Thursday, July 5, 2012

படுகொலை செய்யப்பட்ட பெரியார் திக தோழர் பழனி {காணொளி}


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து ராயக்கோட்டை செல்லும் வழியில் உள்ள அலேசீபம் தாளேகுளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பழனி என்ற பழனிசாமி (47). பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர்.

இன்று காலை 6.20 மணிக்கு இவரது வீட்டிற்கு டாடா சுமோ மற்றும் 3 வாகனங்கள் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 20-க்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கி, மற்றும் வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். அவர்களை பார்த்ததும் பழனி தப்பி ஓடினார்.ஆனால் காரில் வந்த கும்பல் அவரை விரட்டியது. அப்போது கும்பலை சேர்ந்தவர்கள் பழனியை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். ஆனால் குறி தவறி வீட்டின் ஜன்னல்கள் மற்றும் வீடுகளில் குண்டுகள் பட்டது. இதில் ஒரு குண்டு பழனியின் உடலை துளைத்தது. இதனால் நிலை குலைந்த அவர் மயங்கி கீழே விழுந்தார். அப்போது 20 பேர் கொண்ட கும்பல் அவரை பல இடங்களில் சரமாரியாக வெட்டினார்கள். இதில் அவர் அதே இடத்தில் இறந்தார். அதன் பிறகும் ஆத்திரம் தீராத அவர்கள் பழனியின் தலையை தனியாக துண்டித்து வீசினர்.

பெரியார் திராவிடர் கழக பிரமுகர் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அங்கு ஏராளமான கட்சியினர் திரண்டனர். இதனால் பதட்டமான சூழ்நிலை உருவானது.இதையடுத்து தாளேகுளம் கிராமத்துக்கு அதிகளவில் போலீசார் வரவழைக்கப்பட்டடு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பழனியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே 6.4.2012 அன்று நீலகிரிக்கு அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தனி நபர்களின் சிறு சச்சரவைச் சாக்காக வைத்து, நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தளி சட்ட மன்ற உறுப்பினர் இராமச்சந்திரனின் உறவினரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் சந்திராம்மாவின் கணவர் வெங்கட் ராஜி மற்றும் அவரது மகனும், கழகத் தோழருமான மாருதி, அவரது இரு சகோதரர்களையும் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தளி சட்ட மன்ற உறுப்பினர் இராமச்சந்திரனின் அண்ணனும் அவரது அடியாட்களும் நான்கைந்து வாகனங்களில் வந்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

ஊர்ப்பொதுமக்களும், கழகத் தோழர்களும் அந்த வன்முறைக் கும்பலை விரட்டியடித்துள்ளனர். அதன் பின்னர் தாக்குதலுக்குள்ளானவர்களை ஓசூர் மருத்துவ மனையில் சேர்க்கச் சென்ற போது விடியற்காலை 3 மணியளவில் சட்ட மன்ற உறுப்பினர் இராமச் சந்திரனே நேரில் அடியாட்களுடன் வந்து மீண்டும் தாக்கினர். இதில் மேலும் மூன்று பேருக்கு எலும்பு முறிவும் ஏற்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக தங்கள் வன்முறையால் அந்த வட்டாரத்தையே மிரட்டிவந்த அந்த வன்முறையாளர்களின் செயல்பாடுகளையும், அவர்களுக்கு உடந்தையாக வழக்குகளைத் திரித்து பதிவுசெய்திருக்கிற காவல்துறை கருப்பு ஆடுகளின் நடவடிக்கைகளையும் கண்டித்து பெரியார் திராவிடர் கழக கிருட்டிணகிரி அமைப்பாளர் தோழர் பழனிச்சாமி தலைமையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் 28.04.2012 அன்று நடைபெற்றது.

இப்பொதுக்கூட்டத்தில் மிரட்டலுக்கு பயந்து கிடந்த அப்பகுதி மக்கள், அச்சத்தை உதறிவிட்டு, 1500-க்கும் அதிகமானோர் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தளி சட்ட மன்ற உறுப்பினர் இராமச்சந்திரனுக்கு எதிராக திரண்டிருந்தார்கள். இதன் காரணமாக பழனிச்சாமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அக்கூட்டத்தில் தோழர் பழனிச்சாமி ஆற்றிய உரை

No comments: