Thursday, March 21, 2013

பாலாவின் பரதேசி ... பார்ப்பனர்களின் கங்காணிபாலாவின் பரதேசியை பார்த்தபோது ரத்தக்கொதிப்பே வந்துவிட்டது என்று சொல்லலாம்.

இணையத் தொடர்பற்ற ஊரில் ஒருவாரம் தங்கியிருக்க நேர்ந்ததால் படம் குறித்த விமர்சனங்களைக் கவனிக்கமுடியவில்லை. இப்போது பார்க்கையில் மற்றவர்களின் கருத்துக்கள் என்னை அதிர்ச்சியடைய வைக்கிறது. என்னுடைய புரிதல்தான் கோளாறாக உள்ளதா என்கிற உணர்வைத் தோற்றுவிக்கிறது. என்றாலும் எனக்கு நானே நேர்மையாக இருத்தலென்பது என்னுடைய கருத்தை தயக்கமின்றி தெரிவிப்பதில் அடங்கியிருப்பதாக கருதுகிறேன்.

மேலோட்டமாக பார்த்தால் அல்லது பரதேசியின் கதையை ஒருவர் சொல்லக்கேட்டால் மிக அருமையான படத்திற்குரிய அம்சம் இருப்பதாக உணர்வோம். ஆனால், ஆக்கப்பட்டிருக்கும் விதத்தால் படம் மனதோடு ஒட்டவே இல்லை.

நமது நெஞ்சத்தை ரணமாக்கும் பின்னணியுடைய கதைக்களத்தைக் கொண்டிருந்தும் அதைக் கையளத்தெரியாத அல்லது மென்னுணர்வுகளை கையாள தகுதியற்ற ஒரு எந்திர மனிதனாகவே நான் பாலாவைக் கருதுகிறேன்.

அடித்தலும் உதைத்தலுமான, படைப்பாளிகளையும் நடுநடுங்கவைக்கும் பாலாவின் ஆகிருதி, படைப்பை எந்திரத்தனமாக அல்லது `கிராப்ட்க்குள்' அடைக்கும் சிக்கல்களைக் கொண்டிருக்கிறது.

பாலாவின் எந்த படமும் எனக்கு எந்தவிதத்திலும் ஈர்ப்பதாக இருந்ததில்லை. கமலைப்போல குழப்பம் நிறைந்த புரட்சியாளர் பாலா.

தனது படத்தில் ஈழப்பெண் பாத்திரத்திரம் வைத்ததற்காகவே உணர்வாளன் என்கிற சாயம், கடவுளுக்கு ஏன் நன்றி சொல்லவேண்டும் என்ற பேட்டியால் நாத்திகன் என்கிற சாயம் இப்படி ஏகப்பட்ட சாயம் பாலாவின் மீது. ஆனால், இவையணைத்தும் கமலுக்குப் பூசப்பட்டவைகளுக்கு ஒப்பானதுதான். இவர்கள் இருவரும் சொல்லத்தக்க அளவில் அப்படியான தரப்பை முன்வைத்து படம் செய்ததில்லை.

எந்த மதத்தையும், மதத்தின் கோளாறுகளையும் மனஉறுதியுடன் ஒரு படைப்பாளி விமர்சிப்பதை வரவேற்கிற மனநிலை இருந்தாலும் இந்தப்படத்தில் கிறித்தவர்களை இழிவு செய்திருக்கும் விதம் அதிரவைக்கிறது. அதற்கு எந்தவிதமான குறிப்பிடத்தக்க எதிர்ப்பும் இல்லாமல் இருப்பது வியப்பை அளிக்கிறது. கிறித்தவர்கள் மதம் பரப்பும் விதம் இந்துத்துவவாதிகளின் பார்வையில் படமாக்கப்பட்டுள்ளது.

ஜாதிய இழிவிலிருந்தும் வெளியேறும் பொருட்டு உணவு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்கப்பெறாத தாழ்த்தப்பட்ட மக்கள் கிறித்தவத்தை விரும்பி ஏற்றார்கள் என்பது வரலாறு.

ஆண்டாண்டுகாலமாக இந்து அடையாளத்தால் வர்ண பேத அடிப்படையிலான இழிவுக்குள்ளான மக்களுக்கு கிறித்தவம் உவப்பான ஒரு மதமாக இருந்ததாலேயே பெருந்திரளான மக்கள் கிறித்தவத்தில் இணைந்தார்கள். பின்னர் அங்கும் இடைநிலைச் சாதிகள் புகுந்தபின் ஜாதியத்தின் இருப்பு கிறித்தவத்தை ஏற்றவர்களிடமும் தொடர்கிறது.

ஆனால் பரதேசியில் எந்தவித அடிப்படையுமற்று, ரொட்டிகளை வீசியும் பலவீனமான மக்களை நயவஞ்சகமாக மதமாற்றம் செய்வது என்பதாக புனையப்பட்டுள்ளது. வரலாற்றுக்குப் புறம்பான பகுதிகள் விமர்சனத்திற்கு ஆட்படாமல் தப்பிக்கும்பொருட்டு ஒரு பாடல் காட்சிக்குள் படமாக்கப்பட்டிருக்கிறது.

இந்து மதத்தின் கோளாறுகளை, பார்ப்பனர்கள் தங்கள் மோலாதிக்கத்திற்காக செய்த, செய்துகொண்டிருக்கும் சூழ்ச்சிகளை படமாக்கும் துணிவு பாலாவுக்கு வரவேண்டும். அதைவிடுத்து இப்படி அறைகுறையாகச் சொல்லி வரலாற்றைத் திரித்துக்கொண்டிருந்தால் பாலாவை பார்ப்பனர்களின் கங்காணியாகவே பார்க்கமுடியும்.

4 comments:

kavigan said...

Se.Mathivanan.writer/filmmaker

குரங்குபெடல் said...

நாஞ்சில் நாடனின் சிறுகதையில் இருந்துதான்

படத்தின் நாயகனின் பாத்திரம் அமைக்க பட்டுள்ளது . .

ஆனால கதை என தன் பேரை போட்டுகொண்டு

வசனம் என அவரை மற்ற பெரும் இயக்குனர்கள்

போலவே எமாற்றி உள்ளார் . . .போஸ்டர் விளம்பரத்தில் மண்டபம் மற்றும் விடுதி முதலாளி

வைரமுத்து பேர் போடும் போது நாஞ்சில் நாடன்

பேருக்கு மட்டும் என்ன குறைச்சலாம் ?எல்லா படங்களிலும்

இறுதி காட்சியில் அவர் பெயரை

எ பாலா பிலிம் அல்லது

எ பிலிம் பை பாலா . . .

என்று அவசர அவசரமாய் போட்டு

வேறு யாரவது பேர் போட்டு விடுவார்களோ

என்ற பதற்றத்துடன் செயல்படுவது

நல்ல நகைச்சுவை

WhoAmI said...

2000 வருடமாக அதற்கும் மேலாக கூனிக்குறுகி கேவலப்பட்டு விலங்குகளை விட கேவலமாக நடத்தப்பட்ட கீழ் சாதியினரின்

அடிமைத்தனத்தை அதன் வாடையை கூட காட்டாத படம் 'மத மாற்றத்தை' மட்டும் கட்டினால் அதில் வரலாற்று திரிபு தான் மேலோங்கி இருக்கிறது.

இந்தப்படம் எடுத்த காலகட்டம் ஜாதிபெயர் இல்லாமல் சொல்லாடலே இல்லாத காலமாகும். குசு குண்டி எல்லாம் வசனத்தில் சேர்த்தவர் கங்காணியின் ஜாதியை அவர் பெயரில் சேர்க்காதது ஏனோ? அதில் என்ன எதார்த்தம் இருக்கிறது?

இவர்களே தொட்டால் தீட்டு என்று வைத்திருக்கும் கீழ் ஜாதி பெண்களின் நாற்றமடிக்கும் அவயங்களை தடவுவதும் நக்குவதும் தான் வெள்ளைக்காரனின் முழு நேர வேலையாக காட்டியது எந்த விதத்திலும் எதார்த்தம் இல்லை

கிருத்தவர்களும் அவர்களில் தியாக மனம் கொண்ட பணியாட்களும் இல்லையானால் யாரும் பதிவெல்லாம் எழுத முடியாது. ஏன் படிக்கும் உரிமை கூட உங்களுக்கும் எனக்கும் வந்திருக்குமா என்று தெரியாது. கல்வியையும் அதன் முக்கியத்துவத்தையும் நமக்கு மேல் வலித்து கற்றுத் தந்தவர்கள் அவர்கள் போன்றவர்களே.

