர் மணி - உண்மைதான். அந்த குற்றச்சாட்டு உண்மைதான். இடைக்காலத்தில் அதுஇல்லாமல் போய் விட்டது. ஆனால் எங்கள் காலத்தில் நாங்கள் பார்ப்பனிய இந்திய தேசியபன்னாட்டுச் சுரண்டலுக்கு எதிரான அமைப்பாக எங்கள் திராவிடர் விடுதலைக் கழகத்தைக்கொண்டுச் செல்கிறோம்

ஜென்ராம் - திராவிடர் விடுதலைக் கழகம் அந்த பார்வையில் இருக்கிறது. சரி. ஆனால் பிறபெரியார் இயக்கங்கள் பழைய பார்வையிலேயே...

கொளத்துர் மணி - இல்லாமல்தான் இருந்தது. பெரியார் காலத்தின் இறுதி காலத்தில் கூடஇதுபற்றி கூடுதலாக பேசப்படவில்லை என்பது உண்மைதான்.

ஜென்ராம் - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணாதி.மு.க. தற்போது விஜயகாந்த் தொடங்கிய கட்சி என எல்லாக் கட்சிகளிலும் திராவிட என்னும்சொல் இருக்கிறது. இந்த கட்சிகளைதான் தமிழ்நாட்டில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட மக்கள்ஆதரிக்கிறார்கள். இந்த தலைவர்களை தான் நம்பறாங்க. இந்த கட்சிகளுக்குதான் வாக்களிக்கிறாங்க. இவர்கள் எல்லோரும் திராவிட என்ற கோட் பாட்டைப் புரிந்து கொண்டுஆதரிக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?

கொளத்துர் மணி - இல்லை என்பதுதான் உண்மை. பொதுவாக திராவிடர் கழகமே கூட ஒரு தனிஅமைப்பாகத் தொடங்கி விடவில்லை. ஏற்கெனவே அதை சுயமரியாதை இயக்கமாக பெரியார்நடத்தினார். காலப்போக்கில் பெரியார் நீதிக்கட்சிக்கும் தலைவராக வேண்டிய தேவை ஏற்பட்டது.ஏற்கெனவே தேர்தலில் ஈடுபட்டு அமைச்சர் பதவிகளில் எல்லாம் இருந்த கட்சிக்கு தலைமைஏற்க வேண்டினார்கள். தலைமையை கொடுத்தார்கள் பெரியாரிடம். அதுவும் நீதிக்கட்சிதோல்வியடைந்த பின்னால் இவரிடம் கொடுத்தார்கள். நீதிக்கட்சி என்கிற அரசியல் கட்சியையும்..சுயமரியாதை இயக்கம் என்கிற பண்பாட்டுப் புரட்சி இயக்கத்தையும் ஒன்றாக இணைத்துதான்அவர் திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டினார். 49-இல் தி.மு.க பிரிந்த போது, பழைய நீதிக்கட்சிபாரம்பரியம்.. தேர்தல் அரசியலில் அக்கறை உள்ளவர்கள், ஈடுபாடு உள்ளவர்கள்... அவர்கள் அந்தஅமைப்பாக போய்விட்டார்கள். சுயமரியாதை இயக்கக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டவர்கள்தொடர்ச்சியாக திராவிடர் கழகமாக இருக்கிறார்கள். அப்ப முற்று முழுதாக அவர்கள் தேர்தல்அரசியல் மீது அக்கறை கொண்டவர்களாகவும் இவர்கள் பண்பாட்டுப் புரட்சியில் அக்கறைகொண்டவர்களாகவும் இரண்டு இயக்கங்களும் தனித்தனியாகதான் இயங்குகின்றன. பெயரில்திராவிட என்று இருக்கிறதே தவிர அவர்களுக்கு பெரியாருடைய தத்துவங்களை பண்பாட்டுப்புரட்சி செயல்பாடுகளை எதையும் அவர்கள் ஏற்றுக் கொண்டவர்களாக இல்லை. அண்ணாகாலத்தில் தேர்தலில் ஈடுபடுகிற வரைக்கும் பேசினார்கள். அதற்கு அப்புறம் பேசவில்லை.அவர்களுக்கு தேர்தல் வெற்றி முக்கியமாக இருந்தது. கொள்கை முக்கியமாக இருக்கவில்லை.பெரியாருடைய பண்பாட்டுப் புரட்சிக் கொள்கை முக்கியமாக இருக்கவில்லை.

ஜென்ராம் - பெரியாருடைய பிற கொள்கைகளை ஏற்றுக் கொள்கிறார்களா?

கொளத்துர் மணி - அதாவது... இவர்கள் தமிழர் முன்னேற்றம் என்பது, பார்ப்பனர் அல்லாதமக்களின் முன்னேற்றம் என்பதில், இட ஒதுக்கீட்டில் அக்கறை கொண்டு செயல்பட்டார்கள்.அடித்தட்டு மக்களுக்கான நல உதவித் திட்டங்களை கொண்டு வந்தார்கள். அதெல்லாம்செய்தார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் பண்பாட்டுப் புரட்சியில் அவர்கள்ஈடுபடவில்லை.

ஜென்ராம் - 1967-இல் இருந்து இன்று வரை கிட்டத்தட்ட திராவிட இயக்க வழி வந்தவர்களின்ஆட்சியில் 11 சட்டமன்றங்கள் இருந்திருக்கிறது. அந்த 11 சட்டமன்றங்களும் நினைத்தால்பண்பாட்டுத் துறையிலும் பல மாற்றங்களை கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் அவர்கள்செய்யவில்லை அப்படின்னு நீங்க சொல்வீங்களா?

கொளத்துர் மணி - சொல்லலாம். அதில் போதிய அக்கறை செலுத்தவில்லை என்பதுஉண்மைதான். அண்ணா காலத்தில் சில சட்டங்களை.. சுயமரியாதை திருமணம் என்பதுசெல்லாமல் இருந்த திருமணத்தை சட்டப்ப+ர்வ திருமணமாக்கினார். பெரியார் சொன்னார்,தமிழர்கள் மட்டும் தனியாக வசிக்கிற பகுதியை பிரித்த பின்னாலும் சென்னை ராஜ்ஜியம் என்றுஏன் பெயர் இருக்க வேண்டும்? அதை தமிழ்நாடு என்று ஏன் ஆக்கக் கூடாது என்று பெரியார்குரலெழுப்பி வந்தார். அதை ஏற்றுக் கொண்டு அண்ணா தமிழ்நாடு என்று மாற்றினார்.இப்படிப்பட்ட மாற்றங்கள் அண்ணா காலத்தில் செய்யப் பட்டது. அதற்கு பின்னால் வந்தவர்கள்எல்லாம் இந்த ஒடுக்கப்பட்ட மக்களின் நலத்திட்டங்களில் அக்கறை கொண்டார்களே தவிரபண்பாட்டுப் புரட்சியில் ஈடுபட வில்லை. கலைஞருடைய வாரிசுரிமை சட்டத்தில் பெண்களுக்குசொத்துரிமை வழங்கும் சட்டத்தைத் தவிர வேறு ஏதும் குறிப்பிடத்தக்கதாய் இல்லைஎன்பதுதான் என்னுடைய கருத்து.

ஜென்ராம் - தமிழ்நாட்டு மக்கள் இந்த அரசியல் கட்சிகளை ஆதரிக்கிறாங்க. வாக்களிக்கிறாங்க.அந்த கட்சிகளுடைய தலைமைகள் கூட பெரியார் கொள்கையை பெரிதாக பண்பாட்டுத் தளத்தில்பின்பற்றுவதாகத் தெரியவில்லை. இன்றைய சமூகச் சூழலில் பெரியாருடைய தேவை,பெரியாருடைய கொள்கைகளுடைய தேவை இன்னும் தீவிரமாக தேவை அப்படின்னு நீங்கநினைக்கிறீங்க?

கொளத்துர் மணி - நிச்சயமா அதிகமாக உழைக்க வேண்டும். வேலை செய்தாக வேண்டும்.அண்மைக் கால நிகழ்வுகள் இன்னும் அதை உறுதிப்பட செய்கிறது.

ஜென்ராம்-அந்த அண்மைக்கால நிகழ்வுகளுக்குதான் போகத் தூண்டுது. தமிழ்நாட்டில் இப்படிஒரு நிலைமை வரும்னு நீங்க ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னால் நினைச்சுப் பார்த்திருப்பீங்களா?

கொளத்துர் மணி - நினைத்துப்பார்க்கவில்லை யாரும். இவ்வளவு மோசமான ஒரு சூழல்ஏற்படும். இப்படிப்பட்ட தாக்குதல் நடைபெறும் என்று நாங்கள் கருதி பார்க்கவில்லை. வழக்கமாகஒரு சமுதாயம், எந்த இயக்கமும் இல்லை என்றாலும் அது முன்னேற்றப் பாதையில்தான்முன்னோக்கிதான் சென்று கொண் டிருக்கும். எங்களைப் போன்ற சமுதாய இயக்கங்கள் அந்தவேகத்தை விரைவு படுத்துவதற்குதான் ஆகுமே தவிர இயல்பாக எல்லா சமுதாயத்திலும்முற்போக்கு திசையில் மாற்றங்கள் நடக்க வேண்டியதுதான். ஆனால் இந்த கட்சிகள், சில ஜாதிக்கட்சிகள், சில அமைப்புகள் இப்போது சமுதாயத்தின் காலை பிடித்து பின்னோக்கி இழுக்கிறமுயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இன்னும் நாம் வேகமாக அழுத்தமாக பணியாற்ற வேண்டும்என்பதைதான் அது நமக்குச் சொல்கிறது.

ஜென்ராம் - அவர்கள் தமிழ்த் தேசியம் பேசறாங்க. திராவிடத்திற்கு எதிரான பிரச்சாரத்தைமேற்கொள்றாங்க. அவங்க பேசற தமிழ்த் தேசியத்திற்கும் நீங்க பேசற தமிழ்த் தேசியத்திற்கும்இடையில என்ன வேறுபாடு?

கொளத்துர் மணி - பெரியாரை பொருத்த வரை தேசியம் என்ற சொல்லை தேசிய இனங்களுக்குசுயநிர்ணய உரிமை என்ற அர்த்தத்தில் சில இடங்களில் பயன்படுத்தி யிருந்தாலும் கூட அவரைப்பொருத்தவரை அவர் பேசியது தனித்தமிழ்நாடுதான். ஜாதி ஒழிந்த சமுதாயம் அமைவதற்குஒட்டுமொத்த இந்தியம் என்பது தடையாக இருக்கும் என்று அவர் கருதினார். இந்தியா என்றதுணை கண்டத்தில் இருந்து தமிழ்நாடு பிரிந்து வந்துவிட வேண்டும். அதுதான் ஒரு சமத்துவசமுதாயத்தை படைப்பதற்கு வழி வகுக்கும் என்று கருதினார். அதற்காக அவர் பேசினார். எழுதிவைக்கப்பட்டத் தத்துவங்கள் சிலவற்றைக் கொண்டு தேசிய இனங்களைப் பற்றி தத்துவம்இருக்கிறது. அதன்படி நமக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும். என்று பேசுபவர்கள் இப்போதுஅதையே பேசுகிறார்கள். அவர்களிடம் எங்களுக்கும் கேள்வி இருக்கிறது. நாங்கள் கூட பேசுவதுஉண்டு. இந்தியா விடுதலை பெற்றால் எல்லாம் தீர்ந்து விடும் என்று ஒரு காலத்தில்சொன்னார்கள். அன்னியனை விரட்டிவிட்டால் போதும் என்று சொன்னார்கள். இப்போதும்சொல்கிறார்கள். இந்தியனை விரட்டிவிட்டால் போதும். தமிழனாகிவிட்டால் வந்துவிடும் என்று.சமுதாயத்தில் மாற்றத்தைப் பற்றிய அக்கறை இல்லாத விடுதலை என்பதே தேவையற்றதுஎன்றே நாங்கள் கருதுகிறோம். சமூக விடுதலையோடு கூடிய தேசிய இன விடுதலைதான்சரியானதே தவிர வெறும் தேசிய இனம் மட்டும் விடுதலைப் பெற்றால் அடிமைகள் தொடர்ந்துஅடிமை களாகத்தான் இருப்பார்கள். நாங்கள் கூட அண்மையில் ஒரு கூட்டத்தில் பேசுகிற போதுஒரு ஜாதியவாதி கேட்டார்.... தேனீர்க் கடைகளில் இரட்டைக் குவளை பற்றி பரப்புரை செய்கிறபோது நீங்கள் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை பற்றிப் பேசுங்கள், கடவுள் இல்லைஎன்று பேசுங்கள், இட ஒதுக்கீடை பற்றி பேசுங்கள்.. எப்போது பெரியார் இரட்டைக் குவளைக்குஎதிராக பேசினார் என்று கேட்டார். காவிரி நீர் உரிமைக்கு பேசுங்கள் என்றார். அப்போது நாங்கள்சொன்னோம். காவிரி நீர் உரிமைக்கு போராடத் தயார். கர்நாடகக்காரன் காவிரி நீர் தரவில்லைஎன்பதற்குப் போராடுகிறோம். நீங்கள் உங்கள் கிராமத்தில் உள்ள தாழ்த்தப்பட்டவனுக்கு தண்ணீர்தர மறுக்கிறீர்கள். நான் பேசிய அந்த கிராமத்தில் அந்த பஞ்சாயத் தினுடைய தலைவராகஇருந்தவர் ஒரு தாழ்த்தப்பட்டவர். அவர் தன்னுடைய பகுதிக்கு அரசு செலவில் அமைத்திருந்தகுடிநீர் குழாயை உடைத்துவிட்டனர் ஆதிக்க சாதியினர். உள்ளுரில் இருக்கிற தண்ணீரைஉள்ளுரில் உள்ள இன்னொரு தமிழனுக்கு கொடுக்க மறுக்கிற உங்களுக்கு கர்நாடகத்துக்காரன்தண்ணீர் தரவில்லை என்பதற்காக எதிர்த்துப் போராடுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறதுஎன்றுதான் பேசினோம். நாங்கள் பேசுவது... மற்றவர்களிடமிருந்து வெறும் விடுதலை பெறுவதுஅல்ல. ஒட்டுமொத்த மக்களும் விடுதலை பெற்ற விடுதலையை தான் பெரியார் தனித்தமிழ்நாடுஎன்று குறிப்பிட்டார். எங்களுக்கும் தமிழ்த் தேசியவாதிகள் பேசும் தமிழ்த் தேசியத்துக்கும்வேறுபாடு இருக்கிறது.

ஜென்ராம் - கடவுள் நம்பிக்கை தொடர்பாக இருக்கக் கூடிய தமிழ்ச் சூழலை இன்று எப்படி நீங்கபார்க்கறீங்க.

கொளத்துர் மணி - கடவுள் நம்பிக்கை என்பது இருக்கிறது. ஆனால் அதனுடைய தன்மைகுறைந்து விட்டது. Quality குறைந்துவிட்டது என்பதுதான். Qualitative change இருக்கிறது. அந்தகாலத்தில் கடவுளை நம்பியதைப் போல இப்போது நம்பத்தயாராக இல்லை. அய்யப்பன்கோயிலுக்கு போகிறார்கள். 48 நாள் விரதத்தை, முப்பதாக குறைத்து பதினைந்தாக குறைத்துஇரண்டு நாள் விரதம் என்று போகத் தொடங்கி யிருக்கிறார்கள். ஆக அந்த அளவில்குறைந்திருக்கிறது என்பதை நாங்கள் பார்க்கிறோம். நம்பிக்கை இருக்கலாம். தன்மைகுறைந்திருக்கிறது.

ஜென்ராம்- தமிழ்த் தேசியம், தமிழ், தமிழர் விடுதலை இதைப் பற்றி பேசக்கூடியவர்கள்மத்தியிலே கூட கடவுள் நம்பிக்கை இருக்கிறதையும் பார்க்க முடிகிறது.

கொளத்துர் மணி - இருக்கலாம். இருக்கும். இருக்கிறது.

ஜென்ராம் - நீங்கள் ஒத்த கருத்துள்ளோரோடு ஒரே அணியாக செயல்படும் போது அந்த தளத்தில்செயல்படுவதற்கான சாத்தியம் எவ்வளவு தூரம்? இல்லை வேறுபடும் புள்ளிகளை பற்றிபேசுவதில்லையா?

கொளத்துர் மணி - ஒன்றுபடும் புள்ளிகளை இணைத்துதான் ஒரு பொது செயல்திட்டத்தில்செயல்பட முடியும். இப்போது முல்லைப் பெரியாறுக்காக போராடிய போது அதை மட்டும்முன்னிறுத்திதான், அந்த கருத்துள்ளவர்கள் எல்லாம் இணைந்துக் கொண்டோம். காவிரிஉரிமைன்னா அந்த கருத்து உள்ளவர்கள்.. ஈழப் பிரச்னைனா அந்த கருத்தில் ஒற்றுமைஉள்ளவர்கள் எல்லாம் கலந்து பேசுகிறோம். அப்போது நாங்கள் கடவுள் நம்பிக்கையை ஒருதடையாக வைப்பதில்லை. அப்ப எல்லோரும்.. இந்த கருத்தில் ஒற்றுமை உள்ளவர்கள்வாருங்கள் போராடலாம். அடுத்தடுத்து செயல்படும்போது ஒற்றுமை இல்லை யென்றால்..அவர்களை தவிர்த்துவிட்டு நாங்கள் வேறணி அமைத்துக் கொள்கிறோம்.

ஜென்ராம்- பெண்ணடிமைத்தனத்தை போக்கு வதற்காக பெண் விடுதலை அல்லது பெண்ணைசமமாக சமூகத்தில் நடத்துவது போன்ற விஷயங்களில் இன்றைய தமிழ்ச் சூழல் எவ்வளவு தூரம்முன்னேறி இருக்குன்னு நீங்க நினைக்கிறீங்க?

கொளத்துர் மணி - படித்த பெண்கள் மத்தியில் அந்த கருத்து வளர்ந்திருக்கிறது என்பதுஉண்மைதான். இப்போது சமூக இடைவெளி இருக்கிறது. முதல் தலைமுறைக்கும் இந்ததலைமுறைக்கும் இடையில் சில உரசல்களும் நடந்து கொண்டிருக்கிறது என்பதே கூட இவர்கள்உரிமையின் பால் சென்று கொண்டிருக் கிறார்கள். உரிமையை அவர்கள் கைப்பற்றுவதைவிடாமல் தடுக்க பெற்றோர்கள் மூத்தவர்கள் எல்லாம் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுபுரிகிறது. இப்போதைய பெண்களுக்கு சுதந்திர உணர்வு வளர்ந்து கொண்டிருக்கிறது. அதைப்பெற்றுக் கொண்டிருக் கிறார்கள் என்பது என்னுடைய கருத்து.

ஜென்ராம் - தமிழ்த் தேசியம் திராவிடர் வேறுபாடு பற்றி பேசிக் கொண்டிருந்த இயக்கங்கள்நேரடியாகவே பெரியார் என்ற மனிதன், பெரியாரியல் என்ற கருத்தியல் தமிழர்களிடம்ஏற்படுத்திய சிந்தனை தாக்கம்தான் தமிழர்களின் வீழ்ச்சிக்கே காரணம் அப்படின்னும் பேசத்தொடங்கறாங்க

கொளத்துர் மணி - பேசலாம். அதை விளக்க வேண்டும். எது எது தமிழர் வீழ்ச்சிக்குக் காரணமாகஇருந்தது என்று விளக்க வேண்டும். நேரடியாக பெரியாரை பிடிக்காதவர்கள், பெரியாரை திட்டவிரும்புபவர்கள்தான் திராவிடம் என்று ஒட்டுமொத்தமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.பெரும்பாலோர் அப்படிதான். ஒரு சிலரை தவிர. பெரியாரை நேரடியாக திட்ட முடியாது திராவிடர்இயக்கம் என்று சொல்லிவிட்டுப் போகலாம் என்று பேசுபவர்கள் இருக்கிறார்கள். சில பேர் கடவுள்நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கூட பேசுவதில்லை. வேறு சிலர் அதை பேசத்தொடங்கி யிருக்கிறார்கள். அவர்கள் ஒரு வேளை எல்லோரும் பேசுவதை விட நாம் மாற்றிபேசினால் பிரபலமாவோம் என்று கருதுகிறார்களோ என்னவோ தெரியாது. சில பேர் தமிழன்தான்இந்த நாட்டை ஆள வேண்டும் என்று பேசுகிறார்கள். நான் கூட கேட்க விரும்புவது உண்டு.சிதம்பரம் நல்ல தமிழர்தான். நாராயணசாமி நல்ல தமிழர் தான். அவர்கள் தலைமையை ஏற்றுக்கொள்வார்களா என்று எனக்குத் தெரியாது. தமிழர்களாக இருந்தால் மட்டும் போதும் என்றுபேசுபவர்களுக்கு நான் வைக்கிற கேள்வி. கொள்கை அளவில் தமிழர்களுக்கு எதிரான, தமிழர்வளர்ச்சிக்கு எதிரான தமிழர்களுடைய தன்மானத்துக்கு எதிரான எந்த செயல்பாட்டைசெய்தாலும் அவனை எதிரி என்று சொல்ல வேண்டும். அவன் தமிழனாகக்கூட இருக்கலாம்.எங்களைப் பொருத்தவரை நாங்கள் வீட்டு மொழியை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.சமுதாயத்தில் எப்படி இருக்கிறான். அவன் கல்விக்கோ பிறரோடு தொடர்பு கொள்வதற்கோ என்னமொழியை பயன்படுத்துகிறானோ அவனாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். நாங்கள் வேறுபடுத்திப்பார்ப்பதில்லை. ஆனால் இவர்கள் அதை கூட வீட்டுக்குள் நுழைந்து அங்கு பேசுவதை பார்த்துமுடிவெடுக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். தமிழர் என்று பிறப்பை மட்டும் வைத்துபேசுவதை எப்போதும் திராவிடர் இயக்கம், பெரியார் இயக்கம் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள்எடுத்துச் செல்கிற சிந்தனைதான் முக்கியம் என்று நாங்கள் பார்க்கிறோம்.

ஜென்ராம் - 400-500 வருடங்களாச்சு. இந்த பூமியில் இருக்கீங்க. இந்த காற்றை சுவாசிக்கிறீங்க.இன்னும் உங்களுடைய வீட்டில பேசக் கூடிய தாய்மொழியை மாற்றாமல் இருக்கிறீங்க.தமிழர்களுடன் நீங்க கரையாமல் இருக்கிறீங்க. அப்பறம் உங்களுக்கு எப்படி ஆளும் உரிமைஅப்படிங்கிற வாதத்தை அவங்க முன் வைக்கிறாங்க

கொளத்துர் மணி - எல்லோரும் தமிழ் பேசினால்கூட சென்னைத் தமிழ் பேசுபவர்களைஒத்துக்கொள்ள மாட் டோம் என்று கூட அவர்கள் சொல்லத் தொடங்குவார்கள். இவர்களேகர்நாடகத்தில் வாழ்கிற தமிழர்களுக்கு உரிமை இல்லை என்று பேசுகிறார்கள். இதேகுற்றச்சாட்டை தமிழர்கள் மீது கன்னடர்களும் வைக்கிறார்கள். கர்நாடகத்தில் வாழ்ந்தால் கூடஎங்கள் நாட்டில் வாழ்ந்து கொண்டு இன்னும் நீங்கள் வீட்டில் தமிழ்தான் பேசுகிறீர்கள். தமிழ்ப்பள்ளி வேண்டும் என்று கேட்கிறீர்கள். தமிழ் வழியில் பயில வேண்டும் என்று கேட்கிறீர்கள்.நீங்கள் எல்லாம் இந்த நாட்டுக்கு துரோகி என்பதாக அந்த நாட்டுக்காரர்கள் பேசுகிறார்கள். அதைஎப்படி பார்ப்பது என்பதைதான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒற்றை அளவுகோல்வேண்டும். எதை சொன்னாலும் சரி. ஒற்றை அளவு கோலை வையுங்கள். எல்லோரும் மாநிலமொழியில் கல்வி கற்க வேண்டும் என்று வையுங்கள். எல்லோரும் தாய் மொழியில் கல்வி கற்கவேண்டும் என்று வையுங்கள். நாங்கள் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்துபவர்கள். மாநிலமொழி என்பதை விட தாய்மொழிக் கல்வியை வலியுறுத்துகிறோம். அரசு பதவிகளுக்குப்போவதற்கு மாநில மொழியில் தேர்ச்சி இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்..தொடக்கக் கல்வியை தாய்மொழியில்தான் கொடுக்க வேண்டும் என்பது எங்களுடைய கருத்து.அது கர்நாடகத்தில் இருக்கிற தமிழனுக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் இருக்கிறதெலுங்கனுக்கும் பொருந்தும்.

ஜென்ராம் - வேற்று மொழி பேசுபவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கான போட்டியிலிருந்துவிலகிக்குங்க. எங்களுக்குள்ள நல்ல தமிழனை தேர்ந்தெடுக்கிறது. மோசமான தமிழனைஒதுக்கிறது அப்படிங்கிறதை நாங்க பார்த்துக்கிறோம், என்று....

