திங்கள், 30 ஜூலை, 2012

விடியல் சிவா அவர்களுக்கு வீரவணக்கம்

2008 ஆம் ஆண்டில் மக்கள் தொலைக்காட்சியில் பணிபுரிந்து கொண்டிருந்தநேரம் மக்கள் விருது என்ற பெயரில் ஆண்டுதோறும் பல்வேறு துறைசார்ந்த திறமையாளர்களுக்கு விருதுவழங்கி சிறப்பிக்க நினைத்தார்கள். 

நான் நான்கைந்து துறைகளுக்கு மட்டும் சிலரை முன்மொழிந்தேன். (எளியவர்கள் குரலுக்கு மதிப்பளிக்கும் மாமனிதர் ஒருவர் அப்போது மக்கள் தொலைக்காட்சியில் இருந்தார்) 

ஓவியத்துக்கு சந்துரு,
அந்த ஆண்டுக்கான திரைப்படம் - பூ, 
சிறந்த நாடகம் முருகபூபதி, 
சிறந்த பதிப்பகம் விடியல். 



தமிழில் பெருமளவு அபுனைவு (non fiction) நூல்களை வெளியிட்டதிலும் குறிப்பாக தேர்ந்தெடுத்த பிறமொழி நூல்களை தமிழில் கொண்டு வந்தமைக்காகவும் இவை எல்லாவற்றையும் கடந்து ஒரு நூலின் அட்டைப் படத்திற்கு ஏதாவது ஒரு ஓவியத்தைப் பயன்படுத்தியிருந்தால் அதன் படைப்பாளியின் பெயரை நூல் விவரம் அடங்கிய இரண்டாம் பக்கத்தில் குறிப்பிடும் நேர்மை இவற்றிற்காக விடியலுக்கு வழங்கலாம் என்றேன். 

தமிழில் எந்தப் பதிப்பகத்தின் மீதும் ஆதரவான எதிரான விமர்சனங்கள் சரிபாதி இருக்கக்கூடும். ஆனால் விடியல் அதில் விதிவிலக்கானதாக இருப்பதாக நம்புகிறேன். 

"மலர்ந்தும் மலராத" பாடலைப் போல அனைவருடைய இதயத்திலும் இடம்பிடித்த பதிப்பகம் விடியல். 


இத்தகை பெருமைகளையெல்லாம் ஒரு பதிப்பகத்திற்கு உரியதாக்கிய சிவா அவர்களின் மறைவு இன்றைய நாளை துயர்மிகு நாளாக்கிவிட்டது.

2 கருத்துகள்:

வவ்வால் சொன்னது…

அவரது மறைவுக்கு ஆழ்ந்த வருத்தங்கள்.தமிழுக்கும் பெரும் இழப்பே.

தரமான மொழிப்பெயர்ப்பு நூல்களுக்கு வழக்கமாக விடியல்,நியுசென்சுரி ஆகியவற்றின் வெளியீடுகளே எனது தேர்வாக இருக்கும்.

குரங்குபெடல் சொன்னது…

நெஞ்சார்ந்த வருத்தங்கள் . . .