Monday, April 23, 2018

அம்பலமான பாஜகவினரின் பாலியல் வன்முறை பட்டியல்

ஆசிபாவும் தேசத்துரோகியா? என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக்கழகம் ஒருங்கிணைத்த கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வில், கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராசேந்திரன் அவர்கள் ஆற்றிய உரை.Thursday, April 19, 2018

திமுகதான் விமர்சிக்க வாகான கட்சி

திராவிட இயக்க வெறுப்பில் திமுகவை அழிக்க நினைக்கும் பார்ப்பனக்கூட்டம் ஒருபுறம்,

இன்னொருபுறம் இதன் தொடர்ச்சியாக தமிழ்த்தேசியம் என்ற பெயரில் வரும் ஜாதியவாதிகள்,

கம்யூனிஸ்ட்டுகள் என்ற பெயரில் பார்ப்பன கருத்தியலை மூளையில் ஏற்றிக்கொண்டு திராவிட இயக்கத்தை வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் விமர்சிப்பவர்கள்,

திராவிட, தமிழ்த்தேசிய இசங்களுக்கு இடையே ஊசலாடும் முற்போக்கு ஜாதியவாதிகள்,

இசங்களுக்கு வெளியே என்ற பெயரில் இன்னும் சிலர்,

இப்படி எல்லோரும் திமுகவை அழிக்கநினைப்பது; குறைந்தபட்சம் பழிப்பது என்று இயங்குகிறார்கள்.

பார்ப்பன, தமிழ்த்தேசிய கம்பெனிகளுக்கு விமர்சிக்க காரணமே தேவையில்லை. 50 ஆண்டுகால திராவிட இயக்க ஆட்சியிலே... என்று உண்மைக்குப் புறம்பாக அவதூறு பரப்ப தயங்காதவர்கள்.

கம்யூனிஸ்ட்டுகளும் இத்யாதிகளும் மிக எச்சரிக்கையாக திமுகவை விமர்சிக்கும் கணங்களுக்காக தக்கைமீது கண்களாக காத்துக்கொண்டிருப்பவர்கள்.

இவர்களது விமர்சனங்களை சான்றுகளை முன்வைத்து விமர்சித்தால், ஒருபடி பின்வாங்கி அதிமுக பொருட்படுத்தத்தக்க கட்சியே அல்ல என்றும் கொள்கையற்ற அவர்களை விமர்சிக்க என்ன இருக்கிறது என்றும் சொல்லிவிட்டு திமுகவை விமர்சிப்பதை மட்டும் கருத்தாக முன்னெடுப்பார்கள்.

பொருட்படுத்தவே முடியாத ஒரு கட்சியை சுகமாக வாழ அனுமதித்து, கொள்கைக்கும் நடைமுறைக்கும் இடையில் சந்திக்கும் சிக்கல்களைக் கடந்து ஒருபடி முன்னேற எப்போதும் விளைந்துகொண்டிருக்கும் ஒரு கட்சியின் மீதுதான் விமர்சனம் எனில் அது எத்தகைய அரசியல். யாரை வலுப்படுத்தும் அரசியல். உண்மையில் இத்தகைய சுயவிமர்சனங்கள் கூட அற்றவர்கள்தான் திமுகவினர் என்று கருதுவீர்களேயானால் அது எத்தகைய அறியாமை.

திமுகவை பொருட்படுத்தி விமர்சிப்பதெல்லாம் போதும். போய் ஆளுங்கட்சி தமிழகத்தை அழித்துக்கொண்டிருக்கிறது அதற்கெதிராக களமாடுங்கள்.

நான்சென்ஸ்.

Monday, April 16, 2018

காவிமயமாகும் நீதித்துறை - வன்னி அரசு

வன்கொடுமை தடுப்புச்சட்ட தளர்வுக்கெதிராக இளைஞர் இயக்கம் ஒருங்கிணைத்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் வன்னி அரசு அவர்கள் ஆற்றிய உரை.

Monday, April 9, 2018

கமல், ரஜினி, காவி அரசியல் - தோழர் வே. மதிமாறன் உரை

இந்துத்துவ அமைப்புகளுக்கு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இளைஞர்களை அடியாட்களாகத்

திரட்டிக்கொண்டிருக்கும் பாஜக, RSS ஒருபுறமிருக்கட்டும்; ஏற்கனெவே ரஜினி, கமல் வழியாக இதே அரசியல் நடந்துகொண்டிருப்பதற்கு எதிராக என்ன செய்யப்போகிறோம்.

டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்வில் தோழர் வே. மதிமாறனின் அனல் பறக்கும் உரை.

