ஞாயிறு, 3 ஜூன், 2012

சீமானுக்கு இதெல்லாம் சாதாரணமப்பா!

‎01. ம்ம்ம். இன்னைக்கி என்னப்பா கதை.
02. இந்த சீமான்...

01. அட அவரைப்பத்தி பேசுறது ஒன்னோட தரத்துக்கு கேவலம்.
02 இல்ல இன்னைக்கி மரணதண்டனை எதிர்ப்பு மாநாட்டுல ஒரு விடயஞ் சொன்னாரு. இவரு எதாவது புரிஞ்சுதான் பேசுறாரா அப்படின்னு ஒரே கொழப்பமா இருக்கு.

01. என்ன பேசுனாரு.
02. அடுத்தவருடம் இந்திராகாந்தி நினைவுநாளை பயங்கரவாத எதிர்ப்பு நாளா கொண்டாடப் போறாங்களாம்.

01. பொற்கோயிலுக்குள் ராணுவம் நுழைந்ததை தங்களோட இறையாண்மையில் இந்திய அரசு விளையாடுவதாக அவங்க நினைச்சாங்க. விளைவு இந்திரா மரணம். இந்திய ஒருமைப்பாட்டைக் காக்கத்துடிக்கிறவருக்கு தமிழர் இறையாண்மை பற்றிய கவனம் இருக்குமா?
அதனாலதான் சீமான் அதை பயங்கரவாத நாளா பார்க்கிறார்.
சிங்கு (ஜக்மோகன்) வேற வந்திருந்தாரே!
02. அவருக்கு தமிழ் புரிஞ்சிருந்தா அங்கேயே காறித்துப்பி இருப்பாரு.

01. முன்னால திநகர்ல நடந்த ஒருகூட்டத்துல, சிதம்பத்தை நோக்கி காலணி வீசிய சீக்கியரைப் பத்திப் பேசும்போது நானா இருந்திருந்தா திருப்பித்தாக்கியிருப்பேன்னு பேசுனவருதான இவரு (சீமான்).

சீக்கியன் ஏன் காலணி எறிஞ்சான்?
அந்த உணர்வும் கோபமும் நமக்கு ஏன் இல்லைன்னு தனது தம்பிகளிடம் கேக்கறத விட்டுட்டு, சீக்கியனையே திருப்பித் தாக்குவேன்னு வீரம் பேசுனவரு.

சீமானுக்கு இதெல்லாம் சாதாரணமப்பா!

1 கருத்து:

தமிழானவன் சொன்னது…

உண்மையிலேயே அப்படிப் பேசினாரா என்ன இந்திரா நினைவு நாளை பயங்கரவாத எதிர்ப்பு நாளா கொண்டாடப் போறார்ங்கறது ? இல்ல தமிழகத்தில் ராஜிவ் நினைவு நாளை அப்படித்தானே கொண்டாடுகிறாரகள் ? பேசாம அதில கலந்துக்கலாம்