கொளத்துர் மணி - அப்படி சொல்பவர்களிடம் நான் வைக்கிற கேள்வி ஒன்று இருக்கிறது.அவர்கள் தமிழர்களாக பிரிந்த பின்னால் அவர்களில் நல்லவர்கள் கெட்டவர்களை பார்த்துநாங்கள் வெற்றி பெறச் செய்ய முடியும் என்று சொல்பவர்கள் ஏன் பிறமொழியாளர்களை ஒதுக்கிவிடுங்கள்.. அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என்று பேசி மக்களை இணங்கச் செய்யலாமே.பிரித்த பின்னால் பேசுபவர்கள் இப்போதே பேசத் தொடங்கலாம். எங்களுக்கும் உங்கள் வாக்குவேண்டியதில்லை. தெலுங்கன் வாக்கு எனக்கு வேண்டாம். கன்னடன் வாக்கு எனக்கு வேண்டாம்.எனக்கு தமிழன் வாக்கு மட்டும் போதும். எனக்கு தமிழர்கள் வாக்களித்தால் போதும். என்றுசொல்லட்டுமே! ஒன்று அப்படிச் சொல்ல வேண்டும். அல்லது இதில் இருக்கிற தமிழ்மொழிபேசாதவனை தேர்ந்தெடுக்காதீர்கள் என்று மக்களிடம் போய் அவர்களிடம் பரப்புரை செய்துமக்களையே அப்படி தேர்ந்தெடுக்க செய்து விடலாம். ஜனநாயக நாட்டில் அவர்களுக்கு உரிமைஇருக்கிறது. தமிழர்களாக பிரிந்த பின்னால் பேசி அவர்களை வெற்றி பெறச் செய்யக்கூடியவர்கள் ஏன் இப்போதே பேசி செய்யலாமே

ஜென்ராம் - 2016 சட்டமன்றத் தேர்தல் கிட்டத்தட்ட அந்த நிலையை நோக்கி போகிற மாதிரிதான்இப்ப இருக்கிற சில அரசியல் கட்சிகள் பேசிட்டு இருக்கிறத பார்க்கும்போது ஒரு தோற்றம் வருது.அவங்க இப்பவே அதேபோல்தான் பேசறாங்க. உதாரணமா நாம் தமிழர் கட்சி 2016-ல தேர்தலைசந்திக்கிறதுன்னு முடிவெடுத் திருக்காங்க. பாட்டாளி மக்கள் கட்சி திராவிடக் கட்சிகளோடும்தேசியக் கட்சிகளோடும் கூட்டணி இல்லை அப்படின்னு சொல்லியிருக்காங்க. அவங்க இரண்டுபேருடைய நிலைப்பாடும் கிட்டத்தட்ட ஒரே நிலைப்பாடாக இருக்கிறது.

கொளத்துர் மணி - ஒரே நிலைப்பாடாக இருக்கிறது. ஆனால் ஒருவர் இது திரிந்த பால் என்கிறார்.மற்றொருவர், நான் கறந்த பால் அவர் திரிந்த பால் என்கிறார். எனவே அவரோடும் அவர் சேரப்போவதில்லை. தனித்தனியாக இரண்டு பேரும் போட்டியிடலாம்.

ஜென்ராம் - தனித்தனியாக போட்டியிடலாம். ஆனால் இந்த கருத்தை வந்து இரண்டு பேரும்..

கொளத்துர் மணி - முற்று முழுதாக தமிழர்களாக மட்டுமே இருக்கிற தாழ்த்தப்பட்ட மக்களைபாட்டாளி மக்கள் கட்சி என்னவென்று சொல்கிறது என்பதை இப்போது நாம் தெரிந்து கொண்டால்நன்றாக இருக்கும். ஏன்னா அவர்கள் தமிழர்கள்தான். அவர்கள் வேற்றுமொழி பேசு பவர்கள்அல்ல. ஏன்னா அருந்ததியர்களை கூட விலக்கி விடலாம். மற்ற இரண்டு தாழ்த்தப்பட்ட பெருங்குழுக்களும் தமிழ் மொழி பேசுபவர்கள். தாய் மொழியாக தமிழைக் கொண்டவர்கள் தான்.அவர்களோடு இணங்கிப் போவார்களா, அவர்களோடு இணைந்து கொள்வார்களா என்பதை அந்தத்தலைவர்கள்தான் வெளிப்படுத்த வேண்டும்.

ஜென்ராம் - தமிழர்கள் ஆள வேண்டும் என்கிறார்கள் அவர்கள். திராவிடர் என்று நீங்கள்பேசுகிறீர்கள். அது என்ன ஒரு அடையாளம். மனிதனுக்கு இருக்கக் கூடிய ஒருஅடையாளம்தானா! ஒற்றை அடையாளத்தோட ஒருவனுடைய வாழ்க்கை முடிந்து போகுதாஎன்ன?

கொளத்துர் மணி - முடியவில்லை. நான் வழக்கமாக சொல்வது உண்டு. ஒவ்வொருமனிதனுக்கும் பல அடையாளங்கள் உண்டு. எனக்கு வீட்டில் என் மகளிடம் அப்பா என்றஅடையாளம் உண்டு. என் அம்மாவிடம் மகன் என்ற அடையாளம் உண்டு. என் மனைவிக்கு நான்கணவன் என்ற அடையாளம் உண்டு. வெளியே நான் வருகிறபோது என்னுடைய தொழிலுக்கு அடையாளம் உண்டு. அப்படிதான் சமூக விடுதலைப் போராட்டத்தில் திராவிடர் என்றஅடையாளத்தோடு ஆரிய பண்பாட்டுக்கு எதிராகப் போராடுவோம். அரசியல் விடுதலைக்குதமிழன் என்ற அடையாளத்தோடு தமிழ்நாட்டு விடுதலைக்குப் போராடுவோம். ஏன் ஒற்றைஅடையாளத்துக்குள் சுருக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களுடைய கேள்வி. அப்படிபெரியார் இதையெல்லாம் இணைத்தச் சொல்லாகப் பார்த்திருந்தால்.. ஆந்திரா விலகிய போதுமகிழ்ச்சியை வெளியிட்டார். ஆந்திரா விலகியது மகிழ்ச்சி என்று சொன்னார். கன்னடமும்கேரளாவும் பிரிந்த போது இவர்களுக்கு ஆரிய எதிர்ப்புணர்வும் இல்லை. இந்திய எதிர்ப்புணர்வும்இல்லை, இவர்கள் போய் தொலைந்தால் நல்லது என்று கருதினேன். நல்ல வாய்ப்பாகப் போய்விட்டார்கள் என்று மகிழ்ச்சிதான் தெரிவித்தார். உண்மையிலேயே இவர்களை எல்லாம்இணைத்தச் சொல்லாக திராவிடரை வைத்திருந்தால் அவர்கள் எல்லாம் பிரிந்த போது அவர்கள்எல்லாம் போகக் கூடாது இணைந்திருக்க வேண்டும் என்றல்லவா பெரியார் சொல்லியிருப்பார்.அதை கூட புரிந்து கொள்ள முடியாதவர்களாகத்தான் இதைச் சொல்லுகிற தலைவர்கள்இருக்கிறார்கள்.

ஜென்ராம் - பிறப்பின் அடிப்படையில் ஒருவரை அடையாளப்படுத்திச் செய்யக் கூடிய அரசியல்எவ்வளவு தூரம் சரியானது என்பதுதான் கேள்வி. ஏன்னா ஒரு மனிதனுக்கு பிறப்புதற்செயலானது. நாம் விரும்பி ஏற்றுக் கொள்வது அல்ல. அப்படி இருக்கும் போது அரசியல்தளத்தில் அவர்களை ஒதுக்கி வைத்து விட்டு அரசியல் செய்வது என்பது எவ்வளவு தூரம்சரியானது.

கொளத்துர் மணி - சரியானது அல்ல என்றுதான் நான் சொல்கிறேன். யாரையும் பிறப்பின்அடிப்படையில் ஒதுக்க வேண்டியதில்லை என்பதுதான் எங்களுடைய கருத்து.

ஜென்ராம் - பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனர்களை திராவிடர் கழகத்திற்குள் சேர்க்கிறதுஇல்லை?

கொளத்துர் மணி - உறுப்பினர்களாக சேர்ப்பதில்லை. அவர்கள் இணைந்து போராடுவதில்தடையில்லை.

ஜென்ராம் - இணைந்து போராடுவதில் தடையில்லை. ஆனால் உறுப்பினர்களாக சேர்ப்பதில்லை?

கொளத்துர் மணி - ஆம். பெரியாரோடு சேர்ந்து தி.ராஜ கோபாலாச்சாரியார் என்பவர் போராடிஇருக்கிறார். அவரோடு சேர்ந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இணைந்து போராடி இருக்கிறார்.உறுப்பினராக சேர்ப்ப தில்லை என்று சொல்வதற்கு காரணம் ஏற்கெனவே புத்த மதத்தில் நேர்ந்ததுஎல்லாம் எச்சரிக்கைக் கொடுக்கிறது. புத்த மதத்தில் புத்தருடைய தத்துவங்கள் தாழ்ந்த வழியாகசொல்லப்பட்டது. ஹீனயானமாக சொல்லப்பட்டது. பார்ப்பனர்கள் சேர்ந்த பின்னால் அவர்கள்கொண்டு வந்த புத்தரை கடவுளாக்கிய வழிதான் மஹாயானமாக குறிப்பிடப்பட்டது. புத்தருடையநேரடி கொள்கைகள் ஹீனயானமாக - அதாவது சின்ன வழியாகவும் புத்தருக்கு மாறானகொள்கைகள் பெரிய வழியாகவும் மஹாயானமாகவும மாற்றிவிட்டார்கள். ஒரு இயக்கத்தில்நுழைந்து செய்கிற சிதைவுகளை பார்த்த எச்சரிக்கை உணர்வு, அவர்களை இணைக்க வேண்டாம்.அமைப்புக்குள் உறுப்பினராக கொண்டு வர வேண்டாம். போராடுவதில் நமக்கு ஒன்றும்...தடையில்லை. தாராளமாகப் போராடட்டும். இன்னும் சொல்லப் போனால் நான் அடிக்கடிசொல்வதுண்டு. ஏன் நாங்கள் கட்டி வளர்த்த இயக்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்றுதுடிக்கிறீர்கள். பார்ப்பனியம் தவறானது பார்ப்பனர்கள் தவறானவர்கள் என்று கருதினால் அந்தஇளைஞர்களே ஒன்றாக சேர்ந்து அவர்கள் இனத்திடம் கேள்வி கேட்கட்டும்;. ஏன் சமுதாயத்தைபிளவுப்படுத்துகிறீர்கள்? ஏன் அடிமைப்படுத்துகிறீர்கள் என்று கேளுங்கள். கைவிடச் சொல்லிப்போராடுங்கள் என்று நாங்கள் கேட்பதுண்டு.

ஜென்ராம் - தனியாக அங்க ஒரு அமைப்பைக் கட்டி அவங்க ஏன் போராடணும்? நீங்க ஒருஅமைப்புக் குள்ள சேர்த்துட்டு, அல்லது உங்களுடைய வழி காட்டுதல்ல அந்த அமைப்புக்குள்ளஅவர்கள் செய்ய வேண்டிய வேலைகளுக்கு அவர்களை ழுpநசயவந பண்ணலாம்ல. அவர்களைஅமைப்புக்குள்ளேயே அரசியல் தளத்திலிருந்தே நீங்கள் விலக்கி வைக்க வேண்டிய அவசியம்என்ன?

கொளத்துர் மணி - அரசியல் தளத்திலிருந்து விலக்க வில்லை. உறுப்பினராகசேர்த்துக்கொள்வதில்லை. படையில் சேர்த்துக் கொள்வதில்லை. எதிரியோடு போராடினால்மகிழ்ச்சி. வரட்டும் என்று சொல்கிறோம்.

ஜென்ராம் - நீங்கள் இப்ப உதாரணத்துக்கு சொன்னீர்கள் எடுத்துக்காட்டாகச் சொன்னீர்கள் புத்தமதத்திற்கு போய் அவர்கள் செய்த வேலைன்னு... அப்ப அவர்களுடைய பிறப்புதான் அந்த குணநலன்களை தீர்மானிக்குதுன்னு நீங்க சொல்றீங்களா?

கொளத்துர் மணி - இல்லை. தனக்கு.. இந்த சமுதாய அமைப்பைக் கட்டிக்காப்பதால்மேலாண்மை கிடைக்கிறது... பல அனுகூலங்கள் கிடைக்கிறது என்று கருதுகிற போது அதைகைவிடுவதற்கு எளிதில் யாருக்கும் மனம் வராது என்ற சிந்தனைதான் இதற்கு காரணம்.

ஜென்ராம் - அதிகாரத்தை சுவைத்துக் கொண் டிருப்பவர்கள்..

கொளத்துர் மணி - அதை விடுவதற்கு எளிதில் மனம் வராது என்பதுதான் அதற்கு பின்னால்இருக்கிற கருத்து.

ஜென்ராம் - ஆனால் சரியான காரணத்திற்காக சரியான நோக்கத்திற்காக சமூகமுன்னேற்றத்திற்காக தங்களுடைய வர்க்க நலனை அல்லது தங்களுடைய சாதி நலனைபுறந்தள்ளிட்டு போராட்டக் களத்தில் இணைந்தவர்களும் இருக்கிறார்கள் அப்படிங்கிறத நீங்கஏத்துக்கிறீங்களா?

கொளத்துர் மணி - இருக்கிறாங்க.. இருக்கிறார்கள்.

ஜென்ராம்- அவர்களை நீங்கள் இணைத்துக் கொள்ள லாமே. அந்த புத்த மத எடுத்துக்காட்டுதான்நீங்க.