Sunday, April 1, 2018

குவாண்டம் - கருந்துளை - ஹாக்கிங்

1. நாம் வாழும் பிரபஞ்சம் எப்படி உண்டாயிற்று.

2. நாம் எப்படி வந்தோம்.

3. பிரபஞ்சத்துக்கு முடிவு உண்டா?

4. கருந்துளைக்குள் விண்மீன் திரள் (Galaxy) உள்ளிழுக்கப்படுவதன் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன?

Salute to Stephen Hawking என்ற தலைப்பில் பெரியார் திடலில் ஹாக்கிங்குக்கு நடைபெற்ற வீரவணக்க நிகழ்வில் அறிவியலாளர் சித்து முருகானந்தம் ஆற்றிய உரை.

#StephenHawking

Salute to Stephen Hawking - Nalangilli Speech

Wednesday, March 28, 2018

இன்றைய காக்கைகள் நேற்றைய பார்ப்பன நிந்தனையாளர்கள் - வீரமணி உரை

1. ராமனை பெரியார் செருப்பால் அடித்தாரா? இல்லையா?

2. இராமன் ஏகபத்தினி விரதனா?

3. பார்ப்பானைப் பழித்துப்பேசினால் மறுபிறவியில் காக்காவாக பிறப்பார்களா?


4. குப்தர்கள் காலத்தை ஏன் பொற்காலம் என்று புழுகினார்கள்?

5. அண்மையில் ஆண்டாள் கோயிலுக்குள் நடந்தது என்ன?

(இராமாயனம் - இராமன் - இராமராஜ்யம் குறித்து திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி ஆற்றிய ஆய்வுச்சொற்பொழிவின் இரண்டாம் பகுதி)

Sunday, March 25, 2018

இராமாயணம், இராமன், இராமராஜ்யம்60,000 மனைவிகளா? கணக்குப்போட்டார் பெரியார். இருபதாயிரம் என்றாலே ஒரு முனிசிபாலிட்டி. தசரதன் மூன்று முனிசிபாலிட்டிகளை வைத்திருந்திருக்கிறான்.

பாயாசம் குடித்தால் இரைப்பைக்குப் போகும்; கர்பப்பைக்குப் போகுமா?

ராமராஜ்யம் என்றால் ஜாதி ராஜ்யம்; மனுராஜ்யம்; வர்ணாசிரமதர்ம ராஜ்யம்; பெண்களைக் கொடுமைப்படுத்திய ராஜ்யம். 

(இராமராஜ்யம் அமைக்கப்போவதாக இந்துத்துவவாதிகள் பேசிவரும் நிலையில், இராமனின் யோக்யதை என்ன? இராமராஜ்யம் எத்தகையது? என்பதை இராமாயணத்தை முன்வைத்து திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய ஆய்வுரை)

Thursday, March 22, 2018

திராவிடர்கழகத்தில் தாழ்த்தப்பட்டோர் சேராவிட்டாலும்...

1. தாழ்த்தப்பட்ட பெண்கள் ரவிக்கை அணிவதால்தான் துணி விலை ஏறிவிட்டதாக பெரியார் சொன்னாரா?

2. அயோத்திதாசரை, இரட்டைமலை சீனிவாசனை பெரியார் இருட்டடிப்பு செய்தாரா?

3. கீழ்வெண்மணியில் பெரியாரின் நிலைப்பாடு என்ன?


4. அன்னியர் நம்மை ஆண்டாலும் பரவாயில்லை என்று பெரியார் ஏன் சொன்னார்?

பெரியாரை தலித் விரோதியாக சித்தரிப்போருக்கு கவிஞர் கலி.பூங்குன்றன் பதிலடி.

Wednesday, March 14, 2018

பெரியார்தான் நவீன இளைஞன் - வே.மதிமாறன்

இராமாயண காலம் முதல் இன்று வரை தொடரும் நீட் தேர்வும் வரலாற்றில் அதற்கு எதிரான சமூகநீதிக் குரல்களும் குறித்து தோழர் வே. மதிமாறன் ஆற்றிய அனல் பறக்கும் உரை.

Wednesday, January 17, 2018

சுயசிந்தனையுடைய மனிதர்களா நாம்?

மனிதர்களை இழிவுசெய்யும், ஏற்றத்தாழ்வை அங்கீகரிக்கும் மனுசாஸ்திரத்தின் சில பக்கங்களை நகலெடுத்து நாம் எரிக்கும்போராட்டம் நடத்தும்போது இடைநிலைச் சாதி ஆதிக்கத்தைக் கண்டு நாம் பொங்குவதில்லை என்றார்கள் சில பார்ப்பன சித்தாந்தத்துக்கு பல்லக்கு தூக்குபவர்களான இடைநிலைகள்.

