Thursday, May 31, 2012

நான் ஏன் தமிழைப் போற்றுகிறேன்? - பெரியார்தோழர்களே!

தலைவர் அவர்கள் என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் முறையில் தமிழில் மிகப் பரிச்சயமுள்ளவன் என்றும், தமிழுக்கு ஆக மிகவும் உழைக்கிறவன் என்றும், மேல்நாடு சுற்றுப்பிரயாணம் செய்தவனென்றும் கூறி, இக்கூட்டம் சர்க்கார் சம்பந்தமான பள்ளியின் மாணவர் கூட்டம் என்றும், இதற்கு ஏற்றவண்ணம் எனது உபந்நியாசம் இருக்குமென்று எதிர்பார்ப்பதாகவும் மற்றும் பல சொற்களோடு அறிமுகப்படுத்தினார்கள்.

முதலில் நான் அவரது பாராட்டுதலுக்கும், புகழ் வார்த்தைகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

தமிழ் பாஷை

நான் தமிழில் நிரம்பவும் பரிச்சயம் உள்ளவன் என்பதைக் கேட்டபோது நான் வெட்கமடைந்தேன். நான் பள்ளியில் படித்ததெல்லாம் மிக சொற்ப காலமேயாகும். திண்ணைப் பள்ளிக் கூடத்தில் 3 வருஷமும், ஸ்கூல் பள்ளிக் கூடம் என்னும் ஆங்கில முறைப் பள்ளிக் கூடத்தில் 2,3 வருஷமும்தான் படித்தவன். என்னை என் வீட்டார் படிக்க வைக்கக் கருதியதெல்லாம் வீட்டில் என்னுடைய தொல்லை பொறுக்கமாட்டாமல் என்னை பள்ளியில் வைத்துக் கொண்டிருப்பதற்காகவே ஒழிய, நான் படிப்பேன் என்பதற்காக அல்ல என்பதை நான் பெற்றோர்களிடமிருந்தே உணர்ந்தேன். காரணம் என்னவென்றால், எனக்குப் படிப்பே வராது என்று அவர்கள் முடிவு கட்டி விட்டதாகவும், நான் மிகவும் துடுக்கான பிள்ளையாய் இருந்ததாகவும் ஆதலால், என்னை பள்ளியில் பகலெல்லாம் பிடித்துவைத்து இருந்து இரவில் வீட்டிற்கனுப்பினால் போதுமென்று கருதியதாகவும் சொன்னார்கள். அக் காலத்தில் பிள்ளைகள் காலை 5 மணி முதல் 6 மணிக்குள்ளாகவே பள்ளிக்குப் போய் விடுவார்கள். வீட்டிற்கு சாப்பாட்டிற்கு செல்லும்போது ஒவ்வொரு மாணவனும் எச்சில் துப்பி விட்டுப்போய், அது காய்ந்து போவதற்கு முன்பே வந்து சேர வேண்டுமென்று உபாத்தியாயர் சொல்லி அனுப்புவார். அம்மாதிரியாக ஒரு மாணவனின் நேரமெல்லாம் பள்ளிக்கூடத்திலேயே கழியும். அப்படிப்பட்ட பள்ளிக்கூடத்திலும் நான் படித்ததெல்லாம் நாலுவார்த்தை பிழையறக் கூட எழுத முடியாது என்பது தான். அப்படிப்பட்ட நான் காலேஜ் வகுப்பு மாணவர்களுக்கு, அதுவும் தமிழ் பாஷை என்பதைப் பற்றி, அதுவும் விவாதத்துக்கு இடமில்லாமல் பேச வேண்டும் என்றால், எனது நிலை எப்படிப்பட்ட சங்கடமானது என்பதை நான் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.

பொதுவாகவே பள்ளிக் கூடங்களிலும், வெளியிலும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் விஷயத்திலேயே மிக நிர்ப்பந்தமுண்டு. இன்ன இன்ன விஷயம்தான் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நியதி இருக்கிறது. அதோடு நான் அரசியல் சமுதாயத் திட்டங்களில் சம்பந்தப்பட்டவனானதால் அவற்றைப் பற்றி இங்கு பேசக்கூடாத இடமாகவும் இருக்கிறது. தவிரவும், என்னை இங்கு அழைக்கும் விஷயத்திலும் பல அபிப்பிராயபேதம் ஏற்பட்டு, ஏதோ சில நிபந்தனைகள் மீது என்னை அழைக்க அனுமதி பெற்றதாக இச்சங்கக் காரியதரிசி சொன்னார். ஆகவே, எனக்குத் தெரியாத விஷயத்தைப் பேசவேண்டிய வனாக இருக்கிறேன் என்பதோடு, எவ்வளவோ நிர்ப்பந்தங்களுக்குள் - நிபந்தனைகளுக்குள் பேச வேண்டியவனாய் இருக்கிறேன் என்பதை எண்ணும் போது, நான் எனக்குத் தெரிந்ததைக்கூட பேச முடியாமல் போகும்படியான கஷ்டம் ஏற்பட்டு விடும்போல் இருக்கிறது. மீறி ஏதாவது பேசிவிட்டால் பள்ளி அதிகாரிகள் நாளைக்கு மேல் அதிகாரிகளுக்குப் பதில் சொல்லவேண்டிய கஷ்டத்திற்கு ஆளாகி விடுவார்களே என்று பயப்பட வேண்டியவனாய் இருக்கிறபடியால், கூடியவரை அடக்கமாகவே நான் பேசுவதைக் கொண்டு திருப்தி அடையுங்கள் என்று மாணவர்களாகிய உங்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

தாய் பாஷையும் - தமிழ்ப் பற்றும்

தாய் பாஷையாகிய தமிழ் பாஷையில் எனக்கு அபாரபற்று என்று தலைவர் சொன்னார். அதற்காகவே பாடுபடுகிறேன் என்றும் சொன்னார்.

தாய் பாஷை என்பதற்காகவோ, நாட்டு பாஷை என்பதற்காகவோ எனக்கு தமிழ் பாஷையிடம் எவ்விதப் பற்றும் இல்லை. அல்லது தமிழ் என்பதற்காகவோ, மிகப் பழைய பாஷை சிவபெருமான் பேசிய பாஷை என்பதற்காகவோ, அகத்தியரால் உண்டாக்கப்பட்ட பாஷை என்பதற்காகவோ, எனக்கு அதில் பற்றில்லை. வஸ்துவுக்காக என்று எனக்கு ஒன்றினிடத்திலும் பற்று கிடையாது. அது மூடப்பற்று - மூட பக்தியே ஆகும். குணத்திற்காகவும், அக் குணத்தினால் ஏற்படும் நற்பயனுக்காகவும் தான் நான் எதனிடத்திலும் பற்று வைக்கக்கூடும். எனது பாஷை, எனது தேசம், எனது மதம், என்பதற்காகவோ, எனது பழமையானது என்பதற்காகவோ ஒன்றையும் நான் பாராட்டுவதில்லை.

எனது நாடு எனது லட்சியத்துக்கு உதவாது என்று கருதினால் - உதவும்படி செய்யமுடியாது என்று கருதினால் உடனே விட்டுவிட்டுப் போய்விடுவேன். அது போலவே எனது பாஷை என்பதானது எனது லட்சியத்துக்கு, எனது மக்கள் முற்போக்கடைவதற்கு, மானத்துடன் வாழ்வதற்குப் பயனளிக்காது என்று கருதினால் உடனே அதை விட்டுவிட்டு பயனளிக்கக் கூடியதைப் பின்பற்றுவேன். மனிதனுக்குப் பற்றுதலும், அன்பும், பக்தியும் எல்லாம் வியாபாரமுறையில் லாப நஷ்டக்கணக்குப் பார்த்துத்தானே ஒழிய, தனது நாட்டினது தனது பெரியார்களுடையது என்பதற்காக அல்ல.

அன்பு என்பது...

உதாரணமாக புருஷன், மனைவியர், மகள், தாய், தகப்பன் முதலாகிய எல்லாரிடத்திலும் ஒருவருக்கொருவர் காட்டும் அன்புக்கும், பற்றுதலுக்கும்கூட வியாபார முறையும், எதிர்பார்க்கும் பலாபலன்களும்தான் ஆதாரமே தவிர, அவற்றில் பற்றிக் கொண்டிருக்கும் இயற்கை அன்பு என்பது எதுவும் இல்லை. புருஷன் - மனைவியை எடுத்துக் கொள்ளுங்கள். மனைவி செத்தால் புருஷனுக்கு கொஞ்ச நாளைக்குத்தான் துக்கம் இருக்கும். புருஷன் செத்தால் மனைவிக்கு சாகும்வரையும் அல்லது நீண்ட நாளைக்கு இருக்கும். மறுவிவாகம் செய்து கொள்ளும் வகுப்பாய் இருந்தால் ஒரு சமயம் பெண்ணுக்கும் சீக்கிரத்தில் துக்கம் ஆறி, மறந்துபோகும். தகப்பனுக்கும் - பிள்ளைக்கும் கூட பிறந்த உடன் பிள்ளை செத்துவிட்டால் பிள்ளையைப் பற்றி தகப்பனுக்கு அவ்வளவு துக்கம் இருக்காது. 90 வயதாகிச் சம்பாதிக்கத் திறமையற்று, மகனுக்கு இனி எந்த விதத்திலும் தகப்பனால் பயனில்லை தொல்லைதான் அதிகப்படும் என்கின்ற நிலையில் தகப்பன் இறந்துவிட்டால், பிள்ளைக்கு அவ்வளவு துக்கம் இருக்காது. தாய் தந்தையர்கூட ஆண்பிள்ளை இறந்துபோனால் படுகிற துக்கத்தின் அளவு பெண்பிள்ளைக்குப் படுவதில்லை, தாசிகளில் பெண்பிள்ளை இறந்து போனால் படுகிற துக்க அளவு ஆண் பிள்ளை இறந்து போனால் படுவதில்லை. மற்றபடி எந்த விதத்திலோ ஒருவரிடம் ஒருவர் பலன் அனுபவிக்க இருக்கும் சமயத்தில் மகிழ்ச்சியோ, இன்பமோ, புகழோ, திருப்தியோ அனுபவிக்க இருக்கும் சமயத்தில் ஒருவர் இறந்து போனால் ஒருவர் துக்கம் அனுபவிப்பதும், அது இல்லாதவிடத்தில் அவ்வளவு இல்லாதிருப்பதும் இயல்பேயாகும்.

அதுபோல்தான் நான் தமிழினிடத்தில் அன்பு வைத்திருக்கிறேன் என்றால், அதனிடத்தில் அதன்மூலம் நான் எதிர்பார்க்கும் நன்மையும், அது மறைய நேர்ந்தால் அதனால் நஷ்ட மேற்படும் அளவையும் உத்தேசித்தே நான் தமிழினிடம் அன்பு செலுத்துகிறேன்.

அப்படியேதான் மற்றொரு பாஷை நமது நாட்டில் புகுத்தப்படுவதைப் பார்த்து, அதனால் நமக்கு ஏற்படும் நஷ்டத்தை அறிந்து சகிக்க முடியாமல் தான் எதிர்க்கிறேனே ஒழிய புதியது என்றோ, வேறு நாட்டினது என்றோ நான் எதிர்க்கவில்லை.

நாடும் - காலமும்

ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் ஒருவித பழக்க வழக்கமும், அவைகளிடத்தில் சில விருப்பு வெறுப்பும் இருந்து வருவதுடன் விருப்பமானதைப் பெருக்கவும், வெறுப்பானதை ஒழிக்கவும் முயற்சிப்பதுமுண்டு. ஒரு நாட்டு விஷயம் மற்ற நாட்டாருக்குப் பிடிக்காமலும் இருக்கலாம்.

ஒரு நாட்டு விஷயம் மற்ற நாட்டாருக்கு பிடிக்கக்கூடியதாகவும் பின்பற்றக்கூடியதாகவும் இருக்கலாம். ஆதலால், அந்நிய நாட்டினது என்பதற்காகவும், பழையது - புதியது என்பதற்காகவும் எதனிடமும் விருப்பு வெறுப்பு இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர்களின் சமுதாய வாழ்க்கையின் பழைய நிலை இன்றைய நிலையைவிட மேலானது என்று கருதுகிற ஒருவன், உண்மையில் பாஷை சம்பந்தமாக அப் பழைய நிலை ஏற்படக் கூடும் என்று கருதினால், அந்தப் பாஷைக்காக அவன் போராடவேண்டியவனே ஆவான். மற்ற நாட்டு பாஷை எதினாலாவது நமது நிலைமேலும் உயரும் என்று கருதினால் அந்தப் பாஷையையும் வரவேற்க வேண்டியவனேயாவான்.

இன்று சில தேசியவாதிகள் அந்நிய நாட்டு பாஷையான இங்கிலீஷை நீ ஏன் எதிர்க்கவில்லை என்றுகூட என்னைக் கேட்கிறார்கள். இங்கிலீஷால் தீமை இல்லாததோடு நாட்டு மக்கள் முன்னேற்றத்திற்கான விஷயம் பல இங்கிலீஷில் இருக்கின்றன என்றுகூட சொல்வேன். இது என் அபிப்பிராய மாத்திரமல்ல. இந்திய மேதாவிகள், உலகப் புகழ்பெற்ற இந்தியப் பிரமுகர்கள் என்பவர்கள் எல்லாம் இந்தியர்களுக்கு இங்கிலீஷ் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படிச் சொன்னவர்கள் எல்லாம் இன்று அபிப்பிராயபேத மன்னியில் போற்றப்படுகிறார்கள். ஆதலால், விரும்புவதற்கும், வெறுப்பதற்கும் அதனதன் பலன்தான் காரணம் என்பதை, உங்களுக்கு மறுபடியும் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ், இந்த நாட்டு மக்களுக்கு சகல துறைக்கும் முன்னேற்றமளிக்கக் கூடியதும், சுதந்திரத்தை அளிக்கக்கூடியதும், மானத்துடனும் பகுத்தறிவுடனும் வாழத் தக்க வாழ்க்கை அளிக்கக் கூடியதும் என்பது எனது அபிப்பிராயம். ஆனால், அப்படிப்பட்டவை எல்லாம் தமிழிலேயே இருக்கிறதா என்று சிலர் கேட்கலாம் - எல்லாம் இல்லை என்றாலும், மற்ற அநேக இந்திய பாஷையை விட அதிகமான முன்னேற்றம் தமிழ் மக்களுக்கு அளிக்கக்கூடிய கலைகள், பழக்க வழக்கங்கள், அதற்கேற்ற சொற்கள் தமிழில் இருக்கின்றன என அறிகிறேன். ஆதலால், தமிழுக்குக் கேடு உண்டாக்கும் என சந்தேகப்படத்தக்க வேறு எந்தப் பாஷையும் விரும்பத்தகாததேயாகும்.