கொளத்துர் மணி; - அதைத்தான் நான் சொல்கிறேன். ஏன் தன்னுடைய இனத்தை எதிர்த்துஅவர்களே போராடக் கூடாது? அவர்களுக்கு இப்படி போராட எங்களைவிட அதிக உரிமை உண்டு.எங்களைக்கூட எதிரியாக பார்க்கக் கூடும். ஆனால் தங்கள் சமுதாயத்தில் பிறந்த இளைஞர்களேதங்களுக்கு எதிராகப் போராடுகிறார்கள் என்றால் மாறக் கூட வாய்ப்பு இருக்கிறது. ஏன் அப்படிஒரு பார்ப்பன அமைப்பு காலம் ப+ராவும் தோன்றவில்லை. இது வரை தோன்றவேயில்லை.தமிழர்கள் கட்டி வைத்த அமைப்பில் போய் அவர்கள் இணைவார்கள். அதிலும் உறுப்பினராக சேர மாட்டார்கள். சுவரொட்டி ஒட்டப் போக மாட்டார்கள். மேடை போட போகமாட்டார்கள். கட்சியினுடைய பெரிய பொறுப்பில் வேண்டுமானால் போய் சேர்ந்து கொள்வார்கள். குறைந்தது ஒரு மாவட்டத் தலைவர், துணைப் பொதுச் செயலாளர் என்று போய் சேர்ந்து கொள்வார்கள். அப்படி இணைந்த பார்ப்பனர்கள் யாரையும் இயக்கத்தில் அடிமட்டத் தொண்டனாய் நான் பார்த்ததே இல்லை. குறைந்தது ஒரு மாவட்டச் செயலாளராக இருக்க வேண்டும் என்ற கருத்தோடுதான் இணைகிறார்கள். ஏன் அப்படி தொண்டராக இணையவில்லை என்பதுதான் எங்களுக்கு இன்னும் அய்யத்தை உண்டாக்குகிறது.

ஜென்ராம் - ஈழம் தொடர்பான விசயத்தில ஒரே ஒரு விளக்கம் மட்டும் நான் உங்ககிட்ட இருந்து தெரிஞ்சுக்க ஆர்வமாக இருக்கிறேன். பிரபாகரன் உயிரோடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது தெரியாது என்று நீங்க சொல்றீங்க.

கொளத்துர் மணி - ஆமாம்!

ஜென்ராம் - உயிரோட இருக்கிறாரா இல்லையா என்று தெரியாது என்று சொல்வதற்கு என்ன காரணம். அப்ப உயிரோட இருக்கிறார் என்பதற்கான ஒரு வாய்ப்பையும் நீங்க மறுக்கலை?

கொளத்துர் மணி - ஆமா.. எனக்கு சில யூகச் செய்திகளும் சில உண்மைச் செய்திகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. அதனால்தான் அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. இல்லை என்று சொல்ல முடியவில்லை. ஆனால் இருக்கிறார் என்பதற்கு எனக்கு ஆதாரம் இல்லாத காரணத்தால் ஒரு பகுத்தறிவுவாதி சரியான ஆதாரம் இல்லாமல் ஒன்றை சொல்லக் கூடாது. எனவே அவர் உயிருடன் இருப்பதைப் பற்றிக் கேட்டால் என்னுடைய பதில் தெரியாது என்றுதான் சொல்கிறேன். இருக்கிறார் இல்லை என்று என்னால் சொல்ல முடியாததற்கு அதுதான் காரணம்.

ஜென்ராம் - அதாவது இந்திய ஊடகங்களும் இலங்கை ஊடகங்களும் அவர் இறந்து போயிட்டார் அவர் கொல்லப்பட்டார் என்று பிரச்சாரம் செய்யும் போது அல்லது அதை நிறுவிக் கொண்டிருக்கும் போது அவர் உயிரோடு இருக்கிறார் என்று சில தமிழ்த் தேசியவாதிகள் சொல்வதே இன்னும் தமிழர்களுக்கு எதிராக ஒரு போர் தொடுப்பதற்கு தயாராக இராணுவ இயந்திரத்தை பலப்படுத்திக் கொண்டே போவதற்கான வாய்ப்பை இலங்கை அரசுக்கு சிங்கள பேரினவாதத்திற்கு கொடுப்பதாக ஒரு பார்வை இருக்கு

கொளத்துர் மணி - அது தவறானது. ஏன்னா 89-ஆம் ஆண்டு அப்படிதான் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி வந்தது. எல்லா ஊடகங்களும் அதை போட்டன. எல்லா ஊடகங்களும். இன்னும் சொல்லப் போனால்.. உடல் வைத்திருக்கிறார்கள். சந்தனம் வைத்திருக்கிறார்கள். மக்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள் என்றெல்லாம் கூட செய்தி வந்தது. ஆனால் அது பொய்யென்று பின்னால் உறுதி ஆனது. இரண்டாவது சுனாமியின் போது பிரபாகரன் உடல் அடித்துச் செல்லப் பட்டது. உடல் ஒதுங்கியிருந்தது. கரை ஒதுங்கியிருந்தது. பிரபாகரனுக்கு பெட்டி செய்துவிட்டார்கள் என்றெல்லாம் செய்தி வந்தது. ஆனால் அதற்கு பின்னால் பார்க்கிறோம். எல்லா ஊடகங்களும் இலங்கை அரசும் அந்தச் செய்தியைச் சொன்னார்கள். பொய்யாக போய்விட்டது. அப்ப அவர்கள் இவரை ஒரு முறை கொல்லவில்லை. பலமுறை கொன்றிருப்பதால் அய்யம் வருகிறது. அதனால் உறுதியாக நம்பமுடியவில்லை என்றுதான் சொல்கிறோம்.

ஜென்ராம் - உங்க மேல குண்டர் சட்டம் தேசிய பாதுகாப்புச் சட்டம் எல்லாமே போட்டாங்க. அவ்வளவு ஆபத்தான நபரா நீங்க. அப்படி என்ன குற்றத்திற்காக அந்த சட்டம் எல்லாம் போட்டாங்க?

கொளத்துர் மணி - குண்டர் சட்டம் என் மீது போட வில்லை. தேசிய பாதுகாப்புச் சட்டம் இரண்டு முறை போட்டார்கள். பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் ஒரு முறை கைது செய்திருக்கிறார்கள். அப்புறம் வேறு வழக்குகளை போட்டு ஓராண்டிற்கு மேலாக இரண்டு முறை சிறையில் வைத்திருக்கிறார்கள். அதற்கு என்ன பயம் என்றால் அவர்கள் கருத்துக்கு எதிராக இருக்கிறோம். பிரபாகரன் உலக ஊடகங்களுக்கு அவர் அளித்த நேர்காணலை பற்றி ஒரு விமர்சனக் கூட்டம் போட்டதற்கே ஒன்றரை ஆண்டு நெடுமாறன், சுப. வீர பாண்டியன் உள்ளிட்டோரை சிறையில் வைத் திருந்தார்கள். என்ன பயங்கரவாதம் செய்தார்கள்? அரசின் பார்வைக்கு பயமாக இருப்பவர்கள் எல்லாம் பயங்கர வாதிகளாக அவர்கள் கருதுகிறார்கள். நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல.

ஜென்ராம் - சேது சமுத்திரத் திட்டத்துக்கு நீங்கள் ஆதரவாளரா?

கொளத்துர் மணி - சேது சமுத்திரத் திட்டம் என்பதை இரண்டு வகையாக நாங்கள் பார்க்கிறோம். அதை மதத்தின் காரணத்தால் நிறுத்தக் கூடாது என்று நாங்கள் சொல்கிறோம். சுற்றுச் சூழல் காரணமாக மறுக்கிறார்கள் என்றால் அது ஆய்வுக்குரியது. ஆய்வு செய்து பார்க்கட்டும். சுற்றுச் சூழல் காரணமாக இருந்தால் விட்டு விடலாம். ஆனால் மத காரணங்களை சொல்லித்தான் இதை நிறுத்துகிறார்கள். அதை நாங்கள் எதிர்க்கிறோம்.

ஜென்ராம் - இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்காக புதிய தலைமுறை தொலைக்காட்சி உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

கொளத்துர் மணி- இந்த தொலைக்காட்சியின் வழியாக பல்வேறு செய்திகளை விளக்கங்களை சொல்வதற்கு வாய்ப்பளித்ததற்கு புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நானும் நன்றி சொல்கிறேன்.

தொகுப்பு : பூங்குழலி

Wednesday, December 26, 2012

மனு சாஸ்திர எரிப்புப் போராட்ட விளக்க மாநாட்டில் எடுக்கப்பட்ட சிறப்புமிக்க 8 தீர்மானங்கள்


1. மனு சாஸ்திரத்தை சட்டவிரோதமாக அறிவித்திடுக!

உலகிலேயே எங்குமில்லாத ‘வர்ணாஸ்ரம’ சமூக அமைப்பை மூவாயிரம் ஆண்டுகளாகத் திணித்து – தொடர்ந்து உயிர்த்துடிப்போடு நீடிக்கச் செய்து கொண்டிருப்பது மனுசாஸ்திரம். இப்படி ஒரு சாஸ்திரம் இருப்பதை அறியாதவர்கள் கூட, வர்ணாஸ்ரம உளவியலில் கட்டுண்டு ஊறிப்போய் நிற்கின்றனர். இந்த வர்ணாஸ்ரமம் வழியாக – காலம் காலமாக, சமூக – அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள பார்ப்பனர்கள் – இந்த சமூக அமைப்பு உருக்குலையாமல், அரண் அமைத்து வருகிறார்கள். 

இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கே முரணானது இந்த மனுசாஸ்திரம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது அரசியல் சட்டம்; சட்டத்தின் முன் அனைவரும் சமமாக முடியாது என்கிறது மனுசாஸ்திரம். ‘பிராமணனுக்கு’ அடிமையான ‘சூத்திரரின்’ கல்விக்கு தடை போடுகிறது மனுசாஸ்திரம்; மாறாக, கட்டாய இலவச கல்வியை அனைவருக்கும் வலியுறுத்துகிறது அரசியல் சட்டம். குழந்தைகளுக்கு – இளம் வயதிலேயே – திருமணம் செய்ய வலியுறுத்துகிறது மனுசாஸ்திரம்; அதைக் குற்றமாக்கி திருமண வயதை 18 ஆக நிர்ணயிக்கிறது அரசியல் சட்டம். பெண் ஆணுக்கு அடிமைப்பட்டவள் என்கிறது மனுசாஸ்திரம்; இருவருக்கும் – சம உரிமை உண்டு என்கிறது அரசியல் சட்டம். ஆனால் சட்டம் வழங்கியுள்ள இந்த உரிமைகளை சமூகம் ஏற்கவிடாமல், தடைச்சுவராக நிற்கிறது மனுசாஸ்திரம். 

இப்படி சட்டத்துக்கு நேர் முரணான – மனுசாஸ்திரத்தை – பார்ப்பனர்கள் மீண்டும் மீண்டும் தடையின்றி அச்சிட்டுப் பரப்பி வருகிறார்கள். பழக்க வழக்கங்கள், சடங்குகள், வாழ்வியல், வழியாக, சமூகத்திலும் தொடர்ந்து நீடிக்கச் செய்து வருகிறார்கள். சமூக மாற்றத்துக்கான எந்த திட்டங்களானாலும் – சட்டங்களானாலும் அதன் நோக்கத்தை அடைய விடாது – தடுப்பது, இந்த பாசிச பார்ப்பனிய மனுசாஸ்திர சிந்தனையும் – அதன் வழி கட்டமைக்கப்பட்ட ஜாதிய சமூகமும் தான்; இந்த எதார்த்தத்தையும், கடந்த காலங்களிலிருந்து பெற்று வரும் படிப்பினைகளையும் கருத்தில் கொண்டு – மக்கள் நலனில், விடுதலையில் உண்மையான கவலைக் கொண்ட கட்சிகள், இயக்கங்கள், பார்ப்பனிய மனுசாஸ்திர கட்டமைப்புகளுக்கு எதிரான இயக்கங்களை நடத்த முன் வர வேண்டும் என்று இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது. இதன் முதற்கட்டமாக, அரசியல் சட்டத்துக்கே எதிரான ‘மனுசாஸ்திரத்தை’ சட்ட விரோதமாக அறிவித்து – அதை அச்சிட்டுப் பரப்புவதை குற்றமாக்க வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

2. நவீன மனுவாதிகளை முறியடிப்போம்

மனுசாஸ்திரம் கட்டமைத்துள்ள வர்ணாஸ்ரம அமைப்பில் உழைக்கும் மக்களை ‘பஞ்சமர்’ என்று இழிவு படுத்தி – சமூகத்திலிருந்து ஒதுக்கி – ஊருக்கு வெளியே சேரிகளில் தனிமைப்படுத்தியது.

புத்தர், ஜோதிபாபுலே, பெரியார், அம்பேத்கர் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட – மனுசாஸ்திர பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்களால் – விழிப்புற்று – ஓரளவு உரிமை பெற்று – சம உரிமைக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் போராடி வரும் நிலையில் –மனுசாஸ்திரத்தை உயர்த்திப் பிடிக்கும் முயற்சிகளில் சாதிய சக்திகள் களமிறங்கியுள்ளன. 

மீண்டும் மனுசாஸ்திரம் காட்டும் வழியில் ‘தீண்டப்படாத மக்களை - ஒதுக்கி வைக்கும் மிரட்டல்களை வெளிப்படையாகவே தொடங்கி விட்டனர்; இந்த நவீன மனுவாத சக்திகளுக்கு எதிராக தமிழகம் தழுவிய அளவில் ஜாதி – பார்ப்பனிய மனுவாதிகள் எதிர்ப்பு கூட்டியக்கத்தை உருவாக்கி ஜாதிவெறி சக்திகளை முறியடிக்க இந்த மாநாடு உறுதியேற்கிறது. 

3. குரலற்ற மக்கள்

பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இன பிரிவில் அடங்கியுள்ள எண்ணிக்கையில் சிறுபான்மையினரான புதிரை வண்ணார், காட்டு நாயக்கர், நரிக்குறவர், குயவர், வண்ணார், நாவிதர், போயர் போன்ற பல்வேறு சமுதாயப் பிரிவினர் ஒரு ஊராட்சிமன்ற உறுப்பினராகக் கூட வரமுடியாத நிலையே உள்ளது. உயர் கல்வி, உயர் பதவிகளில் கற்பனையில் கூட எட்டிப்பிடிக்க முடியாத, ‘ குரலற்றவர்களாக ’ உள்ள இந்த சமூகத்தினருக்கு - சட்டம் வலியுறுத்தும் ’ போதுமான பிரதிநிதித்துவம் ’ (Adequate Representation ) என்ற இலக்கை சென்றடைவதற்கு தற்போதுள்ள இட ஒதுக்கீட்டு முறையில் மற்றங்களை கொண்டுவரவேண்டிய அவசியத்தை –இம்மாநாடு சுட்டிக் காட்டுகிறது. 

குரலற்ற இந்த மக்களின் நியாயமான உரிமைகளுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் வலிமையாக குரல் கொடுத்துப் போராடும் என்று அறிவிக்கிறது.

4. சிறப்பு திருமணச் சட்டத்தில் திருத்தம்

இரு வேறு மதங்களின் பிரிவைச் சார்ந்தவர்கள் திருமணத்தை பதிவு செய்வதற்கான சிறப்பு திருமண பதிவுச் சட்டம் – திருமணத்தை பதிவு செய்வதற்கு முன் ஒரு மாத முன்னறிவிப்பு தரப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறது; திருமணம் செய்துகொள்ள போகும் இணையர்களின் விவரங்களும் முன் கூட்டியே அறிவிப்புப் பலகையில் அறிவிக்கப்படுகிறது . இதன் காரணமாக மதங்கடந்த காதல் திருமணத்தை தடுக்க விரும்பும் சாதி – மதவாத சக்திகள் இந்த அவகாசத்தைப் பயன்படுத்தி அவர்களை பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதற்கும், மிரட்டுவதற்கும் வாய்ப்புகள் தரப்படுகின்றன. எனவே ஒரே மதத்திற்குள் திருமணம் புரிவோர் உடனடியாக பதிவு செய்துகொள்வதற்கு உள்ள வாய்ப்புகளை போன்றே, மதம் கடந்து திருமணம் செய்வோருக்கும் அனுமதிக்கும் வகையில் சிறப்புத் திருமண சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

5. காதல் திருமணத்துக்கு தடை போடாதீர்!

காதலுக்கு தெய்வீகம் புனிதம் என்ற கற்பிதங்களை கட்டமைப்பதை பெரியார் எதிர்க்கிறார்; அதே நேரத்தில் - ஒருவருக்கொருவர் சரியான புரிதலில் உருவாகும் காதலை வரவேற்கிறார்.

“ஒரு ஆணின் அல்லது பெண்ணின் அன்பு, ஆசை, காதல் காமம் நட்பு, நேசம், மோகம், விரகம் முதலியவைகளைப் பற்றி மற்றொரு, பெண்ணோ ஆணோ - மற்ற மூன்றாதவர்கள் யாராவதோ - பேசுவதற்கோ நிர்ணியப்பதற்கோ நிர்பந்திப்பதற்கோ சிறிது கூட உரிமையே கிடையாது” என்று உறுதிபடக் கூறுகிறார்.

மாறிவரும் சமூகத்தில் ஜாதிகளைக் கடந்து காதல் திருமணம் புரிய விரும்பும் இளைய தலைமுறையின் வாழ்வியல் உரிமைகளை பறிக்கவேண்டாம். என்று பெற்றோர்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. மனுசாஸ்திரம் விதித்த குலத்தொழில் தடைகளை தகர்த்துவிட்டு மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும் பொறியாளர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் எந்த பிரிவினர்களும் வரலாம் என்பதை ஏற்றுக்கொண்ட நமது சமூகம், அதே ‘மனுசாஸ்திரம்’ கட்டளையிடும் ஒரே ஜாதிக்குள் மட்டுமே திருமணம் என்பதை விடாப்பிடியாக பற்றிக் கொண்டிருக்க வேண்டாம் என்றும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

6. மருத்துவர் இராமதாசுக்கு தடை போட்டதை வரவேற்கிறோம்

தலித் மக்களை தனிமைப்படுத்திட சாதி வெறி கட்சிகளைத் தூண்டிவிடும் இயக்கத்தை முனைப்புடன் நடத்தி வரும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசுக்கு எதிராக, சமூக அமைதியைக் காக்கும் நோக்கத்தோடு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மதுரை மாவட்டத்தில் நுழைய தடை விதித்துள்ளதைப் பாராட்டி வரவேற்பதோடு தமிழகத்தின் ஏனைய மாவட்ட ஆட்சித் தலைவர்களும் இந்த நல்ல முன்னுதாரணத்தைப் பின்பற்ற வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

7. சான்றிதழ்களில் ‘பிராமணர்’ பெயர் நீக்குக!

பள்ளிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு சான்றிதழ்களில் சாதியைக் குறிப்பிடும் போது – பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடிப் பிரிவைச் சார்ந்தோரின் – ஜாதி குறிப்பிடப்படுகிறது; ஆனால் பார்ப்பனர்களை மட்டும் அவர்கள் ஜாதியைக் குறிப்பிடாமல் “பிராமணர்” என்று வர்ணத்தின் பேரால் குறிக்கப்படும் வழக்கத்தை மாற்றி, மற்ற பிரிவினரைக் குறிப்பிடும் முறையிலேயே பதியவேண்டும் என இம்மாநாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது..


தீர்மானம்: 8

சாதி தீண்டாமையின் வடிவங்கள் தொடர்ந்து நிலை பெற்றிருப்பதை இம்மாநாடு கவலையுடன் சுட்டிக்காட்டுகிறது. தாழ்த்தப்பட்டோர் வாழ்விடங்கள் ஊரிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது, இதை மாற்றுவதற்கு அரசு கட்டித்தரும் தலித் மக்களுக்கான குடியிருப்புகள் ஆதிக்க சாதிகள் வாழும் ஊர்ப்பகுதிகளிலேயே அடுக்குமாடி குடியிருப்புகளாக அரசு கட்டித்தர வேண்டும்; ஜாதி மறுப்புத் திருமணம் புரிந்தோருக்கு கல்வி – வேலை வாய்ப்புகளில் ஜாதியற்றோர் என்ற பிரிவை உருவாக்கி அவர்களுக்குத் தனியாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும்; இட ஒதுக்கீட்டைத் தவிர வேறு எந்த வடிவிலும் ஜாதி அடையாளத்தை பயன்படுத்தக்கூடாது; திருமண மண்டபங்கள் உள்ளிட்ட தேனீர் கடைகள், முடிதிருத்தகங்கள், வழிபாட்டிடங்கள் என்பன போன்ற பொது பயன்பாட்டு இடங்களில் தீண்டாமைக் கொடுமைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்; - போன்ற ஜாதி – தீண்டாமை ஒழிப்புக்கான தீர்மானங்களை திருப்பூரில் 29-4-2012 நடத்திய ஜாதிய வாழ்வியல் எதிர்ப்பு மாநாட்டில் நிறைவேற்றி, அதனடிப்படையில் அந்த ஜாதி – தீண்டாமைக்கு ஊற்றுக்கண்ணாக இருக்கும் பார்ப்பனிய மனு சாஸ்திர எரிப்புப் போராட்டத்தை அறிவித்தோம்.

இப்போது தலித் மக்களை தனிமைப்படுத்துதல் என்ற செயல்திட்டத்தோடு சாதிய கட்சிகள் வெளிப்படையாக இயக்கங்களை நடத்தி தமிழகத்தை பின்னுக்கு இழுத்துச் செல்லும் ஆபத்துகள் உருவாகியுள்ளன. இந்த மனுவாத சாதிய கட்சிகளுக்கு எதிராக மக்களைத் திரட்டி அவர்களிடம் விழிப்புணர்வை உருவாக்கவும், மனு சாஸ்திர அடிப்படையில் சாதிய – தீண்டாமைக் கொடுமைகள் நிலைப்பதை மாற்றியமைக்கக் கோரியும் சாதி எதிர்ப்பு மாநாடுகளை நடத்திடவும், அதற்கான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி, சாதி – தீண்டாமைக்கு எதிரான பரப்புரைப் பயணங்களை நடத்திடவும், ஒவ்வொரு பயணத்தின் நிறைவிலும் அந்தந்த மண்டலங்களில் சாதி எதிர்ப்பு மாநாடுகளை நடத்துவது என்றும் இந்த மாநாடு தீர்மானிக்கிறது. அதனடிப்படையில் ஜனவரி 22-இல் சென்னையிலும், பிப்ரவரி 9-இல் திண்டுக்கல்லிலும், பிப்ரவரி 16-இல் சேலத்திலும், பிப்ரவரி 23-இல் தஞ்சையிலும், மார்ச் 9-இல் திருநெல்வேலியிலும், மார்ச் 16-இல் கோவையிலும் மார்ச் 23-இல் புதுவையிலும் ஏப்ரல் 6-ஆம் தேதி திருச்சியிலும் இந்த மாநாடுகள் நடத்திடவும், நிறைவாக புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று மனு சாஸ்திரத்தை எரிக்கும் போராட்டத்தை நடத்துவது என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

Saturday, December 22, 2012

18 ஆம் நூற்றாண்டு தமிழகம் - மருத்துவர் ஜெயராமன்

12-10-2012 அன்று குற்றாலத்தில் புதியகுரல் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உறவுக்கூடல் நிகழ்வில் பதினெட்டாம் நூற்றாண்டு தமிழகம் என்ற தலைப்பில் மருத்துவர் ஜெயராமன் அவர்கள் (நூலாசிரியர், காந்தியின் தீண்டாமை) ஆற்றிய உரை.

Monday, December 10, 2012

“நமக்குக் கிடைத்த ஒரே அய்யர்” - நீதியரசர் வீ.ஆர்.கிருஷ்ணய்யரின் 98 ஆவது பிறந்தநாள் நிகழ்வு

மரண தண்டனைக்கெதிரான மக்கள் இயக்கம் சார்பில் நீதியரசர் வீ.ஆர்.கிருஷ்ணய்யரின் 98 ஆவது பிறந்தநாள் நிகழ்வு சென்னையில் கடந்த டிசம்பர் 1 -2012 அன்று சர்.பிட்டி.தியாகராயர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அ.மங்கை அவர்களது இயக்கத்தில் மரப்பாச்சி குழுவினரின் மரண தண்டனைக்கெதிரான நிகழ்த்து கவிதையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
மரண தண்டனைக்கெதிரான ‘உயிர்வலி’ ஆவணப்படத்தின் முன்னோட்டம் திரையிடப்பட்டது. பின்னர், கிருஷ்ணய்யரின் பெயரிலான பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

மனிதநேயத்திற்கான கிருஷ்ணய்யர் விருதை நடிகர் மம்முட்டி சார்பில் பாடகர் உன்னிக்கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.

மரண தண்டனை எதிர்ப்பிற்கான கிருஷ்ணய்யர் விருதை வழக்கறிஞர் யுக் மோஹித் சௌத்ரிக்கு வழங்கப்பட்டது.

மரணதண்டனைக்கெதிராகப் போராடிவரும் பெண்களுக்கான விருதான கிருஷ்ணய்யர்-செங்கொடி விருது வழக்கறிஞர்கள் வடிவாம்பாள், சுஜாதா மற்றும் கயல் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.


நிகழ்வில், நிதியரசர் சிவசுப்பிரமணியம், தோழர் தியாகு, மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி டிபேன், முனைவர் வசந்திதேவி, நடிகை ரோகினி, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், கிருஷ்ணய்யரின் பேத்தி லதா கிருஷ்ணய்யர், பேராயர் சின்னப்பா, அற்புதம் அம்மாள், வழக்கறிஞர் புகழேந்தி தங்கராசு ஆகியோர் பங்கேற்றனர்.


கசாப்பின் தூக்கை முன்வைத்து மரண தண்டனை ஒழிப்பு தொடர்பான கருத்துரையாற்றிய வழக்கறிஞர் யுக்மோஹித் சௌத்ரி அவர்களின் உரை மிகுந்த வரவேற்பைப்பெற்றது. அவ்வுரையை தோழர் தியாகு உடனுக்குடன் மொழிபெயர்த்தார்.


தோழர் தியாகுவின் உரையிலிருந்து...

