Wednesday, April 11, 2012

திராவிடன் என்ற அ​​டையாளம் ஏன்?

விடுத​லை ரா​சேந்திரன்:

நாம் தமிழர் தமிழர் என்று ​சொல்லிக்​​கொண்டிருக்கி​றோ​மே, ​பெரியார் இந்த தமிழ்ச்சமுதாயத்​தைப்பார்த்து என்ன ​கேட்டார்.

நாம் தமிழன் என்று ​சொல்லுவதற்குரிய வாழ்க்​கை​யை வாழ்ந்து​கொண்டிருக்கி​றோமா? அந்தப் பண்பாட்​டை ​பேணிக் காத்துவருகி​றோமா?

நாம் கட்டிய ​கோயில்களில் தமிழ் இல்​லை.
நம்வீட்டுத்திருமணத்தில் தமிழ் இல்​லை.
நம் பிள்​ளைகளுக்குப் ​பெயர் தமிழில் இல்​லை.
நம் பண்டி​கைகள் தமிழனு​டையதல்ல.
இந்நி​லையில் தமிழன் என்ற அ​டையாளம் சரியா?

நமக்குத் ​தொடர்பில்லாத சாதி​யைக் கட்டிக்காக்கி​றோம்.
நமது இலக்கியங்களில் கூட ​சொல்லப்படாத இந்து என்ற அ​​டையாளத்​தை ஏற்றுக்​கொண்டிருக்கி​றோம்.

நமது  சமுதாயத்​தை இழிவுபடுத்துகிற மதம், கடவுள், ​வேதம், இதிகாசங்கள், சாதிய அ​மைப்பு, பக்தி  இ​வை எல்லாவற்​றையும் ஏற்றுக்​கொண்டு தமிழன் தமிழன் என்று ​சொன்னால், நாம் தமிழன் என்பதற்கு என்ன அ​டையாளத்​தை ​வைத்திருக்கி​றோம் என்பதுதான் ​​பெரியாரின் ​கேள்வி.

இன்​றைக்கும்  ​பெரியாரின்  அந்தக் ​கொள்​கைக​ளை முன்​னெடுப்பதற்கான ​தே​வை இருக்கிறதா  இல்​லையா?

Monday, April 9, 2012

செல்லப்பிராணிக்கும் நல்ல வாழ்க்கை கொடுப்போம்


இன்று (9.4.12) மக்கள் தொலைக்காட்சியின் செல்லப்பிராணிகள் நிகழ்ச்சியில் வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பது மாதிரி வீட்டுக்கொரு செல்லப்பிராணி வளர்க்கவேண்டும் என்றார் நிகழ்ச்சித்தொகுப்பாளர்.

மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் என்றார். சரிதான். (செல்லப்பிராணிக்கும் கிடைக்குமா தெரியவில்லை)

அடுத்ததாக "எல்லோரும் செல்லப்பிராணிகள் வளர்த்து அவற்றுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை கொடுப்போம்(???!) என்றார்.

எனக்கு கல்யாண்ஜியின் கவிதையொன்று நினைவுக்கு வந்தது.

பேசும் கேள் என் கிளி என்றான்
கூண்டைக்காட்டி
வால் இல்லை
வீசிப்பறக்க சிறகில்லை
வானம் கைப்பட வழியில்லை
பார் பார் இப்போது பேசும் என
மீண்டும் மீண்டும் அவன் சொல்ல
பறவை என்றால் பறப்பது எனும்
பாடம் முதலில் படி என்றேன்.

Thursday, April 5, 2012

தமிழுக்கு அமுதென்று பேர் - நாகூர் இ.எம்.ஹனிபா பாடியது

தமிழுக்கு அமுதென்று பேர் என்று உணர்வுப்பூர்வமாக இந்த இசுலாமியப் பெரியவர் பாடுகிறார். அரங்கம் இசுலாமியர்களால் நிறைந்திருக்கிறது. 

பார்ப்பான் தமிழை நீசபாஷை என்கிறான். கோயிலுக்குள் தமிழுக்கு தடைவிதிக்கிறான். அந்தப்பார்ப்பானுக்கும் இந்துமதத்துக்கும் நம்மவர்கள் ஜல்ரா. இதற்கெதிராக ஒரு ஆணியைக்கூட புடுங்கமுடியாதவனெல்லாம்தான் திராவிட இயக்கங்களை கொச்சைப்படுத்தக் கிளம்பிவிட்டான். 


Tuesday, April 3, 2012

விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்தும் சீமான்


சீமான் பல கூட்டங்களில் தனது தொண்டரடிப்பொடிகளை மகிழ்விக்க உடல்முறுக்கி, வீரதீர சாகசப் பயிற்சிகள் செய்வதுண்டு. தனது பேச்சை உடற்பயிற்சி என்று அவ​ரேதான் சொல்லியிருக்கிறார். 

அப்படி உடற்பயிற்சியாகிப்போன அவரது பேச்சில் பொருள் தேடுவதோ, கருத்துப்பிழைகளைப் பார்ப்பதோ நம்முடைய தவறுதான். இருந்தாலும் அவர் அடிக்கடி உளறும் ஒரு விடயத்தைப் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன். கடந்த அணுஉலை மாநாட்டில் கூட காலையில் அப்படி உளறினார்.

சீமானின் பேச்சிலிருந்து....
"புலிகளின் பணம் 2500 கோடி சீமானிடம் உள்ளது என்கிறார்கள். 2500கோடிப் பணம் இருந்திருந்தால் சண்டை ஏண்டா போடப்போறோம். ராஜபக்சேவுக்கு 500 கோடி கொடுத்து நாட்டைப் பிடிச்சிருப்போம்".

கரும்புலியானதும் ஆயுதம் தரித்ததும் வெட்டிவேலை என்கிறார் போலும் சீமான். புலிகளின் போராட்டத்தை சீமான் அளவுக்கு கொச்சைப்படுத்தியவர்கள் யாரேனும் உண்டா தெரியவில்லை.

இன்னது பேசுகிறோம் என்ற தன்மதிப்பீடு இல்லாமல் உளறும் சீமானுக்கு அவரது தொண்டரடிப்பொடிகளின் வரவேற்புதான் கேவலத்திலும் கேவலம். இவர்கள் தான் இப்போ அண்ணனின் திராவிட இயக்க எதிர்ப்பு உளறலுக்கு ஜால்ராக்கள்.

கவிஞர் வைரமுத்து மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு. ஆனால் திராவிடர் அரசியலை கொச்சைப்படுத்த நினைக்கும் சிலரைப் பார்க்கையில் அவரது கவிதையில் ஒன்று எனக்கு அடிக்கடி நினைவு வரும். காலமே என்னைக் காப்பாற்று என்ற நீண்ட கவிதையில், "ஒரே ஒரு புத்தகம் படித்த அறிவாளியிடமிருந்தும் காலமே என்னைக் காப்பாற்று!" என்ற வரிகள் அவை. 

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற ஒரே ஒரு புத்தகம் படித்த அறிவாளிகள் திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள். இவர்களுக்கு திராவிடர் இயக்கம் தமிழர்களுக்கு ஆற்றிய பணிக​ளை அறியும் ஆவல் இல்​லை. படிப்புச் ​சோம்​பேறிகள். படிக்காமல் பிறர் வாந்தி எடுத்ததை உண்டு வாந்தி எடுக்கும் அறிவாளிகள் தாம் நாம் தமிழர்.