பழங்காலம்

பழம் பெரியோர்கள், முன்னோர்கள் செய்தார்கள் - சொன்னார்கள் என்பதற்காகவும் நாம் பயந்து எதையும் ஏற்றுக் கொள்கிற மாதிரியில் அல்ல எனது அன்பும் பற்றுதலும். யார் என்ன சொன்ன போதிலும் வாழ்க்கைத் துறையில் நம் முன்னோர்களைவிட, பழம் பெரியோர்களைவிட, நாம் முன்னேற்றமடைந்தவர்களே ஆவோம். ஏனெனில், பழங்காலத்தில் இல்லாத சாதனங்களும், சுற்றுச்சார்புகளும் இன்று நமக்கு இருந்துவருகின்றன. இதன் மூலம் நாம் எவ்வளவோ முற்போக்கும் வாழ்க்கை சவுகரியமும், மேன்மையும் அடைந்திருக்கிறோம். இனியும் எவ்வளவோ காரியங்களில் நம் பின் சந்ததியார்கள் அடையப் போகிறார்கள்.

முற்காலத்தில் யாரோ ஒரு சிலர், ஏதோ தெய்வீக சக்தியின் பேரால் என்னமோ ஒரு ஆச்சரியமான காரியத்தை அனுபவித்ததாகச் சொல்லப்படும் அநேக காரியங்கள் எவ்வித தெய்வீக சம்பந்தமும் இல்லாமல் அநேக மக்கள் அடைந்து வருகிறார்கள். இதனாலேயே அக்கால பழைய கால மக்களை நான் மூடர்கள் என்று குறைகூறவில்லை. அக்கால மக்களுக்கு இருந்த வசதியும், சுற்றுச் சார்பும் கொண்டு அவ்வளவுதான் அவர்களால் செய்ய முடிந்தது. இக்கால மக்களுக்குள்ள வசதியும், சுற்றுச்சார்பும் கொண்டு இவ்வளவும், இதற்கு மேம்பட்டதும் செய்ய முடிகிறது என்கிறேன்.

இதனாலேயே பழைய காலத்தில் இந்தச் வசதிகள் இருந்ததில்லை என்று சொல்ல முடியுமா என்று சில பழமைப் பெருமையர்கள் கேட்கலாம். பழங்காலத்தில் இந்த வசதிகளும், இந்த சுற்றுச் சார்புகளும் இருந்திருக்கலாம். ஆனால், அவைகளும், அவற்றால் ஏற்பட்ட பலன்களும் உடையனவாய் இருந்த நாடும், மக்களும் கடல் கொண்டுபோய் இருக்கலாம்; பூகம்பத்தால் மறைந்தொழிந்து போயிருக்கலாம்; அல்லது வெள்ளம், புயல் அழித்திருக்கலாம். இப்போது நமக்கு ஆராய்ச்சி யோசனைக்கு - ஆதாரத்திற்கு எட்டிய பழமை அ,ஆ,வில் இருந்து தான் ஆரம்பித்து பண்டிதத் தன்மைக்குப் போய்க் கொண்டிருப்பதைக் காண்கிறோம். ஆகையால், பெரும்பான்மையான விஷயங்கள் பழமையைவிட புதுமை மேன்மையாய் இருக்கும் என்பது எனது அபிப்பிராயம். இவற்றையெல்லாம் மாணக்கர்களாகிய உங்களுக்குத்தான் சொல்லுகிறேனே ஒழிய, பெரியவர்களுக்கு அல்ல. நீங்கள் யாவற்றையும் யோசித்து, பிறரிடமும் கேட்டு தெரிந்து முடிவுக்கு வர வேண்டும்.

தமிழ், தாய் பாஷை என்ற உரிமைக்காகப் பாராட்ட வேண்டும் என்றும் யாரும் கருதிவிடாதீர்கள். நம் தாய் நமக்குக் கற்பித்த பாஷை நமக்கு இன்று பயன்படாது. நாம் பயன்படுத்துவதுமில்லை. உதாரணமாக, பாலுக்கு பாச்சி என்றும், சோற்றுக்கு சோச்சி என்றும், படுத்துக்கொள்வதற்கு சாச்சி என்றும் சொல்லிக் கொடுத்தார்கள். இன்று நாம் அவற்றையா பயன்படுத்துகிறோம்? அது போலவே பாஷைகள் காலத்துக்குத் தக்கபடி, பருவத்திற்குத் தக்கபடி, நிலைமைக்குத் தக்கபடி தானாகவே மாற்றமடையும். தமிழ்நாட்டில் பழமையில் - அதாவது பாஷை ஏற்படும் காலத்தில் இல்லாத பல காரியங்கள் அரசியல் காரணமாகவும், சுற்றுச்சார்பு காரணமாகவும் இப்போது ஏற்பட்டு, அவற்றிற்காக பல அந்நிய பாஷை வார்த்தைகள் இன்று பழக்கத்தில் இருக்கின்றன. இந்நிலையில் அந்நிய பாஷை வார்த்தைகளே கூடாது என்று நம்மால் சொல்லிவிட முடியுமா? அவசியமானவற்றை வைத்துக்கொள்ள வேண்டும். அவசியமில்லாவிட்டாலும் கேடில்லாததாக இருந்தால் அவைகளைப்பற்றிக் கவலை இல்லாமல் இருந்து விடலாம்.

கேடு பயப்பவைகளை வார்த்தைகளானாலும், கலைகளானாலும், இலக்கியங்களானாலும் ஒதுக்கிவிட வேண்டியதேயாகும். இந்தக் கருத்தின் மீது கண்ட உண்மையினால்தான் நான் தமிழை ஆதரிப்பதும், மற்ற பாஷையை எதிர்ப்பதும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழர்களே! இவ்வளவுதான் இந்த இடத்தில் தமிழ் பாஷை என்பதைப்பற்றி நான் உங்களுக்குச் சொல்ல முடிந்தவை என்று கருதுகிறேன். இதற்கு மேற்பட்டுச் சொல்லுவது இந்த இடத்துக்கு ஏற்றது அல்ல என்று கருதி இவ்வளவோடு நிறுத்திக்கொள்ளுகிறேன்.

-----------

21.7.1939 அன்று கோயமுத்தூர் அரசினர் கல்லூரியில் தமிழ்க் கழக மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு-”குடிஅரசு” - 06.08.1939

அனுப்பி உதவியவர்:-தமிழ் ஓவியா
நன்றி: கீற்று 

பெண்ணுரிமையை இழிவு செய்யும் நாம் தமிழர்

நாம் தமிழர் புதுச்சேரி:

//"இந்த இனத்தில் இந்த மொழிக்கு பிறந்தவனின் பேச்சு எப்படி இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும் என்று.. 
ஏனென்றால் பல நாட்டை சேர்ந்தவனும் இங்கு வந்து போய் இருக்கிறான்.. அதில் பலபேரு தனியா வந்து போய் இருக்கிறான்.. யாராவது உங்க வீட்டு பக்கம் வந்து இருக்க போகிறான்.. கொஞ்சம் கேட்ட தெளிவாய்க்கங்க செல்லையா.."//

நான் மனித உரிமையை மதிப்பவன். அதில் பெண்ணுரிமையும் அடங்கும். எனவே என் அம்மாவின் பாலியல் உரிமை என்பது அவருடையதுதானே தவிர அதைக் கேள்வி கேட்கிற அளவிற்கு கற்புநெறி பேசும் மட்டமான ஆள் இல்லை நான். பெண்களின் கற்பு காக்க நாம் தமிழர் ஆட்கள் அவரவர் வீட்டில் கட்டிலுக்கு அடியில் படுத்துக் கிடப்பார்கள் போலும். 

