திங்கள், 9 ஏப்ரல், 2012

செல்லப்பிராணிக்கும் நல்ல வாழ்க்கை கொடுப்போம்


இன்று (9.4.12) மக்கள் தொலைக்காட்சியின் செல்லப்பிராணிகள் நிகழ்ச்சியில் வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பது மாதிரி வீட்டுக்கொரு செல்லப்பிராணி வளர்க்கவேண்டும் என்றார் நிகழ்ச்சித்தொகுப்பாளர்.

மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் என்றார். சரிதான். (செல்லப்பிராணிக்கும் கிடைக்குமா தெரியவில்லை)

அடுத்ததாக "எல்லோரும் செல்லப்பிராணிகள் வளர்த்து அவற்றுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை கொடுப்போம்(???!) என்றார்.

எனக்கு கல்யாண்ஜியின் கவிதையொன்று நினைவுக்கு வந்தது.

பேசும் கேள் என் கிளி என்றான்
கூண்டைக்காட்டி
வால் இல்லை
வீசிப்பறக்க சிறகில்லை
வானம் கைப்பட வழியில்லை
பார் பார் இப்போது பேசும் என
மீண்டும் மீண்டும் அவன் சொல்ல
பறவை என்றால் பறப்பது எனும்
பாடம் முதலில் படி என்றேன்.

5 கருத்துகள்:

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

முதல் மனிதருக்கு நல்வாழ்வு கொடுப்பது பற்றிச் சிந்திப்போம்.
அடுத்து நாய், பூனை தவிர ஏனையவையை செல்லப்பிராணியாக வளர்ப்பதைத் தடை செய்யவேண்டும்.
கோவில்களில் யானையைக் கட்டி வைப்பதற்கும் உடனடி நடவடிக்கை வேண்டும்.

தமிழானவன் சொன்னது…

கவிதை நல்லா இருக்கு. உங்கள் கருத்தையே கொஞ்சம் வெட்டி மடக்கி எழுதியிருந்தால் அதுவும் கவிதையாயிருக்கும்

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

அருமை!வாழ்க வளர்க!

koodal bala சொன்னது…

அருமை!

குரங்குபெடல் சொன்னது…

கிளி படத்தை பாத்து சுமுகமான விஷயம்னு நெனச்சேன் . . .

இதிலயும் ஊமைக்குத்து தானா ?

நல்ல பகிர்வு . . நன்றி