பாலா போன்ற பரதேசிகள் கடவுள் இல்லை, மதம் இல்லை, எல்லாம் திருடர்கள் என்று போகிற போக்கில் சாணி தெளிப்பது போல வசனம் பேசி என்ன தான் தீர்வை தந்து விட்டார்கள்? இவர் எடுத்திருக்கும் படத்தில் இருக்கிறது அத்தனை வரலாற்றுத்
திருட்டு. ஒன்று பாலா பொட்டை அல்லது அவரும் RSS பரிவாரத்தின் சம்பளம் பெறுபவராக இருக்கிறார் என்றே பொருள்.

காரிகன் said...

ஞானி, அதிஷா, மற்றும் பல இணைய பதிவுகளில் பரதேசி பற்றி நடுநிலையான விமர்சனம் எழுதப்படிருக்கிறது. எனக்கும் கூடவே இந்த படத்தை பார்த்தபோது வெகு அதிர்ச்சியாக இருந்தது. பாலா ஒரு ஹிந்துத்வா சார்பு கொண்ட,நேர்மையற்ற,வக்கிரமான குனாதிசியங்களால் ஆளப்பட்ட மனிதர். அவரிடமிருந்து இப்படிப்பட்ட சாக்கடைகள்தான் பீரிட்டு கிளம்பும். வெள்ளை தோல்களுக்கு கருப்பு வர்ணம் பூசுவது போல வரலாற்றையும் அதே கருப்பு சாயம் கொண்டு மெழுகி நமக்கு காட்டி இதான் அது என்று பாடம் நடத்துகிறார். மதுரை அமெரிக்கன் காலேஜில் படித்தவர். சில காலம் மனநல காப்பகத்தில் இருந்தார் என்று நினைவு. எனவே அவர் படங்களில் வரும் எல்லா கதாபாத்திரங்களுமே ஒருவித மனநோயாளி போலவே இருப்பதில் வியப்பு இல்லை. பரதேசி படம் ஒரு முழுமையான அபத்த கலவை. வசனங்கள், பாடல்கள், இசை, செட் கிராமம், உடைகள், வரலாற்று தகவல்கள் என்று எல்லா இடத்திலும் பாலா கோட்டை விட்டிருக்கிறார்.
இந்த கதையை எழுதிய டேனியல் என்கிற மருத்துவரை இந்த படத்தில் ஒரு கீழ்த்தரமான மத போதகராக காட்டி,தன்னுடைய மத அரிப்பை தணித்துக்கொண்டு விட்டார் பாலா. அந்த பரிசுத்ததை ஒரு மத போதகராகவே காட்டியிருக்கலாம். அதிலாவது ஒரு நேர்மை இருந்திருக்கும். ஆனால் அவரை ஒரு மருத்துவராக காட்டி இப்படி குத்தாட்டம் போட வைத்து ரொட்டித்துண்டுகளை வீசி மதத்தை இங்கே விதைத்தார்கள் என்று ஆர் எஸ் எஸ் சிந்தனையை வெகு வீரியமாக பார்ப்பவர்களுக்குள் செலுத்துகிறார். கடல் படதிற்கு தேவை இல்லாமல் முழங்கை தூக்கிய சில "மேதாவி"கிருத்துவ அமைப்புகள் இப்போது பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பது ஒருவேளை தாங்களும் இப்படித்தான் செய்கிறோம் என்பதால் இருக்கலாம்.
இந்த படம் உலக தரம் என்று கூச்சலிட்ட பலர் இப்போது பம்முவது இந்த படத்தை பற்றி வந்திருக்கும் எதிர்மறை விமர்சனங்களால் என்பது கண்கூடு. இவர்கள் கமலின் விஸ்வரூபதையும் இதே போலவே உலக தரம் என்று சொல்லி வேடிக்கை காட்டினார்கள். பாலாவிடமிருந்து தொடர்ந்து நாற்றமடிக்கும் படைப்புகள் நிற்காது வந்துகொண்டே இருக்கும். அதை நாம் தவிர்க்க முடியாது. ஆனால் கொஞ்ச நாட்களில் மக்களே பாலாவை விட்டு அலறி அடித்துக்கொண்டு ஓடப்போவது நிச்சயம்.(இந்த படத்திற்கே வசூல் படு மோசம், எல்லா திரை அரங்குகளும் காத்தாடுகின்றன. பாலா வருத்தத்தில் இருப்பதாக தகவல்)
Your post spoke what I wanted to speak. Thanks a lot for the honest review.