நாங்கள் பெரியார் வழி நடப்பவர்கள்.  பெரியார் சொல்கிறார்: 

தமிழ் உயர்மொழியானால், தமிழன் கலப்படமற்ற சுத்தப் பிறவியானால், தமிழ் பேசுகிறவன் தமிழன் என்கிற காரணத்திற்காக உன்னை சூத்திரன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்று கடவுள் சொன்னதாக சாஸ்திரம் எழுதி வைத்து, 'கீதை' வெங்காயம் சொல்லுகிறது என்று சொல்லி உன்னை தீண்டத்தகாத ஜாதியாக பார்ப்பானும், அவன் பொண்டாட்டி, பிள்ளை, ஆத்தாள், அக்காளும் நடத்துகிறார்களே; நீ நாக்கைப் பிடிங்கிக்கொண்டாயா? நீ யாருக்குப் பிறந்தாய் என்பது பற்றி சிறிதளவாவது சிந்தித்து இருந்தால், என்னை நீ யாருக்குப் பிறந்தாய் என்று கேட்டு இருக்கமாட்டாய்.

எனக்கு நான் யாருக்குப் பிறந்தேன் என்பது பற்றிக் கவலை இல்லை. அது என் அம்மா சிந்திக்கவேண்டிய காரியம். நான் யாருக்குப் பிறந்தேன் என்று என்னாலும் சொல்லமுடியாது; தம்பீ உன்னாலும், அதாவது நீ யாருக்குப் பிறந்தாய் என்று (உன்னாலும்) சொல்லமுடியாது; அந்தப் பிரச்சனையே முட்டாளுக்கும், அயோக்கியனுக்கும்தான் தேவை.

யாருக்குப் பிறந்தாலும் மனிதனுக்கு மானம் தேவை; அது உன்னிடம் இருக்கிறதா, என்னிடம் இருக்கிறதா என்பதுதான் இப்போது சிந்திக்கவேண்டிய தேவை.

அதையும் விட தமிழ்மொழியிலும், தமிழ்ச் சமுதாயத்திலும் இருக்கிறதா? இருப்பதற்கு தமிழ் உதவியதா? உதவுகிறதா? என்பதுதான் முக்கிமான, முதலாவதான கேள்வி.

- தமிழும் தமிழரும் நூலில்.

பன்மொழியறிவுக்கு பெருந்தமிழர் சீமான் தரும் எளிய பயிற்சி.


சீமானை அவ்வளவு எளிதாக கோமாளி என்று நாம் முடிவு செய்வது தவறென்று உணர்கிறேன். அவரிடம் நிறைய செய்திகள் இருக்கின்றன.

நாக்கில் தமிழ் வராதவர்களுக்கெல்லாம் தமிழை வரவைக்க மரம் தேய்க்கும் உப்புத்தாள் கொண்டு தேய்க்கிற காலம் வருமாம்.

மொழியறிவு தங்கியிருக்கிற இடம் நாக்குதான் என்று இப்போதுதான் சீமான் மூலமாக அறிந்துகொள்கிறேன். மேலும், மொழியைப் பயிற்றுவிக்க ஆசிரியர்களுக்குப் பதில் 'பட்டி' பார்ப்பவர்களையே பணியமர்த்தலாம் என்ற முடிவுக்கும் நாம் வரமுடிகிறது.

பலமொழிகள் கற்பதில் விருப்பமுடையவனாயிருந்தும் எனக்குத் தமிழ் மட்டும்தான் தெரிகிறது. ஆங்கில உப்புத்தாள், பிரெஞ்சு உப்புத்தாள் இப்படி பன்மொழிப் புலமைக்கான உப்புத்தாள்கள் கிடைக்குமிடத்தை பெருந்தமிழர் சீமான் அவர்கள் அடுத்த கூட்டத்தில் திருவாய் மலர்ந்தால் கப்பென்று கவ்விக்கொள்வேன்.

உப்புத்தாள் பயிற்சிக்கும் பலன் இல்லையெனில், தமிழ்த் தெய்வம் குடியிருக்குமிடம் நாக்குதான் என்பதால், செத்துப்போன பெருந்தமிழர்களின் நாக்கை வெட்டி தமிழ் பேச விழைவோருக்கு பொருத்தவும் பெருந்தமிழர் சீமானே முதல்வராகி உத்தரவிடவேண்டும்.

தமிழர்கள் தமிழில் பேசவேண்டும் என்ற அக்கறையுடன் பெருந்தமிழர் சீமானால் மேற்கொள்ளப்படும் பரப்புரையை சிங்களவன், கன்னடன் ஆகியோரது மொழிவெறியுடன் ஒப்பிட்டால் நீங்கள் திராவிடக் குஞ்சாகத்தான் இருக்க முடியும்.

முகநூல் எதிர்வினைகள்...

Muniyan Murugan ‎. அவரிடம் நிறைய செய்திகள் இருக்கின்றன.//ஜெயலட்சுமிய எப்படி க்ரட் பன்னுவது என்பதை இன்னும் சொல்லவில்லை அந்த செய்தியா நண்பரே!

Niyaayath Tharaasu அவரது கொள்கைகள் பிடிக்கவில்லையென்றால் விமர்சிப்பதற்கு உங்களுக்கு முழு உரிமையுண்டு... ஆனால் இந்தப்படம்???

தமிழில் பதிப்போ, embroideryயோ செய்யும் எத்தனை நிறுவனங்கள் உள்ளன....

Mozhi Tees ஒன்று தான் எனக்குத் தெரிந்தது.. உங்களுக்கு தெரிந்த லிஸ்ட்டை பதிவிடவும்...இது முற்றிலும் தவறு செல்லையா முத்துச்சாமி...

செல்லையா முத்துசாமி ஜெயலட்சுமியா அவர் யார்? பெருந்தமிழரின் அந்தப்புரத்திற்கெல்லாம் நான் செல்வதில்லை. செல்லவும் மாட்டேன். அது அவர் பாடு.

Muniyan Murugan விஜயலட்சுமி,சாரி ஜெயலட்சுமினு எழுதிவிட்டேன்.

Muniyan Murugan இனி தமிழன் தைத்த சட்டயை மட்டும் தான் போடுவேன் என்று சொல்லபோகிறார்!!

செல்லையா முத்துசாமி நான் பெருந்தமிழரின் மொழிச் சிந்தனைகளுக்காகவே இப்பதிவை இட்டுள்ளேன் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா நியாயத்தராசு.

Niyaayath Tharaasu என்னுடைய கேள்வி படம் சார்ந்தது மட்டுமே... என் மறுமொழியை நன்கு வாசியுங்கள் தோழர்...

