Monday, April 23, 2018

அம்பலமான பாஜகவினரின் பாலியல் வன்முறை பட்டியல்

புதிய காணொளிகளுக்கு இங்கு சொடுக்கவும். https://www.youtube.com/c/kulukkaitv?sub_confirmation=1ஆசிபாவும் தேசத்துரோகியா? என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக்கழகம் ஒருங்கிணைத்த கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வில், கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராசேந்திரன் அவர்கள் ஆற்றிய உரை.

Thursday, April 19, 2018

திமுகதான் விமர்சிக்க வாகான கட்சி

திராவிட இயக்க வெறுப்பில் திமுகவை அழிக்க நினைக்கும் பார்ப்பனக்கூட்டம் ஒருபுறம்,

இன்னொருபுறம் இதன் தொடர்ச்சியாக தமிழ்த்தேசியம் என்ற பெயரில் வரும் ஜாதியவாதிகள்,

கம்யூனிஸ்ட்டுகள் என்ற பெயரில் பார்ப்பன கருத்தியலை மூளையில் ஏற்றிக்கொண்டு திராவிட இயக்கத்தை வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் விமர்சிப்பவர்கள்,

திராவிட, தமிழ்த்தேசிய இசங்களுக்கு இடையே ஊசலாடும் முற்போக்கு ஜாதியவாதிகள்,

இசங்களுக்கு வெளியே என்ற பெயரில் இன்னும் சிலர்,

இப்படி எல்லோரும் திமுகவை அழிக்கநினைப்பது; குறைந்தபட்சம் பழிப்பது என்று இயங்குகிறார்கள்.

பார்ப்பன, தமிழ்த்தேசிய கம்பெனிகளுக்கு விமர்சிக்க காரணமே தேவையில்லை. 50 ஆண்டுகால திராவிட இயக்க ஆட்சியிலே... என்று உண்மைக்குப் புறம்பாக அவதூறு பரப்ப தயங்காதவர்கள்.

கம்யூனிஸ்ட்டுகளும் இத்யாதிகளும் மிக எச்சரிக்கையாக திமுகவை விமர்சிக்கும் கணங்களுக்காக தக்கைமீது கண்களாக காத்துக்கொண்டிருப்பவர்கள்.

இவர்களது விமர்சனங்களை சான்றுகளை முன்வைத்து விமர்சித்தால், ஒருபடி பின்வாங்கி அதிமுக பொருட்படுத்தத்தக்க கட்சியே அல்ல என்றும் கொள்கையற்ற அவர்களை விமர்சிக்க என்ன இருக்கிறது என்றும் சொல்லிவிட்டு திமுகவை விமர்சிப்பதை மட்டும் கருத்தாக முன்னெடுப்பார்கள்.

பொருட்படுத்தவே முடியாத ஒரு கட்சியை சுகமாக வாழ அனுமதித்து, கொள்கைக்கும் நடைமுறைக்கும் இடையில் சந்திக்கும் சிக்கல்களைக் கடந்து ஒருபடி முன்னேற எப்போதும் விளைந்துகொண்டிருக்கும் ஒரு கட்சியின் மீதுதான் விமர்சனம் எனில் அது எத்தகைய அரசியல். யாரை வலுப்படுத்தும் அரசியல். உண்மையில் இத்தகைய சுயவிமர்சனங்கள் கூட அற்றவர்கள்தான் திமுகவினர் என்று கருதுவீர்களேயானால் அது எத்தகைய அறியாமை.

திமுகவை பொருட்படுத்தி விமர்சிப்பதெல்லாம் போதும். போய் ஆளுங்கட்சி தமிழகத்தை அழித்துக்கொண்டிருக்கிறது அதற்கெதிராக களமாடுங்கள்.

நான்சென்ஸ்.

Monday, April 16, 2018

காவிமயமாகும் நீதித்துறை - வன்னி அரசு

வன்கொடுமை தடுப்புச்சட்ட தளர்வுக்கெதிராக இளைஞர் இயக்கம் ஒருங்கிணைத்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் வன்னி அரசு அவர்கள் ஆற்றிய உரை.

Monday, April 9, 2018

கமல், ரஜினி, காவி அரசியல் - தோழர் வே. மதிமாறன் உரை

புதிய காணொளிகளுக்கு இங்கு சொடுக்கவும். https://www.youtube.com/c/kulukkaitv?sub_confirmation=1இந்துத்துவ அமைப்புகளுக்கு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இளைஞர்களை அடியாட்களாகத்

திரட்டிக்கொண்டிருக்கும் பாஜக, RSS ஒருபுறமிருக்கட்டும்; ஏற்கனெவே ரஜினி, கமல் வழியாக இதே அரசியல் நடந்துகொண்டிருப்பதற்கு எதிராக என்ன செய்யப்போகிறோம்.

டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்வில் தோழர் வே. மதிமாறனின் அனல் பறக்கும் உரை.

Sunday, April 1, 2018

குவாண்டம் - கருந்துளை - ஹாக்கிங்

1. நாம் வாழும் பிரபஞ்சம் எப்படி உண்டாயிற்று.

2. நாம் எப்படி வந்தோம்.

3. பிரபஞ்சத்துக்கு முடிவு உண்டா?

4. கருந்துளைக்குள் விண்மீன் திரள் (Galaxy) உள்ளிழுக்கப்படுவதன் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன?

Salute to Stephen Hawking என்ற தலைப்பில் பெரியார் திடலில் ஹாக்கிங்குக்கு நடைபெற்ற வீரவணக்க நிகழ்வில் அறிவியலாளர் சித்து முருகானந்தம் ஆற்றிய உரை.

#StephenHawking

Salute to Stephen Hawking - Nalangilli Speech