Monday, June 18, 2018

வைரமுத்துவின் ட்வீட்: பிரச்சனையாக்கும் பாவனை தலித் ஆதரவு முற்போக்காளர்கள்.

ஜெயகாந்தனை விதந்தோதும் வைரமுத்துவின் அரசியலை விமர்சித்து தோழர் மதிமாறன் அவரது முகநூலில் பதிவிட்டுள்ளார். நேர்மையாக வைரமுத்துவை விமர்சிப்பதென்றால் அது இதுதான்.

இன்று இன்னொரு தரப்பு வைரமுத்துவை விமர்சிக்கிறது. அதாவது, "மராட்டியத்தில் கிணற்றில் குளித்த தலித் சிறுவர்கள் தண்டிக்கப்பட்டதைக் கண்டிக்கிறேன். குளிக்கவில்லையே என்று தலித்துகளை முன்பு தண்டித்தார்கள். குளிக்கிறார்களே என்று இன்று தண்டிக்கிறார்கள். தேசம் எழுந்து நின்று வெட்கப்பட வேண்டும்," என்ற வைரமுத்துவின் ட்வீட்டை முன்வைத்து அவரை தலித்விரோதியாக்க முனைகிறார்கள், வைரமுத்துவை ஜாதியவாதியாகவே பார்க்கும் காலா ரஞ்சித் ஆதரவு தலித் பங்காளர்கள்.

ரஞ்சித்தின் படைப்புகளைக் கொண்டாட எப்படி காரணங்கள், அரசியல் புரிதல் தேவைப்படவில்லையோ அதேபோல வைரமுத்துவை விமர்சிப்பதற்கும் அவர்களுக்குத் தேவைப்படவில்லை.

வைரமுத்துவை விமர்சிக்க பொருத்தமான காரணங்கள் பல இருக்கின்றன. ஆனால், வரலாற்றுப் பார்வையில்லாமல் வைரமுத்துவின் பதிவை அணுகினால் அபத்தமாக மட்டுமே புரிந்துகொள்ள முடியும். (வைரமுத்து குறிப்பிட்ட வரலாற்று பின்னணியை அறிய கீழ்க்காணும் காணொளியைப் பார்க்கலாம்)

தலித்துகளுக்கு தண்ணீர் தராத நீங்கள் அவர்கள் அழுக்கானவர்கள் என்று சொல்லும் யோக்யதையற்றவர்கள் என்று பெரியார் ஜாதியவாதிகளை நோக்கிக்கேட்டதைக்கூட இப்படித்தான் புரிந்துகொள்வார்கள்போல.

சமூகத்தின் தீண்டாமைப் பார்வையை மட்டுமே வைரமுத்து சுட்டிக்காட்டியிருக்கிறார். அது அவரது தீண்டாமை என்பதாக பார்க்கிற இவர்களும், வைரமுத்து ஆண்டாளை வேசி என்றார் என களமாடிய சோடாபாட்டில் ஜீயர் உள்ளிட்ட சங்கிகளுக்கும் என்ன வித்தியாசம்.




No comments:

மார்க்சிய கண்ணோட்டத்துடன் வேதத்தை அணுகுகிறவர்கள், திராவிட கருத்தியலை அணுகுவதில்லை

(இக்காணொளி குலுக்கையில் வெளியிடுவதற்காக ஒளிப்பதிவு செய்த தோழர் Saravanaperumal Perumal மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றி) ...