செல்லையா முத்துசாமி பெருந்தமிழரின் சிந்தனை வயப்பட்ட மாதிரியான படத்தை இணையத்தில் தேடினேன். கிடைத்த படத்தில் பெருந்தமிழரின் சட்டையில் தமிழல்லாத எழுத்துக்கள் இருக்கக் கண்டு தமிழர்கள் அவரைத் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற உயர்ந்த நோக்கில்தான் குறிப்புடன் வெளியிட்டேன்.

பாக்கியராசன் சே ‎:) நல்லவேளை சட்டையை பார்த்தீர்கள் :)

செல்லையா முத்துசாமி இது சட்டை தொடர்பானதாக திசை திருப்ப பாக்கியராசன் முனைகிறார். தமிழன் தொலைக்காட்சியில் 27 மே அன்று ஒளிபரப்பான பெருந்தமிழர் சீமானின் பேச்சில் உப்புத்தாள் கொண்டு நாக்கைத் தேய்த்து மொழியறிவூட்டுகிற புதுமையான முயற்சி தொடர்பானது மட்டுமே இப்பதிவு. (இதைச் சொல்ல வேண்டியநிலைமை உருவாகிவிட்டது பாருங்கள்!)

இந்திய ஒருமைப் பாட்டைக் காப்பாற்ற நாம் தமிழர் கட்சி அறைகூவல்!

‘நாம் தமிழர் கட்சி’யின் கொள்கை ஆவணம், கோவையில் கடந்த 18 ஆம் தேதி வெளியிடப்பட் டுள்ளது. மக்களிடம் கட்சிக் கொள்கையாக முன் வைக்கப்பட்டுள்ள அந்த ஆவணம், பெரியாரை தமிழினத்தின் பகைவராக சித்தரிக்கிறது.

திராவிட எதிர்ப்பு என்ற போர்வையில், பெரியார் எதிர்ப்பை முன் வைத்து,பார்ப்பனர்களுடன் நேச சக்திகளாக அடையாளம் காட்டிக் கொள்ள முன் வந்திருக்கும் சில குழுக்களோடு, நாம் தமிழர் கட்சியும், தன்னை இணைத்துக் கொள்ள முன் வந்திருக்கிறது. 

பெரியார் முன் வைத்த கருத்துகள் தமிழர்களையும் ஏமாற்றும் நோக்கம் கொண்டவை. அவைகளில் தமிழர்களை அடிமைப்படுத்தும் உள்நோக்கம் இருந்தது என்றும் அந்த ஆவணம் கூறுகிறது. அந்த ஆவணத்தில் பெரியாருக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள சில கருத்துகளை மட்டும் அப்படியே இங்கு பதிவு செய்துள்ளோம்.

1938 ஆம் ஆண்டில் பார்ப்பன இராஜகோபாலாச் சாரி இந்தியைத் திணித்தபோது, அதை எதிர்த்துத் தமிழ்நாடு தமிழருக்கே என்று முழக்கமிட்டு, போராட்டத்துக்குத் தலைமை ஏற்றதே நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலையடிகள் மட்டும் தான் என்றும்,அவர்களை ஆதரிப்பதுபோல் ஆதரித்து பெரியார் நாடகமாடி பிறகு தமிழர்களை அடிமைப்படுத்தத் தொடங்கி விட்டதாகவும் பெரியார் பெயர் குறிப்பிடாமல், அந்த ஆவணம் கூறுகிறது.

“தமிழ்நாட்டில் சாதிக் கொடுமைகளையும், சமற்கிருத மேலாளுமையையும் புகுத்தி, நிலை நிறுத்திய கிருட்டிண தேவராயர் காலத்தி லிருந்தே, தமிழர் நிலங்களைப் பறித்துத் தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த திராவிடர்கள் மட்டும்,இராசாசி இந்தியைத் திணித்தபோது, அதை எதிர்த்துத் ‘தமிழ்நாடு தமிழர்க்கே’என்று நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலை யடிகள் ஆகியோர் தலைமையில் திரண்ட போது, அவர்களை ஆதரிக்கிறாற்போல ஆதரித்துப் பின்,தங்களுடைய தமிழரைத் தொடர்ந்து அடிமைப்படுத்தும் திட்டத்தின் கீழ், அண்ணல் தங்கோ முயற்சியினால் முகிழ்த்த தமிழர் கழகத்தை முறியடித்துத் திராவிடர் கழகத்தை நிறுவினர். திராவிட நாட்டு முழக்கத்தை முன்னெடுத்தனர்.
தமிழர் அறிவையும் தன்மானத்தையும் மீட்டெடுப் பதாக முழங்கிக் கொண்டு, “தமிழ் அறிவியல் அற்ற மொழி; அதை வாழ்வியலி லிருந்து தலை முழுகி விடுவதே அறிவுடைமை” என்று பகுத்தறிவுப் பரப்புரையும் தன்மானப் பரப்புரையும் செய்தனர். தமிழை வாழ்வியலில் இருந்துத் தவிர்க்கச் சொல்லிவிட்டு, தமிழ் வழிப்பட்ட தமிழ்த் தேசிய முழக்கமான “தமிழ் நாடு தமிழர்க்கே” என்ற செயல் திட்டமற்ற வெற்று முழக்கத்தை அடையாளமாக முன் வைத்துக் கொண்டே, “அறிவியல் மொழியான ஆங்கிலமே, தமிழர்க்கு மதிப்புமிக்க நல்வாழ்வு தரும்” என்று பேரளவில் பரப்பினர். தமிழர்களை ஆங்கில மோக வலைக்குள் வீழ்த்தினர். மேலும், மூடநம்பிக்கை ஒழிப்பின் பெயரால், சில வரலாற்றுச் சான்றுகளையும், பல வாழ்வியல் விழுமியங்களையும் தாங்கி நிற்கிற தமிழ் இலக்கியங்களிலிருந்து, தமிழர்களை அயன்மைப்படுத்தினர். தமிழர் என்ற அடையாளம் இழிவுபடுத்தப்பட்டு, மழுங் கடிக்கப்பட்டது.”
- என்கிறது ஆவணம்.

• ஈழத் தந்தை செல்வா, தந்தை பெரியாரிடம் தமிழ் ஈழ விடுதலைக்கு ஆதரவு கேட்டபோது, “நாங்களே அடிமையாக இருக்கிறோம்; இன் னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்?” என்று கூறியதை சிங்களத்திடம் பணிந்து போகுமாறு பெரியார் அறிவுரை கூறியதாக இந்த ஆவணம் கூறுகிறது. சிங்களமே, திராவிடம் தான் என்றுகூறும் இந்த “ஆராய்ச்சி” ஆவணம், அதனால் சிங்களர்களிடம் தமிழர் களை அடிமைப்படுத்தவே பெரியார் கருதியதாகவும் பதிவு செய்துள்ளது.
ஆவணத்திலிருந்து:

“ஈழத்தைச் சேர்ந்த திராவிடமாம் சிங்களம், தமிழர் மீது அரச பயங்கரவாதத்தை ஏவி, அழித்து வந்தது. அதை எதிர்த்துப் போராடிய தந்தை செல்வாவிற்குத் திராவிடம், சிங்களத்திடம் பணிந்து போகுமாறு அறிவுரை கூறியது. தமிழ்நாட்டிற்குள், “தமிழ்நாடு தமிழர்க்கே” என்று தான் முழங்குவதாக உரிமை கொண்டாடிய திராவிடம், “நானே அடிமை; இன்னொரு அடிமைக்கு உதவுவது எப்படி?” என்று வினவி, கைவிரித்தது.

• தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டுவரும் கல்வி, வேலை வாய்ப்புக்கான இடஒதுக்கீட்டினால் தங்கள் ஆதிக்கம் பறிப் போய்விட்டதே என்று குமுறிக் கொண்டிருக்கும் பார்ப்பனர்களின் கண்ணீரைத் துடைக்க, ‘நாம் தமிழர்’ கட்சி முன் வந்திருக்கிறது. சாதிவாரி இட ஒதுக்கீட்டினால் தமிழ்ச் சாதிகளுக்கிடையே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு முரண்பாடு முற்றி வருகிறதாம்.
ஆவணத்திலிருந்து:

“பற்றாக்குறைகளுக்கிடையே நடை முறைப்படுத்தப்பட்டுவரும் முழுமையற்றதும், பொருளற்றதும், மாநில உரிமையையும், மகளிர் உரிமையையும் பற்றிக் கவலைப்படாததும் ஆன சாதிவாரி ஒதுக்கீட்டினால்,தமிழ்ச் சாதிகளுக்கிடையே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு முரண்பாடுகள் முற்றி வருகின்றன.”

• பார்ப்பனர் என்ற சொல்லைத் தவிர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ள இந்த ஆவணம், ‘மனுவியல்’ என்ற சொல்லை அதற்கு மாற்றாகப் பயன்படுத்துகிறது. இறுதிப் பகுதியில் ‘கலைச் சொல் விளக்கம்’ தரப்பட்டுள்ளது. அதில் தரப்பட்டுள்ள விளக்கங்கள்:

“அந்தணன் - ஈவு இரக்கங் கொண்ட அறநெறியாளன்
பார்ப்பான் - ஆய்வாளன், இளைஞன்
ஆரியன் - சீரியன், உயர்ந்தவன், சீரிய தவசமான கேழ்வரகு. (தர்மபுரி, சேலம் மாவட்ட வழக்கு)
பிராமணன் - பேரமணன்”
திராவிடம் பல காலக்கட்டங்களில் தமிழிலிருந்து பிரிந்து சென்று, மனுவியம் சார்ந்துப் பல்வேறு மொழிகளாய்த் திரிந்து போன கோட்பாடு.

- மேற்குறிப்பிட்ட உயர்ந்த பண்புகளைக் கொண்டவர்களே பார்ப்பனர்கள் என்பதே நாம் தமிழர் கட்சியின் பார்வை என்று ஆவணம் தெளிவுபடுத்தியுள்ளது.
மனு நெறியார் என்பதற்கு -

“ஒரு குலத்துக்கு ஒரு ஞாயம் என்று சட்டம் எழுதிய மனு என்பானின் பின்பற்றாளர்கள்” - என்று இந்த ஆவணம் விளக்கம் தருகிறது.

பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்பவைதான் - மனு பிறப்பின் அடிப்படையில் பிரித்த ‘குலங்கள்’ என்று எந்த ஒரு இடத்திலும் இந்த ஆவணம் குறிப்பிடவில்லை.

• தமிழர் அரசியல் விடுதலையை வென்று எடுக்காமல், பெரியார் முன்னிறுத்திய பார்ப்பன எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு, இடஒதுக்கீடு, பெண்ணுரிமை எல்லாம் தமிழர்களை இரண்டக நிலைக்குத் தள்ளிய சீர்திருத்தமே என்று கூறுகிறது இந்த ஆவணம்.
ஆவணத்திலிருந்து:

“2000 ஆண்டுகளுக்கு மேலாக, வள்ளுவர் தொடங்கி வள்ளலார் ஊடாக மனுவிய எதிர்ப்பு மரபினைப் போற்றி வந்த அறிவு நெறிப் பொதுமைத் தமிழர் ஏற்றுக் கொள்ளும் வகையில், தமிழர்க்குத் தலைமையாய் உட்கார்ந்துகொண்டே திராவிடத்தின் குமுகாயத் தளம், மனு நெறியர் ஆளுமை எதிர்ப்பு, மனுவிய மடமை எதிர்ப்பு, சாதிய இடஒதுக்கீடு, சமனியம், பெண்ணுரிமை ஆகிய தளங்களில் எண்ணற்ற தமிழர் ஒற்றுமையுடன் பாடாற்றித் தமிழர்க்கு அறிவும் மானமும் ஊட்டி, அரசியல் விடுதலையும், பொருளியல் விடுதலையும் வாங்கித் தருவதாய் ஓங்கி உரைத்தது.

திராவிடத்தின் அரசியல் தளமும், தமிழர்க்கு அரசியல், பொருளியல் சார்ந்த முழு உரிமையைப் பெற்றுத்தந்துத் தமிழுக்கும் தமிழர்க்கும் பொற்கால நல்வாழ்வு படைப்பதாகச் சொல்லி தலைமுறை கோடிகண்ட தலைமொழியாம் தமிழின் புகழ் பாடி, தமிழர்க்குத் தமிழின்ப உணர்வு ஊட்டியது. நூற்றாண்டுப் பெருமை கொண்டாடும் திராவிடத்தின் இரு தளங்களும் தமிழ்த் தேசிய இனத்தின் வாழ்வினைத் தீர்மானிக்கும் மேற்கட்டுமானக் கூறுகளோடு தங்கள் சீர்த்த பணிகளை நிறுத்திக் கொண்டு, அடிக்கட்டுமானக் கூறுகளான தமிழர் அரசியல் விடுதலை, பொருளியல் விடுதலை என்பவற்றில் உளதுபோலக் காட்டி, இலதாக நாட்டும் இரண்டக நிலை கொண்டனர்.”
- என்கிறது இந்த ஆவணம்.

(குறிப்பு: இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மேற்கட்டுமானம், அடிக்கட்டுமானம் என்ற சொற்றொடர்கள் மார்க்சியம் தொடர்பானவை; இதற்கான கலைச்சொல் விளக்கம், என்ன காரணத்தினாலே தரப்படவில்லை.)

• பெரியார், திராவிடம் பேசிய தமிழன் அரசியல் விடுதலையை வென்றெடுக் காமல், ‘இரண்டகம்’ செய்து விட்டார் என்பதால், அந்த புரட்சியை வென்றெடுக்க, படை திரட்டிக் கிளம்பியிருக்கும், நாம் தமிழர் கட்சி, தமது அமைப்பில் சேருவோர் “புரட்சிகர”உறுதிமொழியை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது.
அந்த உறுதிமொழிப் பிரகடனம் இது தான்:

“நாட்டின் அரசியல் சட்டத்திற்கு உண்மையாக இருப்பதுடன், சமனியம் (சோசலிசம்), மதச்சார்பின்மை, குடிநாயகம் ஆகிய கொள்கைகளின்பால் உண்மையான நம்பிக்கைக் கொண்டு, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை ஒருமைப்பாடு ஆகியவற்றை நிலைநிறுத்தி, வலிமைப்படுத்தக் கட்சி உறுதி அளிக்கிறது.”

• திராவிடம் இழைத்த துரோகங்களை நேர் செய்யக் கிளம்பியிருக்கும் நாம் தமிழர் கட்சி, இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற மேற்கண்ட ‘மாபெரும் அறைகூவலை’ விடுத்திருப்பதோடு அதன் பொதுக் கூட்ட மேடைகளில் பெரியார் படத்துக்கும் தடை விதித்துவிட்டது.