நாம் இடைநிலைச்சாதிகளின் ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டங்களையும் நடத்துகிறோம். கூடுதலாக இந்த ஏற்றத்தாழ்வுக்கு உரம்சேர்க்கிற பார்ப்பனிய கருத்தியலுக்கு எதிராக களமாடுவதே நோய்க்கான தீர்வென கருதுகிறோம். இதை எல்லாவற்றையும் பார்ப்பனர்கள் மீதான காரணமற்ற வெருப்பென்று பரப்பினார்கள். தலித்துகள் இப்படி யாரையும் ஒதுக்குவதில்லை என்றும் காரணம், அவர்கள் ஒடுக்கப்படுதலின் வலியறிவார்கள் என்றும் ஜெயமோகன் வழக்கமான பாணியில் நஞ்சைப் பரப்ப, அதில் புளகாங்கிதமடைந்து சிலர் பரப்பினார்கள்.

ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்தும் அதையொட்டிய பார்ப்பனர்களின் திமிர்ப்பேச்சும் இந்துக்களைத் தூண்டிவிடுவதும் இது வைரமுத்துவை முன்னிட்டு மட்டுமே அல்ல என்பதை வெளிப்படுத்திவிட்டது. நாமும் வைரமுத்துவின் பக்கம் நிற்பது அவருக்காக மட்டுமே அல்ல என்பதை அறிந்தே செய்கிறோம்.

தலைமேல் அமர பார்ப்பனர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை உணர நீங்கள் வேதங்களையோ பக்தி இலக்கியங்களையோ கூட படிக்கவேண்டியதில்லை. அம்பி எஸ்.வீ. சேகர் பேசியிருக்கும் இந்த காணொயைப் பார்த்தாலே புரியும்.வைரமுத்துவுக்கு ஆதரவாக பாரதிராஜா வந்ததும் பயந்துபோன பார்ப்பனர்கள் முத்துராமலிங்கதை முன்வைத்து வைரமுத்து-பாரதிராஜாவை தனிமைப்படுத்த நினைக்கிறார்கள். கூடுதலாக பெரும்பான்மை மதவெறியற்ற இந்துக்களின் தலையில் ஜாதி, மதவெறியைத் திணிக்க பொய்ப்பரப்புரைகளில் ஈடுபடுகிறார்கள். சமத்துவத்துக்குக் கேடான இந்த நபர்களுக்கு எங்கிருந்து வீரம் வருகிறது. எங்கிருந்து வலிமை சேர்கிறது. இவர்களின் சித்தாந்தத்தை ஒழிப்பதில் என்ன தயக்கம் நமக்கு. பார்ப்பனரல்லாதார் சிந்திக்கவேண்டும்.

யோகம் என்பது பக்தி மார்க்கத்தைப் போலல்ல என்று பசப்பித்திரிவார்கள். ஆனால், நித்யானந்தாவின் இந்த சீடர்களான சிறுமிகளின் பேச்சைக்கேளுங்கள்.மதவாதம், ஆன்மீகம், யோகம், எளிய மக்களின் நம்பிக்கை என்று என்ன பெயர் சொன்னாலும் எல்லாம் மதவெறியின் ஒரு புள்ளியில் இணையத்தான் செய்கின்றன. மதத்துடன் கலந்துவிட்ட கலை-இலக்கியம் உட்பட.

முதலில் நித்யானந்தாவைப் பின்பற்றும் இந்தச் சிறுமிகள் பேச்சைக் கேட்டு கோபம் வந்தது. பிறகு முழுவதுமாக கேட்டு முடிக்கையில் அவர்கள் மீதான கவலையாக மாறியது.

Child abuse பாலியல் ரீதியாக நடந்தால் மட்டும்தானா? இந்தச் சிறுமிகள் தங்கள் கல்வியை முறையாக கற்று அறிவார்ந்தவர்களாக உயர்ந்து, தங்கள் வாழ்வை முன்நகர்த்திச் செல்வதற்குப் பதில் எவ்வாறு பணிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை அனுமதிக்கும் நாம் நாம் எத்தகையவர்கள். நமது சட்டம், நீதி, அறஉணர்வு எத்தகையது.The World Before Her இல் வரும் பிராச்சியின் கதையை நினைவுக்கு கொண்டுவரக்கூடிய இந்த துயரத்தை எவ்வாறு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

சுயசிந்தனையுடைய மனிதர்களா நாம்?