Tuesday, August 28, 2012

தோழர் செங்கொடி நினைவேந்தல் - கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன் உரை

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சென்னையில் கடந்த 26-08-2012 அன்று தோழர் செங்கொடிக்கு நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. 

திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் ஆற்றிய உரை


திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரை

Thursday, August 23, 2012

(காணொளி) தமிழ்நாடும் சமூகநீதியும்- மருத்துவர் எழிலன் நாகநாதன்

தமிழ்நாடு மக்கள் பேராயம் தங்கள்தோறும் நடத்திவரும் அரசியல் வகுப்பின் எட்டாவது நிகழ்வு சென்னையில் கடந்த 22-07-2012 அன்று நடைபெற்றது. நிகழ்வில், தமிழ்நாடும் சமூகநீதியும் என்ற தலைப்பில் மருத்துவர் எழிலன் நாகநாதன் அவர்கள் ஆற்றிய உரை.

Tuesday, August 21, 2012

கொலைகாரனும் கொள்ளைக்காரனுமான தளி ராமச்சந்திரனைப் பாதுகாக்கும் பொதுவுடைமையாளர்கள்

பெரியார் திராவிடர் கழகத்தின் கிருட்டிணகிரி மாவட்ட அமைப்பாளராக இருந்த தோழர் பழனிச்சாமியை கூலிப்படையை வைத்து கொலை செய்த தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரனை அவனது கம்யூனிஸ்ட் கட்சி பாதுகாக்கிறது. 

குறிப்பாக, தா.பாண்டியன், லெனின் உள்ளிட்டோர் ஊடகங்களில் ராமச்சந்தின் ஒரு யோக்கியன் என்றும் பொதுவுடைமைக் கட்சியில் அவர் மாணவப்பருவத்திலிருந்தே பங்கேற்று களப்பணியாற்றுபவர் என்றும் அப்படிப்பட்டவர் எப்படி இதுபோன்ற கொலையைச் செய்யமுடியும் என்றும் வக்காலத்து வாங்கினர். 

தளி ராமச்சந்திரன் தா.பாண்டியனுக்கு வீடு கட்டிக்கொடுத்திருப்பதும் கிருட்டிணகிரி மாவட்டத்தில் பொதுவுடைமைப் பண்ணையார் பாண்டியனுக்கு நிலங்கள் கொடுத்திருப்பதும் தற்போது பேசப்படுகிறது.

பொதுவுடைமையாளர்களால் மிஸ்டர் யோக்கியன் பட்டம் பெற்ற தளி ராமச்சந்திரன், நூறு கோடி அளவுக்கு கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தற்போது அரசால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட யோக்கியனைக் காப்பாற்ற, ராஜிவை விட கொடூரமாகவா கொல்லப்பட்டார் ஓசூர் பழனி? - என்று நக்கல் செய்கிறான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளர் ஆ.ஜீவானந்தம்.
(http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=81172)

இலட்சக்காணக்கான ஈழத்தமிழ் மக்களைக் கொண்று ராஜிவ் கணக்கில் வரவு வைத்துக் கொண்டதைப்போல, தோழர் பழனி படுகொலையையும் அக்கணக்கில் வைத்துக்கொள்ள அரசுக்குச் சொல்லிக் கொடுக்கிறான் போலும் இந்த போலி பொதுவுடைமையாளன்

தோழர் பழனி படுகொலையானதன் பின்னணி குறித்து ஆராய தோழர் தியாகு அவர்களின் தலைமையில் உண்மையறியும் குழு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

கடந்த 05-08-2012 அன்று தளியில் தோழர் பழனிக்கு நடந்த  நினைவேந்தல் கூட்டத்தில் தோழர் தியாகு அவர்கள் ஆற்றிய உரையின் காணொளி

Monday, August 20, 2012

(காணொளி) 'திராவிடர் விடுதலைக் கழகம்' தொடக்க நிகழ்வு

நமக்கு இப்போது சமுதாய விடுதலை இல்லை.
அரசியல் விடுதலை இல்லாமல் இந்தியாவுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறோம்.
பொருளாதாரத்தில் பன்னாட்டுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறோம்.
நாம் பார்ப்பன, இந்திய தேசிய, பன்னாட்டுக் கொள்ளையர்களிடமிருந்து விடுதலை பெற்றாகவேண்டும்.
எனவே, திராவிடர் விடுதலைக் கழகம் என்று பெயர் வைத்துக்கொள்ளலாம் என நாங்கள் முடிவுசெய்தோம்.