“கட்சி நிகழ்ச்சிகளுக்கு உரிய பதாகைகளில் நம் வாழ்வியல் வழிகாட்டி திருவள்ளுவர், நம் உரிமை மீட்சியியல் வழிகாட்டி தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் (பெரும்பாகரன்) ஆகிய இருவரின் உருவங்கள் தவிர வேறெந்த உருவமும் பயன்படுத்தக் கூடாது.” - என்றது அந்த ஆவணம்.

Wednesday, May 30, 2012

ஒரு நூறாண்டாய் அழுதிடும் எம்மை...

ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் களத்திலிருந்த கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் எழுதிய பாடல்.

Friday, May 25, 2012

பெரியாரைக் கொச்சைப்படுத்தும் தமிழ்தேசியவாதிகள்.

Rajkumar Palaniswamy, இணைப்பு-ஐப் பகிர்ந்துள்ளார்.
ஒருவர் பெரியவர் சொன்னார் தமிழ் மொழி அறிவியலுக்கு உகந்த மொழி அல்ல . அது ஒரு காட்டுமிராண்டி மொழி . அதனால் ஆங்கிலம் கற்றால் தான் அறிவியலில் சிறந்து விளங்க முடியும் என்று. இந்த கூற்றை முற்றும் உடைத்து எறிந்தனர் புலிகள். அவர்களுடையை அனைத்து ராணுவ பயிற்சிகள் மற்றும் பொறிமுறைகளை தமிழ் மொழியிலேயே வகுத்தனர். தமிழில் அறிவியலை கற்று அதனை ஆவணப் படுத்தினர். அந்த அறிவியலை உலகே வியக்கும்படி வடிவமைத்து காட்டினர் புலிகள். இதோ ஒரு சான்று.

புலிகள் தயாரித்த நீர்மூழ்கி ஏவுகணை: தென்னாசியாவே நடுங்கியது !
குறிப்பாகச் சொல்லப்போனால், இவ்வகையான ஏவுகணையின் தாக்குதலில் சிக்கும் எந்தக் கப்பலும் சுக்கு நூறாகிவிடும்.
அன்புச் செல்வன், Tnfishermen Voices மற்றும் வேறு 47 பேர்கள்ஆகியோரின் விருப்புக்குரியது.

கோல்கானூர் அதியமான் தமிழுக்கு நிகர் தமிழ்தான் தமிழனுக்கு நிகர் தமிழன்தான் ...
Ben Yesupatham ‎//ஒருவர் பெரியவர் சொன்னார் தமிழ் மொழி அறிவியலுக்கு உகந்த மொழி அல்ல . அது ஒரு காட்டுமிராண்டி மொழி . // அந்த பெரியவர் எதற்கு சொன்னார் எந்த அர்த்தத்தில் சொன்னார் என்று புரிந்து கொள்ள முடியாதென்றால் தமிழன் என்றுமே காட்டுமிராண்டி தான்.
Kondal Samy அந்த பெரியவர் தன் கருத்தை எந்த இடத்தில் எந்த சூழலில் சொன்னார் என்பதை தெரிந்துகொள்ள முயற்சி செய்யுக்கள் .மற்ற படி உங்கள் கருத்து சரியானது தான்.தன் தாய் மொழியில் தான் அறிவியலில் சிறந்து விளங்க முடியும் என்பதை புலிகள் உணர்த்தினார்கள்.
Nilavarasu Nila ‎//அந்த பெரியவர் எதற்கு சொன்னார் எந்த அர்த்தத்தில் சொன்னார் என்று புரிந்து கொள்ள முடியாதென்றால் தமிழன் என்றுமே காட்டுமிராண்டி தான்.// இந்த வம்படி வாழக்கு செய்வதற்கு பதிலாக, அந்தப் பெரியவர் எந்தச் சூழலிலும் அப்படி சொல்லி இருக்கக் கூடாது, தாய் தான் பிள்ளைகளை விட்டுக் கொடுத்துப் பேசுவது அவர்களின் அழிவுக்கே இட்டுச் செல்லும் என்பதை உணருங்கள். அதனால்தான் காஞ்சி சங்கராச்சாரி 'தமிழ் நீஷ பாஷா ஈன்ற போது தமிழர்களால் ஒன்றும் செய்ய முடிய வில்லை.
செல்லையா முத்துசாமி ஒருமொழியில் அமைந்த அதன் படைப்புகளில் பிற்போக்குத்தனங்கள் கூடாது என்றுதான் பெரியார் சாடினார். அவர் சொன்ன மொழிச்சீர்த்திருத்தத்துக்கு முன்வராத பிற்போக்குவதிகளால் பெரியாரைப் புரிந்துகொள்ள முடியாது. மொழியை தெய்வத்துக்கு நிகராக மதிக்கும் தமிழ்ப்பண்டிதர்கள் எவனுக்காவது அவர் சொன்ன விடயம் புரிந்திருந்தால் அதற்காகப் போராடியிருப்பான். அதை விட்டுவிட்டு பெரியாரையே குறைசொல்லத் தொடங்கினார்கள். அவர்களில் ஒருவர்தான் நீங்களும். பெரியார் இதற்கு பதில் சொல்கிறார் படியுங்கள். http://www.chelliahmuthusamy.com/2012/02/blog-post_02.html

Rajkumar Palaniswamy அவர் சொல்லும் விளக்கம் ஏற்றுக் கொள்ளக் கூடிய விளக்கம் அன்று. நீங்களே இன்னொரு முறை படித்துப் பாருங்கள். ஒருவருடைய மொழிக் கொள்கை பிழையானது என்றால் அது பிழை தான் . அதற்கு விளக்கம் அளிக்க முற்படுவது தவறு. பிழையை திருத்துவோம் , திருந்துவோம்.
Rajkumar Palaniswamy நாம் இங்கு யாரையும் திரைப்பட கதாநாயகனாக வழிபட இங்கு வரவில்லை . அப்படி செய்வது தவறு. ஒருவர் எல்லா வகையிலும் சரியானவர் என்று சொல்வதும் தவறு. பல இடங்களில் சரியான பாதையை காட்டியவர்களும் சில இடங்களில் தவறான கருத்துக்களை சொல்லியுள்ளனர் என்பதை மறுக்கக் கூடாது.
செல்லையா முத்துசாமி அவர் சொன்னதைத்தான் நானும் தந்திருக்கிறேன். அதில் என்ன குறைஎன்று சொல்லுங்கள். மேலும் மொழியின் புனிதம் குறித்து அக்கறைப்படும் நீங்கள், பாப்பான் தமிழை நீசமொழி என்று ஓதிக்கியதற்கு எதிராக என்ன செய்தீர்கள். தமிழ்மொழியின் வளமான இலக்கியங்களிலும் அந்தணன் பெருமை, மனுதர்ம துதி இப்படி பிற்போக்குத்தனமாகவும் நால்வருண பேதத்திற்கு ஆதரவாகவும் இருக்கிறதே. இதற்கெதிராக பேசுவதெல்லாம் உங்கள் பணியில்லையா? இதை தட்டிக்கேற்கும் பெரியாருக்கு இருக்கும் யோக்யதை தமிழின் பெருமை பேசும் ஒருவருக்காவது உண்டா?
Rajkumar Palaniswamy ஒன்றை நிரூபிக்க வேறொன்றில் பிழை உள்ளதே என்று சொல்வது போல் உள்ளது உங்கள் கூற்று. முதலில் நாம் அனைவரும் தமிழர்கள் . நம் மொழி தமிழ். இதற்கு இடையூறு விளைவிக்கக் கூடிய ஒவ்வாத , பார்பன மனு தர்மம் , வேதங்கள், இதிகாசங்கள் , பெரியார் , அம்பேத்கர் மொழிக் கொள்கைகள் (இவர்களுடைய சமூக கொள்கை அல்ல) என யாவையும் புறக்கணித்தல் அவசியமாகும். இதற்கு நாம் தயாராக வேண்டுமே தவிர நாம் கதாநாயக வழிபாடு செய்தல் கூடாது. தமிழின் பெருமையை நீங்கள் பேசாமல் வேறு யார் வந்து பேசுவார்கள் . இந்திகாரனா வந்து பேசுவான். தமிழராகிய நீங்கள் தான் பேச வேண்டும் . நீங்கள் தான் உயர்த்தி பிடிக்க வேண்டும். அதை விடுத்தது நமக்கு நாமே ஆப்பு அடிப்பது போல் தமிழ் மொழி காட்டு மிராண்டி மொழி , ஏன் சொல்கிறேன் தெரியுமா என எதிர் கேள்விகளை கேட்கக் கூடாது .
செல்லையா முத்துசாமி பெரியார் கூற்று தவறென்றும் அவருக்கு மொழிகுறித்த புரிதல் இல்லை என்றும் வைத்துக்கொள்வோம். அவர் சொன்ன மனித இழிவு தமிழ்மொழியின் படைப்புகளில் இருப்பதைக் கண்டித்தோ, மனுதர்மத்தை போற்றிய தமிழ் மன்னர்கள், தமிழ்ப்பண்டிதர்கள் குறித்து எங்கேனும் ஓரிடத்திலாவது எதிர்வினை ஆற்றியிருக்கிறீர்களா? இன்றும் கூட அவர் சொன்ன அத்தனை இழிவும் அப்படியே இருக்கிறதே.
Rajkumar Palaniswamy இழிவுகளை களைய வேண்டியது அவசியம். அதற்கு பாடுபட்ட பெரியாரை போற்றுவோம்
செல்லையா முத்துசாமி நீங்கள் புலிகளின் பெயரால் எதைவேண்டுமானாலும் திரித்துப் பேசிவிடமுடியாது. அவர்கள் ஆட்சி புரிந்தளவிற்கு இந்தியப் பார்ப்பனிய ஆதிக்கத்தின்கீழ் தமிழர்கள் வாழ முடிந்திருக்கிறதா?புலிகளின் ஆயுதத் தயாரிப்பை பெரியாரின் கூற்றோடு பொருத்துவது தமிழ்தேசியவதிகளுக்கே கைவரப்பெற்ற அரசியல் தந்திரம். ஆண்டாண்டு காலமாக பார்ப்பான் செய்வதைத்தான் நீங்கள் தொடங்கியிருக்கிறீர்கள். தமிழில் மதநம்பிக்கைகள் மிகுந்திருக்கும்போது அறிவியல் வளர்ச்சிவேகம் மட்டுப்படவே செய்யும். விண்வெளித் துறையில்மட்டும் இந்தியா நாற்பதாண்டுகாலம் பின்தங்கி இருப்பது உலகறிந்த உண்மை. காரணம் பாப்பான் காப்பாற்றும் இந்துமதம். இந்த பாப்பானின் மனுதர்மத்தை வைத்துக்கொண்டு தமிழ் சிறக்கவேண்டும் என்றால் எப்படி.
Ben YesupathamRajkumar Palaniswamy மதிமாறன் சொல்வது நினைவிற்கு வருகிறது. பெயர்பலகைகளில் ஒன்று ஆங்கிலத்திலோ ஹிந்தியிலோ இருந்தால் மற்றொன்று தூய தமிழில் முதலியாரோ செட்டியாரோ என்று இருந்தால் முதலில் அந்த தமிழில் உள்ள பலகையை தான் உடைப்பார் பெரியார். மொழி மனிதனுக்கு பயன் படவேண்டும் ஒழிய மனிதன் மொழியை கட்டிக்காப்பதில் பயன் இல்லை குறிப்பாக தலித் மக்களுக்கு ஒரு பயனும் இல்லை.
செல்லையா முத்துசாமி பெரியாரைப் போற்றுவது என்பது அவர் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்வதில்தான் உள்ளது.
Rajkumar Palaniswamy பெயரின் பின்னால் இந்தி காரனோ தமிழனோ சாதியை வைத்தால் நாம் முதலில் அதை எதிர்க்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை . இதில் முரண்பாடும் இல்லை . மேலும் பார்பன மனு தர்மம் தமிழ் தேசியத்திற்கு எதிரானது தான்.
Rajkumar Palaniswamy அதேசமயம் தமிழ் மொழியை யார் இழிவு செய்தாலும் நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதிலும் உறுதி .
செல்லையா முத்துசாமி விவதத்தின்போதுமட்டும் தமிழ்தேசியவாதிகள் பலர் சாதி, மதம் தமிழ்தேசியத்துக்கு எதிரானது என்கிறீர்கள். இப்போது மனுதர்மம் தமிழ் தேசியத்துக்கு எதிரானது என்று நீங்கள் சொல்லியிருப்பதைப்போல. எதிரானவற்றின் மீது நீங்கள் போர்தொடுப்பதை விட்டுவிட்டு பெரியாரை கொச்சைப்படுத்துவது ஏன்? இதை தட்டிக்கேட்பவர்களை தனிமனித வழிபாடு செய்பவர்களைப்போல சித்தரிப்பது ஏன்?
செல்லையா முத்துசாமி தமிழ் மொழியை யார் இழிவு செய்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டோமா? பன்னெடுங்காலமாக அதுதானே நடந்துவருகிறது. அதற்கெதிராக என்னென்ன போராட்டங்கள் எவரெல்லாம் நடத்தினார்கள் என்று சொல்லுங்கள்.

செல்லையா முத்துசாமி Nilavarasu Nila, // அதனால்தான் காஞ்சி சங்கராச்சாரி 'தமிழ் நீஷ பாஷா ஈன்ற போது தமிழர்களால் ஒன்றும் செய்ய முடிய வில்லை.// காஞ்சி சங்கரனை பிடரியில் தட்டவேண்டாம் என்று பெரியார் வந்து தடுத்தாரா? உங்கள் சோம்பேறித்தனத்துக்கும் தொடை நடுங்கித்தனத்துக்கும் இப்படியும் ஒரு சமாளிப்பா?

Sunday, May 20, 2012

ஈழ விடுதலைக்கு பொது வாக்கெடுப்பு நடத்து {படங்கள்}

அய்நாவே, இந்திய அரசே ஈழ விடுதலைக்கு பொது வாக்கெடுப்பு நடத்து' என்ற தலைப்பில் 19-05-2012 அன்று சென்னை எம்.ஜி.ஆர் நகரில் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் உரிமை முழக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வைகோ, சத்தியராஜ், ஆனூர் செகதீசன், விடுதலை ராசேந்திரன், கோவை இராமகிருட்டிணன் ஆகியோர் உரிமை முழக்கமிட்டனர்.