Wednesday, February 13, 2013

கர்நாடக சிறையில் தூக்குக் கொட்டடியில் நிற்கும் நான்கு தமிழர்கள் யார்??? MUST WATCH FULL VIDEO

காதல் திருமண இணையர்கள் எடுக்கும் காதலர் நாள் விழா 2013

ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலாகியவைகளைப்பற்றி மற்றொரு பெண்ணோ, ஆணோ மற்ற மூன்றாமவர்கள் யாராவதோ பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ, நிர்பந்திப்பதற்கோ - சிறிதுகூட உரிமையே கிடையாது என்று சொல்லுகிறோம்.
-பெரியார் (குடிஅரசு, 18.1.1931)காதல் திருமண இணையர்கள் எடுக்கும் காதலர் நாள் விழா

ஜாதி மறுப்பு இணையர்களுக்குப் பாராட்டு

14-02-2013 வியாழக்கிழமை

மாலை 6 மணிக்கு

வி.எம்.தெரு, இராயப்பேட்டை, சென்னை

வாழ்த்துரை
விடுதலை இராசேந்திரன்
பேராசிரியர் சரசுவதி

சுயமரியாதை கலைப்பண்பாட்டுக் கழகத்தின் கலை நிகழ்ச்சி

ஜாதி, மதங்களை ஒழித்திட
ஜாதி கடந்த காதலை வரவேற்போம்
ஜாதியற்றோர் உரிமைக்குப் போராடுவோம்

திராவிடர் விடுதலைக் கழகம்
சென்னை மாவட்டம்
9884754080

Friday, February 8, 2013

தமிழர் ஒற்றுமைக்கான ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு (படங்கள்)

திராவிடர் விடுதலைக்க கழகம் சார்பில் சென்னை தியாகராயர் நகரில் 4-2-2013 அன்று நடந்த ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டு நிகழ்வின் படத்தொகுப்பு.சிறப்புரை
கொளத்தூர் மணி
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

விடுதலை இராசேந்திரன்
பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

அப்துல் சமத்
பொதுச்செயலாளர், த.மு.மு.க

எஸ்.கே.மகேந்திரன்
தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சி.பி.எம்

வழக்குரைஞர் அஜிதா

செ.விஜயகுமார்
மூத்த வழக்கறிஞர், சென்னை உயர்நீதி மன்றம்

மருத்துவர் எழிலன்
இளைஞர் இயக்கம்

வழக்குரைஞர் இரஜினிகாந்த்

தபசிகுமரன்
தலைமை நிலையச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

வழக்குரைஞர் துரை அருண்

தலைமை
கு.அன்பு தனசேகர்
சென்னை மண்டல அமைப்புச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

முன்னிலை
திலீபன்
வேலூர் மாவட்ட அமைப்பாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

தினேசு
காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

வரவேற்புரை
அய்யனார்
தலைமை செயற்குழு உறுப்பினர், திராவிடர் விடுதலைக் கழகம்

பேரணியை தொடக்கிவைத்தவர்
டேவிட் பெரியார்
காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

பேரணி தலைமை
இரா.உமாபதி
சென்னை மாவட்டச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

தீர்மானங்கள்
ஞா.டார்வின்தாசன்
சென்னை மாவட்டத் தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

நன்றியுரை
க.சுகுமாரன்
சென்னை மாவட்ட அமைப்பாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

தமிழீழ இனப்படுகொலையும் தமிழ்ச் சமூகத்தின் கடமையும் (காணொளி, படங்கள்)

தமிழீழ இனப்படுகொலையும் தமிழ்ச் சமூகத்தின் கடமையும் - சிறப்பு கருத்தரங்கு

பால்நியூமென் (பேராசிரியர், பெங்களூர் பல்கலைக் கழகம்)

தோழர்.விடுதலை இராசேந்திரன் (பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்)


தோழர் தியாகு (பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்)


கோவை ஈசுவரன் (மார்க்சியத் திறனாய்வாளர்)

செந்தில்குமார் (தமிழர் காப்பு இயக்கம் (Save Tamils) ஒருங்கிணைப்பாளர்)


ஜார்ஜ் (பூவுலகின் நண்பர்கள்)

படங்கள்


நாள்:
3-2-2013 ஞாயிற்றுக்கிழமை

இடம்:
இசைப்பிரியா நினைவு மேடை
இலயோலா கல்லூரி பி.எட். அரங்கம்
சென்னை
கருத்தரங்கு

காலை அமர்வு 
‘இலங்கை இனப்படுகொலையும், சர்வதேச சமூகத்தின் தோல்வியும்'

தமழீழ எழுச்சிப் பாடல்கள் - 
சமர்பா குமரன் 

தலைமை
அய்யநாதன் 
(சர்வதேசத் தொடர்பாளர், நாம் தமிழர் கட்சி)

இசைப்பிரியா படத்திறப்பு
திருச்சி கே.சௌந்தரராஜன் 
(பெரியார் அண்ணா பேரவை)

அறிமுக உரை
பொன்.சந்திரன் 
(மக்கள் நல்வாழ்வு இயக்கம்)

படக்காட்சியுடன் தொடக்க உரை
பால்நியூமென் 
(பேராசிரியர், பெங்களூர் பல்கலைக் கழகம்)

கருத்துரை
சி.மகேந்திரன் 
(துணைப் பொதுச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி)
விடுதலை இராஜேந்திரன் 
(பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்)
கோவை ஈசுவரன் 
(மார்க்சியத் திறனாய்வாளர்)
தியாகு 
(பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்)
திருமுருகன் 
(ஒருங்கிணைப்பாளர், மே 17 இயக்கம்)
தமிழேந்தி 
(மார்க்சிய - பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி)

பிற்பகல் அமர்வு
‘இலங்கை இனப்படுகொலையும், சர்வதேச சமூகத்தின் ஆதரவைத் திரட்டுதலும்'

தலைமை :
பேரா.சரஸ்வதி 
(நாடாளுமன்ற உறுப்பினர், நாடு கடந்த தமிழீழ அரசு)

தொடக்க உரை
திரு.ஹென்றி டிபேன் 
(இயக்குநர், மக்கள் கண்காணிப்பகம்)

கருத்துரை
இரமேஷ் 
(ஆசிரியர், கீற்று இணையதளம்)
பி.சி.வினோஜ்குமார் 
(ஆசிரியர், The Weekend Leader இணைய இதழ்)
செந்தில்குமார் 
(தமிழர் காப்பு இயக்கம் - Save Tamils - ஒருங்கிணைப்பாளர்)

மாலை அமர்வு
‘இலங்கை இனப்படுகொலையும், தமிழீழ மக்கள் விடுதலையில் தமிழ்நாடு மற்றும் இந்தியத் துணைக்கண்டத்தின் பங்களிப்பும்'

தலைமை
புகழேந்தி தங்கராஜ் 
(திரைப்பட இயக்குநர்)

தொடக்க உரை
கண.குறிஞ்சி 
(ஒருங்கிணைப்பாளர், மக்கள் நல்வாழ்வு இயக்கம்)

கருத்துரை
வை.கோ. 
(பொதுச்செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்)
வேல்முருகன் 
(பொதுச்செயலாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி)
தெஹ்லான் பாகவி 
(தலைவர், SDPI கட்சி) 
கி.வெங்கட்ராமன் 
(பொதுச்செயலாளர், தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி)
குமாரதேவன் 
(தலைமை நிலையச் செயலாளர்,தந்தைபெரியார் திராவிடர் கழகம்)

தீர்மானங்கள் நிறைவேற்றுதல்
ஜார்ஜ் 
(பூவுலகின் நண்பர்கள்)

நன்றியுரை
பிரமீதியஸ் 
(மக்கள் நல்வாழ்வு இயக்கம்)

Thursday, February 7, 2013

திராவிட கட்சிகளுக்குசமூகநீதியைப் பேசுவதில் என்ன தயக்கம் இருக்கிறது - தோழர் கொளத்தூர் மணி செவ்வி

செல்வம் (கேப்டன் செய்தி தொலைக்காட்சி):
சமூகநீதியைப் பேசித்தான் ஆட்சியைப் பிடித்தார்கள். சமூகநீதியைப் பேசுவதில் அவர்களுக்கு (திராவிட கட்சிகளுக்கு) என்ன தயக்கம் இருக்கிறது.

தோழர் கொளத்தூர் மணி:
தமிழ்நாடு தனிநாடல்ல. இந்தியாவின் அடிமை நாடுகளில் ஒன்று. அல்லது இந்தியாவுடன் பிணைக்கப்பட்டிருக்கிற ஒரு நாடு. வருமான வரித்துறையும் புலனாய்வுத் துறையும் மத்திய அரசின் கையில் இருக்கிற வரை ஊழலே வாழ்வாகிப்போன நம்முடைய அரசுக்கு பொறுப்பேற்கிற எல்லோரும் அந்த இரண்டைப் பார்த்து அஞ்சுகிறார்கள். அந்த இரண்டை நிறைவு செய்வதற்காக உயர்ஜாதிக்காரர்களை அனுசரித்துச் செல்லவேண்டும் என்பதால்தான்; திராவிட முன்னேற்றக் கழகம் தனது ஆட்சிக்காலம் முழுவதும் பார்ப்பனர்களையே தலைமைச் செயலாளர்களாக கொண்டிருந்தது; ஜெயலலிதா கொள்வதில் வியப்பில்லை. ஆனால் கருணாநிதியும் அப்படித்தான் வைத்திருந்தார். அரசு வழக்கறிஞர்களாக வைத்திருந்தார். காவல்துறை தலைவர்களாக அப்படித்தான் வைத்திருந்தார். இந்த போக்கு அவர்களது நேர்மையான ஆட்சியின்மையையும் மத்திய அரசின் வருமானவரித்துறையும் புலனாய்வுத்துறையும் ஏற்படுத்தியிருக்கிற அச்சமும்தான் அவர்களை கொள்கையை விட்டு அனுசரித்துப்போக வைக்கிறது.