“எனக்கு உண்மையில் அடிக்கடி ஒன்று தோன்றுவதுண்டு. யாராவது ஒரு அய்யரைப் போய் நாம் பாராட்ட முடியுமா? ஒரே ஒரு அய்யர்தான் நமக்குக் கிடைத்திருக்கிறார் என்று நான் நினைப்பேன்.

ஏனென்றால், ஏ.எஸ்.கே. அய்யங்கார் என்றொருவர் இருந்தார்.அய்யங்கார் ஒருமுறை பெரியாரிடம் கேட்டார். 

“அய்யா, எல்லோரும் அய்யங்கார் என்கிறார்கள். நீங்களும் அய்யங்கார் என்கிறீர்களே” 

அப்போது பெரியார் சொன்னார், ”அய்யங்காரும் என்னைப் பாராட்டுகிறான் என்பதுதானே முக்கியம். அய்யங்கார் இப்படிச் சொல்கிறார் என்று போடட்டும். அதனால் அப்படியே வைத்துக்கொள். அந்தப் பெயர் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்” என்றார். 

அப்படித்தான் நாம் கிருஷ்ணய்யரை நினைக்கவேண்டியிருக்கிறது. அய்யர் என்ற சொல்லுக்குரிய உண்மையான பொருளில் ஒரே ஒரு அய்யர் கிருஷ்ணய்யர் மட்டும்தான்”. என்று தோழர் தியாகு குறிப்பிட்டதும் அரங்கம் கைதட்டல்களுடன் வரவேற்றது.

பெரியாரியவாதிகள் இனவாதம் பேசுபவர்கள் அல்லர் என்பதையும் ஏற்றத்தாழ்வு பாராது மனித சமூகத்திற்கு பணியாற்றும் எவரையும் போற்றக்கூடியவர்கள் என்பதையும் வந்திருந்த கருஞ்சட்டைக்காரர்களின் எண்ணிக்கையே மெய்ப்பித்தது.

மேலும், இந்நிகழ்வுக்காக திராவிடர் விடுதலைக் கழகத்தோழர்கள் சென்னை மாநகரெங்கும் 1500 சுவரொட்களை ஒட்டியதோடு, பதாகை வைக்கும் பணிகளையும் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, December 9, 2012

மனு தர்மத்தின் கொடூர வரலாறு - தோழர். விடுதலை இராசேந்திரன் உரை (காணொளி)

மணல்மேடு வெள்ளைச்சாமி சிந்தனை வட்டத்தின் கூட்டத்தில் 30-09-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று “மனு தர்மத்தின் கொடூர வரலாறு” என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார்.

FULL HD தரத்தில் பலமுறை தறவேற்றம் செய்ய முனைந்ததில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது தரம் குறைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு மணிநேரம் நீளும் இவ்வுரையானது, மனுதர்மம் குறித்து நாம் தேடித்தேடி தெரிந்துகொள்ளவேண்டிய பல செய்திகளை தொகுத்துத் தருவதால் தோழர்கள் அவசியம் கேட்கவேண்டிய ஒன்றெனக் கருகிறேன்.

மிகமுக்கியமான உரையெனக் கருதினாலும் இதை உடனடியாக வெளியிடாததற்கு பல்வேறு பணிகள் காரணமாக இருந்தது. என்றாலும் எனது பொறுப்பின்மைக்கு வருந்துகிறேன்.

டிசம்பர் 23, 24 ல் ஈரோட்டில் மனுதர்ம நூல் எரிப்பு விளக்க மாநாடு நடக்க இருக்கும் இந்த நேரத்திலாவது வெளியிட முடிந்ததில் மகிழ்கிறேன்.

Friday, November 30, 2012

திராவிட இயக்கங்கள் விமர்சிக்கப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்காக பிராமணக் கருத்தியலில் போய் விழுந்துவிட முடியுமா? - ஜமாலன்

கீழ்க்காணும் படத்தைக் கண்டு நாம் வெட்கப்படவேண்டியவர்களாக இருக்கிறோம். பெரியார் பிறந்த மண்ணில் அவரது ‘மனித இழிவுக்கெதிரான’ போராட்டத்தை நாம் இன்னும் தீவிரமாக முன்னெடுத்திருக்கவேண்டும்.

சாதிய சார்புடன் இயங்கும் அரசுகளுக்கெதிராக பெரியாரிய, அம்பேத்காரிய இயக்கங்கள் சமூக மாற்றத்திற்கான மாபெரும் போராட்டங்களை நடத்தி விழிப்புற்ற மக்கள் திரளை கொண்டிருந்திருக்கவேண்டும். அது நடக்கவில்லை.

பெரியாரின் கொள்கைகளை நெஞ்சில் ஏந்தி கடந்த ஆட்சியாளர்களின் தன்னலப்போக்கை நாமும் கடுமையாக விமர்சிப்பவர்களாக, எதிர்ப்பவர்களாக இருக்கிறோம்.

ஆனால், கீழ்காணும் படத்தை FACEBOOK ல் பதிவிட்ட எச்.பீர் முஹம்மது என்பவர் திராவிடர் இயக்க வரலாறு குறித்த தெளிவோ, அக்கறையோ இன்றி நாம் தமிழர் ஆட்களைப்போல போகிறபோக்கில் சாணி அடித்துவிட்டுப்போகிறார்.

நாம் தமிழர் உள்ளிட்ட திராவிடர், திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள் சிலரைப்போல தமிழக எல்லை தாண்டி இதற்கு பொருளிருப்பதாகப்படவில்லை என்கிறார் பீர் முஹம்மது.

பெரியார் முன்வைத்த திராவிடர் என்ற சொல்லுக்குள் கேரளம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அடங்காது. பார்ப்பனரல்லாதோர் என்ற பொருள் தவிர்த்து அதை நிலத்தோடு தொடர்புபடுத்த எந்த வரலாற்று நெருக்கமும் இல்லாதபோது எப்படி இவர்களால் மற்ற மாநிலங்களைத் தொடர்புபடுத்தி உளறமுடிகிறது.

இவ்விவாதத்தில் நான் உணர்ச்சிப்பெருக்குடன் மோதியிருக்கிறேன். ஆனால் மொழியும் நிலமும் நூல்வழி என்னைப் பெரிதும் கவர்ந்த எழுத்துக்கு உரியவரான திரு ஜமாலன் அவர்கள் இவ்விவாதத்தை மிக வலுவான தளத்தில் எடுத்துச் சென்றிருக்கிறார்.

தமிழில் பெரும்பாலும் அரசியல் புரிதலுள்ள படைப்பாளிகளை, விமர்சகர்களை காண்பது அறிது. ஜமாலான் மிக நுட்பமாக இந்த விடயங்களை அணுகியிருப்பதாக உணர்கிறேன். ஜெயமோகன் மாதிரி உறுத்தலின்றி இந்துத்துவவாதிகளாக திராவிடர் இயக்க வரலாற்றை அணுகுகிறவர்களிடையே “ ஒரு குறிப்பிட்ட திராவிடக்கட்சியை விமர்சிப்பது என்பது, சார்புநிலையைதான் வெளிப்படுத்தும். இங்கு திராவிடக்கட்சிகளின் இயக்கத்தில் பிராமணீயத்தின் பங்கு எவ்வளவு உள்ளது என்பதை பிறித்தறியாமல், அவற்றை விமர்சிப்பது என்பது எதிர்நிலை அரசியல் நிலைபாட்டிற்கே உதவும்” என்கிற ஜமாலன் போன்றவர்கள் ஆறுதலளிக்கிறார்கள்.

முகநூல் கருத்துரைகளை கீழே பதிந்துள்ளேன்இந்த புகைப்படத்தை பாருங்கள். இந்த சிறுமிகள் கடல் அலையில் கால் நனைப்பதற்காக தங்கள் செருப்புகளை கையில் தூக்கவில்லை. இது பொள்ளாச்சி அருகே ஆதிக்க சாதிகள் அதிகம் வாழும் கிராமம். அங்கு பள்ளி சென்று விட்டு திரும்பும் தலித் மாணவிகள் இப்படி தான் செல்ல வேண்டும் என்ற கட்டளை.

45 ஆண்டுகள் தமிழ்நாட்டில் அதிகாரத்தில் இருந்த திராவிடமே.... இதற்கு பெயர் தான் சமூகநீதியா? பிராமண எதிர்ப்பு, சாதி ஒழிப்பு என்ற பெயரில் இருக்கும் சாதி அமைப்பை தக்கவைத்து தன் ஓட்டு வங்கியைப் பாதுகாத்த கழகங்களே...... உங்களுக்கெல்லாம் சுயமரியாதை ஒரு கேடா?.. தமிழ்நாட்டு அதிகாரவர்க்கத்தை நோக்கி கேள்வி எழுப்பாமல் அதற்கு செம்பு அடிக்கும் தலித் கட்சிகளே..... நீங்கள் தேர்தல் அரசியல் என்ற பெயரில் கழகங்களுக்கு செம்பு அடிப்பதை நிறுத்தாமல் இருந்தால் இது நூற்றாண்டு முழுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். 


@எச்.பீர் முஹம்மது இப்பொழுது உங்கள் நிலைபாடு என்ன ஆரிய திராவிட முரண் வழக்கொழிந்துவிட்டது என்கிறீர்களா? அல்லது திராவிட என்ற சொல்லால்தான் தமிழ் இனம் தன்னை இனமாக உணரமுடியாமல் போய்விட்டது என்கிறீர்களா? வரலாற்றை நுட்பமாக அதன் உள்இயங்குசக்திகள் வழியாக ஆராய்ந்தால் ஒன்றை நீங்கள் உணரலாம். அது திராவிட இயக்கங்களின் பின்புலமாக இயங்கும் ஆதிக்க சக்திகளும், அதற்கான கருத்தியல்களுமே. வெறுமனே திராவிடம் தமிழ் என்று பிரித்து விளையாடுவது "நாம் தமிழர்கள்" என்று அரசியல் லாபம் பண்ண உவப்பாக இருக்கலாம், அது சமூக யதார்த்தமாகிவிடாது. 

திராவிட இயக்கம் பெரியாரால் துவக்கப்பட்ட காலத்திலிருந்தே, ஆந்திரா, கர்நாடக, மலையாள அரசியலில் அது பெரும்பங்கு எதையும் வகித்ததில்லை. அதனால் மற்ற மாநிலங்களைக்கொண்டு அதை தீர்மானிக்க முயல்வதுதான் கால்ட்வெல் சொன்னதை ஏற்பதாகும். களப்பிரர்கள் காலத்திலேயே திராவிட சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை கே.கே. பிள்ளை தனது தமிழக வரலாற்றில் குறிப்பிடுகிறார். அதனால் சொற்களைக்கொண்டு அதன் அரசியலை பேசவேணடியதில்லை.

திராவிட இயக்கம் அல்லது திராவிடம் என்பது ஒரு உள்ளீடற்ற சொல்லாடல். அதற்குள் வரலாறு திணித்திருக்கும் பொருள் ‘ஆரிய எதிர்மை’ என்பதுதான். ஆரிய எதிர்மை என்பதை பார்ப்பனிய எதிர்ப்பு அல்லது பார்ப்பனிய அதிகார எதிர்ப்பு எனலாம். அதன் யதார்த்தம் இல்லை என்று மறுத்துவிடமுடியுமா? இப்போ பார்ப்பனியம் என்பது வழக்கொழிந்திருப்பதாக வைத்துக்கொண்டாலும் அது இந்துத்துவாவின் கோரமுகமாக மாறி உள்ளது. திராவிட எதிர்ப்பு என்பது இந்த இருமைச் சட்டகத்திற்குள்தான் சங்கேதமாகும். அல்லது ஜெயலலிதாவிற்கு பத்திருபது ஓட்டுகள் அதிகமாகும். திராவிடத்தால் வீழ்ந்தோம் என்கிற குணா அரசியலையே பேசிக்கொண்டிருக்க முடியாது. திராவிடக்கட்சிகள் ஏதோ ஒருவகையில் இன்றைய அரசியல் சொல்லாடலுக்குள்தான் தன்னை நிலைநிறுத்தும். அது இனமாக இருக்கலாம் அல்லது மதமாக இருக்கலாம். அந்தக்கூறை விமர்சிக்காமல், ஒரு குறிப்பிட்ட திராவிடக்கட்சியை விமர்சிப்பது என்பது, சார்புநிலையைதான் வெளிப்படுத்தும். இங்கு திராவிடக்கட்சிகளின் இயக்கத்தில் பிராமணீயத்தின் பங்கு எவ்வளவு உள்ளது என்பதை பிறித்தறியாமல், அவற்றை விமர்சிப்பது என்பது எதிர்நிலை அரசியல் நிலைபாட்டிற்கே உதவும். 

@எச்.பீர் முஹம்மது "சமூக ஒடுக்குமுறை நிகழும்போது அதை தடுப்பதில் அதிகார வர்க்கத்தின் பங்கு என்ன? என்பதிலிருந்தும் கேள்வி எழுகிறது." என்ன விளையாட்டு இது நண்பா. அதிகாரவர்க்கம்தான் சமூக ஒடுக்குமுறையை செய்கிறது எனும்போது அதன் பங்கு என்று எப்படி தனியாக சொல்ல முடியும். வேண்டுமானால், பஙங்குச்சந்தையில் கேட்டுதான் சொல்லமுடியும். ))) 

நல்ல விவாதம். நண்பர்கள் ஒரு முக்கியமான விடயத்தைக் கவனத்தில் கொள்ளவேண்டும். திராவிட ஆதரவோ எதிர்ப்போ அல்லது தமிழ் தேசியமோ எல்லாம் பின்புலமான ஒரு குறிப்பிட்டவகை உயர்சாதி நலனை அடிப்படையாகக் கொண்டவையாகவும், இன்றைய ஆதிக்க கருத்தியலான இந்துத்துவாவில் ஊறியவைதான். பெரியாரின் திராவிட இயக்கமோ அதன் கருத்தாக்கங்களை எதிர்ப்பதாக கூறுபவர்களின் பின்னணியில் உயர்சாதி இந்துத்துவ ஆதிக்கம் இல்லையா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். திராவிட கட்சிகளின் வரலாற்றை நுட்பமாக வாசித்தால் ஒன்றை புரிந்துகொள்ளலாம். அது ஆரம்பம்முதல் இந்துத்துவ உயர்சாதி பார்ப்பன ஆதிக்க சக்திகளால் அவர்களின் அறிவால் அல்லது அவர்களது சொல்லாடலால் வழி நடத்தப்படுகிறது என்பதே. தொடர்ந்து திராவிட இயக்கங்களை விமர்சிப்பவர்கள் ஏன் உயர்சாதி பார்ப்பனிய இந்துத்துவாவை எதிர்ப்பதில்லை என்பதையும் இதோடு இணைத்து சிந்திக்க வேண்டும். பெயரளவில் சொல்வதில்லை ஏன் எதிர்த்து எந்த போராட்டங்களையும் செய்வதில்லை. 

திராவிடக் கட்சிகள் நவீனத்துவத்தை நோக்கிய தனிமனித சுதந்திரத்தையும் பகுத்தறிவையும் சுயமரியாதையையும் மையப்படுத்தாமல் பிராமண அடையாளத்தை துறக்கவேண்டிய கூட்டமாகப் பிற்பட்ட வகுப்பினரையும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரையும் நகர்த்தப் பார்த்தார்கள். அதையும் கூட முழுமையாகப் பிடிக்காதவர்கள் - குறிப்பாக இன்று மிகவும் பிற்பட்டவர்கள் எனப் பட்டியலிடப்படும் முக்குலத்தோரும், வன்னியர்களும் தங்களின் தனித்துவம் சாதியில்தான் இருக்கிறது எனத் தொடக்கத்திலிருந்து நம்பவைக்கப்பட்டார்கள். அதன் காரணமாகவே முத்துராமலிங்கத்தின் பார்வர்ட் பிளாக்கிலும் ராமசாமி படையாச்சியின் வன்னியர் சங்கத்திலும் இணைக்கப்பட்டார்கள். பெரியாருக்கும் அவர் முன்வைத்த கொள்கைகளுக்கும் எதிராக இருந்தார்கள். சாதி அடையாளம் தான் முக்கியம் என்பதோடு, ஆதிக்கம் செய்ய உரிமை இருப்பதாக நினைத்தார்கள்; நினைக்கிறார்கள். அதன் நீட்சியாகவே இன்று தமிழ்ச் சாதிகளின் ஆட்சி என்ற கருத்துருவை அவர்கள் நம்புகிறார்கள். முன் வைக்கிறார்கள். நடக்கப்போகும் வன்முறைக்கு முழுமையாகத் திராவிடக் கட்சிகளை மட்டுமே குறை சொல்வது எவ்வளவு தூரம் சரியெனத் தோன்றவில்லை 

சுயமரியாதை என்பது திராவிடர் இயக்கத்துக்கு மட்டும் இருக்கவேண்டிய ஒன்றா. உங்களுக்கு எங்க போச்சு. இதுவரை எந்த சாதியொழிப்பு, சாதி ஆதிக்க எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றீர்கள். திராவிடர் இயக்கத்தை போகிற போக்கில் கொச்சைப்படுத்தத் துணியும் அரைவேக்காடுகளின் பட்டியலில் நீங்களும். தர்மபுரியில் வன்முறை நிகழ்த்தியவர்கள் தமிழர்களா? திராவிடர்களா? 

தர்மபுரியிலும், விழுப்புரத்திலும், கொடியங்குளத்திலும் நடத்தியவர்கள் திராவிடர்களோ அல்லது தமிழர்களோ அல்ல. மாறாக தமிழ் பேசும் ஆதிக்க சாதியினர்தான். மேலும் நான் கழகங்கள் என்று தான் குறிப்பிட்டேனே தவிர பெரியாரைப்பற்றி குறிப்பிடவில்லை.இந்த நுணுக்கமான வித்தியாசத்தை உணர்ந்து கொள்ளமுடியாத ஆற்றாமையை நீங்கள் கடக்கவேண்டும். அதிகாரவர்க்கத்திற்கு சாதி ஒழிப்பிலும், வன்கொடுமைகளை எதிர்ப்பதிலும் அதிக பங்குண்டு. இதை இந்திய வரலாறு நிரூபித்திருக்கிறது. நீங்கள் வீரமணி சார்ந்து பெரியாரை எடுத்து கருணாநிதிக்கோ அல்லது ஜெயலலிதாவிற்கோ போர்வையாக போர்த்திக்கொடுத்தால் நான் பொறுப்பல்ல. 

நான் வீரமணி சார்ந்தோ, கருணாநிதி சார்ந்தோ பேசவில்லை. நாட்டில் தமிழ்தேசியம் பேசுகிறவன் நடத்திய வன்முறைக்கும் கூட திராவிடக் கட்சிகள்தான் காரணம் என்பது நாம்தமிழர் மாதிரியான மாபெரும் அறிவாளிகள் கண்டடையும் உண்மை. அதையே வழிமொழியும் உங்களை நோக்கி கேள்வி எழுப்புகிறேன். திராவிடர் இயக்கத்தை எதிர்க்க நினைப்பவர்கள் திராவிட என்ற சொல்லைத்தான் நயவஞ்சகமாக பயன்படுத்துகிறார்கள் என்ற தெளிவு எமக்கு உண்டு. 

செல்லையா முத்துசாமி அநியாயத்தை கண்டிக்க வக்கில்லா விட்டால் வாய் மூடி இருக்கவேண்டும் , ஆதிக்க சக்தி, யார் அந்த சக்திகள் என்பதை அடையாளப்படுத்த முடியுமா ? அப்படி நீங்கள் அடையாளப்படுத்த முயல்வீர்களேயானால் உங்களால் அறிய முடியும் அந்த சக்திகளை வளர்த்து விட்டது யார் என்று.

ஒவ்வொரு தேர்தல்களிலும் எந்த சாதிக்கட்சியை வளைத்து போட்டால் வாக்குகளை அள்ளலாம் என்று இந்த 45 ஆண்டுகளாக சாதி சார்ந்த அரசியலை ஊக்கப்படுதியது யார் ? திராவிட கட்சிகள்தானே 

எந்த சாதியை சேர்ந்தவனை மாவட்ட செயளாரர் ஆக்கினால் கட்சியை வளர்த்து காசு பாக்கலாம் என்று திட்டம் தீட்டி கட்சி நடத்தியது யார் ? திராவிட கட்சிகள்தானே 

திராவிட கட்சிகளை தவிர்த்து நாம் யாரையும் குற்றம் சுமத்த முடியாது ஏனென்றால் அவர்கள் சாதியை ஆதரிப்பவர்கள் என்று பகிரங்கமாக அறிவித்து விட்டவர்கள் .

சமூக நீதி கோசத்தை முன்வைத்து ஆட்சியை பிடித்தவர்கள் இந்த திராவிட கட்சிகள் மட்டுமே ஆகவே இந்த அவலத்திற்கு திராவிட கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலே காரணம் 

திராவிட கட்சிகளின் தவறுகளை நாங்களும்தான் கண்டிக்கிறோம். சுயமரியாதை ஒரு கேடா எ்னறு கேட்பதன் பின் இருக்கும் அரசியல் என்ன? தன்னலமற்ற பெரியாரியவாதிகளின் செயல்பாடுகள் உங்களுக்கு தெரியவில்லை. தெரிந்திருந்தால் சுயமரியாதை என்ற சொல்லை இவ்வளவு இழிவாக பயன்படுத்த உங்களால் முடியாது 

சால்வை போத்தி கோரிக்கை வைப்பதுதான் உங்கள் பார்வையில் எதிர்ப்பா நண்பரே 

intha pahuthiyil tamilil eluthi en karuthai eppadi pathuya vaippathu?pls help me 


நான் சுயமரியாதை ஒரு கேடா என்று சொன்னது நீங்கள் புரிந்து கொள்ள முயற்சிக்கிற/ முயற்சிக்காத திராவிடம் என்ற பெயரை கொண்ட அதிகார வர்க்கத்தை நோக்கிதான். பெரியாரை அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். காரணம் திமுக அதிகமாக இந்த சொல்லை உச்சரித்திருக்கிறது. அதனால் தான். முரசொலி மாறனின் சுயமரியாதை குறித்தும் நீங்கள் பேச வேண்டும். 


எவ்வாறு லைக் செய்வது...? கொடுமையிலும் கொடுமை! மனிதர்கள் அனைவரும் சீப்பின் பற்களைப் போன்றவர்கள் என்றுச் சொன்னார் நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்..மேலும் சொன்னார்கள்: அரபி அல்லாதவரை விட அரபியரோ, அரபியரை விட அரபியல்லாதோரோ, கருப்பரை விட வெள்ளயரோ, வெள்ளையரை விட கருப்பரோ சிறந்தவரல்லர். அதிக இறையச்சமுடயவரே உங்களில் சிறந்தவர்... 

@ Ramasamy Alagarsamy இந்தியாவில் எந்த ஒரு கட்சியும் அரசியலும் நவீனத்துவத்தை நோக்கி நகரமுடியாமல் செய்வது எது? செய்தது எது? நவீனத்துவம் மட்டுமே இதற்கு தீர்வாகுமா? நவீனத்துவம் சாதியை ஒழித்துவிடுமா? என்கிற கேள்விகள் உள்ளன. இன்றைய சாதிய ஆதிக்க கருத்தியல் என்பது செவ்வியல்கால கருத்தியலால் வழி நடததப்படுவதாக தோன்றவில்லை. உண்மையில் நவீனத்துவ கருத்தியலே அதை வழி நடத்துகிறது. நவீனத்துவத்தின் தேசம், தேசியம்; அரசு, இறையாண்மை, தனிமனிதனாதல் உள்ளிட்ட அடையாள அரசியலின் ஒரு எதிர்விளைவாக உருவானனதே இன்றைய சாதிய அரசியலின் எழுச்சி என எண்ணத் தோன்றுகிறது. என்னிடம் அது குறித்த குறிப்பான ஆய்வுகள் இல்லை என்றாலும் எனது ஊகமாக இதை சொல்கிறேன். 

பிராமண அடையாளத்தை துறப்பது என்பதே நவீனத்துவத்தை நோக்கிய நகர்தல்தானே. சுயமரியாதை, தனிமனித சுதந்திரம், பகுத்தறிவு ஆகியவற்றிற்கு எதிராக இந்தியாவில் பிராமணீயம் ஆதிக்கம் வகித்ததை எந்த அடையாளத்தில் சேர்ப்பீர்கள். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில், நவீனத்திற்கு எதிராக ஆதிக்க கருத்தியலாக இன்றும் இருப்பது எது என்கிறீர்கள்? 

திராவிட இயக்கங்கள் விமர்சிக்கப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்காக பிராமணக் கருத்தியலில் போய் விழுந்துவிட முடியுமா?

 சாதி என்பதை புரிந்துகொள்ள ஒவ்வொருகால வரலாற்று சொல்லாடலிலும் அது என்னவாக கோடிங் (சங்கேதமாகி) ஆகி உள்ளது என்பதை ஆராய்வது அவசியம். செவ்வியல்காலத்தில் சாதி என்பது இன்றைப்போலவே ஆதிக்கமாக அடக்குமுறையாக இருந்ததா? அல்லது வாழ்வியலுக்கான சமூக கருத்தியலாக இருந்ததா? எனபதும் தன்மானம் சுதந்திரம் போன்ற நவினத்துவ பகுத்தறிவு சொல்லாடலுக்குப்பின் சாதி என்பது என்னவாக சங்கேதப்படுத்தப்பட்டது என்பதையும் ஆராயவேண்டும். திராவிட இயக்கங்களை விமர்சிப்பது என்பது எந்தவகையிலும் தமிழ்தேசிய மற்றும் உயர்சாதி மற்றும் பார்ப்பன இந்துத்துவ கருத்தியலுக்கு பரணி பாடுதலாக மாறிவிடக்கூடாது என்பதே எனது அச்சம். 

மனுதர்ம சாஸ்திரமும் தமிழ் மன்னர்களும் - ஆ. சிவசுப்பிரமணியன்

வடமொழியில் தர்ம சூத்திரங்கள், தர்ம சாஸ்திரங்கள் என்பவை சட்ட நூல்களாகும். இந்நூல்கள் செய்யுள் வடிவுக்கு மாறிய பின்னர் அவை ஸ்மிருதிகள் எனப் பெயர் பெற்றன. இவற்றின் எண்ணிக்கை 128 என்று கானே என்ற வடமொழி அறிஞர் குறிப்பிடுவார். இவை அனைத்திலும் பரவலாக அறிமுகமான ஸ்மிருதி ‘மனுஸம்ஹிதை’, ‘மாணவ தர்ம சாஸ்திரம்’ என்றழைக்கப்படும் மனுதர்ம சாஸ்திரமாகும்.

மனுவின் காலம்

மனு என்பவர் எழுதியதால் இவ்வாறு அழைக்கப்படுவதாகக் கூறினாலும் இந்நூலாசிரியரின் பெயர் சுமதி பார்கவா என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார். இந்நூலின் காலம் கி.மு.200க்கும் கி.பி.200க்கும் இடைப்பட்டது என்று பூக்லர் என்பவரும், கி.மு.170க்கும் 150க்கும் இடைப்பட்டது என்று அம்பேத்கரும் கருதுகின்றனர். கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் இந்நூல் இறுதி வடிவம் பெற்றதாக ஆர்.எஸ். சர்மா கருதுகிறார். எப்படியாயினும் மன்னர்களின் பிராமணியச் சார்புக்கான சட்ட நூலாக இது உருவாக்கப்பட்டுள்ளது என்பது உண்மை.

மனுதர்மம் உருவான வரலாற்றுச் சூழல்

மௌரியப் பேரரசின் படைத் தலைவனாக இருந்த புஷ்யமித்திரன் என்ற சாமவேதப் பிராமணன் நம்பிக்கைத் துரோகம் செய்து, மௌரிய மன்னனைக் கொலை செய்துவிட்டு சுங்க வம்ச ஆட்சியைத் தோற்றுவித்தான். இதன் பின்னர் பௌத்தம் கொடூரமான முறையில் ஒழிக்கப்பட்டது. கொலை செய்யப்படும் ஒவ்வொரு பௌத்த துறவியின் தலைக்கும் நூறு பொற்காசுகளை அவன் வழங்கினான். அசோகன் காலத்திலிருந்து தடை செய்யப்பட்டிருந்த வேதவேள்விகள் பெருகின. அத்துடன் வர்ணமுறை சாதியாக மாற்றப்பட்டது. இக்கால கட்டத்தில்தான் பிராமணர்களை, தெய்வநிலைக்கு உயர்த்திப் பாதுகாக்கும் மனுதர்மம் உருவாகியுள்ளது.

மனு செய்த கொடுமை

நான்கு வர்ண அமைப்பானது, இறுக்கமான ஒன்றாக மனுவுக்கு முன்னர் இருக்கவில்லை. வருணம் என்பது மாற்றிக்கொள்ளத்தக்கதாக நெகிழ்ச்சியுடன் இருந்தது. ஆனால் இதை இறுக்கமான சட்டங்களாக மனு மாற்றியதுடன், நான்கு வருணங்களுக்கு அப்பால் ‘அவருணர்கள்’ (வருணமற்றவர்கள்) என்ற புதிய பிரிவை உருவாக்கி, ‘சண்டாளர்கள்’ என்ற பெயரையும் அதற்குச் சூட்டி, தீண்டாமை என்ற கொடுமையை இப்புதிய பிரிவின் மீது சுமத்தினான்.

தமிழ்நாட்டில் மனுதர்மம்

தமிழ்நாட்டில் பல்லவப் பேரரசு உருவான பின்னர், மனுதர்மத்தின் இறுக்கமான சாதியப் பாகுபாடுகள் நுழைந்துவிட்டன. பல்லவர் காலச் செப்பேடுகளில் இடம் பெற்றுள்ள வடமொழி ஸ்லோகங்கள், சலுகை பெற்ற பிரிவாகப் பிராமணர்கள் உருவாகிவிட்டதைச் சுட்டுகின்றன. சோழப் பேரரசிலும், பிற்காலப் பாண்டியர் ஆட்சிக்காலத்திலும் இது மேலும் வளர்ச்சி பெற்றது.

‘அறநெறி வளர, மனுநெறி திகழ’
‘மறைநெறி வளர மனுநெறி திகழ’
‘மனுநீதி முறை வளர’
‘மனுநீதி தழைத் தோங்க’
‘மன்னுயிர் தழைப்ப மனுவாறு விளங்க’
‘மனுவாறு பெருக’
என்றெல்லாம் தமிழ் மன்னர்களின் மெய்க்கீர்த்திகளில் இடம் பெறும் தொடர்கள் அவர்கள் எந்த அளவுக்கு, மனு ஸ்மிருதியைச் சார்ந்து நின்றார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன.

பதிமூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த திருக்குறள் உரையாசிரியர் பரிமேலழகர், அறம், ஒழுக்கம் என்பன குறித்து வரையறை செய்ய முற்படும்போது ‘அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலும் ஆம். ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமச்சரியம் முதலிய நிலைகளினின்று அவ்வவற்றிற் கோதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்’ என்று குறிப்பிடுகிறார்.

பாண்டியர் காலக் கல்வெட்டொன்று. (கி.பி.1263), பிராமணர்கள் ஐவர், அடாத செயல்கள் செய்தபோது, அவர்களை எவ்வாறு தண்டிக்க வேண்டும் என்பதை, ‘கீழ் சாதிகளைத்தண்டிக்கும் முறைமைகளிலே’ என்று குறிப்பிடுகிறது. சாதியின் அடிப்படையிலேயே நீதி வழங்கப்பட்டதை இதன் மூலம் அறியமுடிகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாகக் கல்வி என்பது வேதக் கல்வியாகி, அதைப் பயிலவும் பயிற்றுவிக்கவும் மன்னர்கள் மானியம் வழங்கினர். இக்கல்வியைக் கற்பிக்கும் உரிமை பிராமணர்களுக்கு மட்டுமே உரியது. சத்திரியரும், வைசியரும் கற்பதற்கு மட்டுமே உரிமையுடையவர். இதன் விளைவாக உழைக்கும் மக்கள் பிரிவைச் சேர்ந்த சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள் பிரிவுக்கும், பெண்களுக்கும் கல்வி மறுக்கப்பட்டது.

‘இம்மைப் பயன்தரும் கல்வியைச் சூத்திரர்களுக்குக் கற்றுக் கொடுக்கக்கூடாது’ என்று மனு நெறியானது கல்வியறிவு பெறுவதிலிருந்து அடித்தள மக்களை விலக்கி வைத்தது. ஆயினும் சூத்திரர் பிரிவைச் சேர்ந்தவர்களும் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட பிரிவினரும், ‘செவி வாயாக நெஞ்சுகளனாகக்’ கொண்டு பாரம்பரிய தொழில் நுட்பத்தை மனதில் நிலை நிறுத்திக் கொண்டதுடன், வாய்மொழி வழக்காறுகளாக அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துச் சென்றனர். இதன் விளைவாகத்தான் தமிழ் உரைநடையானது வளர்ச்சியுறாத தேக்க நிலையை அடைந்தது. நினைவிலிருத்திக் கொள்ள எளிதாய் இருக்கும் என்பதால்தான் நமது சித்தவைத்திய நூல்களும், தச்சு வேலை, கப்பல் கட்டுதல் தொடர்பான நூல்களும் செய்யுள் வடிவில் அமைந்தன.

ஏட்டுக் கல்வி மறுக்கப்பட்ட இம்மக்கள்தான் கவின்மிகு கோயில்களையும், வலுவான அணைகளையும், ஏரிகளையும் அன்றாடம் புழங்கும் பொருள்களையும், உணவு தானியங்களையும் தமிழ்ச் சமுதாயத்திற்கு வழங்கினர். சமூகத்தின் நிதியுதவியுடன் கல்வி கற்ற மேட்டிமையோர் சமூக நலனுக்காக எதையும் மேற்கொள்ளவில்லை. ஆனாலும் அவர்கள் ‘மாமனிதர்களாக’ காட்சியளித்தனர்.

மனுவின் செல்வாக்குத் தமிழ் நாட்டில் இடம்பெற்றிருக்காவிட்டால், எண்ணும் எழுத்தும் சார்ந்த ஏட்டுக்கல்வியும், தொழில் நுட்பம் சார்ந்த அனுபவ அறிவும் இணைந்து செயல்பட்டிருக்கும். உடல் உழைப்பை இழிவானதாகவும், ஏட்டுக்கல்வியை உயர்வானதாகவும் கருதும்போக்கு உருவாகியிருக்காது. இதனால் இம்மண் சார்ந்த அறிவியலும் தொழில் நுட்பமும் வளர்ந்து நமக்கான ஒரு நவீனக் கல்வி உருப்பெற்றிருக்கும்.

நன்றி - கீற்று
http://www.keetru.com/vizhi/jan08/sivasubramanaian.php

Wednesday, November 28, 2012

மனுதர்ம சாஸ்த்திர எரிப்பு ஏன்? - தோழர் கொளத்தூர் மணி உரை

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சென்னையில் கடந்த 25-11-2012 அன்று மனுதர்ம சாஸ்த்திர எரிப்பு விளக்க மாநாட்டு அறிமுகக்கூட்டம் பாடி பகுதியில் நடைபெற்றது. நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து...

நமது தமிழ் மன்னர்கள் ஆண்ட காலத்தில்... இராஜராஜன் காலத்தில் என்றெல்லாம் பேசத்தொடங்குவார்கள். இவன் (தமிழ்ச்தேசியர்களின்) கணக்குப்படி அவன் தமிழ் மன்னன் இல்லை. அவன் தெலுங்கு சோழ வம்சத்தில் வந்தவன். ஆனால், நமது தமிழ்க் கம்பெனிக்கெல்லாம் அவன்தான் தமிழ்ப்பேரரசன்.

அவன் காலத்தில்தான் சேரி என்று தனியாக ஒதுக்கி வைத்தான். விலைமாதர்களுக்கென தேவதாசி தெருவை உண்டாக்கி வைத்தவன் அவன்தான். அதற்கு முன்பே இருந்திருந்தால் கூட தெளிவாக பிரித்து வைத்தவன் அவன்தான்.

அழகிய அருண்மொழித்தேவன் என்ற தமிழ்ப்பெயரை இராஜராஜன் என்று வடமொழியில் மாற்றித் தொலைத்தவனும் அவன்தான். எல்லாக் கேடுகளையும் தொடங்கி வைத்தவன் அவன்தான்.

அவன் காலத்திலிருந்து இன்று வரைக்கும் ஆங்கிலேயன் ஆண்டாலும் யார் ஆண்டாலும் வாழ்விடங்கள் தனித்தனியாகத்தான் இருக்கின்றன. ஊர் என்றும் சேரி என்றும் எல்லா ஊர்களிலும் பிரித்துதான் வைக்கப்பட்டிருக்கின்றன.

Thursday, November 1, 2012

திராவிடர் சீறணி பயிற்சி

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கொள்கைத் தெளிவும் உடல்வலிவும் கொண்ட திராவிடர் சீறணி(சீறுகின்ற அணி)க்கான பயிற்சி நடைபெற உள்ளது. விருப்பமுடைய தோழர்கள் கீழ்காணும் எண்களில் தொர்பு கொள்ளலாம். 

ஏற்பாடு: திராவிடர் விடுதலைக் கழகம்
கோவை மண்டலம் - 9150381577, 9488179109

திராவிடர் சீறணி
பயிற்சி - தொடக்க நிலை-1 

நாள் : 04.11.12 ஞாயிறு 
இடம் : அம்புரோஸ் ஐ.டி.ஐ சேவூர்

காலை 9.00 - 9.30க்கு மாணவர்கள் பதிவு

9.30 - 9.45 
திராவிடர் சீறணி: முன்னுரை கே.செந்தில்குமார், 
கள அலுவலர்,கோவை மண்டலம்

9.45 - 10.00 
மாணவர்கள் சுய அறிமுகம் 

காலை 10.00 - 11.30 
பொதுஉரிமையும் பொதுஉடைமையும் 
பழனி மெள.அர.ஜவஹர்

11.30 - 11.45க்கு தேநீர் இடைவேளை 

11.45 - 1.15 
பாலின சமத்துவம் 
முனைவர் பூ.மணிமாறன்

பகல் 1.15 - 2.15க்கு உணவு இடைவேளை


பகல் 2.15 - 3.45 
ஜாதி: தோற்றம், வளர்ச்சி, ஒழிப்பு 
மேட்டூர் ஜஸ்டின்ராஜ்

பகல் 3.45 -4.00 தேநீர் இடைவேளை
மாலை 4.00 - 5.00 
பெரியாரிய அமைப்புமுறை 
தி.தாமரைக்கண்ணன்

குறிப்பு : 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும், 30 வயதுக்கு மேற்பட்ட புதிய தோழர்களுக்கும் மட்டுமே அனுமதி - மாணவர்கள் நுழைவுக் கட்டணம் ரூ 50. அவசியம் செலுத்த வேண்டும் - 9.00 மணிக்குப் பிறகு வருபவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.