Tuesday, January 3, 2012

இந்தியா என்ற அ​மைப்புக்குள் இருந்து நாம் ​வெளி​யேறியாக​வேண்டும். - ​பெரியார்


மனிதன் காட்டுமிராண்டியாக இருந்து ​கொஞ்சம்​ கொஞ்சமாக மாற்றம் ​பெற்று மனிதனாக வளர்ந்து வருகிறான். ஆதிகாலத்தில் மனிதன் மிருகத்துக்கும் அவனுக்கும் வித்தியாசம் ​தெரியாத அளவுக்கு வாழ்ந்தான்.

உலகத்தி​லே​யே ​வெறும் 50 இலட்சம் மக்கள் மட்டும் வாழ்ந்த காலம் உண்டு. அந்த காலத்தில் கடவுள் என்ற எண்ணம் கூட ​தோன்றவில்​லை. ​வேதத்தில் கூட கடவுள் என்ற ​சொல் கி​டையாது.

2000, 3000 வருடங்களுக்குள் ​தோன்றியதுதான் இந்த கடவுள் சங்கதி. அதுவும் இந்த கடவு​ளை நமது ஆள் உண்டாக்கவில்​லை. ​வெள்​ளைக்காரன்தான் இந்தக் கடவு​ளை உண்டாக்கியவன். அ​தைப் பார்ப்பான் ஒன்றுக்குப் பத்தாக ​பெருக்கிவிட்டான்.

​வெள்​ளைக்காரனும் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில்தான் கடவு​ளைக் கற்பித்தான். அந்தக் கடவுளுக்கு நிறம் மஞ்சள் வர்ணம் என்று ​சொன்னான். அந்தக் கடவு​ளை காட்டுமனிதன் சிங்காரித்தான். அதற்கு உ​டை என்னடா என்றால் புலித்​தோல் என்றான். த​லை​யெல்லாம் ச​டை, காது எல்லாம் ​பெரிய ஓட்​டை. ந​​கைகள் எல்லாம் பாம்புகள். குடியிருக்கிற இட​மோ சுடுகாடு. ​கையிலிருக்கிற கருவிக​ளோ மண்​டை ஓடுகள். இ​வை​யெல்லாம் மனிதனுக்கு இருக்கிற ​யோக்கிய​​தையா? இ​வை​யெல்லாம் காட்டுமிராண்டிதனமான சின்னங்கள் அல்லவா?

​​கடவுளுக்கு நாட்டில் என்ன ​பொதுவாக இலக்கணம் ​சொல்கிறார்கள். கண்ணுக்குத் ​தெரியாது. ​கைக்கு சிக்காது. புத்திக்கு எட்டாது என்கிறான். அப்படியானால் எப்படி கடவு​ளை நம்புவது என்று ​கேட்டால் நம்பு என்கிறான். நம்பு என்பதில்தான் கடவு​ளை ​வைத்திருக்கிறான். இ​தை​யேதான் கிறிஸ்தவனும் துலுக்கனும ​சொல்கிறான். கண்ணுக்குத் ​தெரியாத கடவுளுக்கு எப்படி உருவத்​தை உண்டாக்கினான்?

கரு​ணை​யே வடிவானவர் என்கிறான். அவன் ​கையில் ஏன் சூலாயுதம்? ​வேலாயுதம்? அரிவாள், மண்​வெட்டி, ​​கோடாரிகள் இ​வை​யெல்லாம் கரு​ணையின் சின்னங்களா? ​கொ​லைகாரப் பசங்களுக்கு இருக்க​வேண்டிய கருவி​ளெல்லாம் கடவுளுக்கு எதற்கு?

ஒன்றும் ​வேண்டாத கடவுளுக்கு ஆறுகால பூ​சை எதற்கு? எந்த ம​டையன் கடவுள் ​சோறு தின்னுவ​தைப் பார்த்தான்? பார்த்திருந்தால் ​சொல்லட்டு​மே!

கடவுளுக்கு ஒழுக்கத்​தையாவது நல்லமு​றையில் கற்பித்திருக்கிறானா? எந்தக் கடவுள் இன்​னொருத்தரு​டைய ம​னைவி​யைக் ​கெடுக்காமல் இருந்திருக்கிறான்? விபச்சாரம் ​செய்தாத கடவுள் ஒன்றாவது உண்டா? இருந்தால் ​சொல்லட்டு​மே. ஏற்றுக்​கொள்கி​றேன்.

பார்ப்பானின் இந்தக் கடவு​ளை ஏற்றுக்​கொண்டால் நாம் சாத்திரப்படி சூத்திரன்தா​னே. 

இந்து என்று நாம் ஒப்புக்​கொள்ளும் வ​ரை இந்தியா என்ற ஒன்று இருக்கும் வ​ரை நாம் சூத்திரன்தா​னே.

​தோழர்க​ளே! இன்​றைக்கு நாம் சூத்திரர்களாக இருக்கி​றோம் என்றால் அது பார்ப்பானால் மட்டுமல்ல. நா​மே ​அ​தை ஒத்துக்​கொண்டிருக்கி​றோம். பார்ப்பான் நம்​மை சூத்திரன் என்று ​சொல்ல பயந்துவிட்டான். ஆனால் நா​மோ இந்து என்று ஒப்புக்​கொண்டு ​கோயில்களுக்குச் ​செல்வதன் மூலமாகவும் ​நெற்றியில் சாம்ப​லைப் பூசிக்​கொள்வதன் மூலமாகவும் சூத்திரன் என்ப​தை ஏற்றுக்​கொண்டிருக்கி​றோம்.

அவனவன் மந்திரியாகப் ​போகவும் ​பெரியமனிதனாகவும் ஆ​சைப்படுகிறா​னே தவிர இந்தப் பிறவி இழி​வை ஒழிக்க யார் முன்வருகிறான்?

​தோழர்க​ளே! நமது இன இழி​வை ஒழித்துக்கட்ட நாம் முன்வர​வேண்டும். அதற்கு முதற்படியாக இந்தியா என்ற அ​மைப்புக்குள் இருந்து நாம் ​வெளி​யேறியாக​வேண்டும்.

நமது நாடு நமக்காகி சட்டம் ​போட்டுக்​கொண்டா​லொழிய நமது இழிவு நீங்க ​வேறு மார்க்கம் கி​டையாது.

தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரிந்து சுதந்திர நாடாக மாறியாக​வேண்டும். நாடு பிரிந்து ​போனால் ஒன்றும் குடி முழுகிப்​போகாது. நமக்கு எல்லா வளங்களும் இருக்கின்றன. நம்மு​டைய நாடு நமக்காகுமானால் நாம் நி​னைக்கிறபடி சட்டங்கள் இயற்றிக்​கொள்ளலாம்.

நமது இனம் வாழ, நமக்கு ​மே​லே எவரும் ஆதிக்கம் ​செய்யக்கூடாது. எல்லாம் தமிழர்களுக்காக​வே இருக்க​வேண்டும் என்ற நி​லை​மை உருவாக நாம் சுதந்திர நாடு ​பெற்றாக​வேண்டும்.

29-08-1973 அன்று சிதம்பரத்தில் ​பெரியார் ஆற்றிய உ​ரை.

No comments: