Thursday, May 31, 2012

பன்மொழியறிவுக்கு பெருந்தமிழர் சீமான் தரும் எளிய பயிற்சி.


சீமானை அவ்வளவு எளிதாக கோமாளி என்று நாம் முடிவு செய்வது தவறென்று உணர்கிறேன். அவரிடம் நிறைய செய்திகள் இருக்கின்றன.

நாக்கில் தமிழ் வராதவர்களுக்கெல்லாம் தமிழை வரவைக்க மரம் தேய்க்கும் உப்புத்தாள் கொண்டு தேய்க்கிற காலம் வருமாம்.

மொழியறிவு தங்கியிருக்கிற இடம் நாக்குதான் என்று இப்போதுதான் சீமான் மூலமாக அறிந்துகொள்கிறேன். மேலும், மொழியைப் பயிற்றுவிக்க ஆசிரியர்களுக்குப் பதில் 'பட்டி' பார்ப்பவர்களையே பணியமர்த்தலாம் என்ற முடிவுக்கும் நாம் வரமுடிகிறது.

பலமொழிகள் கற்பதில் விருப்பமுடையவனாயிருந்தும் எனக்குத் தமிழ் மட்டும்தான் தெரிகிறது. ஆங்கில உப்புத்தாள், பிரெஞ்சு உப்புத்தாள் இப்படி பன்மொழிப் புலமைக்கான உப்புத்தாள்கள் கிடைக்குமிடத்தை பெருந்தமிழர் சீமான் அவர்கள் அடுத்த கூட்டத்தில் திருவாய் மலர்ந்தால் கப்பென்று கவ்விக்கொள்வேன்.

உப்புத்தாள் பயிற்சிக்கும் பலன் இல்லையெனில், தமிழ்த் தெய்வம் குடியிருக்குமிடம் நாக்குதான் என்பதால், செத்துப்போன பெருந்தமிழர்களின் நாக்கை வெட்டி தமிழ் பேச விழைவோருக்கு பொருத்தவும் பெருந்தமிழர் சீமானே முதல்வராகி உத்தரவிடவேண்டும்.

தமிழர்கள் தமிழில் பேசவேண்டும் என்ற அக்கறையுடன் பெருந்தமிழர் சீமானால் மேற்கொள்ளப்படும் பரப்புரையை சிங்களவன், கன்னடன் ஆகியோரது மொழிவெறியுடன் ஒப்பிட்டால் நீங்கள் திராவிடக் குஞ்சாகத்தான் இருக்க முடியும்.

முகநூல் எதிர்வினைகள்...

Muniyan Murugan ‎. அவரிடம் நிறைய செய்திகள் இருக்கின்றன.//ஜெயலட்சுமிய எப்படி க்ரட் பன்னுவது என்பதை இன்னும் சொல்லவில்லை அந்த செய்தியா நண்பரே!

Niyaayath Tharaasu அவரது கொள்கைகள் பிடிக்கவில்லையென்றால் விமர்சிப்பதற்கு உங்களுக்கு முழு உரிமையுண்டு... ஆனால் இந்தப்படம்???

தமிழில் பதிப்போ, embroideryயோ செய்யும் எத்தனை நிறுவனங்கள் உள்ளன....

Mozhi Tees ஒன்று தான் எனக்குத் தெரிந்தது.. உங்களுக்கு தெரிந்த லிஸ்ட்டை பதிவிடவும்...இது முற்றிலும் தவறு செல்லையா முத்துச்சாமி...

செல்லையா முத்துசாமி ஜெயலட்சுமியா அவர் யார்? பெருந்தமிழரின் அந்தப்புரத்திற்கெல்லாம் நான் செல்வதில்லை. செல்லவும் மாட்டேன். அது அவர் பாடு.

Muniyan Murugan விஜயலட்சுமி,சாரி ஜெயலட்சுமினு எழுதிவிட்டேன்.

Muniyan Murugan இனி தமிழன் தைத்த சட்டயை மட்டும் தான் போடுவேன் என்று சொல்லபோகிறார்!!

செல்லையா முத்துசாமி நான் பெருந்தமிழரின் மொழிச் சிந்தனைகளுக்காகவே இப்பதிவை இட்டுள்ளேன் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா நியாயத்தராசு.

Niyaayath Tharaasu என்னுடைய கேள்வி படம் சார்ந்தது மட்டுமே... என் மறுமொழியை நன்கு வாசியுங்கள் தோழர்...

செல்லையா முத்துசாமி பெருந்தமிழரின் சிந்தனை வயப்பட்ட மாதிரியான படத்தை இணையத்தில் தேடினேன். கிடைத்த படத்தில் பெருந்தமிழரின் சட்டையில் தமிழல்லாத எழுத்துக்கள் இருக்கக் கண்டு தமிழர்கள் அவரைத் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற உயர்ந்த நோக்கில்தான் குறிப்புடன் வெளியிட்டேன்.

பாக்கியராசன் சே ‎:) நல்லவேளை சட்டையை பார்த்தீர்கள் :)

செல்லையா முத்துசாமி இது சட்டை தொடர்பானதாக திசை திருப்ப பாக்கியராசன் முனைகிறார். தமிழன் தொலைக்காட்சியில் 27 மே அன்று ஒளிபரப்பான பெருந்தமிழர் சீமானின் பேச்சில் உப்புத்தாள் கொண்டு நாக்கைத் தேய்த்து மொழியறிவூட்டுகிற புதுமையான முயற்சி தொடர்பானது மட்டுமே இப்பதிவு. (இதைச் சொல்ல வேண்டியநிலைமை உருவாகிவிட்டது பாருங்கள்!)

No comments: