வெள்ளி, 23 மார்ச், 2012

புதியத​லைமு​றையின் தமிழன் விருகளும் தமிழர் வி​ரோத​போக்கும்


சன், கலைஞர் தொலைக்காட்சி உள்ளிட்ட மக்களைச் சென்றடையும் ஊடகங்கள் கூடங்குளம் விடயத்தில் அரசின் பக்கம் நிற்கின்றன. 

சேனல் 4 ஆவணப்படத்தை வெளியிட்டது, அமெரிக்கத் தீர்மானத்தையொட்டி சில விவாதங்களை ஒளிபரப்பியது உள்ளிட்ட சில காரணங்களுக்காக புதியதலைமுறை தமிழர்கள் நலனில் அக்கறை காட்டுவதாக ஓர் எண்ணம் நம் தோழர்களிடையே உருவாகியிருக்கிறது.

ஆனால். புதியதலைமுறை கூடங்குளம் விடயத்தில் நமக்கு ஆதரவாக இல்லை. மூவர் விடுதலைக்கான நமது போராட்டங்களிலும் அது அரசின் கைக்கூலிதான். 

ஈழப்பிரச்சனையில்கூட இலங்கைக்கு நேரில் சென்று பதிவுசெய்த காட்சிகளுடன் அமெரிக்கத் தீர்மானத்துக்கு முன்பு புதியதலைமுறை ஒளிபரப்பிய ஆவணப்படம் நமக்கு எதிரானதுதான். இந்நிலையில் அது தமிழர் நலனில் அக்கறை என்பது போன்ற பாவனை ஏன்?

ஏனெனில், தமிழன் விருதுகள் என்ற பெயரில் பல்வேறு துறைசார்ந்தவர்களை விருதுக்குரியவர்களாகத் தேர்வு செய்கிறது. 

கடந்த சில வாரங்களுக்குமுன்பு வரை புதியதலைமுறையின் விருது தினமலர், ஹிந்து போன்ற தமிழர்நலனுக்கு எதிரானவர்கள் விருதுவழங்கினால் எப்படி பார்க்கப்படுமோ அதற்கு ஒப்பானதாகவே இருந்தது. 

உண்மையாக தமிழர் ஏற்றம்பெற உழைப்பவர்கள் புதியதலைமுறையின் விருதினை நிராகரிக்கக்கூடிய நிலைதான் இருந்தது. இந்த நிலையை மாற்ற புதியதலைமுறை எடுத்தமுயற்சிதான் ஈழத்தமிழர் மீதான அக்கறை என்று எனக்குப்படுகிறது. 

தமிழர் நலனில் புதியதலைமுறைக்கு உண்மையாக அக்கறை இருக்குமெனில், இடிந்தகரையில் பட்டினியால் எரியும் எம் தோழர்களுக்கும் சனநாயக உரிமைகள் மறுக்கப்பட்ட போராடும் மக்களுக்கும் ஆதரவாக இருந்து மத்திய-மாநில அரசுகளின் கொடிய முகத்தை மக்களுக்கு வெளிப்படுத்தவேண்டும்.

இல்லையெனில், புதிய தலைமுறை வழங்கப்போகும் விருதுகளை தமிழன் என்று சொல்லிக்கொள்பவர்கள் நிராகரிக்கவேண்டும்.

3 கருத்துகள்:

பரமசிவம் சொன்னது…

தமிழர்களுக்கு எதிராகச் செயல்படும் இம்மாதிரி ஊடகங்களின் போலித்தனத்தைத் தோலுரித்துக் காட்டவது இன்றைய அவசியத் தேவை.
பாராட்டுகள்.

பெயரில்லா சொன்னது…

பு - தலைமுறை செய்திகள் , புது புது அர்த்தங்கள் நிகழ்ச்சியை இரண்டு நாட்கள் பார்த்தாலே அந்த தொலைகாட்சியின் நடுநிலை பல்லிளிக்கும்

குரங்குபெடல் சொன்னது…

அணு உலை ஆதரவு . . .

ஏழாம் அறிவுக்கு சொம்பு தூக்குனதுன்னு . .

பாக்கும்போதே தெரிஞ்சிடுச்சே . .



அது ஒரு புதிய " தலைவலி " ன்னு